12/05/2024
Julius 's Scribblings
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Julius 's Scribblings, Library, Chennai.
12/05/2024
English movie titles
Occupied my "Beautiful mind "
And like an "Eastern Promise"
I am "Coming Home" with this poem.
I had"27Dreams"
At the "25th Hour"
And"28 days later"
I was in the "City of Angels"
From where I could see
"The dark side of the moon"
On"the day the earth stood still"
Yes,there was "Black hole"
Infested by "Cat People"
And I stood"Dazed And Confused "
With my"Eyes wide shut
I was planning for the "Great Escape"
But there were "Spy Girls"
And I heard only "Hiss" sounds
No,they were not "Aliens"
But they had "Dangerous Beauty"
That stalled my "Get away".
Yet I was " Gone in 60Seconds"
ஞானம் $$$$$
மறைபல போற்றும் இறையவன் இரங்கி
குறையறக் கொடையாய் நமக்கு வழங்கி
இறுதியில் அவனை சென்று சேர்ந்திட
உறுதுணை ஆகிடும் |”ஆன்மா அறிவுறுதல்”
மதங்களில் மூத்த மறையாம் இந்துத்துவம்
இதனையே தருமம் என்று இயம்பிடும்
கருமப் பயனை ஒழிக்கும் தருமம்
தரும வழியில் நிலைக்கும் கருமம்,
மனிதன் கடவுளை அடையும் வழிக்கு
தனித் துயர் நீக்கும் தூய நிர்வாணம்
புனிதர் ஆகிட விரும்பிக் குடிக்கும்
கனிச் சாறு ஆகும் ஞான பானம்.
அன்னையைப் போன்ற பரிவு பாசமுடன்
தன்னையே இறைவன் வழங்குதல் ஞானம்
பெற்ற தாயினும் சாலப் பரிந்து
உற்ற ஆசானாய் நீக்கிடும் மன ஊனம்.
“மா அட்” என்று எகிப்தியர் கூறும்
“மிஷ்பாட்” என்பர் இஸ்ரா யேலர்கள்
தம்மை உணர்ந்து மனிதர் நடப்பதை
“ஹொக்மா” என்பர் எபிரேய மொழியில்
“சோபியா” என்று கிரேக்கம் அழைக்கும்
“சாபியெந்தியா” இலத்தீன் வழியில்
“சரஸ்வதி” என்றே சமஸ் கிருதமும்
ஞானம் தானென தமிழும் சொல்லும்.
ஞானம் மிகவும் ஆற்றல் கொண்டது
ஆற்றல் தன்னிலும் அறிவு மிக்கது
அறிவதை ஆய்ந்தால் தூய்மை உடையது
தூய்மை தனிலும் தனித்துவம் வாய்ந்தது.
தனித்துவம் எனினும் பலவகை பட்டது
பலவகை தனிலும் நுண்மை நிறைந்தது
நுண்மையில் நன்மை உயிரின் ஓட்டமாய்
ஓட்டத்தில் தெளிவுடன் மாசும் அற்றது.
சீர்தூக்குங் கோலாய் சிறந்து நிற்பது
சிந்தனை ஒளிவின்றி வெளிப்படை ஆனது
கேடு நினையாதது, கேடு உறாதது
நாடுவோர்க்கென்றும் நன்மை பயப்பது.
இதனிற் சிறந்த அற நெறி இல்லை
பதவியைத் தரும் சமயமும் இல்லை
உதவிடும் அறனெறி நல்முத்தி தந்திடும்
பதமுடை ஞானம் ஞாலத்தில் பெரிது.
காத்திருக்கும் பூனை
நல்ல சகுணம்
அல்ல இவ்வார்த்தைகள்
சொர்க்க வாசல்
எனது இதழ்களின்
விரிப்பில் உள்ளதென
எவரும் கூறிவிடாதீர்
எனது மார்புகளின்
பிளவின் இடையினில்
கடவுள் கூடத்
தடுமாறி விழலாம்.
இதோ நான் வருகிறேன்
மீண்டும் உனது
சுவாசம் எனக்குள்
சுவாசிக்கப்படலாம்
உனது நுரையீரல்
எனது வாசத்தால்
நிரம்பலாம்
உனது நாவோ
மழை, மழையாய்
பொழியலாம் என்
தோல் பரப்பில்
நான் விட்டுக்
கொடுப்பேன்
இம்முறை நீ
உனது கண்களில்
அந்தப் பொறியுடன்
வரும்போது என்னை
இரண்டாய் கிழிக்கும்
உன்னுடைய எண்ணத்தில்
சந்தேகத்தின் நிழலின்றி
வரும்போது,
மறைந்திருக்கும்
கருப்புப் பூனையின்
பாய்ச்சலாய் நீ
எனது பாதையின் குறுக்கே
உனது கதவின் அருகில்
குருவி வேட்டையில்
அது சிறைபட்டு
உறைந்து சமைந்திட
தா. ஜோ. ஜூலியஸ்.
