PBK - Puratchi Bharatham Katchi
ஒடுக்கப்படும் மக்களுக்காக, சாதி, மத, பேதமின்றி அனைவருக்காகவும் குரல் கொடுக்கும் இயக்கம் புரட்சிபாரதம்
05/06/2026
https://www.youtube.com/live/Ky3Cyb7-VYE?si=oa7HRv7G2mmHZrYd
🔴▶️LIVE | பாமக சார்பில் நடைபெறும் அனைத்துக் கட்சி கலந்தாய்வு கூட்டம் 🔴▶️LIVE | சமூகநீதி கணக்கெடுப்பு எனும் சாதிவாரி சர்வேயின் அவசியம் கு...
இதுவரை தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள், பட்டியல் சமூக மக்களுக்கு (அமைச்சர் பதவிகளில்) தகுந்த பிரதிநிதித்துவத்தை முழுமையாக வழங்கியதில்லை என்ற ஆதங்கம் பரவலாக இருந்து வருகிறது. ஆனால், தற்போதைய சூழலில் தமிழக வெற்றி கழகம் தனது கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் ஆறு பேரை அமைச்சர்களாக அமர்த்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வாகும். பட்டியல் சமூக மக்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டும் தவெக-வின் இந்த முற்போக்கான முடிவை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.
04/06/2026
https://youtu.be/D7ZfT7W-7N4?si=ylE4-cvBoGVeODlZ
பூவை ஜகன்மூர்த்தி: நண்பரா? எதிரியா? அரசியலின் உண்மை முகம்! மாற்று அரசியலின் முகமா? பூவை ஜகன்மூர்த்தி: நண்பரா? எதிரியா? அரசியலின் உண்மை முகம்! மாற்று அ...
04/06/2026
03/06/2026
கர்நாடக காங்கிரஸ் அரசு, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முயலும் திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்! இந்தத் திட்டம் வெறும் அணை அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதல்.
டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, காவிரியை நம்பியிருக்கும் தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயமும் இந்தத் தடுப்பணையால் பாலைவனமாகும் அபாயம் உள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காவிரி விளங்குகிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு முற்றிலுமாகக் குறைந்து, மாபெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கடுமையான அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட விட்டுக் கொடுக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நமது உரிமை, நமது விவசாயம், நமது நீர்நிலை! தமிழக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உடனடியாகக் காக்க வேண்டும்!
03/06/2026
நமது உரிமை, நமது விவசாயம், நமது நீர்நிலை! தமிழக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உடனடியாகக் காக்க வேண்டும்!
02/06/2026
02/06/2026
மக்கள் தொகை விகிதாச்சாரப்படி கூடுதல் வார்டுகளை உருவாக்கக் கோரிக்கை!
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவை புரட்சிபாரதம் கட்சி மனதார வரவேற்கிறது.
பட்டியலின சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில், தற்போதைய வார்டுகளின் எண்ணிக்கை மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு மிக மிக குறைவாக உள்ளது. இதைச் சரிசெய்து சமநிலையைப் பேண வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு அரசின் திட்டங்களும், உள்ளாட்சிச் சேவைகளும் தங்குதடையின்றி, எளிதில் சென்றடைய வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் உள்ளாட்சியில் ஓங்கி ஒலிக்கவும், அவர்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவும் கூடுதல் வார்டுகளை உருவாக்குவது மிக அவசியமாகும்.
சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும்,பேரூராட்சியில் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப கூடுதல் வார்டுகளை உருவாக்கி வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Poonamallee Trunk Road, Tamilnadu
Chennai
600056
Opening Hours
| Monday | 10am - 6pm |
| Tuesday | 10am - 6pm |
| Wednesday | 10am - 6pm |
| Thursday | 10am - 6pm |
| Friday | 10am - 6pm |
| Saturday | 10am - 6pm |
