Puratchikara Podhuvudamai Iyakkam - புரட்சிகர பொதுவுடைமை இயக்கம்

Puratchikara Podhuvudamai Iyakkam - புரட்சிகர பொதுவுடைமை இயக்கம்

Share

பாட்டாளிவர்க்க அரசியலை - சர்வதேசியத்தை - பொதுவுடைமை அரசியலை முன்வைக்கும் ட்ராட்ஸ்கிய இயக்கம்.

09/07/2025

**இன்று ஜூலை 9, அகில இந்திய பொது வேலை நிறுத்த கோரிக்கைகள் வருமாறு**

1.புதிய நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்ப பெற்றிடு!

2.அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் மாதமொன்றிற்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- நிர்ணயம் செய்திடு

3.ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டு. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு!.

4.அமைப்புசாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9000 மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்திடு, வீடு சார் தொழிலாளர்கள், தாள் சேகரிக்கும் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், திட்டம் சார் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்கள், சுமை பணி தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், கார்,ஆட்டோ டாக்ஸி தொழிலாளர்கள், மீனவ சமூகத்தினர் உள்ளிட்டோரை பதிவு செய்து ஓய்வூதியம் உட்பட சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கிடு.

5.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலாக்கு!

6.போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்றவைகளுக்கு உள்ள உச்சவரம்பை நீக்கு. பணிக்கொடை தொகையை அதிகப்படுத்து!

7.விண்ணப்பித்த 45 நாட்களுக்குள்ளாக தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கு!
8.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து. உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்திடு.

8. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைத்திடு. உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தி, பொது விநியோக திட்டத்தை பரவலாக்கு.

9.பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள், தனியார் மயத்தை நிறுத்திடு ,தேசிய பணமாக்கல் திட்டத்தை (NMP) ரத்து செய், தற்போது உள்ள சுரங்க சட்டத்தை திருத்திடு, நிலக்கரி சுரங்கங்கள் உட்பட சுரங்கங்களின் 50% லாபத்தை ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட உள்ளூர் சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கிடு.

10.விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை C2 + 50 என்ற முறையில் நிர்ணயம் செய். விவசாயிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்று!.

11.மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்பப் பெறு!. மின்சாரத்தை தனியார்மயமாக்காதே!. ஸ்மார்ட் மீட்டர் முறையை கைவிடு!

12.வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கு!. காலிப் பணியிடங்களை நிரப்பு!. ம.கா.தே.ஊ.வே திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்து!

13.கல்வி, மருத்துவம், தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உரிமையாக்கு!. புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறு!. அனைவருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்திடு!

14.வன உரிமைச்சட்டத்தை கடுமையாக அமுலாக்கு!. 2023 - வனப் பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றிடு!.

15.கட்டட தொழிலாளிக்கும் இஎஸ்ஐ திட்டத்தை விரிவுபடுத்து!. புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தை வலிமைப்படுத்து!

16.பெரும் செல்வந்தர்களுக்கு வரி விதித்திடு, கார்ப்பரேட் வரியை அதிகப்படுத்திடு, சொத்து வரி மற்றும் பரம்பரை வரியை மீண்டும் கொண்டு வந்திடு.

17.அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நிறுத்து!. கருத்துரிமை,மதச் சுதந்திரம், பன்முக கலாச்சாரம், கூட்டாட்சி முறை மீதான தாக்குதலை நிறுத்து!.

09/07/2025
01/05/2025

17/09/2024

#சாம்சங்_தொழிற்சாலை_ஊழியர்கள்_தொடர்_வேலை_நிறுத்த_போராட்டம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஏழாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.அந்த வகையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டாவது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மூன்று முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால், இன்று மாவட்ட ஆட்சியரை இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிடக் கோரி பேரணியில் ஈடுபட இருந்தனர்.

போராட்டம் வெடித்தது ஏன்?

சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மாவட்டச் செயலரும், சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவருமான முத்துக்குமார், "தொழிற்சாலையில் சங்கம் அமைத்த பிறகு, அதை ஏற்க முடியாது என நிர்வாகம் கூறியது. அத்துடன் மட்டும் நிற்காமல் சங்கத்தை அழிப்பது, சங்கத்தின் பின்புலத்தில் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்துவது என பலவழிகளில் நிர்வாகம் அத்துமீறி செயல்படுகிறது,” என்கிறார்.

