25/02/2026
*இரங்கல் செய்தி*
மிகுந்த துயரத்துடனும் ஆழ்ந்த மரியாதையுடனும், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய பொதுவுடைமை கட்சியின் தேசிய முத்தத் தலைவரும், என்றும் நம் தேசிகவின் வழிகாட்டியுமான *தோழர்.ஆர். நல்லக்கண்ணு* அவர்களின் மறைவைக் கண்ணீர் கலந்த மனதுடன் அறிவிக்கிறோம்.
அவர் 26 டிசம்பர் 1925 அன்று திருவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து, இன்று 101 வயதில் நம்மை விட்டு இயற்கை எய்தினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னலமற்ற பங்களிப்பைச் செய்த அவர், சமூக நீதி, சமத்துவம், மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடினார். அவரது வாழ்க்கை தியாகமும் துணிவும் நிறைந்த ஒளிக்கோபுரமாக இருந்தது.
அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது சிந்தனைகள், கொள்கைகள், மற்றும் மதிப்புகள் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் பிறந்து, தேசிய அளவில் மதிப்புமிக்க தலைவராக உயர்ந்த அவரது பயணம், உண்மையான மகத்துவம் சேவையிலும் தன்னலமற்ற வாழ்விலும் இருப்பதை நினைவூட்டுகிறது.
ஒரு போராளி விழுந்தாலும், விதையே ஆவார்கள். நம்முள் விதைக்கப்பட்ட அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது பாரம்பரியம், எங்களை நீதியும் கருணையும் நிறைந்த உலகிற்குத் திசைதிருப்பட்டும்.
என்றும் அய்யாவின் வழியில்
- உங்கள்
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் - தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் & தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் - தேசிய சீர்திருத்த கட்சி (Non-Political Party), மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இயற்கை மேலாண்மை அணி, துணை ஆசிரியர் - பத்திரிக்கையாளர் குரல் மாத இதழ்
09/04/2025
காங்கிரஸ் தலைவரும் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் 93 வயதில் உடல் நலக் குறைவால் மரணித்துள்ளார்.
குமரி அனந்தன் அய்யா மறைந்து விட்டார் என கவலை வேண்டாம் என் அன்பு உடன் பிறப்புகளே. 800 கோடி மக்கள் தொகை உள்ள நம் புவியில் 195 நாடுகள் உள்ளன (பல இன்னும் ஐநா சபையில் அங்கீகரிக்கப்படாத நாடுகள்).
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வாழ்வார்கள் மற்றும் மறைவார்கள்.
ஆனால் ஒட்டு மொத்த உலகும், உலகின் உயிர்கள் அனைத்தும் நன்றாக வாழ வேண்டும் என தன் வாழ்நாளில் சிறிது நேரம் ஒதுக்கி வாழ்பவர்கள் சாதனையாளர்களாக என்றும் நம் மனதில் வாழ்பார்கள். ஆனால் நம் குமரி அனந்தன் அய்யா, எதோ அவர் வாழ்நாளில் சிறிது நேரம் நமக்காக வாழ்ந்தவர் அல்ல, தன் வாழ்நாள் முழுக்க எதிலும் தமிழுக்கு முதலிடம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பனை பாதுகாப்பு, மது விலக்கு எனப் பல்வேறு கோரிக்கைகளுக்காகக் காத்திரமான போராட்டங்களை, பாத யாத்திரைகளை நடத்தி தன் இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டிய தன்னலமற்ற தலைவர் மற்றும் தன்னார்வலர். எனவே அவரது இறப்பு, நமக்கு இழப்பு அல்ல நம்மை போன்று அவரின் கனவுகளை சுமந்து கொண்டு நித்தமும் வாழ்ந்து வரும் அனைவருக்கும் இன்று அவரது 2-வது பிறந்தநாள் (முதல் பிறந்தநாள் சம்பவம், இன்றைய 2வது பிறந்தநாள் சரித்திரம்). ஏனென்றால் ஒரு உயிரில் இருந்து உயிர் தரும் அற்புதத்தை இந்த உலகில் தாய் மட்டுமே நிகழ்த்திட முடியும். ஆயினும் இவரை போன்று ஒவ்வொரு போராளியும் தான் இறக்கும் போது தன்னை போலவே பல லட்சம் துய மனிதர்களை தங்கள் கனவினை நிறைவேற்றிட வசதியாய் தாய் போல இந்த உலகிற்கு விட்டு செல்வர்.
