30/10/2025
விடுதலை போராட்டத்தில் இளைஞர்களை ஈர்த்த நவஜவான் பாரத் சபா நூற்றாண்டில் இந்திய நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த மாவீரன் பகத்சிங்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலை அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு கோரிக்கை
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், இளைஞர்களை தட்டி எழுப்பிய இயக்கங்களில் நவஜவான் பாரத் சபா மிக முக்கியமான ஒன்றாகும். இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வை உயர்த்தி, சமூக சீர்திருத்தங்களையும் விடுதலைக் கோஷங்களையும் பரப்புவதற்காக 1926 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பு உருவாகி 2026-ல் நூற்றாண்டை எட்டுகிறது.
இந்த அமைப்பினை தோற்றுவித்தவர் மாவீரன் பகத்சிங், இந்நாட்டின் விடுதலைக்காக அசைக்க முடியாத மன உறுதியுடன் போராடி, 23 இளவயதிலேயே தன் உயிரைத் தியாகம் செய்தவர். இந்தியாவின் புரட்சிப் போராட்டத்துக்கு புதிய திசை தந்தவராகவும், இளைஞர்களை ஊக்கப்படுத்திய புரட்சியாளராகவும் இருந்தவர்.
பகத்சிங்கின் போராட்ட வரலாறு வட இந்தியாவைத் தாண்டி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர் இயக்கங்களை உந்தி தள்ளியது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்கு தவிர்க்க முடியாதது.
இத்தகைய பெரும் புரட்சியாளரின் நினைவை தமிழ்நாட்டில் அரசு சார்பில் நிரந்தரமாகப் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் சென்னை , மதுரை, திருச்சி, கோவை போன்ற குறிப்பிடத்தக்க ஏதேனும் நகரங்களில் , மாநில அரசின் சார்பில், மாவீரன் பகத்சிங் சிலை அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இது இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட வரலாற்றை உணர்த்தும், சமூக அக்கறை, தேசப்பற்று, ஜனநாயக விழிப்புணர்வு ஆகியவற்றை வலுப்படுத்தும், புரட்சிகர சிந்தனையை ஊக்குவிக்கும். தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு நல்ல முன்னுதாரணமாக அமையும்.
2026-இல் அமைப்பின் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு இச்சிலை நிறுவுவது முக்கிய நிகழ்வாக அமையும். எனவே, மேற்கண்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பகத்சிங் சிலை அமைக்க அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
மாநிலத் தலைவர்
செல்வராஜ்
மாநிலச் செயலாளர்
எஸ்.கார்த்திக்
24/10/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தமிழ்நாடு மாநிலக்குழு
பத்திரிகை செய்தி
தேதி 24-10-2025
குரூப் 04 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடுக
2025 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, ஜூலை மாதம் 12 ஆம் தேதி தேர்வு நடந்தது. ஏறக்குறைய 11 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் 22/10/2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4662 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணிடங்கள் உள்ளன. இந்த ஆண்டு நிலவரப்படி 30 லட்சத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். குரூப் 4 பிரிவில் அதிக அளவு காலிப்பணியிடங்கள் உள்ளன.
2022 ஆம் ஆண்டு 10178 பணியிடங்கள் நிரப்பப்பட்டன . 2024 ஆம் ஆண்டு குரூப் 4 பிரிவில் சுமார் 9532 பணியிடங்கள் நிரப்பப்படட்டன. ஆண்டுக்கு ஆண்டு குரூப் 4 பணியிடங்கள் மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கும் விசயமாகும். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வெறும் 4662 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியௌ ஏற்படுத்தியது. அப்போதே அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்தது .
படித்து முடித்த இளைஞர்கள் சமூக பாதுகாப்பான வேலையில்லாமல் தனியார் துறையில் கிடைக்கின்றன வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தது . ஆனால் 5 ஆண்டுகளில் ஆட்சி முடியும் நிலையில் இதுவரை 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பாக குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் மீண்டும் இந்த பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. எனவே குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக கூடுதல் காலிப்பணிடங்களை அறிவித்து அதற்கேற்ப பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு 6244 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு அறிவிக்கப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தி இறுதியாக 9532 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆகையால் தமிழ்நாடு அரசு உடனடியாக காலிப்பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
செல்வராஜ்
மாநில தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநில செயலாளர்
23/10/2025
25 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை!
DYFI அகில இந்திய தலைவர் தோழர் AA ரஹீம் MP அவர்களின் முயற்சியால் வெற்றி!
21/10/2025
மதுரையின் மாசி வீதிகளில் மதுரை மாநகர் தோழர்களின் தூய்மைப்பணி …
அர்ப்பணிப்போடு பணியாற்றும் அனைவருக்கும் நன்றி என பாராட்டிச் சென்றார் மாநகராட்சி ஆணையர்…
தூய்மைப்பணியினை துவக்கி வைத்தார் மதுரை மாநகர துணைமேயர் தோழர் நாகராஜன்.!
21/10/2025
நீலகிரி மாவட்டம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் தூய்மை பணி இயக்கம் நடைபெற்றது.
#
21/10/2025
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் தூய்மை பணி இயக்கம் நடைபெற்றது.
21/10/2025
திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் தூய்மை பணியை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தன் துவக்கி வைத்தார்.
19/10/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
18 வது தமிழ்நாடு மாநில மாநாடு அக்டோபர் 12,13,14 ஓசூர்
பூ விளைச்சல் அதிகம் நடைபெறும் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர், நாகை மாவட்டம் வேதாரண்யம்,திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்திட கோரி தீர்மானம்.
19/10/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
18 வது தமிழ்நாடு மாநில மாநாடு
அக்டோபர் 12,13,14 ஓசூர்
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் உடல் உறுப்பு திருட்டை தடுத்திட கோரி தீர்மானம்