TNUEF - ததீஒமு

TNUEF - ததீஒமு

Share

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

Photos from TNUEF - ததீஒமு's post 03/06/2026

#தென்காசி மாவட்டம் - நெட்டூர் சாதிய வன்கொடுமையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இன்றைய தினம் நடைபெற்ற பெருந்திரள் கண்டனப் போராட்டங்கள்.

Photos from TNUEF - ததீஒமு's post 03/06/2026

தென்காசி மாவட்டம், நெட்டூர் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு, நிவாரணம், நீதி வழங்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிவகங்கையில் #ததீஒமு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் வி.கருப்புசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.முத்துராமலிங்க பூபதி, மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Photos from TNUEF - ததீஒமு's post 03/06/2026

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு!

தென்காசி மாவட்டம், நெட்டூர் பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு, நிவாரணம், நீதி வழங்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்துறை முறையீடு இயக்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

#ததீஒமு

Photos from TNUEF - ததீஒமு's post 03/06/2026

அருப்புக்கோட்டை அருகே கீழே கிடந்த செல்போனை எடுத்துக் கொடுத்த பட்டியலினத்தைச் சேர்ந்த பிச்சை (65) என்பவரை "எங்களது போனை நீ ஏன் தொட்டாய்" என்று சாதி சொல்லி தாக்குதல் நடத்திய சாதியவாதிகள்.

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும், குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறை.

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தீஒமு மாவட்டச் செயலாளர் கே.முருகன், துணைத் தலைவர் எம்.முத்துக்குமார், பாதிக்கப்பட்ட முதியவர் பிச்சை ஆகியோர் பங்கேற்றனர்.

03/06/2026

நெட்டூரில் நடந்தது என்ன?....

மாநில செயற்குழு உறுப்பினரும், #ததீஒமு மாநிலத் துணைத் தலைவருமான தோழர் Samuelraj K அவர்கள்.

02/06/2026

‘சாதியைக் காட்டி உழைக்கும் மக்களைக் கூலிகளாகவே நடத்தும் பண்ணையாதிக்கம் ஒழிய வேண்டும். மனிதனை மனிதனாக மதிக்கும் சமுதாயம் மலர வேண்டும்.’

— தோழர் வாட்டக்குடி இரணியன்

02/06/2026

அணையா வெண்மணி - காலாண்டிதழ்

ஆண்டு சந்தா ரூ.100/- மட்டுமே.

#ததீஒமு

01/06/2026

சாதி வன்கொடுமைக்கு என்ன காரணம் என்றால் சாதி தான் காரணம்!

மாநில செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய துணைத் தலைவருமான தோழர் Samuelraj K அவர்கள்...

#ததீஒமு தென்காசி endcasteviolence

More: https://youtu.be/NMEuE5CeFWY

01/06/2026

#தென்காசி மாவட்டம் - நெட்டூர் சாதிய வன்கொடுமையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஜூன் 3 ல் தென் மாவட்டங்களில் பெருந்திரள் கண்டனப் போராட்டம்

31/05/2026

தென்காசி மாவட்டம், நெட்டூர் பட்டியலின மக்கள் மீது கொடூரத் தாக்குதல்!

🔴 தொடர் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கிராமத்தைவிட்டு அகற்றிடு!.

🔴 பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பும், நீதியும் உறுதி செய்!.

📢 தென் மாவட்டங்கள் முழுவதும்
ஜூன் 3 – கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறைகூவல்...

#ததீஒமு #தென்காசி

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


No. 25/13, SAMPANGI Street, WEST MAMBALAM
Chennai
600033