Magizh Foundation

Magizh Foundation

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Magizh Foundation, Public Service, Chennai.

03/05/2022


18/04/2022

மருத்துவர் என்பவர் யார்? பிறரின் உடல் பிணி தீர்ப்பவர் மட்டுமே மருத்துவரா? பிறரின் மனப் பிணியையும் தீர்ப்பவர் மருத்துவரா? உடல் மற்றும் மனத்தின் பிணியைத் தீர்ப்பவராக இருந்தாலும் அதற்காக ஒரு பெருந்தொகையைப் பெறுபவரை ராசியான மருத்துவர் எனலாம். ஆனால், நல்ல மருத்துவர் என்று மனதார சொல்ல முடியுமா? மேலும் மேலும் வரும் நோய்களுக்கு மேலும் மேலும் மருந்து அளிப்பவர் மருத்துவரா? அல்லது நோயின் வேர் கண்டறிந்து மீண்டும் வராமல் முற்றிலும் களையெடுப்பவர் சரியான மருத்துவரா? இல்லை, நோய் வரும்முன்பே தடுக்கும் வழிமுறையை ஒருவர் நோயாளி ஆகும் முன்பே சொல்பவர் மருத்துவரா?
ஓர் ஊரில் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் உடல் மற்றும் மனப் பிணிகளைத் தீர்க்கும் மருத்துவராக மட்டுமல்ல, அந்தப் பிணி வரும் முன்பே தடுப்பதற்கான வழிகளை எல்லாம் பொதுவில் சொன்னார். அதுமட்டுமா? நோயை உண்டாக்கும் காரணிகளை எதிர்த்து மக்களுடன் சேர்ந்து போராடி விரட்டி அடித்தார். அதாவது, தனது சம்பாதியத்துக்கான அடிப்படையையே அடித்து விரட்டினார். அதையும் மீறி வந்த நோய்களுக்கு, தான் மட்டுமே மருத்துவராக இல்லாமல், சிறந்த மருத்துவர்களைத் தேடிப் பிடித்து ஓரிடத்தில் கூட்டி, மிகக் குறைந்த செலவில் மக்களுக்கு பிணி தீர்க்க செய்தார். அதாவது, தனது தட்டுக்கு தேடி வருகிற உணவையே பத்து தட்டுகளுக்கு மாற்றினார். மொத்தத்தில், சமூகத்தை ஆக்கிரமிக்க வந்த நோயையே கூட்டுறவுடன் ஒன்றுகூடி, படைத்தலைவனாக முன்நின்று போரிட்டார். சுற்றுச்சூழலுக்கு, இலக்கியத்துக்கு, மருத்துவத்துக்கு, மண்ணுக்கு என எல்லாவற்றுக்கும் மருத்துவராக இருந்தார், வெ.ஜீவானந்தம் என்கிற மாபெரும் மருத்துவர். அவரை அறிந்துகொள்ளும் உங்கள் குழந்தைகளும் நாளை சமூகத்தின் மிகச் சிறந்த மருத்துவராக இருப்பார்கள். அவர்கள் கட்டிடத்தை உருவாக்கும் கலைஞனாக இருந்தாலும் சரி, கணிப்பொறியை இயக்கும் நிபுணனாக இருந்தாலும் சரி, அந்தந்த துறையின் அவலப் பிணியைத் தீர்க்கும் மருத்துவராக இருப்பார்கள்.
ஏப்ரல் மாத #மகிழ் தனித்துவ சிறார் இதழ், அந்த மாபெரும் மருத்துவரின் கதையைத் தாங்கி வருகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுங்கள். படிக்கவும்... பல்லாண்டுகள் பாதுகாக்கவும்...
சந்தா விவரங்களுக்கு...

மேலும் விபரங்களுக்கு
7397222767 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.

தனி இதழ் ரூ 89/-
ஆண்டு சந்தா (12 இதழ்கள்) 899/-
சந்தா செலுத்த: 9962333388

12/04/2022

Few people have no desire to seek the truth. Whether it is about an unsolved incident regarding a missing aircraft or the origins of a meteor shower, most people are curious.
And this curiosity, this longing to see the truth, has driven humanity from caves to palaces, from rocks to electronics, and from our origins to the surface of the moon.


14/03/2022

கொண்டாடுங்கள்... கொண்டாடுங்கள்... காலை விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை எந்த ஒன்றையும் கொண்டாடுங்கள். துயரம் வெறுத்து ஒதுங்கிவிடும்.


01/03/2022

சிறந்தது என்பது ஒரு முடிவிலி. ஒரு சிறந்ததை முறியடிக்க இன்னொரு சிறந்தது... அதைவிடச் சிறந்தது எனத் தோன்றிக்கொண்டே இருக்கும். மேலும் சிறந்தது என்பது இடத்துக்கு இடம் வேறுபடும். விவாதங்களை, பேதங்களை உருவாக்கும். போட்டி, வெறுப்புணர்ச்சி, பகை எனப் பல வாரிசுகளைப் பெற்றெடுக்கும். ஆகவே, செய்யும் எந்த ஒன்றையும் சிறந்ததாக எண்ணி திருப்தி அடையுங்கள்.


08/02/2022

Loving someone and letting them go starts with being selfless, not selfish. You put them over and above yourself.


