Thamizhaga Makkal KURAL
ITS ABOUT OUR NEW ORGANISATION FOR OUR PUBLIC...
18/04/2016
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)
நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !
சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ? அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ?
சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
18/04/2016
தயவு செய்து: ஒரு இரண்டு நிமிடம் படியுங்கள் நண்பர்களே
விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் . பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர். பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர். விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர்.
அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா , உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் . என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,
லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் . பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.
16/04/2016
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புரட்சி வானொலியின் மொபைல் அப்ஸ், இதோ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்,
அன்ட்ராயிட் மொபைல்களில் சூப்பர் ஹிட் பாடல்களை வித்தியாசமான இசை நயத்துடன் கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்க மக்கள்ஸ்
https://play.google.com/store/apps/details?id=com.puradsi.radio
Iphone, , Ipad இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி எப்.எம் கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்யுங்கள் அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்து கொள்ள
https://itunes.apple.com/au/app/indradio-indian-radio/id498850023?mt=8
www.facebook.com/puradsifm
......................................................
www.puradsifm.com
www.isaiyaruvi.com
16/04/2016
நீங்கள் சாப்பிடுவது சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் அரிசியா? - கண்டுபிடிப்பது எப்படி?
மேகியை விடுங்க பாஸ். நாம் 3 வேளையும் உட்கொள்கிற உணவான அரிசியிலும் கைவைத்துவிட்டார்கள். அதுவும் எப்படி...?
சீனாவில் ‘பிளாஸ்டிக் அரிசி’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய வழக்கறிஞர் சுக்ரிவா துபே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகள், வர்த்தகர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரிசியை விற்பனை செய்கிறார்களா என்று ரெய்டு நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை வரும் ஆகஸ்டு 20-ம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் ரோஹிணி, ஜெயந்த்நாத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நியூஸ் சேனல் ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறிப்பாக வீடியோ வெளியாகியுள்ளது. அதைப் பார்ப்பதற்குமுன்....
பிளாஸ்டிக் அரிசி என்றால்?
சீனாவின் ஷாங்க்ஷி பகுதியில் இருந்துதான் இந்த பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல்கள் பரவின. இந்த இடம் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் செயற்கை பிசின் அதிகமாக புழங்கும் இடம். சீனிக் கிழங்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சின்த்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப்படுகிறதாம் இந்த பிளாஸ்டிக் அரிசி.
சீனாவின் ரெஸ்டாரன்ட் சங்கம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் பிளாஸ்டிக் அரிசியை மூன்று கப் அளவில் உட்கொண்டால், அது ஒரு முழு பிளாஸ்டிக் பையை சாப்பிட்டதற்கு ஒப்பானது என்று கூறி வயிற்றில் புளியை(பிளாஸ்டிக்?) கரைக்கிறது!
பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிட்டால்?
பிளாஸ்டிக் அரிசியைச் சாபீட்டால் உயிரையே பறிக்கக் கூடிய இரைப்பை பிரச்னைகள் வரும் என்று சொல்கிறார்கள்.
பிளாஸ்டிக் அரிசியை எப்படிக் கண்டுபிடிப்பது?
* பிளாஸ்டிக் அரிசியை சமைத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்!
* சாதாரண அரிசி கையில் ஒட்டிக்கொள்வதுபோல பிளாஸ்டிக் அரிசி கையில் ஒட்டாது.
* சமைத்தபின், சாதாரண அரிசியைவிட அதிக நேரம் கெடாமல் இருக்கும்.
* சமைத்தபின் குளிரூட்டினால், பார்ப்பதற்கு Styrofoam போல் இருக்கும்
* நெருப்பில் காட்டினால், சீனிக் கிழங்கு வாசனை வரும்.
* பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தி சூப் செய்தால், அதன்மேலே மெல்லிய பிளாஸ்டிக் லேயர் படரும். இந்த லேயரை எடுத்து வெயிலில் காயவைத்தால், பிளாஸ்டிக்கே(!) கிடைக்கும். இதில் எளிதாக தீயும் பற்றிக்கொள்ளும்.
எல்லாம் சரி, சாதாரண அரிசியுடன் பிளாஸ்டிக் அரிசியைக் கலந்தபின் மேலே சொன்னபடி கண்டிபிடிக்க முடியுமா என்பது விடைதெரியாத கேள்வி!
இந்தியாவில் இன்னும் பிளாஸ்டிக் அரிசி வரவில்லைதானே!
கேரளாவின் கோழிக்கோடு நடப்புரம் சந்தையில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்? மஹாராஷ்டிராவில்? ஆந்திராவில்?
நம்முடைய சாப்பாடு தட்டில்?
16/04/2016
மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!
மண்பாண்டங்களில் சமைப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி விளக்குகிறார் உணவியல் நிபுணர் சாஹித்ய பிரியா.
