CPIM Tamilnadu

Call Directions Website Contact the organization

CPIM Tamilnadu Official page of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee. It also leads the Left Front coalition of leftist parties.
(323)

The Communist Party of India (Marxist) (abbreviated CPI(M)) party emerged from a split from the Communist Party of India in 1964.

08/10/2026

விஜய் சார் யோசிங்க! உற்பத்தி, கடத்தல், விநியோகம்: மொத்தமாகத் தனியார் வசமாகும் மின்சாரம். | இது நியாயமா?

வாக்குரிமை பறிப்பும் தேர்தல் ஆணையத்தின் அட்டூழியமும்!

வாக்குத் திருடன்: திரு. ஞானேஷ்குமார்

செவிலியர்களின் கோரிக்கைகள் நியாயமா, இல்லையா?

மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! More: https://youtu.be/TmwtlzT5aoI

08/10/2026

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் ஒடிசாவில் பந்த் மற்றும் பேரணி நடைபெற்றது.

08/10/2026

ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் | இப்போ குரல் கொடுக்கலனா மின்சாரம் முழுசா தனியாருக்கு போயிடும்! - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் More : https://youtu.be/czq-Qhwcjys

08/10/2026

| ஞானேஷ்குமார் உடனே பதவி விலக வேண்டும்! |

பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் இன்று நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்த போராட்டத்தில் CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ், அகில இந்திய இணை செயலாளர் ஆயிஷே கோஷ், பிரபல யூடியூபர் துருவ் ரதி உள்ளிட்டோர் பங்கேற்பு.

வேலைவாய்ப்பை ஒழிக்கும்; சுமையை ஏற்றும்!மின்சார வாரியம் அறிமுகம் செய்யும் 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் வேலைவாய்ப்பை ஒழிக்கு...
08/10/2026

வேலைவாய்ப்பை ஒழிக்கும்; சுமையை ஏற்றும்!

மின்சார வாரியம் அறிமுகம் செய்யும் 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் வேலைவாய்ப்பை ஒழிக்கும்; மக்கள் மீதான சுமையை ஏற்றும்.
நவீன தாராளமய பொருளாதார கொள்கைக்கு புதிய முகங்கள் தேவைப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் அத்தகைய புதிய முகமாக காட்சியளிக்கிறார்.

- தோழர் எஸ்.கண்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் # TamilNaduElectricity

நாகப்பட்டினம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தனியார்மயத்தை கைவிட வேண்டும், காலை உணவுத் திட்டத்திற்கு ...
08/10/2026

நாகப்பட்டினம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தனியார்மயத்தை கைவிட வேண்டும், காலை உணவுத் திட்டத்திற்கு மாற்றாக உணவுப்படியாக ரூ.100 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்
அதன் ஒரு பகுதியாக இன்று நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் முதல் நகராட்சி அலுவலகம் வரை சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.குருசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணியை சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி நிறைவுரையாற்றினார். #நாகப்பட்டினம்

08/10/2026

| ஜனநாயக நாட்டில் போராடக்கூடாதா? - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், More : https://youtu.be/KTsYVMW0t-A

08/10/2026

அடங்கிக் கிடந்தவர்கள், அடிமையாக இருந்தவர்கள், சாட்டையடிக்கு உள்ளானவர்கள், வெட்டி வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எப்படி வீரத்தையும், உறுதியையும், தியாகத்தையும் வெளிப்படுத்தக்கூடிய மகத்தான மனிதர்களாக செங்கொடி இயக்கம் மாற்றியது என்பதுதான் நாம் கற்றறிய வேண்டிய பாடம். More: https://youtu.be/EyFVKsXDFeU

வரலாற்று சிறப்பு மிக்க வார்லி பழங்குடியினர் போராட்டத்தின் போர்க்குணம் மிக்க தலைவரும், ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போ...
08/10/2026

வரலாற்று சிறப்பு மிக்க வார்லி பழங்குடியினர் போராட்டத்தின் போர்க்குணம் மிக்க தலைவரும், ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் கோதாவரி பாருலேகர் நினைவு தினம் இன்று. 25 ஆண்டுகள் மத்தியக்குழுவில் செயல்பட்ட தோழர் கோதாவரி, விவசாயிகள் இயக்கத்தின் சகாப்தம்.

மூச்சுத் திணறுதுங்கமுளியும் பிதுங்குதுங்கபாத்துக்குங்க கேட்டுக்குங்கஜனங்கள் படும் பாடு!வரம்பு மீறி வலுத்த கைகள்மக்கள் கழ...
08/10/2026

மூச்சுத் திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
ஜனங்கள் படும் பாடு!

வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது...
விருப்பம் போல நரிகள் சேர்ந்து வேட்டையாடிக் குவிக்குது...
வெறிநாய்க்கு உரிமை வந்து
வீட்டுக்காரனைக் கடிக்குது...

தோழர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று.

Address

CPIM Head Quarters, Vaidhyaraman Street, T. Nagar
Chennai
600017

Telephone

04424326900

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Tamilnadu:

Shortcuts

Share