We The Leaders - Chennai

We The Leaders - Chennai

Share

நாட்டின் நலனுக்காகவும், மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்காக! இணையுங்கள், மாற்றத்தை உருவாக்குவோம்.

17/07/2026

நமது WTL Foundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.

இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

இந்த தம்பி திருப்பூரில் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார் ஆழ்ந்த வருத்தங்கள் 😭😭😭😭

16/07/2026
14/07/2026

நாங்கள் ஏன் அண்ணாமலை அண்ணாவைப் பின்தொடர்கிறேன் மற்றும் 'We the Leaders' பயணத்தில் பங்கேற்கிறேன்?

திரைப்பட நடிகரைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு வரவில்லை.நெற்றியில் திருநீறுடன் அவருக்கே உரித்தான கம்பீர நடையுடன் வசீகரப் புன்னகையுடன் எல்லாவற்றுக்கும் மேலாகச் சற்றும் குறையாத தன்னம்பிக்கையுடனும் அண்ணாமலை மாநாட்டு மேடையின் மீது ஏறியதைப் பார்த்தோம். ஏறியதும் சாஷ்டாங்கமாகக் கீழே படுத்து அவர் சக லீடர்ஸ் களின் பாதம் பணிந்ததையும் பார்த்தோம்.

"WTL நிச்சயமாக அரசியல் கட்சியாக மாறும்.நல்ல திறமையான தலைவர்களைத் தயார் படுத்திக் களத்தில் இறக்கும்.
ஆனால் மற்ற அரசியல் கட்சிகளைப் போல ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆக்ரோஷமான அரசியலை மலிவான அரசியலைக் கையில் எடுக்க மாட்டோம். தவெக அரசுக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்துக் காத்திருப்போம்.நல்ல படியான ஆட்சியை நடத்த தவெக வுக்கு உதவுவோம்.நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளை/கோரிக்கைகளை தவெக வால் எதிர் கொள்ள முடியாவிட்டால் நாங்கள் ஆட்சியைப் பிடித்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.
தவெக அரசு போகும் போக்கில் கடன் வாங்கி மக்களின் மீது சுமையை அதிகரிக்கத் தான் போகிறது அதையும் சமாளிக்கத் தயாராவோம்.2031 தேர்தலில் போட்டியிடுவோம்.

அண்ணாமலை இந்துக்களுக்கு எதிரானவன் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அண்ணாமலை முழுமையான இந்து.

அண்ணாமலை தேசியத்துக்கு எதிரானவர் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அண்ணாமலை,இந்தியன் என்பதில் பெருமை கொள்ளும் தேசிய வாதி.பெருமை உள்ள தமிழன்.

தமிழகத்தை அனைத்து வகையிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக்குவதே WTL ன் நோக்கம்.
சாதி,மதம் போன்ற வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் ஒரே நேர்கோட்டில் நல்ல எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டுமென்பதே WTL ன் நோக்கம்."
என்று அண்ணாமலை மேடை மீது உரையாற்றியதையும் பார்த்தோம்.

இந்தியாவிலேயே இப்படிப் பட்ட பெரிய இதயமுள்ள தெளிவான கண்ணோட்டமுள்ள அரசியல்வாதியைப் பார்க்க முடியாது.41 வயதிலே எத்துணை மனமுதிர்ச்சி,ஞானம் !.

தவெக,திமுக, அதிமுக போன்ற சந்தர்ப்ப வாத /குடும்ப ஆட்சி/சினிமாக் கவர்ச்சி அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை நிகழ்த்தியிருக்கும் உரையாடல் ஒரு எச்சரிக்கை மணி !

அவருடைய உரையாடலைக் கேட்ட பின்பு லீடர்ஸ் எவருக்கும் மனதில் எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை.இனி போவோர் வருவோர் சொல்லும் கேட்டுக் கொண்டு குழப்படையும் வாய்ப்புமில்லை.

அண்ணாமலையுடன் ஒருமித்த மனதுடன் கைகோர்த்து லீடர்ஸ் களாகிய நாம் மாறுவோம், மாற்றுவோம்.!

13/07/2026

Photos from We The Leaders - Chennai's post 13/07/2026

பொள்ளாச்சி போதையில்லா தமிழகம் முதல் மாநில மாநாடு

12/07/2026

மேடையேறியதும் புன்னகையுடன் மக்களை கைகூப்பி சஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கிய தலைவர்.. பொள்ளாச்சி

12/07/2026

மாநாட்டு பந்தலுக்கு வெளியே கூடிய கூட்டம்
பொள்ளாச்சி
We the leaders
போதை விழிப்புணர்வு மாநாடு

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai
Chennai
600007