நம் தேசிய சீர்த்திருத்த அமைப்பு முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கும் 50-கோடி பனைமரம் தமிழகத்தில் நட்டு தமிழகத்தின் ஆண்டு வருமானத்தில் இன்னும் 5-லட்சம் கோடி உபரியாக உருவாக்கி அனைவருக்கும் நியாய விலைக் கடைகளில் பனை பொருட்களை குறைந்த விலையில் வழங்கி அடுத்த தலைமுறையய் ஆரோக்கியமானதாக வாழ வழி செய்யும் நம் திட்டத்திற்கு அய்யாவின் பங்கு மிகப்பெரியது. அவர் நமக்கு வழங்கிய ஆலோசனைகள் மற்றும் வழி காட்டுதல் படி
நாமும் இனி நம் வாழ்நாள் முழுக்க அய்யாவின் கனவுகளை நிறைவேற்றிட அவரின் பாதையில் வாழ்வோம், உழைப்போம்.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிர்களையும் நம் இமையில் சுமந்து பாதுகாப்போம்.
என்றும் நன்றியுடன்,
மக்கள் பணியில் உங்கள்
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் - தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் & தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் - தேசிய சீர்திருத்த கட்சி (Non-Political Party), மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இயற்கை மேலாண்மை அணி, துணை ஆசிரியர் - பத்திரிக்கையாளர் குரல் மாத இதழ்.
23/01/2025
*23-ஜனவரி-2025*
*இந்தியாவின் நீர் மேலாண்மை பிதாமகன் A.C.காமராஜ் அவர்களின் முதல் பிறந்த நாள்*
நமது இந்தியாவின் நீர் மேலாண்மை பிதாமகன் மற்றும் தேசிய நீர்வழிச்சாலை யின் தந்தையுமான, எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நம் அன்பு அய்யா பேராசிரியர் A.C. காமராஜ் அவர்களோடு நாம் நேரில் உறவாடி இன்றோடு ஓராண்டு முடிகிறது.
நம் குல ஆசான் APJ அப்துல் கலாம் அவர்களின் வார்த்தையான "விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதல்ல"
என்பது போல
"தலைவர்கள் புதைக்கப் படுவதில்லை விதைக்கப் படுகிறார்கள்" என்பது போல
தன் பிறப்பில் இருந்து கடைசி நாள் வரை, 93 ஆண்டுகள் நமது வருங்கால தலைமுறையின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டு இருந்த எங்கள் அன்பு அய்யா என்னை போல நம் அனைவரின் உள்ளத்திலும் கடந்த ஆண்டு இதே நாளில் விதைக்கப்பட்டு உறங்கிக் கொண்டு இருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை எப்போதும் மக்கள் தலைவர்களுக்கு இரண்டு பிறந்த நாள்,
ஒன்று அவர்கள் இந்த மண்ணில் அவதரித்த சாதாரண நாள்!
இரண்டாவது, அவர்கள் நம்மை போன்றவர்களின் நெஞ்சில் விதைக்கப்பட்டு சாகாவரம் பெரும் சரித்திர நாள்!
தலைவர்கள் மண்ணில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் அவர்கள் கனவுகள் வழியே, என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
என்னை போல, நம்மை போல தளபதிகள் களத்தில் நின்று போராடும் வரை எங்கள் ஐயாவிற்கு இறப்பு என்பதே கிடையாது.
எப்பேர்ப்பட்ட சக்திகள் எதிரணியில் நின்று நம் கனவான தேசிய நவீன நீர்வழிசாலை திட்டத்தினை எதிர்க்க நினைத்தாலும் அந்த திட்டம் நிறைவேறும் என்பது காலத்தின் கட்டாயம்.
