Greater Chennai Police - Crime Against Women & Children Wing

Greater Chennai Police - Crime Against Women & Children Wing

Share

CRIME AGAINST WOMEN AND CHILDREN

Photos from Greater Chennai Police - Crime Against Women & Children Wing's post 26/04/2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் காவல் துணை ஆணையாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU), சிறுவர் நல காவல் பிரிவு (JAPU) 1 மற்றும் 2 மற்றும் (IUCAW), 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் ஆகியோர் இணைந்து சென்னை பெருநகரின் பல்வேறு இடங்களில் கடந்த 19.04.2021 முதல் 26.04.2021 ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்றுப் பரவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வு முகாம்கள் மூலம் மக்கள் மிகுந்த கவனத்துடன் அரசு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முன்பைவிட அதிக கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதனால் தமக்கும், தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கும் என்றும், ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் பாதுகாப்பான, வளமான சமுதாயத்தை நிலைநிறுத்த முடியும் என்பதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 தினங்களில் சென்னை பெருநகரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா ரோந்து வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மேலும் எந்த நேரத்திலும் பொது மக்கள் காவல்துறையினரை தயக்கமின்றி நாடலாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் எந்த நேரத்திலும் பொது மக்கள் காவல்துறையினரை தயக்கமின்றி நாடலாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவுகாவல் துணை ஆணையாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Photos from Greater Chennai Police - Crime Against Women & Children Wing's post 10/04/2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் காவல் துணை ஆணையாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU), சிறுவர் நல காவல் பிரிவு (JAPU) 1 மற்றும் 2 மற்றும் (IUCAW), 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் ஆகியோர் இணைந்து சென்னை பெருநகரின் பல்வேறு இடங்களில் கடந்த 07.04.2021 முதல் 10.04.2021 ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்றுப் பரவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு முகாம்கள் மூலம் மக்கள் மிகுந்த கவனத்துடன் அரசு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முன்பைவிட அதிக கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதனால் தமக்கும், தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கும் என்றும், ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் பாதுகாப்பான, வளமான சமுதாயத்தை நிலைநிறுத்த முடியும் என்பதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 தினங்களில் சென்னை பெருநகரில் 175க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா ரோந்து வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் எந்த நேரத்திலும் பொது மக்கள் காவல்துறையினரை தயக்கமின்றி நாடலாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

06/03/2021

சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட W.16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 04/2017, U/s.8 of POCSO Act 9(n) 10 of POCSO Act – ன் படி 08.05.2017 - ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு துரிதமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் காவல் துணை ஆணையாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு) மற்றும் அவரது குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுத்தும் சீரிய முயற்சிகளை கையாண்டும் எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி தண்டனை பெற்றுத்தரப்பட்டது.

இவ்வழக்கின் குற்றவாளியான காதர் பாஷா, வ/36, த/பெ. அன்சர்பாஷா, எண். 22/32, அலெக்சாண்டர் தெரு, ஓட்டேரி, சென்னை என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. அவ்வாறு ரூ.10,000/- அபராதம் கட்டத்தவரும் பட்சத்தில் குற்றவாளிக்கு கூடுதலாக 2 மாதம் சிறை தண்டணை அனுபவைக்க வேண்டும் என்று போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேற்படி குற்றவாளிக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதன் பேரில் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவ்வழக்கில் புலன்விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

Photos from Greater Chennai Police - Crime Against Women & Children Wing's post 04/03/2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பெருநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் திருமதி. H. ஜெயலட்சுமி, அவர்கள் சென்னை W.1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயகோபால் கரோடியா பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று 500 பள்ளி மாணவிகளுக்கு இன்றைய கால கட்டத்தில் கணினி வழி குற்றங்களான மின்னஞ்சல் மூலம் கொடுமைப்படுத்துதல் (Harassment), தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உட்படுத்துதல் (Stalking), இணையதளம் மூலம் மிரட்டி கொடுமைப்படுத்துதல் (Bullying). உடற்தேய்ப்பு பணி (Grooming), ஆகிய குற்றங்களை பற்றிய விழிப்புணர்வு பற்றியும் இக்குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் சம்மந்தப்பட்ட ஆவணங்களை கொடுக்கவேண்டும் என்றும், யாராவது சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் அதை பற்றியும் தகவல்களை அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் இணையதள பாதுகாப்பு குறித்தும் யாரேனும் தனிப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் ID, தொலைபேசி, புகைப்படம், தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது என்றும் தகுந்த பாதுகாப்புடன் (Strong Password) கணினிகளை பயன்படுத்தவும், தற்போது குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களிடம் அலைபேசி மற்றும் கணினியை கையாளும் பொழுது பெற்றோர்கள் அவர்களுடைய கண்காணிப்பில் இருப்பது மிகவும் அவசியம் மற்றும் (Child lock) செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் (POCSO ACT) பற்றியும், பெண் குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எதையும் வாங்கக்கூடாது என்றும் நன்கு தெரிந்த நபர்களாக இருந்தால்கூட பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் இத்தகைய குற்றங்கள் ஏதேனும் நடந்தால் தயக்கமின்றி காவல்துறையை அணுகலாம் என்றும் இதற்காக காவலன் SOS செயலி மற்றும் 1091, 1098, 9150250665 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Greater Chennai Police

As per the instructions of Commissioner of police Greaterchennai child abuse prevention Awareness programme was conducted for 9th to 12 th std Students in a Government Higher Secondary School.also presented regarding POCSO Act .Safety tips and Cyber safety tips while handling Electronic gadgets.



04/03/2021

அம்பத்தூர் பகுதியில் காணாமல்போன சிறுமி குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு மற்றும் சிறுவர் நலகாவல்பிரிவு காவல் குழுவினரால் மீட்பு (02.03.2021).

Girl missing from T-1 Ambattur area rescued by ACTU and JAPU Cops (02.03.2021).

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில், காணாமல் போன குழந்தைகள் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் (CAWC) காவல் துணை ஆணையாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு(ACTU), சிறுவர் நல காவல் பிரிவு-1 மற்றும் 2 (JAPU-1 &2)ஆகியோர் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது.
இந்நிலையில், T-1 அம்பத்தூர் காவல் நிலைய எல்லையில், 24.02.2021 அன்று 17 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது தாய் புகார் கொடுத்ததின்பேரில், குழந்தைகள் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்து சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்ற கிரிஜா, புழல் என்பவரை கைது செய்து, 17 வயது சிறுமியை மீட்டு. அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

On the orders of the Commissioner of Police to trace the missing Juveniles reported in Greater Chennai Police limits, a team was formed under the direct supervision of the Deputy Commissioner of Police, Crime Against Women and Children Wing (CAWC), consisting of 1. Juvenile Aid Police Unit (JAPU) and Anti Child Trafficking Unit (ACTU) and the police personnel in the team have been patrolling throughout Chennai City to trace the missing children.

In a case registered over missing of a 17-year-old girl at T-1 Ambattur PS on 24.02.2021, the police team led by the Inspector of the Anti Child Trafficking Unit (ACTU) and Inspector of Juvenile Aid Police conducted special investigation into the case, conducted search and traced the missing girl in Puzhal area and rescued her from one Kirija of Puzhal. The girl was brought to T-1 Ambattur PS and handed over to her parents.



03/03/2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பெருநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் திருமதி. H. ஜெயலட்சுமி, அவர்கள் சென்னை W.5 வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கர் தெருவில் இன்று குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு இன்றைய கால கட்டத்தில் கணினி வழி குற்றங்களான மின்னஞ்சல் மூலம் கொடுமைப்படுத்துதல் (Harassment), தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உட்படுத்துதல் (Stalking), இணையதளம் மூலம் மிரட்டி கொடுமைப்படுத்துதல் (Bullying). உடற்தேய்ப்பு பணி (Grooming), ஆகிய குற்றங்களை பற்றிய விழிப்புணர்வு பற்றியும் இக்குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் சம்மந்தப்பட்ட ஆவணங்களை கொடுக்கவேண்டும் என்றும், யாராவது சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் அதை பற்றியும் தகவல்களை அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி மற்றும் அங்கு இருந்த 50 குழைந்தகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.

மேலும் இணையதள பாதுகாப்பு குறித்தும் யாரேனும் தனிப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் ID, தொலைபேசி, புகைப்படம், தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது என்றும் தகுந்த பாதுகாப்புடன் (Strong Password) கணினிகளை பயன்படுத்தவும், தற்போது குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களிடம் அலைபேசி மற்றும் கணினியை கையாளும் பொழுது பெற்றோர்கள் அவர்களுடைய கண்காணிப்பில் இருப்பது மிகவும் அவசியம் மற்றும் (Child lock) செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இப்பகுதியில் வசிக்கும் சுகாதார பணியாளர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஆகியோர்களிடம் குழந்தைகளை தனியே விடக்கூடாது என்றும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எதையும் வாங்கக்கூடாது என்றும் நன்கு தெரிந்த நபர்களாக இருந்தால் கூட பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் இத்தகைய குற்றங்கள் ஏதேனும் நடந்தால் தயக்கமின்றி காவல்துறையை அணுகலாம் என்றும் இதற்காக காவலன் SOS செயலி மற்றும் 1091, 1098, 9150250665 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.



03/03/2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில், காணாமல் போன குழந்தைகள் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் காவல் துணை ஆணையாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறுவர் நல காவல் பிரிவு 1 மற்றும் 2 ஆகியோர் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில், காணாமல் போன குழந்தைகள் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறுவர் நல காவல் பிரிவு 1 மற்றும் 2 ஆகியோர் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் காணாமல் போன சிறுமி (ACTU) கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையினர் முயற்சியால் கண்டுபிடிப்பு
சென்னை பெருநகர காவல் ‌ மேற்கு மண்டலம் T.1 அம்பத்தூர் காவல் நிலைய Girl Missing வழக்கில் காணாமல் போன சிறுமி லாவண்யா / வயது. 17, தந்தை பெயர் சேகர் D/o. 24/2/2021 D/R. 27/02/2021 at 16.30 தாய் லட்சுமி, எண்.4/41, 2 வது புது தெரு, கள்ளிகுப்பம், அம்பத்தூர், சென்னை என்பவர் அளித்த புகாரல், புகாரின் அடிப்படையில் காவல் நிலையம் சென்று வழக்கு விபரங்களை பெற்றும் சிறுமியின் தாய் லட்சுமி, தனது வீட்டு அருகே வசிக்கும் கிரிஜா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக அளித்த தகவலை பெற்றும் ACTU தனிப்படை ஆய்வாளர் திரு. செல்வசேகர் மற்றும் WHC -17358 திருமதி சசிகலா, த.கா. 17028 திருமதி. லதா மற்றும் த.கா. 19918 திருமதி. மீனாட்சி ஆகியோர் இவ்வழக்கில் தனிகவனம் செலுத்தி கள்ளிகுப்பம் மற்றும் புதூர் அன்னை தெரசா இல்லம் ஆகிய பகுதியில் விசாரணை செய்து வந்தனர்.
அதில் சிறுமி புழல் பகுதியில் சந்தேக நபரான கிரிஜா என்பவருடன் இருப்பதாக கிடைத்த தகவல்கள் மூலம் கிரிஜாவின் தாய் மீன் வியாபாரம் செய்து வரும் பகுதிக்கு சென்று தேடி பார்த்ததில் அங்கு சம்பவத்திற்கு பிறகு வியாபாரம் செய்ய வரவில்லை என தெரிந்து அங்கு இருக்கும் பெட்டி கடையில் அவருடைய தொலைபேசி எண் பெற்று தொலைபேசி மூலம் மீன் வாங்கும் வாடிக்கையாளர் போல பேசி வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டதில் கூற மறுத்துவிட்டார்.
மேற்படி கிரிஜாவின் தாயார் விஜயா நீங்கள் அதே பகுதியில் இருங்கள் நான் என் இளைய மகள் ராசிக்காவிடம் மீனை கொடுத்து அனுப்புவதாக கூறினார். பின்னர் மீன் கொண்டு வந்த ராசிக்காவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து மற்றும் அவருடைய அம்மா விஜயா என்பவரையும் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டது.
சந்தேக நபர் கிரிஜா மற்றும் காணாமல் போன சிறுமி லாவண்யா வயது 17 என்பவர்களை தனிப்படை போலீசார் தேடுவது தெரிந்து சந்தேக நபர் கிரிஜா சிறுமி லாவண்யாவை 28.02.2021 அன்று கள்ளிக்குப்பம் பகுதியில் விட்டு சென்றவரை தனிப்படையினரால் மீட்டக்கப்பட்டது.
காணாமல் போன சிறுமி லாவண்யா (வயது. 17) என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அவரது தாய் லட்சுமியிடம் T.1 அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் முன்னிலையில் எழுத்து மூலமாக வாக்கு மூலம் பெற்று ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் சந்தேக நபர் கிரிஜா என்பவரை பற்றி விசாரணை செய்ததில் அப்பகுதிகளில் சிறுமிகளிடம் ஆசை வார்தை கூறி அவர்களை அழைத்து சென்று தவறான செயல்கள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்துவதாக தகவல் கிடைத்ததின் பேரில் (ACTU) கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையினரால் தொடர்ந்து அவரை பற்றி விசாரணையும், தேடுதலும் நடத்தப்பட்டுவருகிறது.

17/02/2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், 01.02.2021 முதல் 15.02.2021 வரை சென்னை பெருநகரில் Operation Smile Special Drive என்ற பெயரில் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் 01.02.2021-ம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் காவல் துறை கூடுதல் இயக்குநர் திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு (பொறுப்பு), திரு. லால்வீனா, இ.ஆ.ப, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் காவல் துணை ஆணையாளர் திருமதி. H. ஜெயலட்சுமி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நலன் சார்ந்த சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் நல அலகு, குழந்தைகள் நலக் குழுமம் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்), தொழிலாளர் துறை, Child Line மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த Operation Smile Special Drive -ல் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிச்சையெடுக்கும் குழந்தைகள், பராரியாக சுற்றித்திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள், ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் போன்ற அனைத்து தரப்பட்ட குழந்தைகளையும் அவர்களை அந்தச் சூழலிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்து சீர்திருத்தம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு 12 காவல் மாவட்டங்களில் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள் அணியில் காவல் ஆளிநர்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்) மாவட்ட குழந்தைகள் நல அலகு அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுமம், தொழிலாளர் துறை, Child Line மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய 24 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் மூலம் இதுவரை 361 ஆண் குழந்தைகள் மற்றும் 74 பெண் குழந்தைகள் மொத்தம் 435 குழந்தைகள் சென்னை பெருநகருக்குட்பட்ட பல்வேறு பகுதியிலிருந்து குறுகிய இந்த நாட்களில் பாதுகாப்பாக (குழந்தை தொழிலாளர்கள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பும் பாராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள்) மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்து சீர்திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், காணாமல் போன குழந்தைகளில் 2 ஆண் குழந்தைகள் கோயம்புத்தூரிலும், 1 பெண் குழந்தை விழுப்புரத்திலும், 1 பெண் குழந்தை இராமநாதபுரத்திலும், 1 பெண் குழந்தை முத்தாபுதுப்பேட்டிலும், 1 ஆண் குழந்தை மதுரையிலும் மொத்தம் 6 காணாமல் போன குழந்தைகள் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் துறையால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக சிறப்புக் குழுவிற்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலின் மூலம் 04.02.2021 –ம் தேதி அன்று போரூரில் நடக்கவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது மற்றும் 05.02.2021 –ம் தேதி அன்று கொரட்டூரில் நடக்கவிருந்த மற்றொரு குழந்தை திருமணம் மாவட்ட சமூக நல அதிகாரியின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட குழந்தைகளை அரசு காப்பகத்தில் ஒப்படைத்து அவர்களுக்கு தகுந்த உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டது.

இன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவுப்படி சிறப்பாக நடைபெற்ற Operation Smile Special Drive நேற்று (15.02.2021) முடிவடைந்த நிலையில் இதுவரை மொத்தம் 435 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், OPERATION SMILE – க்காக காவல் துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினர்களான 24 குழுக்கள், சிறார் நல காவல் பிரிவு 1, சிறார் நல காவல் பிரிவு 2 மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியோர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி சிறப்பாக செயல்பட்டவர்களை வெகுவாக பாராட்டியும், இனிவரும் நாட்களிலும் சிறப்பாக செயல்படுவதற்கும் ஊக்கமளித்தார்.

Tr. Mahesh Kumar Aggarwal, I.P.S., the Commissioner of Police, Greater Chennai Police, had unveiled the special initiative of “OPERATION SMILE-2021” on 01.02.2021 to trace the Missing Children and rescue the children to need care and protection in Greater Chennai Police jurisdictions. The grand inaugural ceremony was held in the Conference Hall, O/o. the Commissioner of Police in which Tmt. Seema Agrawal, I.P.S., Addl. Director General of Police, Head Quarters, i/c Crime against Women and Children Wing, Tr. Lalvena, I.A.S., Commissioner of Social Defence and other dignitaries graciously participated.

As part of the action programme, 24 special teams have been earmarked comprising Assistant Commissioner of Police, Inspector of Police, Child Welfare Police Officers, Labour Department, Child Welfare Committee, Child Line and other stake holders to achieve the above mission to rescue the children who need care and protection and to trace the missing children in Greater Chennai Police jurisdictions. Which was carried out till 15.02.2021 with full swing.

The special teams embarked in to the mission and rescued 361 Boys, 74 Girls totalling 435 children who were roaming, wandering and begging at various places in Greater Chennai Police in a span of 15 days who have been safely produced before Child Welfare Committee in Chennai, Chengalpet and Thiruvallur who have been all safely kept in Government Child Care institutions for their reformation and rehabilitation in ensuring their bright future and career.

The other prominent and significant tracing of missing children and rescuing them include 2 boys from Coimbatore 1 Girl from Villupuram, 1 Girl from Ramnad and 1 Girl from Muthapudhupet and 1 boy from Madurai Greater Chennai police within 24 hours of the registration of the case which is prompt actions of the special teams.

The special teams received a secret information and acting on swiftly on that a Child Marriage was prevented on 04.02.2021 in Porur area and another a Child Marriage was prevented on 05.02.2021 in Korattur area with assistance of the District Social Welfare Officer and rescued Children have been safely kept in Government Home after providing psychological counselling and other legal assistances.

The Commissioner of Police, Greater Chennai Police, appreciated the effective performances of the 24 special teams, the teams of JAPU-I, JAPU-II and ACTU headed by the Deputy Commissioner of Police, Crime against Women and Children Wing, Greater Chennai Police. The assignments and actions of the special team have fetched laurel to the Greater Chennai Police who have took initiative in reforming and rehabilitating the children who needed care and protection including tracing missing children.

17/02/2021

சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் Friend Request-களில் உங்களுக்கு தெரிந்த நபராக இருந்தால் மட்டும் Friend Request-களை ஏற்கவும். சமூக வலைதளங்களில் நட்பு வட்டாரத்தை விரிவு படுத்துவதாக எண்ணி மோசடி நபர்களிடம் ஏமாறவேண்டாம்.

Photos from Greater Chennai Police - Crime Against Women & Children Wing's post 04/02/2021

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் தோழி திட்டத்தின் மகளிர் காவல் ஆளிநர்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று 03.02.2021 துவக்கி வைத்தார்.

