Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம்

Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம்

Share

முதலாளித்துவத்திற்கு மாற்றாக பொதுவ?

31/03/2026

#அலெக்சாண்டர்_கொலொன்டேய்_பிறந்த_தினம்_இன்று

ரஷ்யாவில் பாரம்பரிய சமூக பழக்கவழக்கங்கள், ஒடுக்குமுறைகள் பிற்போக்கு வாதங்கள் போன்றவற்றிற்கு எதிராக தீவிர வாழ்நாள் பணிகளை மேற்கொண்ட ரஷ்ய புரட்சியாளர்; சோவியத் நாட்டின் அங்கீகாரம் பெற்ற அமைச்சராக பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் #அலெக்சாண்டர் கொலொன்டேய்.

1872 ஆம் ஆண்டு வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்த அலெக்ஸாண்டர் கொலொன்டாய் சிறுவயதிலிருந்தே புரட்சிகர பார்வை கொண்ட சமூக சூழ்நிலையில் வளர்ந்தார். புரட்சிகர அரசியல் மீதான ஈர்ப்பு எழுத்தை நோக்கியும் ரஷ்யாவை நோக்கியும் அவரை நகர்த்தியது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்த்து தனது உறவினரான விளாடிமிர் கொலொன்டாயய் திருமணம் செய்து கொண்டார். 2 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு பிறகு சமூகத்தின்பால் இருந்த ஈர்ப்பு குடும்ப வாழ்வை விட்டு விலகி அவரை புரட்சிப் பாதை நோக்கி பயணம் செய்ய வைத்தது. திருமணம் , பெற்றோரின் எதிர்ப்புகளை கடந்து 26 ஆவது அகவையில் முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

ரஷ்யாவில் பின்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கினார். பின்லாந்தில் உள்ள தொழிலாளர்கள் தங்களை தொழிற்சங்கங்களாக ஒழுங்கமைக்க உதவியதுடன், பின்னிஷ் மக்களுக்கும் ரஷ்ய எதேச்சதிகாரத்திற்கும் இடையிலான போராட்டம் பற்றி கட்டுரைகளை எழுதினார். அவரது புத்தகமான "பின்லாந்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நிலை" 1903 இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொலன்டேய் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து
ரோசா லக்சம்பர்க், பிளக்கனோவ் போன்றோருடன் இணைந்து கருத்தியல் தளத்தில் தன்னை வளர்த்துக்கொண்டவர் ,திறமை மிக்க ஒரு எழுத்தாளராகவும் தலைசிறந்த பேச்சாளராகவும் மெருகேற்றிக் கொண்டார்.1906 இல்,
பிளெக்கானோவ் மீதான அபிமானத்தால் #மென்ஷிவிக்குகளில் சேர்ந்தார். பின்பு மென்ஷ்விக் கட்சிக்குள் நடந்த சந்தர்ப்பவாத போக்குகள், விவாதங்கள் முக்கியமாக #முதலாம்_உலகப் போருக்கு ஆதரவான நிலைப்பாடுகள் அவரை போல்ஷ்விக் நோக்கி நகர்த்தியது.முதலாம் உலகப் போரில் ரஷ்யா பங்கு பெறக் கூடாது என்ற கருத்தில் தீர்க்கமாக நின்ற லெனினின் நிலைப்பாட்டை அலெக்சாண்டர் கொலொண்டேயும் தீவிரமாக ஆதரித்தார். இந்நாட்களில் ரஷ்யாவின் சோஷியல் டெமாக்ரடிக் தொழிலாளர்கள் கட்சியின் புரட்சிகர கருத்துகளை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்பவர் ஆகவும் முதலாம் உலகப்போரை தீவிரமாக எதிர்ப்பதாகவும் அவரது பயணங்கள் தீவிரமடையத் தொடங்கியது.

அதேபோன்று பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கு தீவிரமாக இயங்க கூடிய ;நல்ல புரிதல் இருக்க கூடிய சூழ்நிலை இல்லாத காலகட்டத்தில் அலெக்சாண்டர் கொலெண்டாய் போன்றோர் வீரியமாக "பெண்கள் கேள்விகள்" சார்ந்து (Women question) தொடர்ந்து இயங்கினர்.

பெண்கள் சார்ந்த கேள்விகளுக்கு சோஷலிஸ்ட்களுக்கிடையே வேறுபட்ட பார்வைகள் இருந்தது.போல்ஷ்விக் கட்சிக்குள்ளேயே வெவ்வேறு பார்வைகள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. ஆனால் பெண்ணிய போராட்டங்கள் வலுப்பெற்ற காலகட்டங்களில் அதற்கான ஆதாரவுகளும் கட்சிகளிலும் தொடங்கியது. பிப்ரவரி புரட்சிக்கு வித்திட்ட ஆடை தொழிற்சாலை பெண் தொழிலாளர்களின் மாபெரும் புரட்சிகரப் போராட்டம் பல்வேறு புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியது. முதலாளித்துவ பெண்ணிய கருத்தாக்கங்களையும் வெறும் பெண் விடுதலையை மட்டும் பேசும் சித்தாந்தங்களையும் முழுமையாக எதிர்த்து அலெக்சாண்டர் கொலொன்டாய் ஆண்-பெண் பேதங்களற்று உழைக்கும் மக்களாக ஒருங்கிணைந்து இந்த ஒடுக்குமுறை சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய முயல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேபோன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை பொருளாதார கட்டத்திலிருந்து உளவியல் ரீதியாக கட்டமைக்கப்படுகிறது என்ற பார்வையோடு பயணித்தவர்களில் கொலொன்டேயும் ஒருவர்.குடும்பம், திருமணம், தனியுடைமை போன்றவை சுரண்டல் பொருளாதார அமைப்பு முறையின் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஸ்தாபனங்கள் என்பதும் பெண்ணை கருத்தியல் தளத்தில் சமூகத்தளத்தில் பொருளாதாரத்தில் சுரண்டுவதற்கான காரணிகளை அவை வழங்குகின்றன என்றும் தொடர் பிரச்சாரங்கள் ஊடாக எழுத்துக்கள் ஊடாக எடுத்துரைத்தார்.
திருமணம் மற்றும் குடும்பம் குறித்த சமூகத்தின் மனநிலை மாறும்போதுதான் பெண்களின் விடுதலையை அடைய முடியும் என்று கொலோன்டாய் நம்பினார்.