ஒரே ஒரு கல்லணை அமைத்த கரிகால பெருவளத்தான் அவர்கள் 2000 ஆண்டுகளாக, ஒரே ஒரு அணை அமைத்த பென்னி குயிக் அவர்கள் 100 ஆண்டுகளாக நம்முள் இன்றும் வாழ்ந்து வருவது போல
பல ஆயிரம் அணைகளும், நூற்றுக்கனக்கான கல்லனைகளும் தன் ஒரே திட்டத்தில் உருவாக்கி கட்டப் போகும் எங்கள் அன்பு அய்யா காமராஜ் அவர்களின் புகழ் இந்த பூமி உள்ளவரை நம் அனைவர் நெஞ்சிலும் நீங்காமல் என்றும் இருக்கும்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!
நம் தேசிய நவீன நீர்வழிசாலை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து உலக சரித்திரத்தில் உங்கள் பெயரினை சொல்லும்!!!
இவை அனைத்தும் நினைவாகிட அய்யாவின் வழியில் என்றும் பயணிப்பேன் என்று இன்றைய உங்கள் மறு பிறப்பின் பிறந்த நாளான இன்று உறுதி எடுக்கிறேன்.
என்றும் உங்கள் பாசமிகு அன்புத் தளபதி
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் - தேசிய நவீன நீர்வழிச் சாலைத் திட்டம்
11/12/2024
*இன்று (11-டிசம்பர்-2024) காலை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
GST வரியில் வணிகர்களின் கட்டிட வாடகைக்கு அறிவிக்கப்பட்டுள்ள GST வரியை ரத்து செய்யவும், சிறு வணிகர்களுக்கு மறுக்கப்படும் GST உள்ளீட்டு வரிக் கடன் (ITC) வழங்க கோரியும், சிறு வணிக மளிகை கடைகளுக்கு வழங்கப்படும் ஆண்டு உரிமத்தினை 3ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றி நடைமுறை படுத்த உள்ளிட்ட வணிகர்களுக்கு மிக முக்கிய தேவைகளை நிறைவேற்றிட கோரி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைமையில், அனைத்து பிற வணிகர் சங்கங்களும் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த மிக முக்கிய போராட்டத்தில் நானும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வணிகர்களின் பாதுகாவலர் அன்பு அண்ணாச்சி திரு.AM.விக்கிரமராஜா அவர்களின் அண்புக் கட்டளையை ஏற்று இன்று நானும் கலந்து கொண்டேன்.
அந்த நிகழ்வில் "இந்தியாவின் முதுகெலும்பாக இருப்பது நமது நாட்டின் விவசாயிகள். அந்த விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்கள் அனைவரின் வீட்டிற்கும் கொண்டு செல்ல வாகன போக்குவரத்து முதல் மண்டிகள், மளிகை கடை வரை, அரும்பாடு படுவது நமது வணிகர்கள். எனவே 50லட்சத்திற்கு கீழே ஆண்டு கொள்முதல் திறன் (வணிகம்) கொண்ட உணவுப் பொருட்கள் சார்ந்த அனைத்து சிறு குறு வணிகர்களையும் விவசாயிகளாக கருதி அவர்களுக்கு வழங்கும் அதே சலுகைகளை உடனடியாக அமல் படுத்திட வேண்டும். இந்த ஒரு திட்டத்தினை செயல்படுத்தினால் மட்டுமே இன்றைய ஆர்ப்பாட்டத்தின் பல முக்கிய கோரிக்கைகள் ஒரே திட்டத்தில் நிறைவேற்றப் பட்டு விடும். இந்த திட்டத்தின் இன்னொரு பலனாக அந்த சிறு வணிகர்களுக்கு இனி வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 10கோடி சிறு குறு வணிகர்களின் குடும்பங்கள் பாதுகாக்கப்படும் என நான் பேசினேன்.
நான் கூறிய முக்கிய திட்டமான இந்த "சிறு வணிகரும் விவசாயியும் ஒன்றே" என்கிற திட்டத்தினை அடுத்து இந்திய அளவில் நடைபெற இருக்கும் அகில இந்திய வணிகர் சங்க போராட்டங்களில் முதன்மையாக இணைப்பதாக அன்பு அண்ணாச்சி விக்கிரமராஜா அவர்கள் கூறினார்கள்.
