14/04/2026
TN State Minorities Commission
The TN State Minorities Commission is dedicated to the socio-economic development of Religious and Linguistic Minorities.
Committed to safeguarding Minority rights, it conducts regular visits across the State to address concerns and provide solutions.
14/04/2026
12/03/2026
12 மார்ச் 2025 அன்று, மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற பேராசிரியர் கான்ஸ்டான்டைன் MP அவர்கள், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், மாண்புமிகு அருட்தந்தை ஜோ அருண் சே. ச. அவர்களை சந்தித்து ஆசீர் பெற்றார். தலைவர் அவர்கள் அவருக்காக ஆண்டவரின் அருள் வேண்டி வாழ்த்தினார்கள்.
03/03/2026
3 மார்ச் 2026 அன்று, சென்னையில் உள்ள குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 40-ஆம் ஆண்டு மாணிக்க விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், மாண்புமிகு அருட்தந்தை ஜோ அருண் சே.ச. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆணையத் தலைவர் அவர்கள் தம் சிறப்புரையில், வித்தியாசமாக இருக்க தைரியமாய் செயல்பட வேண்டும் என்று தைரியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வந்திருந்தவர்களை ஊக்கப்படுத்தினார்.
மேலும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு கொடுத்திருக்கும் பாதுகாப்புகள், ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்தும் கூறினார். இக்கூட்டத்தில் அனைத்து சபைகளின் ஆயர்கள் மற்றும் ஏராளமான சிறுபான்மையின மக்கள் கலந்துகொண்டனர்.
01/03/2026
1 மார்ச் 2026 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு அருட்தந்தை ஜோ அருண் சே. ச. அவர்கள், அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
28/02/2026
28 பிப்ரவரி 2026 அன்று, மதுரை ஃபாத்திமா கல்லூரியின் 50வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், மாண்புமிகு அருட்தந்தை ஜோ அருண் சே.ச. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பட்டப்படிப்பை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஆணையத் தலைவர் அவர்கள் தம் சிறப்புரையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சார்பாகவும், சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பாகவும் கூடி வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, சிறுபான்மை மக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கும் பாதுகாப்புகள், ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்தும், ஆணையத்தின் செயல்பாடுகளை குறித்தும் விளக்கினார். மேலும், விடா முயற்சியும் நிலைத்தன்மையுமே நம்மை சிறந்து விளங்கச்செய்யும் என்று மாணவிகளுக்கு எடுத்துக்கூறி, தம் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த விழாவில், கல்லூரியின் முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சிறுபான்மையின மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Khalasa Mahal ( Heritage Building), 1st Floor, Chepauk
Chennai
600005
