02/04/2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர்
அல்ஹாஜ் எஸ். முகம்மது பெய்க் சாஹிப் அவர்கள் தலைமையில்,
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வெற்றி வேட்பாளர்
அனகை. முருகேசன், Ex. MLA அவர்களுக்கு ஆதரவாக,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்,திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்,
இன்று அனகாபுத்தூர், பம்மல் மற்றும் பல்லாவரம், குரேம்பேட்டை, பகுதிகளில் முரசு சின்னத்தில்
வாக்கு சேகரிப்பிற்காக சூறாவளி பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள்
ஜனாப்.M.முபாரக், ஜனாப்.எம்.கே. ஷேக் தாவூத், ஜனாப். முகமது இக்பால், பம்மல்
ஜனாப் W. யாகூப், பம்மல் ஜனாப் அப்துல் சமது, பொழிச்சலூர் ஜனாப் கௌஸ் பாஷா, அனகை ஜனாப் ஜாபர் அலி,
ஜனாப்.சாகுல் ஹமீது மற்றும் அனகை ஜனாப்.S. முகமது சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
அன்புடன்,
எஸ். முகமது சாதிக்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்.
25/03/2026
பாளையங்கோட்டையா? திருச்சி கிழக்கா? - கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கருக்கு திமுகவின் 'கிரீன் சிக்னல்'!
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் போட்டியிட திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
மாநில பொதுச்செயலாளர் என்ற முக்கிய அந்தஸ்தில் அவர் இருப்பதால், அவருக்கு செல்வாக்குமிக்க ஒரு தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி, திருநெல்வேலியின் கோட்டையான 'பாளையங்கோட்டை' அல்லது திருச்சியின் மையப்பகுதியான 'திருச்சி (கிழக்கு)' ஆகிய இரண்டில் ஒன்றை அவருக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24/03/2026
கடையநல்லூர் மக்களின் ஏகோபித்த ஆதரவு!
கடையநல்லூர் தொகுதி IUML - க்கு ஒதுக்கப்பட்டால்... மக்களின் முதல் தேர்வு!வெற்றி வேட்பாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கே என கடையநல்லூர் தொகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்
மக்கள் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது
28/02/2026
மக்களின் நீங்கா அன்பைப் பெற்ற மகத்தான தலைவர்!
தமிழ்நாட்டின் நம்பிக்கை! சிறுபான்மையினர் மக்களின் பாதுகாவலர்!
சொன்னவற்றை நிறைவேற்றும் செயல்வீரர்!
நல்லாட்சி நடத்தும் திராவிட நாயகர்! மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
வாழ்க வாழ்க வாழ்கவே!
பல்லாண்டு வாழ்கவே!!
#வெல்வோம்_200!
#படைப்போம்_வரலாறு!!
TNSTATE
M. K. Stalin | Stalin
28/02/2026
இன்ஷா அல்லாஹ்! இறைவன் நாடினால், இரண்டு தொகுதிகளில் ஒன்று நிச்சயம் அண்ணன் சல்மான் முஹம்மது அவர்களுக்கே!
28/02/2026
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் மேலாண் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் அவர்களின் முகநூல் பதிவில் இருந்தது
திமுக தலைமையிலான சமய சார்பற்ற கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வரவிருக்கிற 2026-சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இன்று 28/02/2026 ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சென்ற முறை வழங்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளும் குறைந்தபட்சம் ஒரு தொகுதியையாவது விட்டுக் கொடுத்தால்தான் புதிதாக இக்கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு உரிய தொகுதிகளைப் பகிர்ந்து கொடுக்கமுடியும் என்கிற திமுகவின் வேண்டுகோளை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் பலருக்கும் இச்செய்தி ஒருவித நெருடலைத் தந்தாலும் தேர்தல் களத்தின் யதார்த்த நிலையையும், அதிகரித்துள்ள கூட்டணிக்கட்சிகளுக்கு உரிய குறைந்தபட்ச தொகுதிகளை வழங்க வேண்டிய கட்டாயத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த முடிவு முஸ்லிம் லீகின் உயர்மட்ட குழுவில் பலமுறை ஆழ்ந்து சிந்தித்து, கருத்துக்கள் பல பரிமாறப்பட்டு மிகவும் நிதானத்தோடு எடுக்கப்பட்ட ஒன்று. வெளியில் இருந்துகொண்டு சர்வ சாதாரணமாக விமர்சிக்கலாம். ஆனால் எதார்த்தத்தை எண்ணிப்பார்ப்பது மிக, மிக அவசியம்.
நமது சமுதாயம் பல இயக்கங்களாகத் தனித்தனி பாதையில் பயணிப்பதால் நமது குரல்களின் அழுத்தம் போதிய ஆழத்தை தொடுவதில்லை என்பதையும் புறந்தள்ளிவிட முடியாது. எப்படியானாலும் நமது பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் இடம்பெறுவது மிக மிக அவசியமாகிறது.
குறைவான எண்ணிக்கையானாலும் சட்டமன்றத்தில் நமது குரல் வலிமைமிக்கதாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பயணிப்போம். வல்ல இறைவன்மீது நம்பிக்கை வைத்து நம் பணிகளை ஆற்றுவோம். இறைவன் துணைநிற்பான். ஆமீன்.
27/01/2026
🕌 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அன்பார்ந்த சகோதரர்களே / சகோதரிகளே,
அல்ஹம்துலில்லாஹ் 🤲
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தமிழ்நாடு தலைமையில் நடைபெறும்
மொஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு,
இன்ஷா அல்லாஹ் நாளை (28ஆம் தேதி) கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.
🌟 சிறப்பு விருந்தினர்:
தமிழ்நாட்டின் முதலமைச்சர்,
திராவிட மாடலின் நாயகன்,
சிறுபான்மை சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை செயல்படுத்தி வரும் மாவீரன்,
மாண்புமிகு முதலமைச்சர்
திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்
சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
🚌 புறப்படும் நேரம்:
பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து
வாகனங்கள் காலை 8.00 மணிக்கு புறப்படும்.
அனைத்து வாகனங்களிலும் மாநாட்டின் ஸ்டிக்கர் & பேனர்
கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
🤝 இந்த மாபெரும் மாநாட்டிற்கு
அனைவரும் அலைகடலென திரண்டு கலந்து கொண்டு
மாநாட்டை வெற்றிகரமாக்குமாறு அன்புடன் அழைப்பு.
வஸ்ஸலாமு.