வெள்ளை யானை

வெள்ளை யானை

Share

யானை மீதேறி போர் புரிந்து நாட்டை காத்து யானை ஏறும் உரிமை பெற்று வெள்ளை யானை மீதேறி காக்கும் கடவுளாகவும் வலம் வந்தோம்

08/10/2024

உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும்
***
''1931-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல், எப்படி இட ஒதுக்கீட்டை துல்லியமாக செய‌ல்படுத்த முடியும்?

பட்டியலின மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட 18 சதவீதத்தின் அளவுக்கு ஏற்றவாறு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்த‌ப்படவில்லை.
கடந்த 50 ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் அதிகமான காலி பணி இடங்களை நிரப்பாமலே ஏமாற்றி வருகிறார்கள்.

ஏற்கெனவே வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ஒழுங்காக அமல்படுத்தாத தமிழக அரசு, உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் அருந்ததியரை ஏமாற்றுகிறது. இதனை வைத்து ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற பிரிவினரை வஞ்சிக்கிறது.

இன்னொரு பக்கம், பட்டியல் பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. இதுதொடர்பான முந்தைய‌ வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ''பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது'' எனக்கூறி,அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

அதன் மீதான மேல்முறையீடு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த அமர்வில் 1 நீதிபதி கூடுதலாக, அதாவது 6 நீதிபதிகள், ''உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது'' கூறியுள்ளனர். அதிலும் ஒரு நீதிபதி, அவர்களின் தீர்ப்பை மறுத்துள்ளார். எனவே இந்த தீர்ப்பை இறுதியானதாக ஏற்றுகொள்ள முடியாது.

எனவே மத்திய அரசு தானாக முன்வந்து 11 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதுவரை உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும்''.

-செ.கு.தமிழரசன்
தலைவர், இந்திய குடியரசு கட்சி

08/10/2024

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலி துறை (Logistics and Supply Chain Sector) மூலம் கிடங்கு மேலாண்மை (Warehouse Management), கிடங்கு பிக்கர் மற்றும் பேக்கர் (Warehouse Picker & Packer) பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Photos from வெள்ளை யானை's post 07/10/2024

ஆகஸ்டு 15 - 2000 அன்று நடைபெற்ற
இனநல போராளி
#இரட்டைமலை_சீனிவாசனார் அவர்களின் #அஞ்சல்தலை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள் !

02/10/2024

எங்களின் #ராஜா 💙👑
எங்கும் என்றென்றும் அவரே #ராஜா 😎

30/09/2024

#ஏமாற்றாதே_ஏமாற்றாதே !
#இனியும்_எங்களை_ஏமாற்றாதே !!
==================================

பட்டியலின இட ஒதுக்கீடான 18 சதவீதத்தை முழுமையாக அமல்படுத்தாமல்

லட்சகணக்கான பட்டியலின காலி பணியிடங்களை நிரப்பாமல்

அருந்ததியருக்கு மட்டும் 3% கொடுத்து போலி சமூக நீதி சமத்துவம் பேசி கொண்டு
பட்டியலினத்துக்கே எதிரான வேலையை செய்து வரும்

விடியா திமுக அரசே வன்மையாக கண்டிக்கிறோம்!

27/09/2024

அக்டோபர் 12ம் தேதி
#சிவகங்கை மண்ணில்
ஆங்கிலேயருக்கு எதிரான
வீரப்போரில்
தன்னுயிரை ஈந்து மண்ணுயிர் காத்த
#வீரத்தாய்_குயிலி அவர்களின்
குருபூஜை நடைபெற உள்ளது

அதில் அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறார்

இனமான காவலர்
அறத்தமிழர் ஆசையார் 🇨🇵

வருக! வருக!!
சமுதாய தலைவர்களே
தளபதிகளே உறவுகளே!!

26/09/2024

#அக்_26,

முதல் சுதந்திரப் போராட்ட வீர மங்கை!!!

#வீரத்தாய்,
#குயிலி_சாம்பவி அவர்களின் 244 வது குருபூஜை...

#பறையர்_பேரினமே!!!
#சிவகங்கை_சீமை நோக்கி!!!
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

16/09/2024

=============================
அநியாயத்திலும் அநியாயம்!
=============================

திருவள்ளுவர் பல்கலைகழகத்தில்
Assistance Professorகளுக்கான காலி பணியிடங்களும் பணியிடங்களை நிரப்புவதற்கான இட ஒதுக்கீடு விதிகளும் வெளியிடப்பட்டுள்ளது

இதில் நன்றாக கவனியுங்கள்
SC யில் உள்ள
பரையர்,பள்ளர் உள்பட 69 சாதிகளில்
ஒருவருக்கு கூட வாய்ப்பு கிடையாதாம்

ஆனால் அருந்ததியர் என்ற ஒரே ஒரு சாதிக்கு மட்டும் 4 பணியிடங்களை ஒதுக்கி உள்ளார்கள்

இது எந்த விதத்தில் நியாயம்?
இது தான் திராவிட சமூக நீதியா?

- வெள்ளை யானை

15/09/2024

#அது_ஏன்?

பள்ளர் சமூகம் பள்ளர் என்று அரசாணையோ சாதி சான்றிதழோ கேட்கவில்லை?

சக்கிலியர் சமூகம் சக்கிலியர் என்று அரசாணையோ சாதி சான்றிதழோ கேட்கவில்லை?

Simple concept தான்

"நாம் உயர்தரமான பெருமையை உணரும் போது அல்லது பெறும் போது
நம்மிடம் இருந்த தரம் குறைந்த சிறுமைகள் ஒழியும்"

அடிமை எண்ணங்கள்,சிறுமைகள் மற்றும் பலவீனங்கள் ஒழியும் போது உளவியல் விடுதலை பிறக்கும்

உளவியல் ரீதியான விடுதலை என்பது புத்தெழுச்சி புது உத்வேகம் புது முயற்சி
புது முன்னேற்றம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்!

ஆம் அதனாலேயே
7 #சக்கிலியர்கள் = #அருந்ததியர் ஆனார்கள்
6 #பள்ளர்கள் = #தேவேந்திரகுலவேளாளர் ஆனார்கள்

இதே போல் அனைத்து பரையர்களையும் #சாம்பவர் என்று அறிவிக்க வேண்டாமா?
சாம்பவராக இந்தியாவிற்கெல்லாம் முந்தைய சம்பு தீவின் முதல் மைந்தர்களாக எழ வேண்டாமா முன்னேற வேண்டாமா??

- வெள்ளை யானை 🐘

13/09/2024

நாளை நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்!

அறிவுச் சமூகம்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


1/789 , Valluvar Kottam
Chennai
600028