I
I am a teacher
I cant thank myself
For what I have done
Though I taught everyday
My wife daughter and son
Seldom did I greet them
With a smile on my face
Yet I have finished
A long gruelling race
At times I have used
Strong words and force
Nevertheless I am certain they
Are in the right course
But today I greet them
With a child like smile
Remembering my teachers
Flipping my memory file.
Beauty and Truth
Beauty, they say is suspect
Deceptive, transient and it
Sickens Like a canckered rose
Is true and not to boast;
Yet it is the nature
Of Nature to look beautiful
And it is a blatant truth
To accept it as fruitful.
If beauty is truth
And Truth is beauty
Is a false equation
Unlike the still good
Scientific Summation
That states Gravity
Is a geometric phenomenon,
A resultant force from
The distortion of Space time
By Matter and Energy
Which is prone to compel
Objects and light itself
To move along a particular path
Like rivers constrained to flow
As per the topography of
The vast landscape to hoe.
The theory of Relativity is
All too beautiful to be wrong
As it grew bold and strong
That the only physical theories
We accept are the beautiful ones
And any insistence that
The beautiful must be true
Elides into an empty circularity
As it needs no more clarity.
T. Joseph Julius
The Perfect Saint
Venessa, the vain vamp
Devoid of beauty
Found fault with everyone
As a matter of duty;
For she believed
In her own perfection
As she was a Catholic
Of the fourth generation.
She was sitting in the Church
For the Sunday liturgy
Listening with rapt attention
The Pastor’s homily
On “Neighbor’s Love”
And lo! A pigeon
Was hovering above
Swaying like a boat
From left to right
A vacillant frowzy lady
Appeared in sight
Demanded good Venessa
To move a little bit
So as to enter
The pews and to sit.
Frantically casting
A glance of scorn
With eye brows raising
A display to frown
She stuck frozen
In her own seat
The frail lady made
A hasty retreat.
Did Venessaa forget
The words of our Lord
“To love your neighbor
And the poor lot”
Nay, she was sure
That they were meant
For Eva, John and
Others with taint
And not for Venessa
The perfect saint.
காலிப் படகு.
மெத்தப் படித்தவொரு தத்துவ ஞானி
சத்தம் சந்தடி இல்லா இடந்தேடி
பத்துக்கு நாலு படகினை ஓட்டி
முத்திரை யோகம் செய்திட நின்றார்.
கடவுளை எண்ணி கண்களை மூடிட
படகினை அலைகள் மெல்ல தாலாட்ட
திடீரெனப் படகை எதுவோ இடிக்க
திறந்த கண்களில் மற்றொரு படகு
மோதிய முட்டாள் எவனெனும் கோபம்
பீறிடக் கண்களை சுழற்றிப் பார்க்க
கோபம் அவர்க்கு உள்ளே கனன்று
படகு இடித்த கணத்தில் வெளி வர
காலிப் படகது காற்றில் தவழ்ந்து
இடித்தது என்பதை அறிந்து கொண்டு
தத்துவ ஞானி தியானம் அதிலே
முத்திய ஞானம் கைவர முயன்றார்.
மீண்டும் அவரை இடித்தது படகு
இம்முறை அவரோ கண்ணை திறவார்.
இடித்தது காலிப் படகெனும் ஞானம்
வந்ததில் அவர்க்குக் கோபம் இல்லை.
எத்தனை முறை இடர்கள் வரினும்
காலிப் படகே செய்யும் இடரெனும்
தத்துவம் அவர்க்கு புரிந்தது அன்று
அத்துவித ஞானி அக்கரை சேர்ந்தார்
ஜே. ஜே..
Circadian desire
I have a circadian desire for bizarre things
To fly like Black Heads up without any wings
And walk straight on any flowing water
Holding the hand of my cute little daughter
To write thousands of volatile verses
And read aloud ignoring my wife's curses
To eat things that are not to be eaten
And build bellicose muscles to remain unbeaten
People would stare and like the way I walk
And listen to me what little that I talk
A finikin fragrance floating in the air
Whether I sleep or stand, sit and stir
A flowing beard and face glowing sans paint
And be recognized as the only living saint.
அடுத்த பக்கம்
நான் அடுத்த பக்கம் சென்றேன்
ஒளிர்கின்ற வண்ணங்களுக்கு இடையில்
சிவ்வெனச் சிறகுகள் இன்றிப்
பறந்து சென்றேன் என்பதால் அடுத்த
பக்கம் கட்டாந் தரையில் என் வயிறு
இடிக்கத் தடாலெனத் தரையிரங்கினேன்.
வான வில்களையும் பானு ஒளி்களையும்
தானாக நான் சுவைத்தேன் ஆயினும்
அங்கேயே என் பாவப்பட்ட கண்கள் முன்னே
அவை காணாமல் போகக் கண்டேன்.
காதல் ரசம் சொட்டும் பாடல்கள் கவிதைகள்
நாதமுடன் இசைக்க நான் எழுதினேன்
ஆனால் மாசற்ற வெள்ளைப் பக்கங்களில்
சொற்கள் ரணகள போராட்டத்தில்
ஒன்றை ஒன்று கிழித்து எறிந்ததேன்.
