மதிமுக

மதிமுக

Share

முன்னேறிச் செல் அதிகாரத்தை கைப்பற்று

20/04/2025

எல்லா தந்தையும் #வைகோவாக முடியாது...

எல்லா பிள்ளையும் #துரை_வைகோ ஆக முடியாது...

எல்லா கட்சியும் #மதிமுக ஆக முடியாது....

#வைகோ #துரை வைகோ #மல்லை சத்யா

20/04/2025

மறுமலர்ச்சி தி.மு.க., நிர்வாகக் குழுக் கூட்டம்
தீர்மானங்கள்-20.04.2025

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் இன்று 20.04.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் -1: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2032-33இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டு வரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்கிறது.

ஒன்றிய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையான விலைமதிப்பின்படி இது 9.69% வளர்ச்சி ஆகும். சேவைகள் துறை (12.7%), இரண்டாம் நிலைத் துறை (9%) ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தும் திட்டங்களை ஒன்றிய அரசு கடந்தாண்டு ஆய்வு செய்து ஒவ்வொரு மாநிலத்திலும் திட்டங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாநிலங்களின் மதிப்பெண் அடிப்படையில் தமிழகம் 13 துறைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னணியாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

அதில் நிதி ஆயோக் அறிக்கைபடி 11 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப்பெண் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமைத் திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று மதிமுக நிர்வாக குழு விழைகிறது.

தீர்மானம் -2: இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிடவும், உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் மு. நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1974 ஏப்ரல் 16ஆம் நாள் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார்கள்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசுக்கு மதிமுக நிர்வாகக் குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் செல்ல வேண்டிய திசை வழியை தீர்மானிக்கக் கூடிய வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுய ஆட்சிக் கோட்பாட்டின் அவசிய தேவையை வலியுறுத்தி உரையாற்றி உயர்நிலைக் குழுவையும் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கழக நிர்வாக குழு பாராட்டுகளை நன்றியை உரித்தாக்குகிறது.

தீர்மானம் -3: மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் 2023 அக்டோபர் மாதத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதி அரசர்கள் மாண்பமை பர்திவாலா, மகாதேவன் ஆகியோரை கொண்ட அமர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை வழங்கிய போது உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா கூறுகையில், “தன்னிச்சையான அதிகாரம் (Absolute Veto) என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநருக்கு மசோதா அனுப்பப்படும் போது, அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

“ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை. மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. பிரிவு 200-இன் கீழ் தன்னிச்சையான அதிகாரம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது. மாநில சட்டமன்றத்தால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் போது அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளது.

இரண்டாவதாக அனுப்பப்பட்ட மசோதா முதலில் அனுப்பியதிலிருந்து வேறுபடும் போதுதான் இதற்கு விதிவிலக்கு உள்ளது. மசோதாக்களை நிறுத்தி வைக்கும் போதோ அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் போதோ ஆளுநர் அம்மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், அதுகுறித்து அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்” என்று நீதிபதி பர்திவாலா குறிப்பிட்டார்.

ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பது பொது விதியாக உள்ளது. இந்திய அரசு சட்டம் 1935-இன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு விருப்புரிமையும் அரசியலமைப்பை செயல்படுத்தும் போது இல்லாமல் ஆகிறது. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நலன் மற்றும் மாநில அரசின் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் கூறுகிறோம். சட்டப் பிரிவு 200ன்கீழ் அவருக்கு என தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது” என்றார் நீதிபதி பர்திவாலா.

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்கள் சட்டமாகிட உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். எனவே அவரை குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -4: வக்ஃபு சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்தல், சிறுபான்மைச் சமூகங்களை அவதூறு செய்தல், இந்திய சமூகத்தைப் பிரித்தல் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்தல் ஆகிய நான்கு கூறுகளை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே இது, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்; கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும் .இந்த மசோதாவின் பிரிவு 3இன்படி, சிறுபான்மையினர் இப்போது தங்கள் மத அடையாளத்தை சான்றிதழ்களுடன் நிரூபிக்க கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். நாளை, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இதைச் செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.

இது அரசியலமைப்பின் 26ஆவது பிரிவுக்கு எதிரானது. இன்று சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். நாளை மற்றவர்கள் குறிவைக்கப்படலாம்.

வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் சரமாரியாக ஒன்றிய அரசிடம் கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்திய நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றியது.

அந்த வரிசையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது.

இச் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

மேலும் இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

அதில் முக்கியமானது, இந்தியா- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

இதன் அடிப்படையில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும்.

இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை இராணுவம்தான்.

ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது.

தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து, தாயகத்தை மீட்பதற்கு போராடிய விடுதலை இயக்கத்தை கருவறுத்தது சிங்கள இராணுவம்.

யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள இராணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்றதையும்,

புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி சிதைத்து சின்னா பின்னமாக்கி சுட்டுக் கொன்றதையும் இங்கிலாந்தின் சேனல் -4 தொலைக்காட்சி வெளியிட்டு உலகின் மனசாட்சியை உலுக்கியது.

இந்தக் கொடூர காட்சிகளைக் கண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீர் விட்டுக் கதறினர்.

இனப்படுகொலை நடத்திய சிங்கள இராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்து, தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி, தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும்.

நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.

தீர்மானம் 6: தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும், அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மதிமுக நிர்வாகக் குழு வரவேற்று, இதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -7: தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது.

இந்த திரைப்படத்தில், ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழீழ விடுதலைக்காக இன்னுயிரை தாரை வார்த்துத் தந்து களத்தில் நின்ற விடுதலைப் புலிகளை கொடூர பயங்கரவாதிகளாக இத்திரைப்படம் சித்தரித்து இருக்கிறது.

திரைக்கதைக்கு தொடர்பே இல்லாத யாழ்ப்பாண புலிப் படை என்ற பெயரில் ஒரு அமைப்பை காட்சியில் இடம்பெற செய்து, விடுதலை வீரர்களையும், தளபதிகளையும் வில்லன்களைப் போல இத்திரைப்படத்தில் காட்டி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் -8: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது ஆண்டு தொடக்க விழாவை மே 6ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கு கழகத் தோழர்களின் இல்லங்களில் கொடியேற்றுவது, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நல்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு அளித்தல் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் -9: தமிழ்நாடு ஆளுநரை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருக்கின்ற நிலையில், அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், மதச்சார்பின்மை, நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தை எழுச்சியுடன் முன்னெடுத்து வெற்றிபெறச் செய்யுமாறு கழகத் தோழர்களை இந்த நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
20.04.2025

Photos from மதிமுக's post 18/03/2024

15/03/2024

https://chat.whatsapp.com/CyiLVlG1deq7U3zsxa6Xau

👆👆குழுவாய் இணைவோம்

2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் இணைய பிரச்சாரத்திற்கு பயன்படும் வகையிலும் ஆரம்பிக்கப்பட்ட குழு இதுவாகும்.. இதில் பதிவேற்றப்படும் காணொளிகள் மற்றும் தேர்தல் விளம்பர வடிவமைப்புகள் நிச்சயம் பயன்படும் என்று நம்புகிறேன்..

இணையற்ற தலைவனை இணையத்தால் பரப்புவதே நோக்கம்...

*வாழ்க வைகோ..!*
*வாழ்க துரைவைகோ..!* *வளர்க்க மதிமுக....!*

*ᴠɪꜱɪᴏɴ ꜰᴏʀ ᴛʜᴇ ꜰᴜᴛᴜʀᴇ*

chat.whatsapp.com

28/12/2023

*கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு!*

*தலைவர் வைகோ இரங்கல்*

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது.

நான்மாட கூடல் நகரில் வளர்ந்து தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திரைஉலகில் உச்சத்தைத் தொட்ட உன்னத கலைஞர் அவர்.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர்.

தமிழ் மொழி, இன உணர்வுடன் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் ஆதரவு வழங்கினார்.

தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார்.

சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,தேமுதிக தொண்டர்களுக்கும் ,அவரை நேசிக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.12.2023

20/12/2023

*பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட ஒன்றிய அரசு முன்வர வேண்டும்!*

*துரை வைகோ வலியுறுத்தல்*

வங்கக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமழையால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் உள்ளிட்ட இதர சில மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள், பெருமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

நான்கு தென் மாவட்டங்களிலும்
சில உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புற பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை முழுமையாகவோ, பகுதியாகவோ இழந்துள்ளனர். கிராமப்புறங்களில் பல நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதம் அடைந்துள்ளன.

விவசாயிகளின் நெல் வயல்கள் நீரில் மூழ்கி, முழுமையாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மக்காசோளம், உளுந்து, பாசி போன்ற பணப்பயிர்கள் சாய்ந்தும் நீரில் மூழ்கியும், அறுவடை செய்ய முடியாத அளவுக்கு முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் தாங்கமுடியாத வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

கிராம சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் காட்டாற்று வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளின் பல்வேறு பயிறு வகைகள், காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் நட்டம் ஏற்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலையில், அவர்கள் தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ள நிலையிலும், தங்களின் படகுகளைக் கொண்டு வந்து மக்களை காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகம் முழுமையாக முடங்கியுள்ளது.

விவசாயிகள், விவசாயக் கூலி வேலை செய்யும் மக்கள் வேலை இழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு அறிக்கைகளாலும், கணிக்க முடியாத பெரும் மழை கொட்டும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பில், பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களை, இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், அரசுத் துறையினர், அரசியல் கட்சிகள், தன்னார்வல அமைப்பினர் முழு வீச்சில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்திய ஒன்றியப் பிரதமர் அவர்களை 19.12.2023 அன்று நேரில் சந்தித்து பெருவெள்ள சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளார்.

இந்திய ஒன்றிய அரசு உடனடியாக மத்திய ஆய்வு குழுவினை அனுப்பி, வரலாறு காணாத வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள, தென் மாவட்டங்களின் சேத நிலவரத்தை முழுமையாக கணக்கிட்டு, தமிழ்நாடு அரசு கூறும் நிவாரணத்தை முழுமையாக விடுவித்திட வேண்டும்.

மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததற்கு விவசாயிகளுக்கு இழப்பீடும், காப்பீட்டுத் தொகையும், வீடு இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டி தருவதற்கும், சேதமடைந்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்குவதற்கும், சேதமடைந்த சாலைகள்,குளங்களை முழுமையாக சீரமைப்பதற்கும், முன்னுரிமை வழங்கி நிவாரணம் வழங்கிட முன் வருமாறு, இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
'தாயகம்'
சென்னை -08
20.12.2023

18/12/2023

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துக!

துரை வைகோ வேண்டுகோள்

வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை விடாமல் விடியவிடிய பெய்து வருகின்றது. நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். விவசாயிகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றார்கள். தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிட்டது. இன்னும் மூன்று நாட்களுக்கு கன மழை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், தீவிர நிவாரண மற்றும் மீட்பு பணிகளாலும் மழை வெள்ள பாதிப்புகளை சக்திக்கு மீறி திறம்பட கையாண்டது. தற்போதும், பாராட்டுக்குரிய வகையில் பாதிகப்பட்ட பகுதிகளை மறுகட்டமைப்பு செய்து வருகின்றார்கள்.

அதைப்போலவே, தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களிலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும். உணவு மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, தென் மாவட்டங்களை மழை வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
'தாயகம்'
சென்னை -08
18.12.2023

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தோற்றுப்போனதாக வைகோ வருத்தப்பட்டது ஏன்? மனம் திறக்கும் துரை வ 23/02/2021

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தோற்றுப்போனதாக வைகோ வருத்தப்பட்டது ஏன்? மனம் திறக்கும் துரை வையாபுரி

http://dhunt.in/daGWQ?s=a&uu=0xba4827f88b6c36c5&ss=pd
Source : "BBC தமிழ்" via Dailyhunt

செயலியை பெற
http://dhunt.in/DWND

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தோற்றுப்போனதாக வைகோ வருத்தப்பட்டது ஏன்? மனம் திறக்கும் துரை வ ம.தி.மு.க-வின் புதிய முகமாக அக்கட்சியின் நிர்வாகிகளால் முன்னிறுத்தப்படுகிறார் வைகோவின் மகன் துரை வையாபுரி. கடந...

16/07/2020

பட்டுக்கோட்டை மாவீரன் விசுவநாதன் நினைவு நாள்

மறுமலர்ச்சி திமுக சந்தித்த பேரிழப்புகளில் ஒன்று அவரது மரணம் . எங்கள் தேரின் ஆச்சு முறிந்தது , வீணையின் நரம்பு அறுந்தது , படைக்கலனில் ஈடற்ற தளபதியை இழந்துவிட்டோம் என்று அவர் உடலுக்கு தீமூட்டிவிட்டு இடுகாட்டில் தலைவர் வைகோ கண்ணீர் மல்க ஆற்றிய உரை இன்றும் நெஞ்சைவிட்டு அகலவில்லை .

Photos 13/07/2016

கோட்டையை ஆண்ட மாவீரனின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி
16.7.2016
...... என்றும் நீங்கா நினைவுகளுடன்
ஆர்.எஸ்.எஸ்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Chennai