“மண்பானையில் சமைப்பது முற்றிலும் இயற்கையானது. ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தரும். இதில், சமைத்த உணவு, நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். சுவையும் மாறாது. ஒவ்வொரு முறை சமைக்கும் போதும், மண்பானையை நீரில் நனைப்பதால், உணவுப் பொருட்களை தீயில் கருக்காமல் பாதுகாக்கிறது. மற்ற உலோகப் பாத்திரங்களில் உள்ள ரசாயனங்கள் இதில் இல்லை. சூடான பொருட்கள் சூடாகவும், குளிர்ச்சியான பொருட்களைக் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் தன்மை, மண்பாண்டத்துக்கு உண்டு. சமைக்கப்படும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாமல் தடுக்கப்படுகின்றன. பானையை நீரில் ஊறவைக்கும் போது, பானையின் துளைகளில் நீர் தங்கி, சமைக்கும்போது ஆவி ஆகிறது. இதனால், உணவை எளிதில் சமைக்கவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் முடியும். மண்பாண்டங்கள் ஒட்டா தன்மை கொண்டது என்பதால், இதில் சமைக்கும்போது உணவில் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. கார உணவுகளே நம் உடலுக்கு ஏற்றவை. ஆனால், இந்த ஃபாஸ்ட் புட் உலகில், நாம் உண்பது அனைத்தும் அமில உணவுகளே. களிமண் காரத்தன்மை கொண்டது. எனவே, இதில் சமைப்பது, பி.ஹெச் (PH) அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும். உணவு எளிதில் செரிமானம் ஆகும்.
16/04/2016
ஒரு இளம் தம்பதியர்கள் திருமணமான அன்று அவர்களுக்குள் ஒரு போட்டி
வைத்து கொண்டார்கள் .
அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாளும் நம் திறக்க
கூடது .என்பது தான் அந்த போட்டி .
போட்டி துவங்கிய சில மணி நேரத்திலேயே கணவனின்
பெற்றோர்கள் கதவை தட்டினர்
கணவன் கதவை திறக்கலாம் என்று
நினைக்கும் பொது .
போட்டி நினைவுக்கு வரவை கதவை
திறக்காமல் இருந்தர் அவரின் பெற்றோர்கள் சிறிது நேரம் கதவு
அருகிலேயே நின்றிருந்த பொதும்
கதவு திறக்கதால் சென்று விட்டனர் .
சில மனி நேரம் கழித்து அந்த பென்னின்
பெற்றோர் கதவை தட்டினர் கணவனும்
மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து
கொண்டனர்.
மனைவியால் தன் பெற்றோர் வெளியை நிற்பதை தாங்க முடியாமல் கண்கலங்கி கொண்டை என்னால் இனி மேலும்
சும்மா இருக்க முடியாது என்று
கூறியவாறு கதவை திறந்து விட்டாள் .
கணவனும் ஒன்றும் சொல்ல வில்லை .
நாட்கள் உருண்டுடோடினா அவர்களுக்கு நான்கு மகன்களும்
ஒரு மகளும் பிறந்தன அவர் கணவர்
தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட
பெரிய விருந்து எற்பாடு பன்னினார் .
மகிழ்ச்சியுடன் விருந்து நடந்து முடிந்தது அன்று இரவு அவர் மனைவி
நமக்கு மகன்கள் பிறந்த போது கூட
இந்த அளவு நீங்கள் கொண்டாட வில்லையே ஏன் என்று கேட்டார்.
அதற்கு அந்த கணவர் சொன்னார்
என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள் என்னே முதியோர்
இல்லத்தில் செல்லாமல் பார்பாள் என்று
இன்னும் நம் சமுதாயத்தில் பென் சிசுக்கலை அளித்து கொண்டிருக்கிறார்கள் .
அன்பு நண்பர்களை
பென் பிள்ளைகள் எப்போதும்மே விலை மதிப்பில்லாதவர்கள் பாசத்துக்கு குறியவர்கல் பென் பிள்ளையே நேசிப்போம் பெண்மையை போற்றுவோம் .
படியுங்கள் பகிருஙக்ள்
-
13/04/2016
#மக்கள்_பாதை
பொழுது போக்கென்று உள்நுழைந்து பலர் வாழ்க்கையின் பொழுதையே போக்கிக் கொண்டிருக்கும் நடிகர்களே ....
அடிபட்டுச் சாகும் தமிழனுக்கு குரல் கொடுக்க வரமாட்டாய், அது அரசியல் என்பாய் ...
மதுவில் அழியும் மாந்தர்களை மாற்ற வரமாட்டாய், ஏனென்றால் அடுத்த திரைப்படம் வெளிவராது.,
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியும் யாருக்கும்?. உதவ மாட்டாய், அப்படியே உதவினாலும் உதவியதை விட நூறு மடங்கு விளம்பரம் தேடிக் கொள்கிறாய் ...
மக்களுக்காக எதையுமே செய்யாமல் அரியணை ஏறும் ஆசையும் கொள்கிறாய்.,.
நீங்கள் வசதியாய் இருக்க கட்டிடம் கட்ட கோடிகளில் புரளும் நீ, உழைத்துச் சம்பாதிப்பவனிடம் கையேந்துகிறாயே,
இது கேவலமாக இல்லையா???
ஏன்???
ஏழை குழந்தைகளை படிக்க வைக்க கிரிக்கெட் போட்டி நடத்தினாயா???
ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்ட கிரிக்கெட் நடத்தினாயா???
சென்னை மற்றும் கடலூர் மக்கள் வெள்ளத்தால் தனது உடமைகளை இழந்து தவித்தனரே! அப்போது கிரிக்கெட் நடத்தினாயா??
உங்களுக்கெல்லாம் ரசிகன் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனும் சிந்திக்க மாட்டான் என்ற தைரியம் தானே ....
அன்றாடம் காய்ச்சிகளிடம் பணம் வசூலித்து நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் தமிழக துரோகிகளே ....
உங்களை ஒழித்தால் தான் முதலில் நாடு உருப்படும் ...
09/04/2016
காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.
07/04/2016
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
M. K. B Nagar
Chennai
600118
