05/06/2026
தவெக ஆட்சியில் தொடரும் கொலைகள் – கடும் கண்டனம்
ஒரு நாகரிக சமூகத்தின் அடிப்படை அடையாளம் சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பாகும். ஆனால் தவெக ஆட்சியில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும்
ஏற்படுத்தியுள்ளன.
சமீப காலங்களில் அரசியல், சாதி, குடும்பத் தகராறு மற்றும் சமூக விரோதச் செயல்கள் காரணமாக பல கொலைகள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளிகள் சட்டத்தின் மீதான பயமின்றி செயல்படுவது, சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் பலவீனம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
மக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஒரு அரசின் முதன்மை கடமை மக்களின் உயிரையும் உரிமைகளையும் பாதுகாப்பதாகும். ஆனால் தொடர்ந்து நடைபெறும் கொலைகள், குற்றங்களைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் அச்சம் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தி, சரியாக வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோல் காவல்துறைக்கு தேவையான அதிகாரங்களும் வளங்களும் வழங்கப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதியும் வழங்கப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
எனவே, தவெக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதே நல்லாட்சியின் அடையாளமாகும்.
மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் அடிப்படை பொறுப்பு. ஆனால், முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது.
ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆறு மாத காலம் இருக்கட்டும்.ஆனால் மக்கள் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க கால அவகாசம் பார்க்கும் தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
04/06/2026
முடிவுகளில் சமத்துவம்
அல்ல!!
வாய்ப்புகளில் சமத்துவம்!!
அதுவே மய்யம் 🔥
#மய்யம்
03/06/2026
A Centrist always thinks :
"What solution works best? " Rather than, "Which ideology is correct? "
01/06/2026
கடலூர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்
தென்னாட்டின் ஜான்சி ராணி' என காந்தி அவர்களால் அழைக்கப்பெற்ற கடலூர் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று.
ஒத்துழையாமை, சட்ட மறுப்பு போன்ற விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றுப் பலமுறை சிறை தண்டனை அனுபவித்தவர்.
கடலூர் தொகுதியிலிருந்து மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கணவர், மகள், மருமகன் என ஒட்டுமொத்தக் குடும்பமும் நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்ற தியாகக் குடும்பம் ஆகும்.
31/05/2026
தென்காசி நெட்டூர் தாக்குதல்..
மனிதம் எங்கே???
சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரான சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான கொலைச் சம்பவங்கள் தலைமுறைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.இந்த தலைமுறையாவது சாதிய தீண்டாமை அகற்றுமா என்னும் கேள்வி தீயாய் எரிகிறது!!!
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படை மனித உரிமைக் கொள்கைக்கு எதிராக நடைபெறும் இத்தகைய செயல்கள் நாகரிக சமூகத்திற்கு அவமானமாகும். சாதி வேறுபாட்டை முன்னிறுத்தி மனிதர்களை ஒதுக்குவதும், அவர்களின் உரிமைகளை மறுப்பதும், உயிரைப் பறிக்கும் வன்முறைகளில் இன்றைய தலைமுறை ஈடுபடுவதும்,ரீல்ஸ் எடுத்து புளகாங்கிதம் அடைவதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை.
அரசும், சட்ட அமலாக்க அமைப்புகளும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் பெரிய அளவில் எழுந்தாலும் சாதிய பாகுபாடு இல்லாத சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வுகளை #பெற்றோர்கள் மற்றும் #கல்வி #நிறுவனங்கள் முதலில் இணைந்து வழிநடத்த வேண்டிய அவசியமாகும்.
சாதி, மதம், மொழி உள்ளிட்ட எந்த வேறுபாடுகளையும் கடந்து மனிதநேயம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான கொலைகளை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
"மனிதம் உயரட்டும்; சாதிய பாகுபாடுகள் ஒழியட்டும்."
29/05/2026
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் தொடரில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம் வென்றார்.
மக்கள் நீதி மய்யம் வாழ்த்து !
28/05/2026
ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்த ராஜா ரந்தீர் சிங் (79) இன்று காலமானார். 1968, 1972, 1976, 1980, 1984-ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவரை பாராட்டி அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
27/05/2026
ஜவஹர்லால் நேரு நினைவு நாள்
நவீன இந்தியாவின் சிற்பி, நம் தேசத்தின் வளர்ச்சியை உலக அரங்கில் செதுக்கிய ஒப்பற்ற தலைவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்.
26/05/2026
செண்பகராமன் பிள்ளை (1934) : "ஜெய் ஹிந்த்" (Jai Hind) என்ற உலகப் புகழ்பெற்ற முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தீவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்.