Vck Anwer

Vck Anwer

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vck Anwer, Political Party, Chennai.

15/06/2022

#ஜூன் 22, சென்னையில் #விசிக_சார்பில் #கண்டன_ஆர்ப்பாட்டம்;*
அறிவர் #தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவிப்பு:_*
~~~~~~~~~~~~~~~~~
தேசியம் தழுவிய அளவிலான பிரச்சனைகள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் (22-06-2022) அன்று தலைநகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

#கோரிக்கை
1. #நபிகள்_நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவர்கள் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால் சர்வதேச அளவில் உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் வெடித்து வரும் நிலையில் அவரை கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்,

2. நுபுர் சர்மா அவர்களின் கருத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் போராடியவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் யோகி அரசு அநாகரிகமான முறையில் அவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து வரும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அரசியலை கண்டித்தும், அவற்றை கைவிட வலியுறுத்தியும்,

3. ஆந்திரா மாநிலத்தில் 'கோனசீமா' மாவட்டத்தின் பெயரை "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா" மாவட்டம் என்று பெயரை அம்மாநில முதல்வர் மாண்புமிகு ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அறிவிப்பு செய்தார். இதற்கு எதிராக அங்கு போராடிய சாதி வாதிகளை கண்டித்தும், அந்த மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்,

மேற்கண்ட மூன்று தேசிய அளவிலான பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் சென்னையில் ஜூன் 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் நிர்வாகிகள் பெரும்பாலாக கலந்து கொள்ள வேண்டுமென்று *தலைவர் எழுச்சித்தமிழர்* அவர்கள் (14-06-2022) நேற்று இரவு தனது முகநூல் நேரலை வாயிலாக அறிவிப்பு செய்தார்.

தகவல் பகிர்வு:
கடலூர் *ம.சுரேஷ் பாபு*
மாவட்ட அமைப்பாளர்.

12/05/2022
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai