இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் ”விஜய் மக்கள் இயக்கம்”

இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் ”விஜய் மக்கள் இயக்கம்”

Share

விஜய் மக்கள் இயக்கம்

Malala Yousafzaimi 22/10/2012

14 வயதே நிறைவடைந்த மலால யூசூப் ஸ்மீ வடமேற்கு பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கை சேர்ந்தவர். இவர் 11 வயதாக இருந்த போது,சுவாத் பள்ளத்தாக்கின் பழங்குடி பகுதிகளை தாலிபான்கள் ஆக்கிரமித்தனர்.முதல் வேலையாக பெண்கள் பள்ளிகளை மூடினர். பெண்களூக்கு கல்வி மறுக்கப்பட்டதும்,மலாலா பி.பி.சியின் உருதுமொழி சேவைக்கு புனைப்பெயரில் தன் மனக் குமுறக்களை,டைரியாக கொட்டி அனுப்பி வைத்தார்.

”என் பள்ளிச் சிருடையை,என் பையை,என் பேனா பெட்டியை பார்க்கு போதெல்லாம் என் மனம் உடைகிறது,நாளை ஆண்கள் பள்ளி திறந்திருக்கும் ஆனால் பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்”என்று குமுறி இருந்தார்.

மலாலாவின் குமுறல்கள் ஆட்சியாளர்களுக்கு எட்டவே சுவாத் பள்ளத்தாக்கிலிருந்து தாலிபான்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.தாலிபானுக்கு எதிரான டைரி எழுதிய மலாலாவுக்கு தீரச்செயலுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது,மேலும் மலாலாவின் பெயர் சமாதானத்திற்க்கான சர்வ தேச விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.பாகிஸ்தான் மட்டுமன்றி உலகெங்கும் “பெண் கல்வியின் போராளி” என் மலாலா போற்றப்பட்டார்.

தாங்கள் விரட்டியடிக்கபட்டதற்கு காரணமான மலாலாவை பழிவாங்க தாலிபான்கள் துடித்தனர்.சுவாத் பள்ளத்தாக்கில் முக்கிய நகரமான மின்கோராவில் இருந்து பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மலாலா மீது கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் துப்பாக்கி சூடு நடத்தினர்.மலாலாவின் தலைப்பகுதியில் குண்டு துளைத்து விட கிட்டதட்ட மரணத்தின் வாசலை தொட்டார் மலாலா.

ராணுவ மருத்தவமனையில் மலாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும்,நாளுக்கு நாள் மலாலாவின் உடல் மோசமடைந்தது,அதனால் மருத்தவ குழுவோடு மலாலா இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இப்போது அவருக்கு பர்மிங்ஹாம் நகரில் உள்ள குயின் எலிசபத் மருத்தவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலகெங்கும் உள்ள மசூதிகளிலும்,தேவாலாயங்களிலும் இன்னும் பிற வழிப்பாட்டு தலங்களிலும்,மலாலா உயிர் பிழைத்துவர வேண்டுதல் நடத்தப்படுகிறது
மலாலா நிச்சயம் வருவாள்,அவள் ஆசைப்படி சட்டம் பயின்று அரசியலுக்கு வந்து பாகிஸ்தானைப் புதிய பாதையில் வழி நடத்துவள்

நாமும் மலாலா நலமாகி வர கூட்டாக பிராத்திப்போம்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


13, 5th Adam Nagar, Nagelkeni, Pammal
Chennai
600075