பிறகு பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடுகள் (குடும்பம், ஆண் பெண் உறவு திருமணபந்தம்) அவருக்கு இருந்த கருத்தாக்கங்கள் மற்றும் கட்சியின் அமைப்பு முறை இருந்த மாற்றுக்கருத்துக்கள் போல்ஷ்விக் கட்சியை விட்டு விலகி opposition என்னும் அமைப்பை தொடங்குவதற்கு வழிவகுத்தது.ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பிறகு கொலண்டாயை இராஜதந்திரியாக வெளிநாடுகளுக்கு அனுப்பினார். இதில் நோர்வே (1923-25), மெக்ஸிகோ (1925-27), நோர்வே (1927-30) மற்றும் சுவீடன் (1930-45) ஆகிய நாடுகள் அடங்கும்.1945 இல் ஓய்வு பெற்ற கொலண்டாய் 1952 மார்ச் 9 ஆம் தேதி இறக்கும் வரை மாஸ்கோவில் வாழ்ந்தார்.

-தோழமையுடன்
பொதுவுடைமை இயக்கம்

தமிழ்நாடு தேர்தல் – மார்க்சியர் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன? - எதிர் 25/03/2026

தமிழ்நாடு தேர்தல் – மார்க்சியர் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன?

பொதுவுடைமை இயக்கத்தின் அறிக்கை – சென்னை

தொடர்புகளுக்கு : [email protected]

தமிழ்நாடு தேர்தல் – மார்க்சியர் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன? - எதிர் பொதுவுடைமை இயக்கத்தின் அறிக்கை - சென்னை (புதிய சோஷலிச மாற்று) தொடர்புகளுக்கு : [email protected] வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ....

08/03/2026

மனித வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதி பங்குண்டு என்று தங்களை அடக்கி ஒடுக்கி சுரண்டிக் கொழுத்த ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்து போராட்ட வரலாற்றை எழுதிய பெண்களின் நினைவில் உதித்ததே #சர்வதேசிய_உழைக்கும்_மகளிர்_தினம்.

அனைத்துப் பெண்களுக்கும் சர்வதேசிய மகளிர் தின வாழ்த்துகள்.

தோழமையுடன்,
பொதுவுடைமை இயக்கம்

03/02/2026

The Jeffrey Epstein files tear the mask off power. They show how the ruling elite live by a different moral code one where money buys silence, institutions protect abusers, and victims are disposable. This is not an accident or a few “bad individuals”; it is how power functions under capitalism. When wealth concentrates, accountability disappears. Courts, media, universities, and political systems bend to protect the powerful, while ordinary people are disciplined, shamed, and punished for far less. Epstein was not an anomaly but he was a node in a network where exploitation is normal and cruelty is hidden behind respectability.

What is most disturbing is how even figures admired by the public, including those from the so called left, become entangled through financial ties, elite institutions, or silence. This does not mean all are guilty of crimes, but it exposes a deeper truth: proximity to power corrodes principles. Under capitalism, even critical thinkers can be absorbed, neutralised, or compromised by elite systems.

30/01/2026


Photos from Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம்'s post 12/10/2025

மூலதன அமைப்பு தன் அடக்குமுறையை நிரந்தரமாக்குவதற்காக பல சித்தாந்த முகமூடிகளை உபயோகிக்கிறது. அதில் ஒன்று, “செல்வந்தர்களும் சாதாரண மக்களைப் போல வாழ்கிறார்கள்” என்ற நம்பிக்கை.

ஆம் இந்த பெரும் பணக்காரர்களிடம் இருந்து வரும் “எளிமை” என்ற வெளிப்பாடு, உழைக்கும் மக்களிடம் ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்குகிறது. அவர்கள் பெரும் செல்வத்தையும் வைத்திருந்தாலும், எளிமையாக வாழ்கிறார்கள்; ஆகையால் செல்வம் தீமை அல்ல, இவர்கள் நேர்மையானவர்கள் போன்ற பிம்பங்களை நம்ப வைப்பது .

இவர்களிடம் இருந்து வரும் “எளிமை” ஒரு தனிநபர் பண்பு அல்ல; அது மூலதனத்தின் சித்தாந்தக் கருவி.
இதன் நோக்கம் மக்களை “வர்க்க உணர்விலிருந்து விலக்கி, நாமெல்லாம் மனிதர்கள் தான் என்ற மாயையை உருவாக்குவது. சமூகத்தில் வர்க்க எதிர்ப்பை குறைத்து, மூலதன வர்க்கத்தையும் உழைப்பாளர் வர்க்கத்தையும் ஒரே மனித அனுபவத்தின் கீழ் காட்ட பயன்பாடும் ஒருவகை சித்தாந்த உளவியல் ஆட்டம். மூலதனத்தின் கொடூரத்தை மறைத்து, “நாமெல்லாம் ஒரே மாதிரியான மனிதர்கள்” என்ற திசைதிருப்பல்.