இன்று இந்த நிகழ்வில் என்னோடு பல அன்புத் தோழர்கள் கலந்து கொண்டனர். மிக முக்கியமாக எனது அன்பு தம்பி கோடம்பாக்கம் வெற்றி, தமிழக டிஜிட்டல் பேனர் சங்க மாநில தலைவர் அன்பு அண்ணன் திரு.சுரேஷ் அவர்கள், தமிழக டிஜிட்டல் பேனர் சங்க மாநில செயலாளர் திரு.யுவராஜ் அண்ணா, தமிழக டிஜிட்டல் பேனர் சங்க மாநில பொருளாளர் திரு.மாதவன் அண்ணா, தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் இயற்கை மேலாண்மை அணியின் சென்னை மண்டல கூடுதல் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதர திரு. பாலமுருகன், மற்றும் நமது தேசிய சீர்திருத்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
என்றும் நம் நாடு நிலைக்க, மாநிலம் வளர்க்க, மனிதம் சிறக்க ஜாதி, மத, இன, மொழி, கட்சி வேறுபாடின்றி பாடுபடுவோம்.
என்றும் மக்கள் பணியில் உங்கள்
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் - தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் & தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் - தேசிய சீர்திருத்த கட்சி (Non-Political Party), மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இயற்கை மேலாண்மை அணி, துணை ஆசிரியர் - பத்திரிக்கையாளர் குரல் மாத இதழ்.
11/11/2024
பாலன் அய்யா மறைந்து விட்டார் என கவலை வேண்டாம் என் அன்பு உடன் பிறப்புகளே. 800 கோடி மக்கள் தொகை உள்ள நம் புவியில் 195 நாடுகள் உள்ளன (பல இன்னும் ஐநா சபையில் அங்கீகரிக்கப்படாத நாடுகள்).
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வாழ்வார்கள் மற்றும் மறைவார்கள்.
ஆனால் ஒட்டு மொத்த உலகும், உலகின் உயிர்கள் அனைத்தும் நன்றாக வாழ வேண்டும் என தன் வாழ்நாளில் சிறிது நேரம் ஒதுக்கி வாழ்பவர்கள் சாதனையாளர்களாக என்றும் நம் மனதில் வாழ்பார்கள். ஆனால் நம் பாலன் அய்யா, எதோ அவர் வாழ்நாளில் சிறிது நேரம் நமக்காக வாழ்ந்தவர் அல்ல, தன் வாழ்நாள் முழுக்க அனைத்து உயிர்களும், மனிதர்களும் ஒன்று என்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி சென்ற நம் தமிழறிஞர் கனியன் புங்குன்றனார் அவர்களின் கருத்தை மெய்யாக்க தன் இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டிய தன்னலமற்ற தலைவர் மற்றும் தன்னார்வலர். எனவே அவரது இறப்பு, நமக்கு இழப்பு அல்ல நம்மை போன்று அவரின் கனவுகளை சுமந்து கொண்டு நித்தமும் வாழ்ந்து வரும் அனைவருக்கும் இன்று அவரது 2-வது பிறந்தநாள் (முதல் பிறந்தநாள் சம்பவம், இன்றைய 2வது பிறந்தநாள் சரித்திரம்). ஏனென்றால் ஒரு உயிரில் இருந்து உயிர் தரும் அற்புதத்தை இந்த உலகில் தாய் மட்டுமே நிகழ்த்திட முடியும். ஆயினும் இவரை போன்று ஒவ்வொரு போராளியும் தான் இறக்கும் போது தன்னை போலவே பல லட்சம் துய மனிதர்களை தங்கள் கனவினை நிறைவேற்றிட வசதியாய் தாய் போல இந்த உலகிற்கு விட்டு செல்வர்.
அதை போல நாமும் இனி நம் வாழ்நாள் முழுக்க அய்யாவின் கனவுகளை நிறைவேற்றிட அவரின் பாதையில் வாழ்வோம், உழைப்போம்.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிர்களையும் நம் இமையில் சுமந்து பாதுகாப்போம்.
