31/05/2026
இன்று மதியம் திருச்சி ஹோட்டல் அருணில் மதியம் 1:30 முதல் 4.30 மணி வரை தமிழ்நாடு பனைத் தென்னை விவசாய நலச்சங்க நடத்திய மாநில கலந்தாய்வு கூட்டத்தில் தூத்துக்குடி வழக்கறிஞர் சிலுவை நாடார் அண்ணனும் மற்றும் இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் JDR.சுரேஷ் அவர்களும் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்🙏🏼
This afternoon at Hotel Arun in Trichy from 1:30 to 4:30 pm, a happy moment when Thoothukudi lawyer Siluvai Nadar Annan and Indian Nadar Council and Nellai Nadar Uravinmurai Sangam President JDR. Suresh also participated in the state consultation meeting organized by the Tamil Nadu Palm Coconut Farmers Welfare Association.
28/05/2026
இன்று 28/05/26, வியாழக்கிழமை காலை திருமண வரவேற்பு விழா 12 மணி அளவில் இந்திய நாடார் பேரவை, நெல்லை நாடார் உறவின்முறை சங்க கௌரவ தலைவரும் எடமலைப்பட்டி புதூர் நாடார் சங்க பொருளாளரும் எஸ்.மைக்கேல் ராஜ் இல்ல திருமண விழாவிற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்🙏🏼
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்🙏🏼
14/05/2026
*தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலத்தை இலவசமாய் வழங்கியவர்!*
*மக்கள் தலைவர் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் அவர்களின் நினைவு நாளில் நாடார் சமுதாய சொந்தங்களின் சார்பாகவும்,*
*இந்திய நாடார் பேரவை சார்பாகவும் புகழ் அஞ்சலி செலுத்துகிறோம்!*
🙏💙🤍💚🙏
06/05/2026
நேற்று தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🙏
30/04/2026
மாவீரன் காரத்தே செல்வின் நாடார் அவர்களின் சகோதரி எஸ்தர் அவர்கள் நேற்று இரவு திருநெல்வேலி டவுனில் கடவுளுக்குள் நித்திரை அடைந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்🙏
19/04/2026
19/4 இன்று துறையூரில் எம் எஸ் கே மஹாலில் திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளர் மலைக்கோட்டை மன்னர் KN.நேரு ஐயா அவருடைய கரங்களை திருச்சி மாவட்டத்தில் வலுப்படுத்த துறையூர் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் ஆதரவு கூட்டம் நடைபெற்றது.
இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை தலைவர் ஜெடிஆர்.சுரேஷ் தலைமையில், தமிழ்நாடு பனை தென்னை மரமேறி விவசாய நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் V.தியாகு, திருச்சி மாவட்ட வடக்கு மாவட்டசெயலாளர் பாண்டியன் இவர்கள் முன்னிலையில்
உடன் விவசாய நல சங்க அமைப்பாளர் ராஜா, துறையூர் நாடார் பேரவை தலைவர் ரவிநாதன், துணைத்தலைவர்கள் குருசாமி மற்றும் மோட்டார் ராஜா, இந்திய நாடார் பேரவை திருச்சி மாவட்ட துணைத் தலைவர் கோணக்கரை சண்முகம், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் கொப்பம்பட்டி செல்வகுமார், துறையூர் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், துறையூர் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், துறையூர் செய்தி தொடர்பாளர் சந்திரசேகர், நெல்லை நாடார் உறவின்முறை துணைத்தலைவர் ஸ்ரீரங்கம் செல்வகுமார், துணைச் செயலாளர்கள் லால்குடி ஞானராஜ், பீமநகர் ரவிஞானராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சி காங்கிரஸ் துறையூர் வேட்பாளர் லெனின் பிரசாத் அவரை ஆதரித்து, ஆதரவு தெரிவித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டத்தில் வாக்கு சேகரித்த மகிழ்வான தருணம் 🙏