என் இரத்தம் படிந்த கோவணம் தான்,
உனக்கு கொடியாக வேண்டுமா?
என் முன்னந்தோல் வெட்டப்படவில்லையே!
சோத்துக்காக மதம் மாறவில்லையே!
சுயசாதியில் தானே கட்டினேன்.
என் பிறப்பில் என்ன குறை கண்டாய்?
குலத்தொழிலை தானே விட்டான் மகன்...
கொஞ்சம் வசதி வந்தது...
அம்மணமாக மாட்டேன் அதனால்,
என் பிறப்பில் என்ன குறைகண்டாய்?
பழைய கோவணம் கொடியில் காயுது
புண்ணியமா போகும்...
ஒரு சிலுவையில் ஏற்று!
வயதாகிவிட்டது...
இன்னும் எத்தனை ஆண்டுகள் விறைத்து நிற்பது
கன்னியாஸ்திரிகள் இரத்தங்கள் காயட்டும்.
கற்பி ஒன்று சேர்
கற்பி ஒன்று சேர் புரட்சி செய்
07/02/2023
03/02/2023
#மீள்
பல்லவர்களின் சிற்பமும்
பாரம்பரியம் நீண்ட பட்டும்
மெய்யியல் பேசும் ஆதி பௌத்தமும்
சைவ திருக்கோயில்களும்
அந்த மண்ணிற்கான மாண்பை உயர்த்தித்தான் இருந்தது. ஆனால் அங்கு பிறந்த ஒரு அறிவுச்சுடர் தமிழர் நாட்டின் அரசியலை புரட்டிப் போடப்போகிறது என அந்த பல்லவத் தலைநகரம் முன்பே ஆரூடம் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். பௌத்தத்தின் புகழ் மேலோங்கி இருந்த அந்த காஞ்சி மீண்டும் ஒரு புத்தனை ஈன்றெடுத்தது.
புத்தன் என்ற பெயரை கேட்டாலே பார்ப்பனியம் பதறும் அல்லவா! இந்த புத்தனும் பார்ப்பனியத்தை மிரளச்செய்ததில் ஆச்சரியம் இல்லை.
"அண்ணாதுரை" இந்த பெயர் அன்று மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த பார்ப்பனர்களுக்கு ஏன் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. புராணங்களில் தொடங்கி அரக்கர்களாகவும் அசுரர்களாகவும் சித்தரிக்கப்பட்ட கூட்டத்தில் இருந்து ஒரு விரல் அவர்கள் முன் நீண்டு கேள்வி கேட்பதை அவர்களால் எப்படி சகித்துக்கொண்டு இருக்க முடியும்! அந்த அசுரர்களின் பிரதிநிதி அறிவுமேதையாய் பகுத்தறிவாதியாய் இருப்பதை ஒரு கற்பனை புத்தகத்தை நம்பும் கூட்டத்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்! சுயநலத்தை மட்டுமே பிரதானமாய் கொண்டு ஆட்சி கட்டிலில் இருந்த கூட்டத்திற்கு தென்னகத்திலிருந்து ஒரு எதிர்ப்புக்குரல் பார்ப்பன அரசவையில் ஓங்கி ஒலிப்பதை எப்படி ஜீரணித்து கொள்ள முடியும்! ராமனையும் கிருஷ்ணனையும் மட்டுமே படித்து வளர்ந்த கூட்டம் சாக்ரடீஸையும் நெப்போலியனையும் சீசரையும் அந்த வெற்றிலைப்பாக்கு மனிதனின் உரைகளின் வழியே தான் அறிந்து கொண்டது. ஆட்சி என்றால் என்ன? அரசு என்றால் என்ன? சுயமரியாதை என்றால் என்ன? உரிமை என்றால் என்ன? என ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே பாடம் எடுத்த ஆசிரியரை கண்டு அந்த ஒட்டுமொத்த இந்திய பாராளுமன்ற கூட்டமும்
வாயடைத்து தான் போயிருந்தது .
அண்ணாவால் எப்படி எல்லோருக்குமான மனிதராய் இருக்க முடிந்தது?
அண்ணா பெரியாரின் மாணவர் மட்டுமல்ல. காந்தியின் மாணவரும் கூட! காந்தியமும் பெரியாரியமும் ஒன்று சேர்ந்த சித்தாந்த வடிவம் தான் அண்ணாவினுடைய சித்தாந்தம். அதனால் தான் அந்த மனிதனால் துளியும் பதவிஆசை இல்லாமால் இருக்க முடிந்தது. அண்ணா அமைக்க முயற்சித்த ஆட்சி இந்திய தன்மைக்கான சோஷலிச ஆட்சி. அதனை அவர் ஆட்சியில் இருந்த மூன்று வருடங்களில் சிறப்பாகவே செய்தார். அண்ணாவின் தலையில் இருந்த பொறுப்பு மிகப்பெரியது. அந்த பொறுப்புகளின் மீது அண்ணாவிற்கு கொஞ்சம் பயம் இருந்தது. அது பொறுப்பு கண்டு பயந்து ஓடும் பயம் அல்ல. அந்த பொறுப்பை சரியாக செய்யவேண்டும் என்ற கவனத்தோடு கூடிய பயம். அடுத்தடுத்த திட்டங்களும் வருங்காலத்தை பற்றிய அண்ணாவின் சிந்தனைகளும் தான் அண்ணாவின் நேர்மைக்கும் திறமைக்குமான சான்று.
அண்ணாவுக்கும் காமராசருக்கும் இருந்த நல்லெண்ணத்தில் எந்த மாறுபாடும் குறையும் கிடையாது. ஆனால் அவர்கள் இருந்த இடம் தான் அவர்கள் செய்ய வேண்டிய செயல்களை தீர்மாணித்தது. பெரியாருக்கு அண்ணாவும் கலைஞரும் கிடைத்தார்கள். ஆனால் நிச்சயமாக இன்னொரு காமராசர் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இதை பெரியார் சிந்தித்தாரோ! இல்லையோ! தெரியாது. ஆனால் அண்ணா சிந்தித்தார். பெரியாரின் சிந்தனைகளை சட்டங்களாக ஏட்டில் ஏற்றுவதற்கு ஒரு அண்ணா தேவைப்பட்டார். திராவிடர் கழகம் அண்ணாவை இழந்தது ஒரு விபத்து தான். ஆனால் தமிழகம் திராவிட முன்னேற்ற கழகத்தை அப்போது இழந்திருந்தால் அந்த இழப்பை எவராலும் ஈடு செய்திருக்க முடியாது.
அண்ணாவின் உடல் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டு இருக்கலாம். ஆனால் இன்று அடிப்படை உரிமைக்காகவும் மாநில உரிமைக்காகவும் தெருவில் நிற்கும் அந்த 80 வயதான முதியவரையும், பள்ளி சீருடையில் நிற்கும் அந்த பாலகனையும், படித்து நல்ல வேலையில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக உடன் நிற்கும் அந்த பெண்ணின் முகத்தையும் நன்றாக உற்றுப்பாருங்கள்! அவர்கள் முகத்தில் தமிழ்நாட்டின் தலைமகனின் சாயல் தெரிந்தால் ஆச்சரியம் கொள்ளாதீர்கள்! அண்ணாவிற்கு மரணமில்லை.
இன்று அண்ணா நினைவு தினம்.
நன்றி: அருண் கோமதி
சேலம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை ஊர் மத்தியில் ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம்.
25/01/2023
இன்று இந்தி எதிர்ப்பு போர் தியாகிகள் தினம்
ஜனவரி 25ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மொழிப் போர் தியாகிகள் தினமாக தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
600126
