MTC Chennai

Directions Website

MTC Chennai Official Page of Metropolitan Transport Corporation [Chennai] Limited.

இன்று (07.10.2026), மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர். வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள்  மாநகர் போக்குவரத...
07/10/2026

இன்று (07.10.2026), மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர். வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இணை மேலாண் இயக்குநர் திரு. இராம. சுந்தரபாண்டியன், பொது மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு!...
04/10/2026

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு!

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரம்👇
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

"வெற்றிப் பயணம்" திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ...
02/10/2026

"வெற்றிப் பயணம்" திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார். மாநிலத்தில், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள மாதிரி நன்னடத்தை விதிமுறையைக் கருத்தில் கொண்டு, தேர்தல் நடைமுறை நிறைவடையும்வரை இவ்விரண்டு மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது.
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

02/10/2026

“வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கட்டணமில்லாப்
பேருந்துப் பயணம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
தொடங்கி வைத்தார்.
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.10.2026), சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்தில் “...
02/10/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.10.2026), சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்தில் “வெற்றிப் பயணம்” திட்டத்தைத் தொடங்கி வைத்து, மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச்சீட்டை வழங்கி, பயணம் செய்யும் மகளிருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், அரசு தலைமைக் கொறடா திரு.ரா.சபரிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

01/10/2026

தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல்!
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

26/09/2026

சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னை உலா (Hop on Hop off) சிறப்பு சுற்று வட்ட பேருந்து சேவை!

பயண கட்டணம்:
விண்டேஜ் பேருந்து: ரூ.50 மட்டுமே! (ஒரு நாள் முழுவதும் செல்லத்தக்கது).

குளிர்சாதன பேருந்து: ரூ.100 மட்டுமே! (ஒரு நாள் முழுவதும் செல்லத்தக்கது).

இந்த ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி அனைத்து சென்னை உலா பேருந்துகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
| | | | | NammaChennai | NammaBus | VintageBus | HopOnHopOff | ChennaiUla

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

Exams over? Time to explore!Hop on board the Chennai Ula bus service and discover the city's iconic heritage landmarks, ...
25/09/2026

Exams over? Time to explore!

Hop on board the Chennai Ula bus service and discover the city's iconic heritage landmarks, historic monuments, and scenic spots with your friends and family!

🎟️ Tickets starting at just Rs.50
📍 Starting Point: Central Railway Station Bus Stop
📲 Book via the Chennai One App or directly from the conductor!
| | | | | NammaChennai | NammaBus | ChennaiUla | ExploreChennai | HopOnHopOff

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

21/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், "வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | TVK Vijay | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், "வெற்றிப் ப...
21/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், "வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | TVK Vijay | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

Address

No. 2, Pallvan House, Mount Road
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when MTC Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share