22/04/2023
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய பாட்டாளி வர்க்கத்தின் பேராசான் தோழர் லெனின் 153 - வது பிறந்த நாள்!
Youth is charming Youth has tremendous energy With youth let us change the society into a meaningful
22/04/2023
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய பாட்டாளி வர்க்கத்தின் பேராசான் தோழர் லெனின் 153 - வது பிறந்த நாள்!
23/03/2023
மார்ச் - 23 மூன்று தியாகிகளின் நினைவு நாள்
14/03/2023
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் நினைவு நாள் இன்று
உலக மகளிர் தினம்!
உரிமைகள் மிட்டாக்கப்பட்ட வரலாற்று தினம்!
குருதிசிந்தி உரிமைகள் மிட்கப்பட்ட நாள்!
குருதி சிந்தி மீட்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் உறிந்து குடிக்கின்றது ஆளும் வர்க்கம்!
இழந்த உரிமைகளை மீட்க மகளிர் தினத்தில் சூலூரைப்போம்!
07/03/2023
Brave Youths நடத்தும் இணையவழி கூட்டம்
அறிவியலின் இன்றைய தேவையும் அதன் சிக்கலும்!
உரை : டாக்டர் ஆர் வெங்கடேசன்
முன்னாள் தலைவர்
கதிரியக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு IGCAR, கல்பாக்கம், தமிழ்நாடு
தேதி: 08/ 03/ 23 புதன்கிழமை மாலை : 7 முதல் 9 வரை
அனைவரும் இணைவோம்..!
To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/abq-zfcr-wzs
Or open Meet and enter this code: abq-zfcr-wzs
பாசிச இன வெறியர்களுக்கு செருப்படி கொடுத்த தமிழ் மக்கள்
17/02/2023
சென்னை ஐஐடி - யில் தொடர்ந்து வரும் தற் "கொலைகள்"
17/02/2023
கலவரங்களுக்கு பச்சைக்கொடி காட்டிய சென்னை உச்சிக்குடுமி மன்றம்
14/02/2023
வாருங்கள் கதலிப்போம்!
11/02/2023
பிப்ரவரி - 8 தோழர் லெப்ப அவர்களின் 82- ஆம் ஆண்டு நினைவு நாள்
இந்திய பாசிச சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோர்வுற்றிருக்கும் இன்றைய சூழலில் இளங்கம்யூனிஸ்டுகளுக்கு லெப்பா ஒரு பாடம்.
பதிவு தோழர்
Rathan chandrasekar
லெப்பா ஸ்வெடோஸரா ராடிக் .
Lepa Svetozara Radic.
1925 டிசம்பர் 19இல் யுகோஸ்லாவியாவின்
கஸ்னிகா கிராமத்தில் பிறந்த சுட்டிப்பெண்.
படிப்பிலும் கெட்டி .
ஆரம்பப்பள்ளிக் கல்வி
முடித்த கையோடு
கைவினைக் கலைகளுக்கான பள்ளியில் சேர்ந்து படித்தாள்.
இலக்கியங்களின் மீது
மாளாக் காதல் இந்த சிறுமிக்கு.
தொழிலாளர் இயக்கங்களில்
தீவிரமாக செயல்பட்டுவந்த
தன் மாமன் வ்ளதேதா ராடிக்கின்
சமூகச் செயல்பாடுகள்
லெப்பாவை ஈர்த்தன.
யூகோஸ்லாவியா
இளங்கம்யூனிஸ்டுகள் கழகத்தில்
LEAGUE OF COMMUNIST YOUTH OF YUGOSLAVIA - SKOJ -
சேர்ந்து செயல்பட ஆரம்பித்தாள்.
யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகும்போது
அவளுக்கு வயது
பதினைந்தே பதினைந்து.
இரண்டாம் உலகப்போர் தொடங்கி ஜேர்மனிய ஹிட்லரின்
நாஜி வெறியாட்டம் நாடுகள் கடந்தது.
1941 ஏப்ரல் 10 .
யூகோஸ்லாவியா மீதும்
நாஜி ஆதரவுப்படைகள் படையெடுத்து
பல பகுதிகளைக் கைப்பற்றின.
'சுதந்தர க்ரோஷிய தேசம் '
என்ற பெயரில்
நாஜிகளின் கைப்பாவைகளின்
அதிகாரம் நிலைநாட்டப்பட்டது.
எதிர்த்துப் போராடிய
கம்யூனிஸ்டுகளும், பொதுமக்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.
லெப்பாவும் குடும்பத்தினரும்
' உஸ்தாஷே ' அமைப்பால்
கைது செய்யப்பட்டனர்.
ஒரு நிமிடம்...
'உஸ்தாஷே'பற்றிச் சொல்லிவிடுகிறேன்...
உங்களுக்கு வேறு அமைப்பு ஏதேனும் நினைவுக்கு வந்தால்
நான் பொறுப்பல்ல.
உஸ்தாஷே ஒரு
க்ரோஷிய ஃபாசிஸ்ட் இயக்கம்.
அதன் மூன்று லட்சியங்கள் -
1. ஃபாசிஸம் -
2. மதம் -
அதாவது அடிப்படை கிறிஸ்துத்வா
3. க்ரோஷிய தேசியம் -
அதாவது 'அகண்ட க்ரோஷியா'
( GREATER CROATIA ).
சரிதானே?
லெப்பா கதைக்கு வருவோம்.
சிறையிலடைக்கப்பட்ட மறுமாதமே, தோழர்கள் உதவியுடன் -
தங்கச்சி தராவுடன் சிறையிலிருந்து தப்பினாள் லெப்பா.
சிறை அவளைத் தளர்த்தவில்லை. முன்னிலும் தீவிரமாக
ஃபாசிசத்தை எதிர்த்துப் போராடுவது
என்று முடிவெடுத்தாள்.
யுகோஸ்லாவியன் பார்ட்டிஸன் படையின் ஏழாவது கம்பெனிப்பிரிவில்
ராணுவ வீராங்கனையாக
இணைந்து போராடத் தொடங்கினாள்.
நெரேத்வா போர்க்களத்தில் காயமடைந்தவர்களை கெர்மெக் பகுதி மறைவிடத்துக்கு கொண்டுசெல்லும் பொறுப்பு லெப்பாவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
'பிரிஞ் யூஜென்' என்ற
ஜெர்மன் நாஜிகளின் -
மலைப்பிரிவு காலாட்படையுடன் நடந்த யுத்தத்தின்போது - நாஜிகளிடம் பிடிபட்டுவிட்டாள் லெப்பா.
'பொசன்ஸ்கா க்ருப்பா' பகுதியிலிருந்த நாஜிகளின் இடத்துக்குக்
கொண்டு செல்லப்பட்ட
அந்த இளங்குருத்தை-
பலநாள்கள் அடைத்துவைத்து -
சித்ரவதை செய்து
சீரழித்தார்கள் நாஜிகள்.
'விசாரணை' முடிவில் - அவளுக்குத் தூக்குத்தண்டனை வழங்குவதாக அறிவித்தார்கள்.
அந்த நாளும் வந்தது.
1941. பிப்ரவரி 8.
"ஏய் கம்யூனிஸ்டுக் குட்டிப்பெண்ணே!
உனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்க
ஒரு வாய்ப்பு இருக்கிறது!
ஒப்புக் கொள்கிறாயா?"
என்று கேட்டான் நாஜி அதிகாரி.
அவனை
ஏறிட்டுப் பார்த்தாள் லெப்பா.
"பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை.
உன் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் தோழர்கள் யார் யார்?
பெயரைமட்டும் சொல் போதும் !
உனக்கு உடனே விடுதலை..."
"அப்படியா?"
வலிப் புன்னகையுடன்
கேட்டாள் லெப்பா.
"ஆமாம். ஹிட்லர் மீது சத்தியம்..."
" த்தூ....!"
காறி உமிழ்ந்தாள் அவள்.
"என் மக்களையும் இயக்கத்தையும் காட்டிக்கொடுக்கும் துரோகி என்று நினைத்தாயா நாஜிப்பயலே?
நீ எவரெவர் பெயரைக் கேட்கிறாயோ - அவர்களெல்லாரும் -
என் மரணத்துக்கு வஞ்சம் தீர்க்க அவர்களாகவே
உன்னிடத்துக்கு வருவார்கள்.
அப்போது அவர்கள் பெயர்
உனக்குத் தெரியவரும்.
கடைசி நாஜிக் கோழையையும்
அவர்கள் கொன்றுவிட்டுத்தான் திரும்புவார்கள்!"
என்று சிலிர்த்தாள்.
மொத்த நாஜிக்கூட்டமும்
மூச்சடைத்து நின்றது.
அவள் கழுத்தில்
சுருக்குக்கயிற்றை இறுக்கினார்கள். மறுமுனையை மரக்கிளையில் மாட்டி மேலிழுக்கத் தொடங்கினார்கள்....
குரல்வளை முறியும்முன்
அவள் இவ்வாறுதான்
முழங்கினாள் :
"வாழ்க கம்யூனிஸ்ட் கட்சி!
வாழ்க பார்ட்டிஸன்ஸ்!
மக்களே ....உங்கள்
சுதந்தரத்துக்காகப் போராடுங்கள்!
தீமைக்கு ஒருபோதும்
சரணடையாதீர்கள்!
எனது மரணத்துக்கு நீதி கேட்க -
என் தோழர்கள் வருவார்கள்!"
அவ்வளவுதான்.
மக்களே அச்சுறுத்த -
பொது இடத்தில் பிணமாகத்
தொங்கவிடப்பட்ட
அந்த கம்யூனிஸ்ட் யுவதிக்கு
அப்போது வயது 17.
இன்று
லெப்பா நினைவுநாள்.
10/02/2023
500,000 தொழிளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளபட என அனைவரும் ஊதிய குறைப்பு மற்றும் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆங்கில பத்திரிகைகள் இவ்வேலைநிறுத்தத்தை பிரிட்டன் வரலாறு கண்டிராத வேலை நிறுத்தம் ( largest strike in history of Britain)என்று தலையங்கம் எழுதுகின்றன.