என்றும் நன்றியுடன்,
மக்கள் பணியில் உங்கள்
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் - தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் & தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் - தேசிய சீர்திருத்த கட்சி (Non-Political Party), மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இயற்கை மேலாண்மை அணி, துணை ஆசிரியர் பத்திரிக்கையாளர் குரல் மாத இதழ்.
16/08/2024
பாகம் 2 - 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் - (15-ஆகஸ்ட்-2024)
வாழ்வின் வேதனையை சாதனையாக மாற்றக்கூடிய அருமையான ஆறு நீதி கதைகள் காணொளி
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டு என் உயிரிலும் மேலான எந்தன் அன்பு தங்கைகளிடம் வாழ்வின் வேதனையை சாதனையாக மாற்றக்கூடிய அருமையான ஆறு நீதி கதைகள் எடுத்துரைத்தேன். நம் நண்பர்கள் பலர் உடனே அந்த கதை காணொளியை வெளியிட வைத்த அன்பு கோரிக்கைக்காக இதோ நான் கூறிய 6 நீதி கதையின் காணொளி தொகுப்பு உங்கள் பார்வைக்கு
காணொளியை காண:- https://www.youtube.com/watch?v=CfBb_1HTGpA
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் - தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் & தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் - தேசிய சீர்திருத்த கட்சி (Non-Political Party), மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இயற்கை மேலாண்மை அணி, துணை ஆசிரியர் - பத்திரிக்கையாளர் குரல் மாத இதழ்
பாகம் 2 - வாழ்வின் வேதனையை சாதனையாக மாற்றக்கூடிய அருமையான ஆறு நீதி கதைகள்
*பாகம் 2 - 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் - (15-ஆகஸ்ட்-2024)*நமது தேசிய சீர்த்திருத்த அமைப்பின் மூலம் நாம் தத்தெடுத்துள்....
16/08/2024
*78-வது சுதந்திர தின கொண்டாட்டம் - (15-ஆகஸ்ட்-2024)*
நமது தேசிய சீர்த்திருத்த அமைப்பின் மூலம் நாம் தத்தெடுத்துள்ள 128-வது அரசு பள்ளியும், நமது சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தினை நிகழ்த்த வல்லமை கொண்ட சுமார் 2500+ சிங்கப் பெண்கள் படித்து வரும் சிறப்பு மிக்க பள்ளியும், கடந்த கல்வி ஆண்டு (2023-2024) 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வெழுதிய 436 பெண்களில் 428 பேர் வெற்றி பெற்று (97% வெற்றி), பாடப்பிரிவுகள் அதிக மதிப்பெண் பெற்றதற்காக மாவட்ட அளவில் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் விருதில் 15 விருதையும் தட்டிச் சென்ற சிறப்பு வாய்ந்த செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாணவர்களின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள், ஒய்வு பெற்ற நல்லாசிரியர் திரு.வீரராகவன் அய்யா மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இயற்கை மேலாண்மை அணியின் செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் தலைமை ஒருங்கிணைப்பாளரும் எனது அன்பு தம்பியாகிய திரு.தாசன் அவர்களோடு, நானும் கலந்து கொண்டேன்.
இந்த சிறப்பு மிக்க விழாவினில் என் உயிரிலும் மேலான எந்தன் அன்பு தங்கைகளோடு உரையாடி அவர்கள் வாழ்வில் எப்போது எந்த துன்பம் நிகழ்ந்தாலும் அதனை சாதனையாக மாற்றக்கூடிய அருமையான ஆறு நீதி கதைகள் எடுத்துரைத்தேன். இந்த விழாவில் கலந்து கொள்ள இந்த பெரும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய திருக்கழுக்குன்றம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையும் எந்தன் பெருமதிப்பிற்குரிய அன்பு அம்மா திருமதி.சூர்யா கலா அவர்களுக்கு எந்தன் சிரம் தாழ்ந்த நன்றிகளும், அவர் மென்மேலும் பல சாதனைகள் புரிய எந்தன் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் எப்போதும் இருக்கும்.