மேலும், " 'சி.ஐ.டி.யூ-வில் சேரக் கூடாது, நிர்வாகம் ஏற்படுத்திய தொழிலாளர் அமைப்பில் மட்டும் இணைய வேண்டும்' என வற்புறுத்தினர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆபத்தானவை. அதனால்தான் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறோம்," என்கிறார்,

தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களில் சுமார் 1,500 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதாக குறிப்பிடும் முத்துக்குமார், "சம்பள உயர்வு, தொழிலாளர் நலன் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக சாம்சங் நிர்வாகம், தொழிற்சங்கத்திடம் பேச வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. அதற்காகவே போராடுகிறோம்," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"அடிப்படைச் சம்பளம் 35,000, இரவுப் பணிக்கான படி உயர்வு, மருத்துவ அலவன்ஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். வேலை நேரத்தை 8 மணிநேரமாக இல்லாமல் 7 மணிநேரமாக குறைக்கப்பட வேண்டும் ஆகியன முக்கியமானவை. 'இரவு 11 மணி வரையில் ஓவர் டைம் பார்க்க முடியாது' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூறினோம். இந்த விவகாரத்தில் அரசு தொழிலாளர்களின் பக்கம் நிற்கவில்லை," என்கிறார் முத்துக்குமார்.

08/08/2024

#மாஞ்சோலை_தேயிலைத்_தோட்ட_தொழிலாளர்கள்_போராட்டம்

மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராமங்களில் கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேயிலை உற்பத்தியில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்துக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் நிர்வகித்துவருகிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு. மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் 99 வருட குத்தகைக்கு எடுத்தது. பிறகு, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தும், கேரளாவிலிருந்தும் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் திருநெல்வேலியைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.

அந்தத் தொழிலாளர்கள்தான், மாஞ்சோலையில் தேயிலை, ஏலக்காய், மிளகு ஆகிய தோட்டங்கள் உருவாக்கினார்கள். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனில் சுமார் 560 தொழிலாளர்கள் வேலை செய்துவரும் நிலையில், தேயிலை எஸ்டேட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 2,000 பேர் வசித்துவருகிறார்கள்.

சிங்கம்பட்டி ஜமீனுடனான குத்தகை 2028-ம் ஆண்டுடன் முடிவடையவிருக்கிறது. குத்தகை காலம் முடிவுக்கு வந்ததும், இந்தப் பகுதி தமிழ்நாடு அரசின் வசமாகிவிடும். அதைத் தொடர்ந்து மாஞ்சோலை எஸ்டேட் பகுதி, தமிழக அரசால் காப்புக்காடாக அறிவிக்கப்படவிருக்கிறது. எனவே, எஸ்டேட்டில் பணியாற்றிவந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் வழங்கியது. அதன்படி, தொழிலாளர்களின் வயதுக்கேற்ப ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு கிடைக்கும்.

ஆனால், நான்கு தலைமுறைகளாக எஸ்டேட்டே கதி என்று வாழ்ந்துவந்தவர்களை திடீரென அங்கிருந்து வெளியேற்றினால், அவர்கள் என்ன செய்வார்கள்? அடுத்து என்ன செய்தென்று தெரியாமல் எல்லோரும் திகைத்துப்போய் இருக்கிறார்கள். ‘எங்களுக்கு உலகமே இந்த மாஞ்சோலை எஸ்டேட்தான். இங்கிருந்து எங்களை வெளியேற்றினால், நாங்கள் எங்கே போவோம், என்ன செய்வோம்?’ என்று கண்ணீர் விட்டு கதறுகிறார்கள் அந்த எளிய மக்கள்.

தமிழக அரசு எந்த உதவியும் செய்யாத சூழலில், மறுவாழ்வு வசதிகளைச் செய்துகொடுக்கும் வரையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என்ற உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் 2028-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி முடிகிறது. ஆனால், குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் எஸ்டேட் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதனால், நடுவீதிக்கு வரும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு சொந்த இடமோ, வீடோ கிடையாது. பலர் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசிக்கின்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை செய்யக்கோரி அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு எந்த பதிலும் வரவில்லை.

எனவே, மாஞ்சோலை எஸ்டேட்டில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டவும், குடும்பத்தில் ஒருவருக்கு அங்கன்வாடிகளில் பணி வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கவும், மாற்றுப்பணி வழங்கும் வரை ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, ‘மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.' என்று உத்தரவிட்டது.

நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பே, கண்ணீரும் கம்பலையுமாக நடுத்தெருவில் நிற்கும் அந்த எளிய மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துகிறது. விருப்ப ஓய்வைப் பெற வேண்டுமென்று எஸ்டேட் நிர்வாகத்தால் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 45 நாள்களுக்குள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற நெருக்கடியையும் எஸ்டேட் நிர்வாகம் கொடுப்பதாக தொழிலாளர்கள் கதறுகிறார்கள்.

