15/08/2023
தேங்காய்க்கு விலை கேட்டும் பாமாயில் இறக்குமதிக்கு தடை கோரியம் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை விவசாயத்திற்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டு புதுதில்லியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துவிட்டு திரும்பிய தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து அவர்களுக்கு நம்பியூர் வட்டார தலைவர் ராமசாமி செயலாளர் தங்கசாமி பொருளாளர் வெள்ளபாளையம் ராசு சோமசுந்தரம் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் உழவாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
01/03/2023
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற
தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் தேவையும் எதிர்பார்ப்பும்
என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
உடன் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவேரி தனபாலன் மற்றும்
முருகையன் ஆகியோர்....
01/03/2023
தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளத்துடன்....
25/02/2023
கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிசாமி அவர்கள் மறைவிற்கு எனது சார்பிலும் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,
அவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்து அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கு.செல்லமுத்து
தலைவர்
12/02/2023
*வாழ்த்துச் செய்தி*
ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும்
முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,
முன்னாள்
கயிறு வாரிய தலைவர்,
எனது அன்புக்குரிய சகோதரர்
திரு CP. ராதாகிருஷ்ணன்
அவர்களுக்கு எனது சார்பிலும்,
தமிழக விவசாயிகள் சார்பிலும்,
உழவர் உழைப்பாளர் கட்சி,
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும்,
வாழ்த்துக்களையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!
அன்புடன்
கு.செல்லமுத்து
தலைவர்,
AP.திருநாவுக்கரசு
பொதுச்செயலாளர்,
E.பாலசுப்பிரமணியம்
பொருளாளர்
CK.ஈஸ்வரன்
செயலாளர்.
S.ராஜரீகா
மகளிர் அணி தலைவி
KCM.சங்கீதபிரியா
மகளிர் அணி செயலாளர்,
உழவர் உழைப்பாளர் கட்சி
தமிழக விவசாயிகள் சங்கம்.
12/02/2023
இரங்கல் செய்தி
முன்னாள் அரசு வழக்கறிஞரும்,
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும்,
என் மீது மிகுந்த பண்பும் பாசமும் கொண்ட அருமை வழக்கறிஞர்,
திரு ஏ நடராஜன் அவர்களின் தகப்பனார் ஆறுச்சாமி கவுண்டர் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்,
அவரை இழந்து வாடும் திரு நடராஜன் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் விவசாயிகளின் சார்பிலும்,
எனது சார்பிலும்,
ஆழ்ந்த இரங்கலையும்,
ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கு.செல்லமுத்து
தலைவர்
18/01/2023
இரங்கல் செய்தி
ஈரோடு கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவரும்,
AET பள்ளி நிறுவனரும்,
என் மேல் தனிப்பட்ட அன்பும் பாசமும் உள்ளவரும்,
உழவாலயத்துக்கு என்னுடன் இணைந்து பல உதவிகள் செய்தவருமான,
திரு காசியண்ண கவுண்டர்
அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன், இது எனக்கு ஒரு தனிப்பட்ட பெரிய இழப்பு,
அவரின் இழப்பை என்னால் எதைக்கொண்டு ஈடு கட்டுவது என்பது தெரியவில்லை, அவ்வளவு பிரியமானவர் அன்பானவர்,
அவரின் மறைவு மிகப்பெரிய வருத்தத்தை எனக்கு அளிக்கிறது,
அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும்,
AET பள்ளி நிறுவனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,
மாணவிகள் அனைவருக்கும் எனது
ஆறுதலையும்,
அவரின் மறைவுக்கு எனது சார்பிலும்,
தமிழக விவசாயிகள் சார்பிலும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
கு.செல்லமுத்து
தலைவர்,
உழவர் உழைப்பாளர் கட்சி
தமிழக விவசாயிகள் சங்கம்
29/11/2022
*இரங்கல் செய்தி*
எனது உறவினரும், திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளின் ஆணையாளராக இருந்த திரு கே ஆர் செல்வராஜ் அவர்களின் தகப்பனாருமான
திரு ராமசாமி கவுண்டர் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன், அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
அவரை இழந்து வாடும் செல்வராஜ் குடும்பத்தினருக்கு
என் சார்பிலும்,
தமிழக விவசாயிகளின் சார்பிலும்,
ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
*கு.செல்லமுத்து*
*தலைவர்*
11/11/2022
இன்று பொள்ளாச்சி நான்கு முனை சுங்கம் ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லூரியில் "விவசாயம் பழகு' என்னும் தலைப்பில் தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
07/11/2022
நமது இயக்கத்தின் சென்னை மாநகர செயலாளர் நீலகண்டன் அவர்களின் சகோதரி மற்றும் மறைந்த திரு இளங்கோவின் மகனுமான கலையரசன், அனுசியா மலர் ஆகியோரின் திருமண நிகழ்ச்சி கடலூர் விளங்கல்பட்டு முருகன் கோயிலில் நடைபெற்றது,
தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து அவர்களும்,
பொதுச் செயலாளர் திருநாவுக்கரசர் அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
07/11/2022
"இரங்கல் செய்தி"
ஆனந்த விகடனின் மேலாண்மை இயக்குநர் திரு சீனீவாசன் அவர்களின் தாயார் திருமதி சரோஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன் அவரை இழந்து வாடும் திரு சீனீவாசன் அவர்களுக்கும்,
அவரின் குடும்பத்தாருக்கும், விகடன் நிறுவன ஊழியர்களுக்கும்,
எனது சார்பிலும்,
தமிழக விவசாயிகள் சார்பிலும்,
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கு.செல்லமுத்து,
தலைவர்,
உழவர் உழைப்பாளர் கட்சி.
14/10/2022
அன்பு உழவு சொந்தங்களே!
14-10-2022 மாலை 6 மணிக்கு பொள்ளாச்சிக்கு வருகை தந்த மாண்புமிகு மத்திய வேளாண்மை துறை அமைச்சர்
திரு நரேந்திர சிங் தோமர்
அவர்களை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளாக
நதிகளை தேசிய மயமாக்க வேண்டியும்,
தேங்காய் கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்தவும்,
நதிகளை தேசிய மயமாக்கி மாநிலங்களுக்குள் நடைபெறும் மோதலை தடுக்கவும்,
ஆனைமலை நல்லாறு இணைப்பு திட்டங்களை நிறைவேற்றவும்,
விவசாயிகளின் வருமானங்களை இரட்டிப்பாகுவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியும்,
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும்,
தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து அவர்களும்,
மாநில பொருளாளர்
E.பாலசுப்பிரமணியம் அவர்களும்,
மாநில மகளிர் அணி செயலாளர்
KCM.சங்கீதபிரியா அவர்களும்,
கோரிக்கை மனுவை வழங்கி,
தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து அவர்கள் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்
அமுல் கந்தசாமி,
நமது இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் அலங்கியம் ஈஸ்வரமூர்த்தி,
பொறியாளர் அணி செயலாளர் Er.பொன்.ஜெகநாதன்,
தாராபுரம் வட்டார தலைவர் பழனிச்சாமி,
பொங்கலூர் வட்டார செயலாளர் சுங்கம் நடராஜன்,
பொருளாளர்
சி எஸ் என்கிற
சி சுப்பிரமணியம்,
மூலனூர் வட்டார தலைவர் குருசாமி,
உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நன்றி!
ஈஸ்வரன்
ஊடக பிரிவு செயலாளர்.