அனைவருக்கும் எந்தன் இனிய 78-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
நிகழ்வின் காணொளியை காண:
பாகம் 1:- https://www.youtube.com/watch?v=9DRccQ61Iyc
பாகம் 2:- வாழ்வின் வேதனையை சாதனையாக மாற்றக்கூடிய அருமையான ஆறு நீதி கதைகள் காணொளி விரைவில்
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் - தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் & தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் - தேசிய சீர்திருத்த கட்சி (Non-Political Party), மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இயற்கை மேலாண்மை அணி, துணை ஆசிரியர் - பத்திரிக்கையாளர் குரல் மாத இதழ்
பாகம் 1 - 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் - (15-ஆகஸ்ட்-2024)
78-வது சுதந்திர தின கொண்டாட்டம் - (15-ஆகஸ்ட்-2024)நமது தேசிய சீர்த்திருத்த அமைப்பின் மூலம் நாம் தத்தெடுத்துள்ள 128-வது அ.....
04/06/2024
2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
தேசிகவின் வாக்குப் பதிவிற்குப் பிந்தைய கணிப்பு (Exit poll report) - தமிழகத்திற்கு மட்டும்
அதிமுக + கூட்டணி = 0 முதல் 5 தொகுதி வரை
திமுக + கூட்டணி = 33 முதல் 39 தொகுதி வரை
பாஜக + கூட்டணி = 1 முதல் 2 தொகுதி வரை
நாம் தமிழர் = வெற்றி வாய்ப்பு எந்த தொகுதியிலும் இல்லை. அதே நேரம் தமிழகம் முழுவதிலும் 40 லட்சம் முதல் 60 லட்சம் வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளது. 6.5% முதல் 9.4% வரை வாக்கு சதவிகிதம் பெற வாய்ப்பு உள்ளது. 2 முதல் 8 தொகுதி வரை தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை மாற்றும் சக்தி உள்ளதாக மாறும் வலிமை கொண்டதாக வலுப்பெரும்.
06/05/2024
தமிழ்நாடு வணிகர் தினத்தினை முன்னிட்டு 05-மே-2024 அன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 41-வது விடுதலை முழக்க மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் திரு.AM.விக்கிரமராஜா அவர்களின் தலைமையிலும் & லட்சக்கணக்கான வணிகர்கள் முன்னிலையிலும் மதுரையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 41-வது விடுதலை முழக்க மாநாடு 2024
தமிழ்நாடு வணிகர் தினத்தினை முன்னிட்டு 05-மே-2024 அன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 41-வது விடுதலை முழக்க மாநாட...
13/02/2024
*மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் மற்றும் மேனாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறுதி ஊர்வலம் - 13-பிப்ரவரி-2024*
கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி ஹிமாச்சல் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் மற்றும் மேனாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி அவர்கள் அப்போது ஏற்பட்ட கோரமான கார் விபத்தில் சட்லஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். மத்திய மாநில அரசுகளின் 8நாட்கள் தீவிர தேடுதலின் பலனாக அவரது உடல் மீட்கப்பட்டு இன்று சென்னையில் உள்ள மனித நேய அகாடமியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தி நகர் கண்ணமாபேட்டை இடுகாட்டில் தமிழகத்தின் முதல்வர், ஆளுநர், அனைத்து கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் அழுகுரலோடு இறுதி சடங்கு முடிந்தது.
எனக்கு சைதை அய்யாவோடு மட்டுமே பழக்கம் சைதையார் அவர்களை சந்திக்க நான் சென்ற போது அவரது அலுவலகத்தில் இரண்டு மூன்று முறை வெற்றி அண்ணனை சந்தித்து இருக்கிறேன். மற்றபடி அவரை பற்றி எனக்கு பெரிதாக இன்று வரை எதுவும் தெரியாது.
