20/03/2025
நெல்லையில் காவல்துறை அலட்சியத்தால், வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலி குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் நீதிக்காக எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என உறுதியளித்தேன்.
தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த வழக்கில் பிஜிலி அவர்களால் குற்றம்சாட்டப்பட்ட தவ்ஃபீக் என்கிற கிருஷ்ண மூர்த்தி, அருணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செந்தில், கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும், காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை என்பதோடு மட்டுமல்லாமல், இந்த வழக்கில் அவர்களையும் சேர்த்திட வேண்டும் என வலியுறுத்தினேன்.
மேலும், பிஜிலி அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தனிப்பட்ட சொத்திற்காக அல்லாமல், வக்ஃப் சொத்தை பாதுகாப்பதற்காக சட்டரீதியாக போராடியதாலேயே அவர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே, உயிரிழந்த ஜாகீர் உசேன் பிஜிலி குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.
இதன்போது கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச் செயலாளர்கள் ஆரிப் பாஷா, அன்வர்ஷா, மாவட்டச் செயலாளர் பேட்டை முஸ்தபா, நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில், பொருளாளர் முபாரக் அலி, பாளைதொகுதி இணைச்செயலாளர் ஒ.எம்.எஸ்.மீரான் உள்ளிட்ட தொகுதி, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
-நெல்லை முபாரக்
Mohamed Mubarak | SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு | | | |

19/03/2025