உண்மையான எளிமை என்பது பொருளாதாரமாக தன்னிறைவு அடைந்த வர்க்கத்திலிருந்து வர முடியாது. அது உழைக்கும் மக்களின் வாழ்வியலின் இயல்பான விளைவு . அதாவது உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் சுயநம்பிக்கை, சமத்துவம் மற்றும் ஒருமை. எனவே, இத்தகைய பில்லியனர்களின் எளிமை என்பது சமூக வியாபாரத்தின் ஒரு பகுதி, வர்க்க முரண்பாட்டை மங்கச் செய்யும் முகமூடி.
- பொதுவுடைமை இயக்கம்

06/10/2025

கரூரில் நடந்த கோர சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசியல் வட்டத்தில் பேசுபொருளாக இருப்பது இன்றைக்கு இந்த விடயமே . இறந்த உயிர்களைப் பற்றிய ஒரு குறைந்த பட்ச கண்ணீர் அஞ்சலிகள் கூட கண்ணில் படவில்லை . அது விஜய் தரப்பாகட்டும்; எதிர் நிலையில் நின்று பேசுபவர்கள் ஆகட்டும் ; சமூக வலை தளத்தில் ஆகட்டும்; இது தான் தருணம் என்று மாற்றி மாற்றி கேளிக்கைகள் மூலம் அரசியல் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது .

எவ்வித அரசியல் பார்வையும் அற்ற ஒரு நடிகன் முழுக்க முழுக்க தனக்கு இருக்கும் ரசிகர்களை வைத்து தானும் ஒரு ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் அரசியலில் குதித்து வேடம் கட்டிக்கொண்டு இருந்த தருணத்தில் கரூர் சம்பவம் அவரது வேடத்தை , தலைமை பண்பை; அரசியல் அறிவீனத்தை படம் பிடித்துக் காட்டி உள்ளது . இது சமூக வலய தளங்களில் பேசு பொருளாகி இருப்பது போல் Conspiracy/ திட்டமிட்ட அரசின் செயல் / விஜய் யின் நர்சிஸ்டிக் குணம் என்றெல்லாம் கிடையது. எந்த வித திட்டமிடலின்மை ; Power ஐ காட்டுவதற்கான ஒத்திகை; பொறுப்பற்ற போக்கு இத்தகைய கொடூரத்தில் வந்து முடிந்துள்ளது. ஆளும்கட்சி தரப்போ , விஜய்யோ எதிர்பர்த்திராத ஒன்று இது . ஆனால் அந்த கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்க தொடங்கிய நொடியில் இருந்து மரணங்கள் நிகழ்ந்தது முதல் இன்று வரை இதை வைத்து ஒரு கேவலமான அரசியல் நடந்து கொண்டிருப்பது அப்பட்டம்.

இதில் விஜய் பக்கம் நின்றும் அரசு பக்கம் நின்றும் ஆளும் கட்சி எதிர் கட்சி பக்கம் நின்றும் பல narrations காண முடிகிறது . ஆனால் இவை பற்றியெல்லாம் பெரிய ஆச்சர்யம் இல்லை . தங்களின் அரசியலுக்கு அழகாக அனைவரும் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி களம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் . இதனால் இறந்த குடும்பங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஒரு பிரியோஜனம் இல்லை .

தமிழ்நாட்டின் 'அரசியல்' சிந்தனைகளில் ஆழமாக வேரூன்றியிருந்த காலகட்டங்கள் இருக்கத்தான் இருந்தது . சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம் போன்ற சிந்தனைகளின் அடித்தளத்தால் அரசியல் அமைப்புகள்/கட்சிகளால் கட்டப்பட்டன . ஆனால் காலப்போக்கில், அந்தச் சிந்தனைகளை "நபர்கள்" சார்ந்ததாக மாறியது . பெரியாரின் தீவிர வேர்களை, அவரைத் தொடர்ந்து வந்த தலைவர்களின் கவர்ச்சி மெதுவாக புதைத்துவிட்டது. அரசியல் ஒரு நிகழ்ச்சியாக மாறியது; இயக்கங்கள் ரசிகர் மன்றங்களாக மாறின.

இன்றைய ஜென் Z தலைமுறை அதைத்தான் மரபாக பெற்றுள்ளது. ஒரு இளைஞன் சிறு வயதிலிருந்தே அரசியலின் முகமாக பெரிய கட்-அவுட்கள், ரசிகர் மன்றங்கள், நாயக வழிபாடு ஆகியவற்றை பார்த்து வளர்கிறான் . அப்படி வளர்ந்தவனிடம் திடீரென சிந்தனை அரசியலை எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம்? பல தசாப்தங்களாக திரைப்பட அடிப்படையிலான மக்கள் கலாச்சாரம் அவர்களை அவர்களது உணர்ச்சிகளை ஒரு கூட்டு சமூக பார்வையாக பார்கும் பண்பில் இருந்து புறம் தள்ளி ஒரு தலைவன் வருவான் அவன் எல்லா வற்றையும் தீர்ப்பான் அவனே தீர்வு .... என்று சுருக்கி விட்டது.

இன்றைய தலைமுறை ஏன் இத்தகைய பிம்ப அரசியலை எளிதாக நம்பி போகிறார்கள்; ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். இளைஞர்களுக்கு இன்றைய நிலைக்கு இருக்கும் அழுத்தங்கள் எண்ணற்றவை. கல்வியில்; வேலை வாய்ப்பில் ; சமூக தளத்தில் ; குடும்பத்தில் ; உறவுகளில் என்று எண்ணற்ற சிக்கல்களுக்கு மத்தியிலேயே வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. வேலை இழப்பு, ஒப்பந்த வேலை, வெளிநாட்டுப் புலம்பெயர்வு அழுத்தம், மற்றும் எதிர்காலம் குறித்த குழப்பம் இப்படி அடிக்கிக் கொண்டு போகலாம் . கல்வி கல்வி என்று பிள்ளைகளை துரத்திப் பிடித்து வைத்தாலும் நிலையான வாழ்க்கை உறுதி கிடையாது. அரசியல்/ அரசியல் தலைவர்களில் நம்பிக்கை இல்லை. இந்நிலையில் உணர்ச்சி சார்ந்த விசுவாசம் இவர்களுக்கு ஒரு எளிய தஞ்சமாக மாறுகிறது.

