Coolie movie review | Don't Spread Negative Reviews
Explore Panniruvom
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Explore Panniruvom, Chennai.
28/07/2025
With Pandiraj – I just got recognized as one of their top fans! 🎉
History Of Tiruchendur Murugan Temple
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.
தேவர்கள், தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் இலிங்கம் இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
தூண்டுகை விநாயகர் கோவில்
இக்கடற்கரைக் கோவிலுக்குச் செல்லும் பாதையின் தொடக்கத்தில் சுமார் மூன்று பர்லாங்கிற்கு முன் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இது சுப்பிரமணியசுவாமி கோயிலின் உபகோவிலாகும். முருகன் இருக்கும் இடத்தைப் பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் விதமாக விநாயகர் இருப்பதால் இப்பெயர் பெற்றது.
ராஜகோபுரம்
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது
⁉️திருச்செந்தூர் கடல் மண் அரிப்பு😱...! வெளியே வந்த மர்ம சிலைகள்🫣.. What's Happening
திருச்செந்தூர் கடற்கரையில் அமானுஷ்ய சிற்பங்கள் கரை ஒதுங்கும் நிலையில் தலை, கைகள் இல்லாத சிலைகளும் கரை ஒதுங்குகிறது. இது அவ்வப்போது நடப்பதால் திருச்செந்தூரில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள்
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் சுமார் 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடும் படி கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த கடல் அரிப்பு காரணமாகவும், கடல் சீற்றத்தின் காரணமாகவும் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து ஏராளமான பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் வெளியே வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் 20-க்கும் மேற்பட்ட சிலைகளும், 4 கல்வெட்டுகளும் தற்போது வரை வெளியே வந்துள்ளன.
Fisherman Life | 😨⁉️மீனவர்கள் வாழ்க்கை இவ்ளோ மோசமா இருக்குமா😔‼️
🌪️🌪️Michaung- புயலால் சென்னையில் - Flood🌊🌊 இயல்பு நிலைக்கு திரும்புமா🚫⁉️
LOCATION
WorthyTen Recommerce Private Limited
Third Floor,
No-5/40,3rd Floor,
1st Main Road,
A V.M. Avenue,
Virugambakkam,Chennai - 600 092
Contact :
Coimbatore -9843010705
Chennai - 9843010716
Map: https://maps.app.goo.gl/kkCLxVB5i9g17aod8
Click here to claim your Sponsored Listing.
Location
Culinary Team
Attire
Contact the business
Telephone
Address
Chennai