இந்த நிலையில், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுத்துவருகின்றன. இந்த விவகாரம் குறித்து திருநெல்வேலி மாவட்ட சி.ஐ.டி.யூ செயலாளரிடம் பேசினோம். “மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீரும் கம்பலையுமாக கதறிக்கொண்டிருக்கிறார்கள். 45 நாள்களில் வெளியேற வேண்டுமென்று மிரட்டப்படுகிறார்கள்.

அவர்களின் குடியிருப்புக்கான தண்ணீர் விநியோகத்தையும், மின் இணைப்பையும் துண்டித்துவிடுவோம் என்று நிர்வாகம் மிரட்டுவதாக தொழிலாளர்கள் சொல்கிறார்கள். இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. விருப்ப ஓய்வை ஏற்குமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. விருப்ப ஓய்வுக்கான தொகையை வாங்கிக்கொள்ளுமாறு தொழிலாளிகளை சில சக்திகள் மறைமுகமாகத் தூண்டுகின்றன. இது சரியல்ல.

தங்கள் ரத்தத்தையும், வியர்வையும் சிந்திய, அங்கிருக்கும் இந்த மக்களை வெளியேற்றிவிட்டு, வேறொரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு மாஞ்சோலைப் பகுதியை குத்தகைக்குவிட திட்டம் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதை ஏற்க முடியாது. 8,000 ஏக்கர் நிலத்தைப் பண்படுத்தி தோட்டங்களை தொழிலாளர்கள் உருவாக்கினார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது அநியாயம். குளிர் பகுதியில் வாழ்ந்து பழகிய அந்த மக்களை, வெப்பமான பகுதிக்குத் துரத்தினால் அவர்கள் எப்படி வாழ்வார்கள்?

குத்தகை முடிந்துவிட்டால் அந்தப் பகுதி தமிழக அரசுக்கு சொந்தமாகிவிடும். எனவே, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டேன்டீ நிறுவனத்தின் கீழ் தொழிலாளர்கள் பணியாற்றுவதைப்போல, மாஞ்சோலையிலும் இந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து வசிக்கவும், தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றவும் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்கிறார்.

27/07/2024

#ஓய்வுபெற்ற_அங்கன்வாடி_ஊழியா்கள்_போராட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் நலச் சங்கத்தினா் சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடை, 6-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி 50 சதவீத ஊதிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிடப் போவதாகவும் அவா்கள் அறிவித்திருந்தனா். இதையடுத்து, சட்டப்பேரவை முன் பகுதி மற்றும் அதன் சந்திப்புச் சாலைகளில் ஏராளமான போலீஸாா் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மிஷன் வீதி மாதாகோவில் அருகிலிருந்து ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் பேரணியாக புறப்பட்டு சட்டப்பேரவை நோக்கி வந்தனா். அவா்களை, ஆம்பூா் சாலையில் போலீசாா் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, அந்த இடத்திலேயே அமா்ந்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Source: dinamani

11/07/2024

#உள்ளாட்சித்_துறை_பணியாளா்கள்_போராட்டம்

உள்ளாட்சித் துறை பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மகளிா் குழு, ஒப்பந்தம், அவுட்சோா்ஸிங், தினக்கூலி, தொகுப்பூதியம் என பல பெயா்களில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் நிா்ணயித்து, முன்தேதியிட்டு அமலாக்க வேண்டும்.

உள்ளாட்சித் துறை பணியாளா்களுக்கு ஊதியம் நிா்ணயம் செய்து 7 ஆண்டுகள் ஆனதால், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரத்துக்கு குறையாமல் வழங்க வேண்டும். துாய்மைப் பணிகள், குடிநீா் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கக்கூடாது.

உள்ளாட்சி அமைப்புகளே, அடிப்படை சேவைப் பணிகளை நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Source: dinamani

10/07/2024

#தமிழகம்_முழுவதும்_மின்_வாரிய_ஊழியர்கள்_போராட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வாரியத்தில் காலியாக உள்ள 55,000 பணியிடங்களை நிரப்புதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று மின்சாரத்துறை. இந்நிலையில் தான் மின்வாரியத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ‛லைன்மேன்' பணியாளர்கள் உள்ளூர்காரர்களை பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் முக்கிய அறிவிப்பானது. அதாவது தமிழ்நாடு மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள கள உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி மின்பொறியாளர், உதவி வரைவாளர் ஆகிய பதவிகள் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களாக உள்ளன. இவை தவிர, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர பதவிகளில் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்தடையை விரைவாக நீக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும்போது உரிய நேரத்தில் ஓய்வுக்கால பணபலன்களை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Sanjay Gandhi Nagar
Chennai
600043