அந்த மனநிலையில் ஒரு கவர்ச்சியான நபராக விஜய் தோன்றுகிறார். அவர் எந்தப் பெரிய அரசியல் மாற்றத்தையும் முன்வைக்காதிருந்தாலும், “நம்மை புரிந்துகொள்ளும் ஒருவன்” என்ற தோற்றத்தில் காணப்படுகிறார். அவரின் வார்த்தைகள் ஒரு பரிதாபமான உலகில் சிறிது ஆறுதலாக ஒலிக்கின்றன.

ஒருகாலத்தில் இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்கள் நேரடியாக ஏழை எளிய மக்கள்/ தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து பயணித்தனர் ஆனால் காலப்போக்கில், அவை மக்களின் வாழ்விலிருந்து, இளைஞர்களின் கால சூழலுக்கேற்ற வளர்ச்சிகளில் முனேற்றங்களில் இருந்து விலகியது .

இளைஞர்கள் இன்று இயக்கங்களுக்குப் பதிலாக திரைப்பட நட்சத்திரங்களிடம் மாற்றத்தை காண்கிறார்கள் / எதிர்பார்க்கிறார்கள் என்றால், அது அவர்களின் தோல்வி மட்டும் அல்ல; நம்முடையதும்தான். இடது சாரிகள் / முற்போக்காளர்கள் அவர்களோடு உரையாட / அவர்களை இத்தகைய அரசியல் பக்கம் ஈர்க்க தவறினோம், முக்கியமாக அவர்களின் மொழியிலும் அவர்களில் நவயுக வளர்ச்சிப் போக்கில் இருந்து அவர்களை அணுகுவது இல்லை / அரசியல் படுத்துவதில்லை . அவர்களின் ஆத்திரத்தை சமூகப் போராட்டத்தோடு இணைக்க முயற்சிக்கவில்லை ( அதற்கு சான்று கடந்த காலங்கலில் நடந்த பல போராட்டங்களை நாம் எப்படி அரசியல் மயமாக்காமல் கடந்து போனோம் என்று எண்ணிப்பார்தால் புரியும் ) .

இது தமிழ்நாட்டுக்கே மட்டும் அல்ல. உலகம் முழுவதும் ஜென் Z தலைமுறை ஒரு மாற்று அரசியலுக்கு தஞ்சமில்லாமல் தான் தவிக்கின்றது . மேற்கத்திய நாடுகளில் பழைய அரசியல் கட்சிகள் ஊழலாலும் பிரிவினையாலும் நம்பிக்கை இழந்துள்ளன. ஆசியா போன்ற பகுதிகளில் பொது மக்களின் விரக்தியில் இருந்து, சினிமா நட்சத்திரங்களும் இன்ஃப்ளூயன்சர்களும் “புதிய நம்பிக்கை” என்ற முகத்தில் எழுகின்றனர்.

இது இந்த சமூகத்தின் இந்த பொருளாதர கட்டமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியைக் காட்டுகிறது . உண்மையான ஜனநாயகம் வெளிப்புற வடிவமாக மட்டுமே மீதியாகியபோது, அரசியல் ஒரு காட்சியாக மாறுகிறது. மக்கள் அமைப்புகளை அல்ல, “ரட்சகரை” தேடத் தொடங்குகிறார்கள்.

இந்த ஜென் Z இளைஞர்களின்
ஆத்திரம், ஆற்றல், அமைதியின்மை இவை எல்லாம் பெரும் சக்திகள். அதை தனி நபர் / தலைவர் / கட்சி அரசியல்களுக்கு வீணாக்குவதை தடுத்து தத்துவர்த்தமான , மாற்றைத்தை நோக்கிய புரட்சிகரமான அரசியல் பாதை நோக்கி நகர்த்த வேண்டும்

ஒவ்வொரு தலைமுறையும் அதை உருவாக்கிய சமூகத்தின் பிரதிபலிப்பு. இன்றைய இளைஞர்கள் நாயக வழிபாட்டில் சிக்கியிருக்கிறார்கள் என்றால், அது அவர்களின் வெற்றிடமல்ல ... நம்முடைய வழிகாட்டல் முறைகளின் தோல்வியே காரணம்.

இடதுசாரி இயக்கங்களின் பணி இன்று வெறும் பிரபல அரசியலை எதிர்ப்பது அல்ல; புதிதாக அரசியல் பொதிமுறைகளை மீண்டும் கட்டியெழுப்புவது.இந்த இளைஞர்களை குறைசொல்லுவதற்குப் பதிலாக, அவர்களை அரசியல் படுத்த முன்வர வேண்டும். அது வெறும் போதிப்பது/ ஒற்றை மாநாடு நடத்துவது , சமூக வலைதள சண்டைகள் மூலமல்ல ! உரையாடல், வாசிப்பு, கூட்டு செயல்பாடு, அரசியல் மயப்படுத்தல் , மக்கள் போராட்டங்களை கையிலெடுத்தல் ஆகியவற்றின் வழியே மட்டுமே சாத்தியம்.

- பொதுவுடைமை இயக்கம்

Photos from Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம்'s post 30/08/2025

இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி இலண்டனில் இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது!

காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒடுக்குமுறையின் கருவி மட்டுமல்ல, மக்களின் அரசியல் குரலைச் சிதைக்க ruling classes பயன்படுத்தும் ஒழுங்கமைந்த ஆயுதமாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் ஒன்றிணைவு காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான அரசியல் பேராயுத யுக்தி .
- பொதுவுடைமை இயக்கம்

15/08/2025

திராவிட மாடல்,
சமூகநீதி,
எல்லாருக்கும் எல்லாம்
என்பதெல்லாம் உழைக்கும்
மக்கள் நீங்கலாக தான் என்பதை உணர்த்திய போராட்டம்.

பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு எட்டி பிடித்த இரட்டை இலக்க விழுக்காடு வளர்ச்சியில் உங்களுக்கு என்ன வேலை ச்சீ.. போ.. என்று எட்டி உதைக்கும் வளர்ச்சி அரசியலை உரித்து காட்டிய போராட்டம்.

சென்னையை சிங்காரிப்பவர்களை, அதன் மைய்ய பகுதியான ரிப்பன் பில்டிங்கில் போராடினால் சீர்கேடு, கலைந்து போங்கள் என்று அழுத அழுகிய ஆளும் திமுக அரசின் வர்க்க தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டிய தீரமிகு போராட்டம்.

தூய்மை பணியாளர்களை பெருக்கி தள்ளி நகரை தூய்மையாக்குங்கள் என்று கூறும் நீதி மன்றங்கள் வழங்கும் நீதி யாருக்கானது என்பதை உணர்த்தியதொரு போராட்டம்.

நாளை நாங்கள் சுதந்திர தினம் கொண்டாட போகிறோம் அதனால் தொழிலாளர்கள் போராட சுதந்திரம் இல்லை என்று நள்ளிரவில் பெற்றதாக சொன்ன சுதந்திரம் நள்ளிரவில் கல்லறைக்கு சென்றதை அறிய செய்த போராட்டம்.

ஆளும் வர்க்க கூட்டணி வைத்த கம்யூனிஸ்ட் இயக்கங்களும், தலித் இயக்கங்களும் கூட்டணி தர்மம், தோழமை என்று மவுன சாட்சியாய் வேடிக்கை பார்த்ததை காட்டி கொடுத்த போராட்டம்.

ஆந்திர தனியார் நிறுவனத்திற்கு அரசு தாரை வார்க்கிறது என்று தங்கள் இனவாத அரசியலுக்கு மட்டும் ஆதரித்தவர்கள் என்று ஒட்டு மொத்த ஆளும் வர்க்க பிரிவுகளும் ஓரணியில் திரண்டு வீழ்த்துகிறது தொழிலாளர் வர்க்கதை. ஆனால் இது LTUC, AICCTU போராட்டம் இது மாலே இயக்க போராட்டம் இது தற்காலிக தொழிலாளர்கள் போராட்டம், ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் என்று தொடர்ந்து பிரிந்து தான் இருப்போம் என்று மீண்டும் ஒரு முறை உணர்த்திய போராட்டம்.

கடந்த சில ஆண்டுகளில் மிக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தது ஓலா, உபர், சுவிகி தொழிலாளர்கள், சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை தொழிலாளர்கள் வெறும் சடங்கான போராட்டங்கள் காலாவதி ஆகிவிட்டத்தை இந்த தொழிலாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆறாயிரம் டன் குப்பையை தினம்தோறும் அகற்றும் தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு ஒரு வேலைநிறுத்தத்தை நடத்தியிருந்தால் அரை வாரம் தாண்டிருக்காது இந்த ஆளும் வர்க்கத்தின் கொட்டம். தொடர் ஒருங்கிணைப்பு சமரசமற்ற திட்ட நடைமுறை தான் பாட்டாளி வர்க்கத்தை விடுவிக்கும் குறைந்த பட்சமான உரிமையையும் பணி பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய விருப்பம் இல்லாத இந்த முதலாளித்துவ அரசுகளை சீர்திருத்துவதன் மூலம் அல்ல.

05/08/2025

#ஏங்கல்ஸ்_எனும்_புரட்சியாளன்_நினைவு_தினம்_இன்று

தொழில்துறை புரட்சி இங்கிலாந்திலிருந்து காட்டுத்தீ போல் பரவி தொழிலாளர்களின் படைகள் எழுச்சி கொண்டு இருந்த காலப்பகுதியில் ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் நவம்பர் 28, 1820 அன்று பிறந்தார்.
ஏங்கெல்ஸ் அவரது தந்தை இங்கிலாந்தின் தொழில்துறை வடக்கில் மான்செஸ்டரில் ஜவுளி தொழிற்சாலைகளை வைத்திருந்தார். ஒரு தொழிலதிபரின் மகன், முதலாளித்துவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு அறிந்து அதன் போதாமையை அம்பலப்படுத்தும் பணியை வாழ்நாள் முழுதும் மேற்கொண்டார் என்பதே வரலாறு கற்றுக்கொடுத்த படிப்பினை.

ஒன்பது பிள்ளைகளில் மூத்தவராய் இருந்த ஏங்கெல்ஸ் தன் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவார் என்று எண்ணிய தந்தைக்கு முரண்பட்ட மகனாகவே இருந்தார் வாழ்நாள் முழுவதும். அன்றைய காலகட்டத்தில் மேலோங்கி இருந்த மத கருத்துருவாக்கங்கள், முதலாளித்துவ பேராசைகள் இளம் ஏங்கல்ஸைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.

19 வயதேயான ஏங்கல்ஸ் ஃபிரெட்ரிக் ஓஸ்வால்ட் என்ற புனைப்பெயரில் என்ற தலைப்பில் தொழிற்சாலையில் எப்படி அடித்தட்டு உழைக்கும் மக்கள் துன்பப்படுகின்றனர் என்ற பார்வையை ; ஒரு குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் பற்றி எழுதினார். அதன் பின்னான நாட்களில் இராணுவ சேவையை தானாக முன்வந்து முடித்தார்; தத்துவம், ஆசிய மொழிகள் மற்றும் நிதி பற்றிய பல்கலைக்கழக விரிவுரைகளில் கலந்து கொண்டார், மேலும் இடதுசாரி அறிவுசார் வட்டாரங்களில் நட்பு சூழலை வளர்த்துக்கொண்டார்; 1842 இல் கொலோனில் அவர் முதலில் கார்ல் மார்க்ஸை சந்தித்தார், பின்னர் ரைனிச் ஜெய்டுங்கின் தலைமை ஆசிரியர் ஆனார்.

