04/06/2021
உண்மையான தந்தையின் பாசம் ..
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து ?
04/06/2021
உண்மையான தந்தையின் பாசம் ..
இவரை போன்ற செயல் வீரர்களும் அரசு ஊழியர்கள்தான் என்பதில் பெருமை படுவோம்
உண்மையை உரக்க சொல்லும் ஒரு காட்சி
28/07/2015
27/07/2015
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
27/07/2015
Otto, the baby otter saved after losing family
27/07/2015
TNPSC குரூப் 2 தேர்வில் தன்னம்பிக்கையுடன் கலந்துகொண்ட கண்பார்வையற்ற சகோதரி...தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!
இன்றைய கேள்வி : என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள்னு காவல்துறையிடம் நடவடிக்கை எடுக்கச்சொல்லி கடிதம் கொடுப்பது அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களின் வழக்கம். இதையே நீங்கள் கொடுத்தால், யார் மீது, என்ன காரணத்துக்காக கொடுப்பீங்க?
இன்றைய கேள்வி : 'தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என அறிவித்திருக்கிறார் கருணாநிதி. இது மாதிரி, மக்கள் சந்தோஷப்பட இன்னும் என்னென்ன திட்டங்களை அறிவித்தால் நல்லாயிருக்கும்?
சாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு.
எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான். எப்படி கதை ?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
நன்றி :
சுகி சிவம்
27/07/2015
தலைக்கவசம் இல்லையென்றாலும்,போதையில் இருந்தாலும் இருச்சக்கரவாகனம் ஸ்டார்ட்ஆகாது!கண்டுபிடித்த10ம் வகுப்பு மாணவி !
ஒரு லைக் போட்டு வாழ்த்தலாமே —