01/02/2022

காட்டுகிற அன்புக்கு மதிப்பில்லாமல் போகும்போதும், அதே அன்பை எதிர்பார்த்து ஏமாறும் போதும், அங்கு வெளிப்படுவது கோபம் இல்லை அன்புதான்.
இது புரியாமல் பிரிபவர்களே அதிகம்.


26/01/2022

Independent India, Republic India, let us make it developed India.

24/01/2022

ஒரு மனிதரை துவளச் செய்வதில் நோய்க்கு முக்கிய பங்குண்டு. சாதாரண மனிதர்கள் ஓர் உடல் நோய் தாக்கும்போது அதற்கு தங்கள் மனதையும் பலி கொடுத்து விடுகிறார்கள். ஆனால், சாதனையாளர்கள், தங்கள் மனதால் எதிர்நீச்சல் போட்டு உடல் நோய் என்கிற கடலையும் கடக்கிறார்கள். அப்படியான ஒருவர்தான் டாக்டர் ஜி.வெங்கடசாமி. மனிதர்களை நோயின் பிடியிலிருந்து மீட்கும் மருத்துவம் படித்து மக்களை நோக்கி செல்லும்போதெல்லாம்
அடுத்தடுத்து அவரை நோய்கள் தாக்கி செயலிழக்க வைக்க முயல்கிறது. ஆனால், அவர் துவண்டு விடவில்லை. தன்னால் அடுத்து என்ன செய்ய முடியும் என வழி தேடி எதிர்நீச்சல் போடுகிறார். அப்படி அவர் கடந்து வந்து ஒரு பெரும் சமுத்திரத்தையே உருவாக்குகிறார்... அதுதான் 'அரவிந்த் கண் மருத்துவமனை'.
ஒரு சமுத்திரத்தில் கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்வது போல அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வறிய நிலையில் இருக்கும் பலரும் பார்வை இழப்பு என்ற தீரா நோயிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். இது எப்படி சாத்தியம் என உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் கண் மருத்துவத்தில் பெரும் புரட்சியை உருவாக்கி இருக்கிறது அரவிந்த் கண் மருத்துவமனை. டாக்டர் ஜி.வெங்கடசாமி வழியே நம் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயத்தைதான் பிப்ரவரி மாத 'மகிழ்' தனித்துவ சிறார் இதழ் சொல்லப் போகிறது.
லட்சக்கணக்கான மக்களுக்கு புற ஒளியை அளித்தவர் பற்றி உங்கள் குழந்தைகள் அறியும்போது அவர்களின் அக ஒளி மேலும் பிரகாசிக்கும். அந்த பிரகாசம், உங்கள் குழந்தைக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் பெரும் ஒளியாக மாறும்.
மகிழ்... படிக்கவும் பல்லாண்டுகள் பாதுகாக்கவும் வேண்டிய சிறார் மாத இதழ்.

மேலும் விபரங்களுக்கு
7397222767 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.

தனி இதழ் ரூ 89/-
ஆண்டு சந்தா (12 இதழ்கள்) 899/-
சந்தா செலுத்த: 9962333388

21/01/2022

ஒவ்வொரு முறை பிரியம் பகிரப்படுகிறது போதும் அது தனக்கான உலகத்தை தானே கட்டமைத்துக் கொள்ளும் அங்கு எப்படியோ வாழ்ந்து கொள்ளலாம்


19/01/2022

பிரபஞ்சத்தில் மாறாததும் நிலையானதும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதுமான ஏதுமே இல்லை என பௌத்தம் போதிக்கிறது..


18/01/2022

இந்த உலகம் அறிவியல் அளிக்கும் நவீனங்களால் மட்டும் இயங்கவில்லை.
மாநகரின் பேருந்து நெரிசலில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகும் ஓர் ஆணோ, பெண்ணோ அவசர அவசரமாக ஐந்து ரூபாயை கை மாற்றி அனுப்பி, "சீக்கிரம் டிக்கெட் கொடுங்க. ஸ்டாப்பிங் வரப்போகுது" எனச் சொல்லி வாங்கும் காட்சியை பலமுறை பார்த்திருக்கலாம். ( அந்த நிறுத்தத்தில் ஒருபோதும் பயணச் சீட்டு பரிசோதகர் இருப்பதில்லை) அவ்வளவு கூட்டத்திலும் தான் பயணிக்கும் இடத்துக்கான தொகையைக் கொடுக்க வேண்டும் என நினைக்கும் அவர்களிடம் இருப்பதன் பெயர்தான் அறம்.
அதேபோல தாங்கள் மேற்கொண்ட பணியில் அறத்துடன் செயல்பட்டு, நாட்டில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எத்தனையோ மனிதர்களை நம் குழந்தைகளுக்கு சொல்லும்போது அவர்களுக்குள் அறம் சார்ந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அது இன்னும் பல நவீனங்கள் வரப்போகும் வருங்கால உலகை தொடர்ந்து இயங்க செய்யும்.
அதற்கான ஒரு சிறு முயற்சியாக #மகிழ் என்ற இந்த சிறார் இதழ் மாதந்தோறும் ஓர் அறம் சார்ந்த மனிதர்களின் வாழ்வை/அவர்களின் செயல்பாட்டை சொல்லப் போகிறது.
முழுமையான வண்ணத்தில் பக்கத்துக்கு பக்கம் அழகான ஓவியங்களுடன் மலர்ந்துள்ள இந்த #மகிழ் இதழை உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்.
மேலும் விபரங்களுக்கு....
7397222767 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai