Non Resident Tamils

Non Resident Tamils

Share

“Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils”

Photos from Non Resident Tamils's post 03/03/2026

தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட சுமார் 22 பேர் கொண்ட குழுவின் வாகனமானது உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து புறப்பட்டு பீகார் மாநிலம் கயாவிற்கு செல்லும் வழியில் ஜமுஹர் இடத்திற்கு அருகே 26.02.2026 அன்று அதிகாலை 3.00 மணியளவில் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ராமோ (வயது 83) என்ற நபர் நிகழ்விடத்திலே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றவர்கள் அருகில் உள்ள "நாராயண் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்" அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
மேலும், உயிரிழந்தவரின் உடலானது அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்ற 14 நபர்கள், இரயில் (12389 / Gaya Mas Express) மூலம் சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு இன்று (02.03.2026) மாலை வந்தடைந்தனர்.
இவர்களின் மருத்துவ வசதி தேவைப்பட்ட நான்கு நபர்களுக்கு (கோபு, ரத்னா, சுவாமிநாதன், சம்பத்) அரசின் சார்பில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை வாயிலாக அவசர ஊர்தி (Ambulance) ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தேர்வு செய்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

27/02/2026
23/02/2026

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு திறன்மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

19/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.ஸ்டாலின் அவர்கள் 16.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 506 புதிய வீடுகள் மற்றும் 7 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 7 தொழிற்கூடங்களை திறந்து வைத்தார்.
# TamilDiaspora # #

19/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.ஸ்டாலின் அவர்கள் 16.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 506 புதிய வீடுகள் மற்றும் 7 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 7 தொழிற்கூடங்களை திறந்து வைத்தார்.

18/02/2026

தமிழர் தடம் என்பது உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இடம்பெயர்வு வரலாறு, தரவுகள் மற்றும் அனுபவங்களை ஆவணப்படுத்த உருவாக்கப்பட்ட, திறந்த உள்ளடக்க இணையவழிக் களஞ்சியமாகும்.
தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் அயல்நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
காலனித்துவக் காலம் முதல் தமிழர்களின் இடம்பெயர்வு தொடர்பான வரலாற்றுச் செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள், குடிபெயர்வு குறிப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்யவும், பகிரவும் தமிழர் தடம் வலைதளம் பயன்படும்.
மேற்காணும் வசதிகளுடன் கூடிய தமிழர் தடம் வலைதளத்தினை (https://nrtamils.tn.gov.in/tamilar-thadam/) மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.நாசர் அவர்கள் இன்று (16.02.2026) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

18/02/2026

தமிழ் மணம் திட்டத்தின் கீழ் அயல் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழர் கலை ஆகியவற்றை பயிற்றுவித்தல்

18/01/2026

அயலகத் தமிழர் தின விழா
உணர்வுகள் ஆழமான நாள்…
பண்பாடு பேசினது,
அடையாளம் வெளிப்பட்டது.
உலகம் முழுவதும் வாழும்
தமிழ் உள்ளங்கள்
ஒரே உணர்வில்
மேலும் உறுதியாய்
இணைந்த தருணம்.

18/01/2026

இந்த விழா
நினைவாக மட்டும் இல்லை…
நம் அடையாளத்தின்
அழகான உறுதி.
அயலகத் தமிழர் தின விழா
தமிழ் என்ற பந்தம்
உலகம் முழுவதும்
அழியாதது என்பதை
உணர்த்திய நாள்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Commissioner Rehabilitation And Welfare Of Non Resident Tamils, 4th Floor, Ezhilagam Annex Building, Chepauk, Chennai 600 005
Chennai
600005

Opening Hours

Monday 10:30am - 5pm
Tuesday 10:30am - 5pm
Wednesday 10:30am - 5am
Thursday 10:30am - 5am
Friday 10:30am - 5pm