Tamil Nadu Congress Information Technology and Social Media Department

Tamil Nadu Congress Information Technology and Social Media Department

Share

Official page of Tamil Nadu Congress Committee Information Technology and Social Media Department.

Photos from Tamil Nadu Congress Information Technology and Social Media Department's post 31/05/2026

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாவட்ட தலைவர் திரு சின்னசேலம் ஜெய்கணேஷ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான திரு முகமது சாகித், இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளரும் தமிழ்நாடு இணைப் பொறுப்பாளருமான திருமிகு பிந்தியா பானர்ஜி ஆகியோர் முன்னிலையில்,
29-05-2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு தங்கத் தமிழன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 30 பேர் இளைஞர் காங்கிரஸில் இணைந்தனர்.

இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் திரு விஷ்ணு வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திரு சௌந்தரராஜன், சங்கராபுரம் தொகுதி தலைவர் திரு பிரவீன் குமார், வடக்கனந்தல் நகர தலைவர் திரு பாலகுமாரன், திரு தமோதரன், திரு ராஜேஷ், திரு முருகன், திரு குமரன், திரு தங்கத்துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைந்தனர்.

Tamil Nadu Youth Congress
Indian Youth Congress

30/05/2026

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜூன கார்கே அன்னை சோனியா காந்தி அன்பு தலைவர் திரு ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடக துறையின் தலைவர் திருமிகு சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை MLA அவர்களின் ஒப்புதலோடும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் மாநில பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

28/05/2026

Wishing you a Joyous and Peaceful Eid ul Adha.

27/05/2026

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜூன கார்கே அன்னை சோனியா காந்தி அன்பு தலைவர் திரு ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடக துறையின் தலைவர் திருமிகு சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்களின் ஒப்புதலோடும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் மாநில பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

27/05/2026

Live

27/05/2026

Live இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 62-வது ஆண்டு நினைவு தினம் . சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் மலர் தூவி அஞ்சலி.

23/05/2026

பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை இன்று திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் அவமதிக்கும் வகையில் ‘முதுகில் குத்தியவர்கள்’ என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் காலங்களில் கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும், உழைப்பையும் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அரசியல் ஆதாயத்திற்காக அவர்களையே குறிவைத்து தாக்குவது திமுகவின் இரட்டை வேட அரசியலை வெளிக்காட்டுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவும், வாக்கு வலிமையும் இன்றி திமுக தனித்து நின்று தமிழகத்தில் என்றுமே வெற்றி பெற்றதில்லை என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

தங்களது அரசியல் தோல்விகளையும் மக்கள் எதிர்ப்பையும் மறைக்க காங்கிரஸ் கட்சியை குறிவைத்து தீர்மானங்கள் நிறைவேற்றுவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும். தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசியலை வலுப்படுத்த பல்வேறு கட்சிகள் இணைந்து போராடிய வரலாற்றை திமுக மறைக்க முடியாது.

அரசியலில் நன்றி உணர்வும் கூட்டணி தர்மமும் மிகவும் முக்கியம். ஆனால் திமுக தொடர்ந்து அவற்றை மீறி செயல்பட்டு வருகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமல்லாது, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பையும் திமுக ஒருபோதும் மறக்கக் கூடாது

திரு நபில் அஹ்மத்
தலைவர் - தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடகத்துறை | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Indian National Congress - Tamil Nadu

23/05/2026

Live நிர்வாக திறனற்ற மத்திய பாஜக அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.

அகில இந்திய காங்கிரஸ் மிசோரம் மேகாலயா அருணாச்சல பிரதேஷ் பொறுப்பாளர் Dr A Chella Kumar அவர்கள் கண்டன உரை

21/05/2026

Live 6 தசாப்தங்களுக்கு பிறகு தமிழ்நாட்டின் அமைச்சரவையில் பங்கேற்கும் இந்திய தேசிய காங்கிரஸ்

வரலாற்றில் மிக முக்கியமான தருணம்...

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


40, Thiru. Vi. Ka Salai
Chennai