1842 ஆம் ஆண்டில் முதல் சந்திப்பில் இரண்டு ஜெர்மன் சோசலிஸ்டுகள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஒருவருக்கொருவர் இணைபிரியா நண்பர்களாக காலம் அவர்களை மாற்றியது.இங்கிலாந்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நிபந்தனைகள் குறித்த 1845 ஏங்கல்ஸின் எழுத்துக்களால் மார்க்ஸ் முதலில் ஈர்க்கப்பட்டார். பின்பு
வரலாறு, சமூகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு விஞ்ஞான அணுகுமுறையின் அவசியத்தைப் பற்றிய பகிரப்பட்ட புரிதலின் அடிப்படையில் அவர்களின் பயணங்கள், ஆக்கங்கள் தொடர்ந்தது.
#இளம்_ஹெகலியர்கள் போன்ற அக்கால தீவிரவாத குழுக்கள் வழங்கிய சமகால தத்துவத்தின் போதாமைகள் இருவரையும் ஏமாற்றமடைய செய்தது. அவர்களின் அறிவார்ந்த சகாக்களுடன் இருந்த பரஸ்பர அதிருப்தி உணர்வுதான் அவர்களின் ஆரம்பகால கூட்டு விமர்சனங்களான #தி_ஹோலி_ஃபேமிலி மற்றும் #தி_ஜெர்மன்_ஐடியாலஜி ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. அத்தோடு எங்கு இருந்தாலும் இரு வாழ்நாள் நண்பர்களுக்கிடையேயான மிகப்பெரிய கடித தொடர்பு அவர்களின் பிணைப்பின் பிரிக்க முடியாத தன்மையை வளர்த்துக்கொண்டே இருந்த்து.

1845 இல் எல்பெர்பெல்டில் முதல் கம்யூனிஸ்ட் கூட்டங்கள் நடைபெற்றபோது, ​​ஏங்கல்ஸ் அங்கு உரைகளை நிகழ்த்தினார். மார்க்ஸுடன் சேர்ந்து, அவர் பிரஸ்ஸல்ஸுக்குச் சென்றார், பின்னர் அவருடன் லண்டன் மற்றும் மான்செஸ்டருக்குப் பயணம் செய்தார். 1847 இல் லண்டனில் அவர்கள் "நீதிமான்களின் லீக்கில்", பின்னர் "கம்யூனிஸ்ட் லீக்கில்" சேர்ந்தனர் .ஒரு வருடம் கழித்து, அவர்கள் 2கம்யூனிஸ்ட்_அறிக்கையை எழுதினர்.

ஃபிராங்க்ஃபர்ட் ஆம் மெயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் வெர்னர் பிளம்பே கூறுகையில், "ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இல்லாமல், கார்ல் மார்க்சின் பெரும்பாலான எழுத்துக்கள் ஒருபோதும் தோன்றியிருக்காது."

பொது வானொலி ஒலிபரப்பாளரான டாய்ச்லாண்ட்ஃபங்குக்கு அளித்த பேட்டியில் பிளம்பே, "ஏங்கெல்ஸின் ஈடுபாட்டின் மூலம்தான் அவை அரசியல் அறிக்கைகளாக மாறின" என்று கூறினார். அவரது பணம் இல்லாமல், மார்க்ஸ் பட்டினியால் இறந்திருப்பார்" என்றும் கூறி இருப்பார்.

மார்க்ஸ் தனது நேரத்தை எழுத்துக்கு அர்ப்பணிக்க அனுமதிப்பதில் ஏங்கெல்ஸின் நிதி பங்களிப்புகள் பெரும் பங்களிப்பை செய்தது என்றாலும் நண்பனுக்கு பொருளாதார துணையோடு, கருத்தியல் தளத்தில், சித்தாந்த தளத்தில், தொழிலாளர்களின் சர்வதேசிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அரசியல் பயணத்தில் மார்க்சுக்கு இணையான பங்களிப்பை ஏங்கல்ஸ் கொடுத்தார்.

உண்மையில், ஏங்கல்ஸ் ஒரு தத்துவார்த்த வல்லுனராக இருந்தார். அவர் ஒரு கலைக்களஞ்சிய மனதுடன், அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் பரவலாக படித்த மனிதர்களில் ஒருவர்.அவர் பொருளாதாரம் மற்றும் வரலாறு குறித்த ஆழமான அறிவு பெற்றவராக மட்டுமல்லாமல், தத்துவம், விஞ்ஞானம், இலக்கியம் மற்றும் இராணுவ தந்திரோபாயங்கள் போன்றவற்றிலும் சிறந்த ஆளுமை நிறைந்தவராக இருந்தார்.

குடும்பத்தின் தோற்றம், தனிச் சொத்து மற்றும் அரசு ஆகியவற்றில், ஆரம்பகால மனித சமூகங்களின் சமீபத்திய மானுடவியல் சான்றுகளுக்கு வரலாற்று பொருள்முதல்வாதத்தின் மார்க்சிய முறையை ஏங்கல்ஸ் பயன்படுத்தினார். அவ்வாறு செய்வதன் மூலம், நவீன வர்க்க சமுதாயத்தைச் சுற்றியுள்ள மர்மத்தின் முகத்திரையை அகற்றி முக்கியமாக பெண்களின் அடக்குமுறை எவ்வாறு உருவானது என்பதை விளக்கினார்.

1869 ஆம் ஆண்டில், அவர் தனது நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிந்த பிறகு, ஏங்கல்ஸ் மார்க்ஸுடன் இருக்க லண்டனுக்குச் சென்றார்.1883 இல் மார்க்ஸ் இறந்த பிறகு, ஏங்கல்ஸ் சர்வதேச சோசலிசத்தில் ஒரு முன்னணி ஆளுமையாக ஆனார்.
ஏங்கல்ஸ், மார்க்சின் முக்கிய படைப்பான மூலதனம் இரண்டு மற்றும் மூன்று தொகுதிகளை மார்க்ஸின் மரணத்திற்குப் பின் அவர் குறிப்புகளை வைத்தே எழுதி முடிக்கின்றார்.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இடையேயான நட்பு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலானது. வாழ்க்கையிலும் மரணத்திலும், ஏங்கல்ஸ் எப்போதும் மார்க்சின் தவிர்க்க முடியாத நிழலாக இருந்தார். ஏங்கெல்ஸை பெரும்பாலும் மார்க்ஸ் பின்னான இரண்டாவது நிலையிலையே வைத்துப் பார்க்கும் போக்கு இருந்தது. ஏங்கெல்ஸ் கூட தன்னை அந்த நிலையில் தான் வைத்துப் பார்த்தார்.தனது நண்பன் மேல் வைத்திருந்த நட்பும், அன்பும், மறியாதையும் அளப்பெரியது என்பதை பல தருணங்களில் உணர்த்தி உள்ளார். மார்க்சை எல்லா சூழலிலும் உயர்த்திப் பிடித்தார்
"நான் பங்களித்தவை - ஒரு சில சிறப்புத் துறைகளில் எனது பணியைத் தவிர்த்து - மார்க்ஸ் நான் இல்லாமல் மிகச் சிறப்பாக செய்திருக்க முடியும்" என்று ஏங்கல்ஸ் எழுதினார்.

"மார்க்ஸ் சாதித்ததை நான் சாதித்திருக்க மாட்டேன். மார்க்ஸ் மற்ற அனைவரையும் விட பரந்த மற்றும் விரிவான பார்வையை உடையவர். நாங்கள் எல்லோரும் சிறந்த திறமை வாய்ந்த மனிதர்களாக இருந்தோம். ஆனால் மார்க்ஸ் ஒரு மேதை;அவர் இல்லாமல் மார்க்சிய தத்துவம் இந்த நிலையை எட்டி இருக்காது என்கிறார்

"ஏங்கல்ஸின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும் ... எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தன்னை அறிந்து கொள்ளவும், தன்னைப் பற்றி விழிப்புடன் இருக்கவும், கனவுகளுக்கு விஞ்ஞானத்தை மாற்றியமைக்கவும் தொழிலாள வர்க்கத்திற்கு கற்பித்தார் ..." என்று லெனின் ஏங்கல்ஸ் பற்றிய வார்த்தைகள் மிகையானது இல்லை.

"பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த போராளியும் ஆசிரியருமான ஃபிரடெரிக் ஏங்கெல்ஸின் நினைவை எப்போதும் நினைவில் நிறுத்துவோம்.

தோழமையுடன்
பொதுவுடைமை இயக்கம்

30/07/2025

பல கனவுகளோடு படித்து அதுவும் எல்லா விதங்களிலும் தன்னை முதன்மையானவனாக தகுதிப்படுத்தி வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்டு இருந்த ஒரு இளைஞன் படு பாதகமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறான்.

ஒருவன் எத்தகைய முன்னேற்றம் அடைந்தால் என்ன , சமூக தடைகளை உடைத்து கல்வியில் , பொருளாதாரத்தில் முன்னேரினால் என்ன ...... அவனின் பிறப்பின் அடிப்படையிலயே அவன் இங்கு பார்க்கப்படுவான் என்று மீண்டும் இந்தக் கொலை... கொலையை நடத்தும் சாதிய சமூகம் நிரூபித்து இருக்கிறது! அவனுடைய காதல் சாதிய சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தல். அதனால் அவனை அழித்து விட்டது.

இத்தகைய கொலை செய்வதன் மூலம் அந்தக் குடும்பம் அந்த வீட்டுப் பெண் தங்களின் உடைமை , அவள் அவர்களின் சொத்து ... அந்த சொத்தின் உணர்வுகள் , உரிமைகளை விட அதன் மீது கட்டமைத்து வைத்து இருக்கும் உடைமைத்துவம் சாதியத்தை பாதுகாக்கும் ; குடும்ப கௌரவத்தை பாதுகாக்கும் என்று நம்புகிறார்கள். அதனால் கொல்லவும் துணிந்தார்கள்.

அதே போன்று பல நேரங்களில் இத்தகைய சூழல்களில் பெண்கள் இந்தக் கொடுரங்கில் ஊமை சாட்சியங்களாக மாறிவிடுகின்றனர். அவளது குடும்பம் , குடும்ப கட்டமைப்புக் கொடுக்கும் உணர்ச்சிவசப்பட்ட பாசம், குடும்ப கௌரவம் போன்ற பல்வேறு காரணங்களால் சாதிய கட்டமைப்புகளை தாங்கும் ஆட்களாக பெண்கள் மாருகின்றனர். குறிப்பாக நடுத்தர அல்லது ஆதிக்க சாதியினரைச் சேர்ந்தவர்கள், சாதி அமைப்புகளுக்குள் வளர்கிறார்கள், எப்போதும் இந்த கட்டமைப்புகளை எதிர்க்க மாட்டார்கள்/ எதிர்க்கும் சமூக பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். இத்தகைய சமூக கட்டமைப்பு பெண்களை எவ்வாறு ஒடுக்குகிறது, குறிப்பாக சாதி பெருமை சம்பந்தப்பட்டிருக்கும் போது எவ்வாறு பெண்களை பயிற்சியளிக்கிறது என்பதை இது பிரதிபலிக்கிறது.

எது எப்படியோ இது வெறும் ஒற்றை நிகழ்வா என்ன ? எத்தனை ஆணவக்கொலைகள் , அதிகாரப்படுகொலைகளை நாமும் பார்த்தாகி விட்டோம்; நீதிக்கான கோஷங்கள் எழும்பி இருப்போம்; விதவிதாமன சட்ட ஒழுங்குமுறைகளுக்கும், தண்டனைகளுக்கும் கோரிக்கைகள் எழுப்பி இருப்போம்.

ஆனால் இவற்றிக்கு பிறகு என்ன?????? இந்த கோஷங்கள் எழுந்த வேகத்தில் அமைதியாகி அடுத்த நிகழ்வை நோக்கியும் எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டு நமக்கு குடுத்து இருக்கும் the so called ஜனனையாக உரிமையை நிலை நாட்டலாம் என்று தயாராகி விடுவோம்!!

இத்தகைய சமூக பாதகங்களுக்கு நம்முடைய எதிர்வினைகள் மற்றும் இந்த சமூக கட்டமைப்பில் இருக்கும் ஒழுங்குமுறைகள் போதவில்லை என்று இனியும் உணராமல் இருப்போமயான் இத்தகைய கொலைகளுக்கு ஏதோ ஒரு வகையில் நாமும் உடன் போவது போன்றது . சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பாதுகாவலர்கள் என்று காட்டிக்கொளும் கட்சிகளும்/ அரசியல் பார்வைகளும் அதை முன்னிறுத்துவோருமே முதைன்மை குற்றவாளிகள் . நமது பார்வையும் போராடும் பொதிமுறைகளும் கோவங்களும் உண்மையான மாற்றம் நோக்கி நகர்த்தாமல் எதுவும் இங்கு மாறாது ....

Until we dismantle the very pride and purity that sustain caste, we will keep burying our brightest youth under the weight of tradition. And This system or these political parties will never do this ...

- பொதுவுடைமை இயக்கம்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

பொதுவுடைமை இயக்கத்தை பற்றி:

‘பொதுவுடைமை ' என்பது நம்மில் பலரும் அறிந்த ஓர் அரசியல் சார்ந்த சொல்லாகவும் மற்றும் பல்வேறு கோணங்களில் புரிந்து கொண்ட ஓர் அரசியல் தத்துவார்த்தமாகவும் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் விட இன்றைய நிலையில் முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஓர் வாக்கியமாகவும் 'பொதுவுடைமை ' உள்ளது. 'பொது' என்று அசால்டாக கூறி சில வேளைகளில் தனது உரிமையை நிலைநாட்ட தெரிந்தவர்கள் உள்ள இச்சமூகத்தில்தான் முதலாளித்துவமும் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் எச்சமும் பெரும் சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது! எனவே தான் இந்த வறுமையை வெகு மக்களின் மேல் சுமத்தும் தற்போதுள்ள சுரண்டல் அமைப்பையும் இதன் அரசியலையும் எவ்வித குறுகிய சந்தர்பவாதங்களுக்கும் உட்படுத்தாமல் மக்களிடமும் களப்பணியாளர்களிடமும் கொண்டு போய் சேர்க்க அவர்களிடம் பரவலாக அறியப்பட்ட 'பொதுவுடைமை' சொல்லாடல் நிச்சயம் உதவும். இது நாள் வரை 'பொதுவுடைமை கட்சிகள்' என்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவும் பல தருணத்தில் பின்பற்றிய சந்தர்ப்பவாத அரசியல், மக்கள் விரோத கட்சிகளுடனான கூட்டணிகள், ஆளும்வர்க்கத்துடன் சமரச போக்கு உள்ளிட்ட பல காரணங்களால் இடதுசாரிய மற்றும் பொதுவுடைமை அரசியல் வெகுமக்களிடையே ஏற்றம் பெறவில்லை.

ஆனால் அதே நேரத்தில் 'அதிகார வர்க்கத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசியமயமாக்கல்' - என்ற வறட்டு புரிதலை பொதுவுடமை கருத்தியலுக்கு கார்பொரேட் ஊடகங்கள் கற்பித்துள்ளது. என்றாலும் இந்த வரலாற்றுச் சுமையை பொருட்படுத்த தேவையில்லை. அது மட்டும்மல்ல தற்போழுது உள்ள தலைமுறை போராளிகள் ஆவணங்களை கையிலேந்தி புத்திஜீவி அரசியல் விவாதங்களில் கிளர்ச்சியுற தயாராக இல்லை!

வறுமை, சாதிய கொடுமைகள், பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி, விவசாயிகள் தற்கொலை, மற்றும் பல சீர்கேடுகள் தற்பொழுதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையை கேள்விக்கு உட்படுத்துகிறது. விழிப்புணர்வுள்ள எவரும் எதிர் பார்ப்பது ஒரு மாற்றத்தை தான். அடிப்படையான மாற்றத்திற்கு தேவை மாற்று அரசியலே!

தற்பொழுதுள்ள உலகம் தழுவிய பொருளாதாரச் சீர்குலைவு அதன் விளைவாக எழுந்துள்ள அரசியல் சூறாவளிகள் முதலாளித்துவம் மற்றும் தனியார்மய கோட்பாடுகளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர், உலகம் தெரிய கழுதையின் மேல் ஏற்றியுள்ளது! இதனால் எல்லாம் சமீப காலங்களில் மக்களிடையே அதுவும் இளந்தலைமுறையினர்களிடம் மாற்று அரசியல் சிந்தனை அதுவும் பொதுவுடைமை சித்தாந்தங்களின் மீது ஆர்வம் ஒருவிதத்தில் அதிகரித்து உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்ட அரசியலை கொண்டுபோய் சேர்ப்பதே நம் முன் இருக்கும் பெரும் சவால். இதற்கான இயக்க பணிகளை 'பொதுவுடைமை இயக்கம்' செய்து கொண்டுவருகிறது.

Location

Telephone

Website

Address


No 9, Damodaran Street, Kilpauk
Chennai
600010