05/06/2026
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின் போது உயிரிழந்த தொழிலாளர் நடத்துனர் திரு.R.சுப்ரமணியன் அவர்களின் மனைவி திருமதி செல்வநாயகி அவர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் நிதி உதவியினை முதன்மை நிதி அலுவலர் திரு.T.சந்தானகிருஷ்ணன் மற்றும் பொது மேலாளர் திரு.A.T.நடராஜன் ஆகியோர் இன்று (05-06-2026) வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி மேலாளர் திரு.K.கோபாலகிருஷ்ணன், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
| |
03/06/2026
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் நடத்துநர்கள் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டதற்கும், அதிக வருவாய் ஈட்டியதற்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசலுக்கு அதிக கி.மீ இயக்கிதற்கும் ஓட்டுநர் உடன் நடத்துநர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த மே 2026 மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அதிக வருவாய் மற்றும் தடத்தில் அதிக வருவாய் ஈட்டிய 10 ஓட்டுனர் உடன் நடத்துநர்களையும், டீசல் மைலேஜ்க்கு 4 ஓட்டுனர்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இரா. மோகன் அவர்கள் இன்று பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
| | | | | DigitalTicketing
01/06/2026
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டல தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமினை மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன் இன்று 01.06.2026 தொடங்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார்கள்.
| | |
29/05/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 04.06.2026 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், பள்ளிச் சீருடையுடன் மாணவ / மாணவிகள் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்.
| |
27/05/2026
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. அவர்கள் தலைமையில் இன்று (27-05-2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் முனைவர் மா.வள்ளலார், இ.ஆ.ப., சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் டாக்டர் த. பிரபுசங்கர், இ.ஆ. ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
| |
27/05/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. அவர்கள், இன்று (27-05-2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
| |
25/05/2026
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மே மாதம் முழுவதும் தினசரி சிறப்பு பேருந்துகள் கொடைக்கானலில் இருந்து இயக்கப்படும்.
| | | |
25/05/2026
பக்ரீத் பண்டிகை, முகூர்த்தம், தொடர் விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
| | | |
25/05/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட தலைமையகத்தில் மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் திரு. அவர்கள் இன்று 25.05.2026 திடீர் ஆய்வு மேற்கொண்டு கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் விடுக்கும் புகார்களுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளித்தார்கள். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் அவர்களும் உடன் இருந்தார்.
| | | |
25/05/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட தலைமையகத்தில் மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் திரு. அவர்கள் இன்று 25.05.2026 திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் அவர்களும் உடன் இருந்தார்.
| | | |