இன்றைய இறுதி அஞ்சலி நிகழ்வின் போது சினிமா க(தா)தை நாயகன் எனது அன்பு அண்ணன் விதார்த் அவர்கள் மூலம் வெற்றி அண்ணனை பற்றி தெரிந்து கொண்டேன். புலிக்கு பிறந்தது பூனையாக முடியாது என்பதை போல சைதையார் அய்யாவை போல பல நல்ல சமூக பணிகளை வெற்றி அண்ணன் சத்தமில்லாமல் செய்து வந்தது அறிந்து இவ்வளவு நல்ல மனிதருக்கு ஏன் இப்படி ஒரு முடிவு என எங்கள் கண்கள் கசிந்தன.
இன்னும் பல காலங்கள் வாழ்ந்து பல சமூக சேவைகள் செய்ய காத்திருந்த ஒரு மாமனிதர் இன்று நம்மோடு இல்லை என்பது அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் இல்லாது ஒட்டு மொத்த நம் தமிழ் சமூகத்துக்குமான பேரிழப்பு.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் DSR. சுபாஷ் அண்ணனோடு சைதையார் அவர்களின் துன்பத்தில் இன்று நானும் பங்கு கொண்டேன்.
தலைவர்கள் எப்போதும் புதைக்கபடுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதை போல வெற்றி அண்ணன் விட்டு சென்ற சமூக பணிகளை தொடர்ந்து நாம் சைதையார் துரை சாமி அய்யாவின் வழிகாட்டுதலின் பேரில் நாம் இனி தொடர்ந்து செய்வோம்.
வெற்றி அண்ணனின் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் தேசிய நவீன நீர் வழிச் சாலை பேரியக்கத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்கள்😢
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் - தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் & தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தலைமை ஒருங்கிணைப்பாளர்- தேசிய சீர்திருத்த கட்சி (Non-Political Party), மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இயற்கை மேலாண்மை குழு, துணை ஆசிரியர் - பத்திரிக்கையாளர் குரல் மாத இதழ்.
05/02/2024
நம்மை விட்டு மறைந்து சென்ற இந்திய நீர் மேலாண்மை பிதா மகனும், தேசிய நவீன நீர் வழிச்சாலை திட்டத்தின் தந்தையும் நமது பெருமதிப்பிற்குரிய அய்யா உயர்திரு.A.C.காமராஜ் அவர்களுக்கு புகழஞ்சலி
இன்றோ நாளையோ
நமது தேசிய நவீன
நீர்வழிச்சாலை திட்டம்
மத்திய மாநில அரசுகளால்
செயல்முறைக்கு வரும் போது,
அந்த நேரத்தில் அவருக்கு
என்னால் வெற்றி மாலை
சூட்டிட இயலாது என்பதனால்
இன்று ஆயிரம் மாலைகள்
நம் நண்பர்கள் அவருக்கு
இறுதி அஞ்சலி செலுத்தும் போது
அணிவித்தாலும் அனைத்தையும்
பெற்றுக் கொண்டும்,
நான் சூட்டிய மாலையை மட்டும்
எப்போதும் அவர் நெஞ்சோடும்,
உடலோடும் அனைத்துக் கொண்டே
என் மன்னவன் மண்ணுக்குள்
உறங்கிக் கொண்டு
இருக்கிறார். விதைத்தவன் உறங்கலாம்
ஆனால் விதைகள் உறங்குவதில்லை.
எனவே அதிவிரைவில்
நம் தேசிய நவீன
நீர்வழிச்சாலை திட்டம்
செயல்முறைக்கு வருவதற்கு
நாம் அனைவரும் சுய விருப்பு
வெறுப்புகள் கலைந்து
ஒற்றுமையாய் அய்யா
காட்டிய வழியில் பயணிப்போம்.
தேசிய நவீன நீர்வழிசாலை
படைப்போம்!!!
நம் இந்திய தேசத்தினை
நீர்மேலான்மையில்
தன்னிறைவு அடைய செய்வோம்.
- என்றும் களப்பணியில்
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன்
தேசிய ஒருங்கிணைப்பாளர்
தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம்
தேசிய நவீன நீர்வழிச்சாலை AC.காமராஜ் அவர்கள் மரணம்
இன்றோ நாளையோ நமது தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் மத்திய மாநில அரசுகளால் செயல்முறைக்கு வரும் போது, அந்த நேரத்...