Today 03.02.2021 Commissioner of Police Tr.Mahesh Kumar Aggarwal, IPS released a short film of "Thozhi" about the female police officers assisting the children and women victims of sexual offenses, at the Commissionerate.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் தலைமையில் இன்று (03.02.2021) காலை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், தோழிகளுக்கான பயிற்சி முகாமை குத்துவிளக்கேற்றி, உங்களுக்காக நாங்கள் என்ற சுவரொட்டியை திறந்து வைத்தும் சிறப்பு விருந்தினர்களுக்கு சுவரொட்டிகளை பிரசுரித்தும் விழாப்பேருரையாற்றினார். அவரது உரையில் இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான நகரம் சென்னை என்றும் பாலியல் துன்புறுத்துதல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனைகள் பெற்றுத் தருவது மட்டுமே காவல் துறையினரின் நோக்கம் அல்ல, மனித நேயத்துடன் கூடிய காவல் பணியே சென்னை பெருநகர காவல் துறையின் முக்கிய நோக்கம் என்றும் இதில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலுள்ள தோழிகள் பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் மீது பதிக்கப்படும் சமுதாய முத்திரையை களைந்து அவர்களை எவ்வாறு அணுகுவது? அவர்களுக்கு தைரியம் கொடுப்பது, கல்விக்கான உதவிகளைச் செய்வது மேலும் என்னென்ன தேவைகள் என்பதையறிந்து அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாகவும் பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு விபத்து, “அதை முறியடிப்பதே தோழி திட்டத்தின் முக்கியமான குறிக்கோள்” எனவும் ஒவ்வொருவரும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே Whatsapp காணொலி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு புகார்களை அளித்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோழி திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால் தோழி திட்டத்தின் மூலம் தோழிகள் குழந்தைகளின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுவித்து நற்சூழலை ஏற்படுத்தியதில் தோழிகளின் பங்கு மெச்சத் தகுந்தது.
மேலும் POCSO சட்டத்தில் கடுமையான தண்டனைகள் இருந்தாலும் கூட அதையும் தாண்டி சட்ட ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தோழிகள் குழந்தைகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து சமுதாயப் பணியாற்றி வருகின்றனர். உளவியல் ரீதியான நம்பிக்கைகளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமென்றும் இதுவரை 400 குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது திருப்தியளிப்பதாகவும் அனைத்து தோழிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து தோழிகள் அனைவரும், பாதிக்கப்பட்ட குழந்தை அந்தச் சூழலிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்நிகழ்ச்சியின் குறும்படத்தில் காண்பிக்கப்பட்டது போன்ற மகிழ்ச்சியான நிலைக்கு திரும்புவதற்கு முக்கிய காரணமாக உள்ள தோழிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
சென்னை பெருநகர தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் திரு.R.தினகரன், இ.கா.ப அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கி பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகள் குழந்தைகளின் எதிர்காலத்தையே மாற்றி விடுவதாலும் பெற்றோர்கள் இந்த சம்பவத்தை வெளியே சொல்ல அச்சப்படுவதாலும் தோழிகள் அவர்களை அணுகி குழந்தைகளைப் பற்றிய எவ்வித அடையாளங்களையும் வெளியிடாமல் அரவணைப்புடன் ஆதரவுடனும் செயல்பட்டு அமைதிப்புரட்சியை (Silent revolution) ஏற்படுத்தி வருவதாகவும் மேலும் தோழிகளை ஊக்குவிப்பதற்காக ஆணையாளர் அவர்கள் புத்தாக்கப் பயிற்சியை ஏற்படுத்தியும். மேலும் காவல் ஆளினர்களை வைத்து குழந்தைகளுக்கான விழிப்புணர்வு குறும்படம் தயார் செய்து வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்.ஆண்ட்ரூ சேசுராஜ், Dr.ஜெயக்குமார், வழக்குரைஞர் திருமதி.ஆதிலட்சுமி லோகமூர்த்தி மற்றும் திரைப்பட நடிகர் திரு. தாமு ஆகியோர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் தோழிகளுக்கு (காவல் ஆளினர்களுக்கு) சிறப்பான புத்தாக்கப் பயிற்சியளித்தனர்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களுக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவின் காவல் துணை ஆணையாளர் திருமதி. ஜெயலட்சுமி அவர்களுக்கும் காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

The Protection of Children from Sexual Offences Act ( Act No. 32 of 2012) envisages and empowers the Women Police personnel to render various types of counseling to the victims of POCSO Act cases immediately after the registration of cases.
The “THOZHI” scheme was incepted in Greater Chennai Police on 08.11.2019 to render all types of assistance to the victims of POCSO Act cases in ensuring their peaceful lifeby earmarking two Women Police personnel in each All Women Police station of Greater Chennai Police. The earmarked Thozhi scheme police personnel in each AWPS Police station in Greater Chennai Police will visit the house of victims of POCSO Act and R**e cases periodically to render counseling and other legal assistance including providing safety and security arrangements if they apprehend fear from the offender side. This will be pursued till from the registration to conclusion of case trial in the court.
Today, i.e., on 03.02.2021, a capacity training programto enrich and update the legal provisions and behavioural approach towards the victims of POCSO Act cases is unveiled by Tr. Mahesh Kumar Aggarwal, I.P.S., Commissioner of Police, Greater Chennai Police delivered special address, unveiled the short film about “THOZHI” and posters and distributed award to 4 police personnel for their best performances.
Dr. R. Dhinakararan, IPS, Additional Commissioner of Police, South welcomed the gathering, DCP (Crime against Women and Children), All Additional Deputy Commissioners of Police, (Crime against Women and Children), All Inspector of Police in AWPS and other police personnel participated in the event.
Tr. Andrew Sesuraj, Prof. Loyolla college, Tmt. Adhilakshmi, Advocate, High Court of Madras, Dr. Jayakumar, Psychotherapist, Tr. Dhamu, Cine Actor are participated the program and gave lecture on their field, Tmt. H. Jayalakshmi, Deputy Commissioner of Police, (Crime against Women and Children) delivered vote of Thanks.



Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chennai
600006