காதல் ஊற்றில் இருந்து பருகினேன்
பாதகம் என்னவோ அதன் சாரம்
என் வறண்ட இதழ்களைத் தொட்ட
நேரத்தில் நஞ்சானதை உணர்ந்தேன்.
கைகளைத் தொட்டிலாக்கி விண் மீன்
கூட்டங்களைப் பற்றினேன் அய்யகோ
பையப் பைய அவை துகள் துகள்களாக
சிதறிச் சிதறி விழுவானேன்.
போகட்டும் என வாழ்வின் தீரா கனவுகளை
யோக நித்திரையில் நெசவு செய்தேன்
சோகமே என அவை பயங்கர இரவுகளாய்
நோகச் செய்து வெறுமையை வடித்ததேன்
பிறரால் செய்ய முடியாத செயலாக
நெருப்பை அணைப்பதை ரசித்தேன் ஆனால்
பெரியதொரு தீ உமிழும் அரக்கப் பாம்பாக
அது மாறுவதையும் கண்டேன்.
என்னை முழுதாய் விழுங்கி விட்டு
தரையில் நான் எரிந்த துண்டமாய்
சின்னக் கரித்துண்டாக சிதறிய
என்னையே நான் அங்கு கண்டேன்
நான் விரும்பும் நிலவும் தாரகைகளும்
வான் வெளியில் இருந்து விழக் கண்டேன்
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே
ஆழ்ந்த இருளில் தள்ளக் கண்டேன்
பிற ஒன்றுமே கண்ணுக்குத் தெரியாமல்
நான் அடுத்த பக்கம் சென்றேன்.
தா. ஜோசப் ஜூலியஸ்,
வந்த புயல்
எவரும் எதிர்பாராத வேளையில்
பலரும் உறங்கிய பொழுதில்
பின் இரவினில் வந்தது
கொஞ்சம் பயத்தைத் தந்தது
சடசடவென்ற சப்தமுடன்
என்னென்னவோ சரிந்தன..
துள்ளி எழுந்து
வேட்டியை அள்ளி முடிந்து
கள்ளனைப் போல்
எட்டிப் பார்க்க
மெல்லத் தீப்பிடிக்கக் கண்டேன்
பறக்கும் சாம்பலை நுகர்ந்தேன்
மேலே எழுந்து விழுந்தன.
சண்டையிடும் பறவையாய்
சிறகுகளில் நெருப்பாய்
சிவந்து கொந்தளித்தன
தொடர்ந்து காதில்
ஈயத்தைக் காய்ச்சி
ஊற்றுவது போல்
இடிச் சத்த வீழ்ச்சி
மீன் தொட்டி நொறுங்கியது
நானிருந்த அந்த அறையும்
பளீரென நடுங்கியது.
அடித்து முடிந்தது
அந்தக் கோரப் புயல்.
வடியட்டும் துயரமென
விடியலுக்காகக் காத்திருந்து
சுற்றி முற்றும்
பார்த்து விட்டு
பற்றியதை
அணைத்து விட்டு.
எழுதுகிறேன் இதனை
தா. ஜோ. ஜூலியஸ்
இயைந்த பொருத்தம்.
உண்ணும் உணவினில் சுவைகள் ஆறென
திண்ணியமாகத் தெரிந்ததே இருப்பினும்- இனிப்பும்
கசப்பும் வேறு வேறாயினும் நலங்கருதி
வசப்படுத்தி இயைபு கொள்ளுவோம்
அரும்பும் மலரும் செங்காயும் கனியும்
வரும்பழ வளர்ச்சியில் பரிணாம நிலைகளே- நாம்
விரும்பிடும் கனிதனை மரம் நமக்கு நேராய்
தருமெனில் நன்மையோ மற்றவை தீமையோ?
கருத்துக்கள் மாறுபட்டு நிற்கையில் ஒன்றை
உருப்படாதது என்று ஒதுக்குதல் சரியோ-அன்றி
ஒவ்வாமை எந்த நிலையிலென் றறிந்து
அவ்வாறே அதனை இயைபு படுத்துவோம்
ஆற்றல் என்னும் ஒன்றை ஆய்ந்திடின் உறு
வேற்றுமை அதிலே நன்கு புரிந்திடும் -நிலை
ஆற்றல் ஒன்றும் வீரிட்டுச் செயல்படும் பெரும்
ஆற்றலும் முரணோ இயைபு கொண்டக்கால்
திருக்கோயில் தன்னில் நிலை ஆற்றல் கொண்ட
கருவறைத் தெய்வமும் உலாசென்று பணியாற்றும்
திருமேனி தன்னையும் இணைத்தே காண்கையில்
வந்திடுமோ முரண் ஆணிலும் பெண்ணிலும்..
(எனக்கும் உனக்கும் இயைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ எனும் வள்ளளாரின்
பாடல் தாக்கத்தில் எழுதியது.)
தா. ஜோ. ஜூலியஸ்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Chennai
600028
Opening Hours
| Monday | 1pm - 3pm |
