22/01/2018
நேற்று 21.01.2018 அன்று தாம்பரம் பள்ளியில் நடைபெற்ற தாஃவா நிகழ்வு... நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு துண்டு பிரசுரங்களும், பல சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமாக புத்தகங்களும் வழங்கப்பட்டது. திருக்குர்ஆனும் சிலருக்கு வழங்கப்பட்டது. வல்ல ரஹ்மான் இவர்களுக்கு நேர்வழியைத் தந்திட துஆச் செய்யுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
11/01/2018
07.01.18 sunday Dawah programme. தாம்பரத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற அழைப்புப் பணியில் 4 பேர் திருக்குர்ஆனை கேட்டு வாங்கி சென்றனர். பலர் இஸ்லாத்தை அறியும் ஆவலில் புத்தகங்களையும் வாங்கிச் சென்றனர்.
08/01/2018
முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளுக்கு இலவசமாக வழங்க இஸ்லாமிய புத்தகங்கள், திருக்குர்ஆன் தமிழ், ஆங்கிலம் மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகிறது. வாய்ப்புள்ளோர் அழைப்புப்பணிக்காக உதவி செய்து மறுமையில் பயனடையுங்கள். தாம்பரம் பகுதிக்கு: 7871714336, 9841220944 - அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் தாம்பரம்.
https://www.facebook.com/alislahdawah/
Al islah Guidance centre
Community organisation
27/10/2017
சர் சையது அகமது கான்: அலிகர் என்னும் அறிவியக்கம்!
காதலுக்காகப் பெற்றோரையும், ஊரையும் விட்டு ஓடியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கல்வி பெறுவதற்காக ஓடியவர்களைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம். 1920-களில் பழனியைச் சேர்ந்த உசைன் நைனார் என்பவர், படிப்பதற்காகவே தன் ஊரை விட்டு ஓடிப்போயிருக்கிறார். படிப்பவர்கள் விவசாய வேலை செய்ய மாட்டார்கள் என்று அவர...
31/08/2017
டாக்டர் சேப்பன் மறைவு!
இவரது நூல்கள் தாஃவா களங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது!
ஆழ்ந்த இரங்கல்
29/07/2017
27.07.17 அன்று தாம்பரத்தில் சகோதரி ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்காக துஆ செய்யுங்கள். - அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம், தாம்பரம்.
17/07/2017
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல...
***********************************************
" #குற்றால #குளியலும் #சூடான #நரகமும்"
***********************************************
●குற்றால சீசன் துவங்கிவிட்டது குடும்பம் குடும்பமாக இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் அருவிகளை நோக்கி ஆசை ஆசையாக படையெடுக்கிறார்கள்...*
●குற்றால அருவி குளியலும் குளிர்ந்த காற்றும் சுகமானதுதான் ஆனால் நரக நெருப்பு வேதனையிலும் வேதனையானது.
●அருவிகளில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஆண் காவலர்களே பாதுகாப்பு அளிக்கின்றனர்.
● காவலர்களின் கண்களுக்கு நம் பெண்கள் காட்சி பொருளாகலாமா ?
● குளிக்கையில் நனைந்த இறுக்கமான ஆடைகளை அணிந்தவாறு பெண்கள் திறந்த வெளியில் நிற்ப்பது ஆபாசமில்லையா ?
● இச்செயலை அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்ட மூமினான பெண்கள் செய்யலாமா ?
● இது பற்றிய இறைத்தூதர் ( ஸல் ) அவர்களின் எச்சரிக்கையை கவனமாக படித்து பாருங்கள்.
● அன்னை ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறினார்கள்:
● நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். பொது குளியலறையில் ( குளிப்பது ) என் சமுதாயத்து பெண்களின் மீது ஹராமாகும் அறிவிப்பவர் ஆயிஷா ( ரலி ) அவர்கள் நூல் : ஹாகிம் : 7784.
● உம்முதர்தா அவர்கள் கூறினார்கள் நான் பொது குளியலறையிலிருந்து வெளியே வந்தேன்..அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் சந்தித்து நீ எங்கிருந்து வருகின்றாய் ? என கேட்டார்கள். பொது குளியலறையிலிந்து என்று சொன்னேன்...*
● அப்போது அவர்கள் எவனது கையில் என் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக !
● எந்த பெண் தன் ஆடைகளை தனது தாய்மார்களில் ஒருவரது வீடு அல்லாததில் களைகின்றாரோ அவள் தமக்கும் ரஹ்மானுக்கும் இடையேயுள்ள ஒவ்வொரு திரையையும் கிழித்து விட்டாள் என்று கூறினார்கள். நூல் : அஹ்மத் : 27086*
● அன்புள்ள இஸ்லாமிய சகோதரிகளே ! தக்வா எனும் இறையச்ச ஆடையை கிழித்தெறிந்து விட்ட, இந்நிலையில் நீங்கள் மரணித்துவிட்டால் உங்கள் நிலை என்னவாகும் ? என்பதை சிந்திக்க வேண்டாமா ?
● அல்லாஹ்வின் அச்சத்தைவிட அருவிகுளியல் உங்களுக்கு விருப்பமாக இருந்து நரக நெருப்பை தாங்கி கொள்ளும் துணிச்சலும் இருந்தால் உங்களை யாரும் தடுக்க முடியாது !
● இல்லை இல்லை அல்லாஹ்வின் திருப்தியும் சுவனமும் தான் எங்களுக்கு வேண்டுமென நீங்கள் கருதினால் குற்றாலம் செல்லாமல் தவிர்ப்பீர் !
"அல்லாஹ்வின் அருளை பெறுவீர்!"
13/07/2017
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே
19/06/2017
ஷுபஹானல்லாஹ்!! உலகம்
பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. நபிமொழியை மெய்ப்பித்தது
இன்றைய விஞ்ஞானம்!
சொர்க்கம் நரகம் உண்டா..???
மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள்
கேட்கப்படுவானா...???
1400...ஆண்டுகளுக்கு முன்பு...முஹம்மது நபிகளுக்கு
யார் சொல்லிக்கொடுத்தது.
எழுத படிக்கத்தெரியாத
முகமது நபி இறைவனிடம்
இருந்து... தனக்கு செய்தி
வருவதாக சொன்னார்கள்.
அப்படி வந்த செய்திகள் தான்
திருக்குரான் அதுமட்டுமின்றி
மக்களுக்கு அவ்வப்போது
சில...ரகசியங்களையும்
சொல்லியுள்ளார்கள்.அப்படி
அவர்கள் சொன்ன.... பல
உண்மையான ரகசியங்களில்
இதுவும் ஒன்று...
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால்எலும்பு
( # coccyx_bone ) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி]
அழியாது....இதை அழிக்கவும்
முடியாது என்று முகமது நபியவர்கள் சொன்னார்கள்.
இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி
“ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும்
மற்றும்.... பல
அமிலங்களைக் கொண்டு
கரைக்கவும் முயற்சி
செய்தார் முடிவில் அவருக்கு
கிடைத்தது தோல்வியே...
முடிவில்... முகம்மது
நபிகளின் வாக்கு உண்மையே
என்பதை இந்த உலகுக்கு
தன்னுடைய சோதனையின்
மூலம் நிரூபித்தார்.
இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பே...
அல்லாஹுவின் தூதர்(ஸல்)
அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ்
எவ்வாறு உயிர் கொடுப்பான்
என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின்
(மனிதனின் உடலிலுள்ள)
அனைத்துப் பகுதிகளையும்
மண் தின்றுவிடும்;மனிதனின்
(முதுகுத்தண்டின்
வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர!....
அதை வைத்தே அவன்
(தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்)
படைக்கப்படுவான்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து
ஒரு நீரை இறக்குவான்...
உடனே இ(றந்துபோன)வர்கள்
பச்சைப் புற்பூண்டுகள்
முளைப்பதைப் போன்று
எழுவார்கள். மனிதனின்
எல்லா உறுப்புகளும்
(மண்ணுக்குள்) மக்கிப்போய்
விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது
முதுகுத்தண்டின் வேர்ப்
பகுதியிலிருக்கும்)உள்வால்
எலும்பின் (அணுவளவு)
நுனியாகும்.அதைவைத்தே
படைப்பினங்கள் (மீண்டும்
மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்.(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5660