11/09/2022
அஸ்ஸலாமு அலைக்கும்
*வாழ்க்கை & சேங்கனூர் கிளை நடத்திய தேசிய கட்சி ஆன SDPI கட்சி உறுப்பினர் செயற்கை முகாம் மேற்கு பஜாரில் இனிதே நடைபெற்றது*
முகாமிற்கு வாழ்க்கை கிளை தலைவர்
_A. ஜெகபர் அலி_ அவர்கள் தலைமை தாங்கினார்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி இனை செயலாளர்
M.ஜியாவுல் ஹக்
வாழ்க்கை கிளை பொருளாளர். _S.முகமது நவாஸ்_
வாழ்க்கை கிளை இணைச் செயலாளர்
_N. இத்ரீஸ்_
மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்
உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு திரளாக மக்கள் வந்து தேசிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் *எல்லாப் புகழும் இறைவனுக்கே*
```இப்படிக்கு
வாழ்கை&சேங்கனூர்
ஊடக பிரிவு```
10/09/2022
அஸ்ஸலாமு அலைக்கும்
*வாழ்க்கை & சேங்கனூர் கிளை நடத்திய தேசிய கட்சி ஆன SDPI கட்சி உறுப்பினர் செயற்கை முகாம் பெரிய பள்ளி முன்பு இனிதே நடைபெற்றது*
முகாமிற்கு வாழ்க்கை கிளை தலைவர்
_A. ஜெகபர் அலி_ அவர்கள் தலைமை தாங்கினார்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி இனை செயலாளர்
M.ஜியாவுல் ஹக்
வாழ்க்கை கிளை பொருளாளர். _S.முகமது நவாஸ்_
வாழ்க்கை கிளை இணைச் செயலாளர்
_N. இத்ரீஸ்_
மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்
உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு திரளாக மக்கள் வந்து தேசிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் *எல்லாப் புகழும் இறைவனுக்கே*
```இப்படிக்கு
வாழ்கை&சேங்கனூர்
ஊடக பிரிவு```
08/09/2022
ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சமின்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி
சட்டமன்றம் நோக்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி கருஞ்சட்டைப் பேரணி!
19/08/2022
75வது சுதந்திர தின விழா வாழ்க்கை & சேங்கனூர் SDPI கட்சியின் சார்பாக தேசிய கொடி ஏற்றப்பட்டது இந்நிகழ்வில்
வாழ்க்கை கிளை தலைவர்: A.ஜெகபர் அலி,M.முகம்மது அலி ஜின்னா தலைமை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளர்களாக வாழ்க்கை வர்த்தக சங்க தலைவர் S.ராமலிங்கம் மற்றும் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி இணைச் செயலாளர் M.ஜியாவுல் ஹக் மற்றும் கலக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் இரண்டு மாணவர்கள் உரை ஆற்றினார்கள்
சுதந்திர கொடியை கிளை தலைவர் A.ஜெகபர் அலி எற்றினார் மற்றும் உரையாற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது அது மட்டுமல்லாமல் மரக்கன்று வழங்கப்பட்டன
நன்றியுரை SDPI கட்சியின் கிளை செயலாளர் N. இஃத்ரிஸ் அவர்கள் ஆற்றினார்.
07/05/2022
வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறார்கள்
07/05/2022
இன்று இரவாஞ்சேரி சார்ந்த அண்ணன் சபிர் அவர்கள் குடவாசல் நகர SDPI கட்சி ஆம்புலன்சுக்கு 25,000 இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய தருணம்...
30/04/2022
*சமூக* *நல்லிணக்க* *இஃப்தார்* *நிகழ்ச்சி*
SDPI நன்னிலம் தொகுதி
*வாழ்க்கை & செங்கன்னூர்* கிளை சார்பில் இன்று 30/04/22. நடைபெற்ற சமூக நல்லிணக்க. இஃப்தார் நிகழ்ச்சியில் மரியாதைக்குரிய மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் செயல்வீரர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி
*வாழ்க்கை. SDPI.*
16/04/2022
முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
“ராம நவமி” ஊர்வலங்களின் பெயரால் கர்நாடகா, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் மீதான எதிர்ப்புக் கலவரங்களுக்கான இந்துத்துவா அமைப்புகளின் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.
சமீபத்தில் ஹரித்வாரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சங்பரிவார் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் இனப்படுகொலைக்கான பகிரங்க அழைப்புகள் விடுக்கப்பட்டன. இதன் நீட்சிகளாகவே ராம நவமி கலவரங்களை பார்க்க வேண்டியுள்ளது.
சங்பரிவார்களின் செயல்திட்டங்களின் வாயிலாக முஸ்லிம்களின் உயிர்களின் மீதும், மஸ்ஜிதுகளின் மீதும், உடமைகளின் மீதும் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது.
அதன் பகுதியாக இன்று,
15/04/2022 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டச் செயலாளர் மர்சூக் அஹமது தலைமை தாங்கினார்.
SDPI கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் சர்வத் ரஃபீக், முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் முஹம்மது அலீ ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஷம்சுத்தீன், துணைச் செயலாளர் ஆரூரான் சாதிக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாவித், நகர தலைவர் தமீம் அன்சாரி, நகர செயற்குழு உறுப்பினர் நிஜாம் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாலை 6:00 மணி வரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
15/04/2022
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி அல்ஹம்துலில்லாஹ்