மக்கள் இணையம் - Makkal Inaiyam

மக்கள் இணையம் - Makkal Inaiyam

Share

தமிழ்த்தேசியம், சமூக நீதி, சமூக ஜனநாய?

Photos 14/01/2016
Photos 28/12/2015

நம்மாழ்வார் நினைவாக இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பேரணி காஞ்சிபுரத்தில் 30.12.2015 மாலை 04.00 மணிக்கு.

வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்கவும்.

Photos from மக்கள் இணையம் - Makkal Inaiyam's post 23/12/2015

நீரின்றி அமையாது உலகு !

நீர்....... உலகின் உயிர் !
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரை
உயிர்வாழ நீர் தேவை !
உலகின் மனிதகுலம் தோன்றி வளர்ந்ததெல்லாம் ஆறுகளின் ஓரத்திலேயே. ஆற்றங்கரை நாகரீகம் எனப் போற்றப்பட்டது பண்டையத் தமிழர் நாகரீகம்.
கடலால் அழிந்துபோன பஃறுளி ஆற்றின் தென்மதுரை முதல் அழியாது நிற்கும் பாலாற்றின் காஞ்சி வரை ஆற்றங்கரையிலேயே தமிழன் வாழ்ந்தான், வாழ்கிறான்.
ஆறுகள், ஆற்றுக் கால்வாய்கள், ஏரிகள், குட்டைகள், குளங்கள் என நீர்நிலைகளை உருவாக்கி காத்தனர் நம் முன்னோர்.
ஆறுகள், நீர் நிலைகள் அழிந்தால் மனிதகுலம் அழியும் !
நீரைக் காக்காத சமூகம் கெட்டழியும் !
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது நம் மரபு
இன்று...
அற்ப மனிதர்களின் லாப வெறியால்...
அரசாலும், அரசியல்வாதிகளாலும், தவறான நிர்வாக முறைமையாலும் கெட்டழிக்கப்பட்டது நம் நீர் மேலாண்மை
கேட்பாரின்றி நம் ஆறுகள், ஏரிகள் அழிக்கப்பட்டன.
நமது நீர் மேலாண்மை முற்றாக சீர்குலைக்கப்பட்டது.
தற்செயலானதல்ல இது.
இதன் பின்னால் உள்ள அரசியல் ஆபத்தானது.
நஞ்சையை புஞ்சையாக்கி, புஞ்சையை தரிசாக்கி, தரிசை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்கான நீண்ட செயல்திட்டம் கொண்டது. ஆம், இப்போது அதுதான் நடந்து வருகின்றது.
சொந்த நாட்டில், நாட்டு மக்களின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை ஓட்டாண்டிகளாக்கி, பன்னாட்டு நிறுவனங்களில் கூலிக்காரர்களாக மாற்றும் திட்டத்தின் ஓர் அங்கம் இது. சதிகளைப் புரிந்துகொள்ளாத சமூகம் கெட்டழியும்.
நீரும், நீர் சார்ந்த நிலமும் நம் மக்களின் சொத்து
அதை இனியாவது காப்போம். நம் சந்ததி வாழ காத்துநிற்போம் !
தமிழக மண்ணையும், நீரையும் காக்க ஒன்றிணைவோம் !
நம் மண், நம் நீர், நமது உரிமை !
...............................................................................................................
நம்நாட்டு மக்களுக்கான உணவு உற்பத்திக்கே முதலிடம் கொடுப்போம்.
பன்முக உழவாண்மைக்கு வேட்டு வைத்து உலக மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றும் வணிகப் பயிர் சாகுபடியைத் தவிர்ப்போம்.
கரும்பு பயிரிடுவதைக் தவிர்ப்போம்; இயலாவிட்டால் கரும்பின் கழிவான மொலாசசுக்கு உழவர் பங்கு (ராயல்டி) கேட்போம்.
இயற்கை வழி உழவிற்கு திரும்புவோம்; விவசாயிகள் விதை, உரம், பூச்சிக்கொல்லி என கம்பெனி இடுபொருட்களால் கடனாளியாவதை நிறுத்துவோம்.
மரபுவழி விதைகள், பயிரிடும் முறைகள் ஆகியவற்றிற்கு திரும்புவோம். அதுவே தற்சார்பு விவசாயம் என்பதை உணர்வோம்.
இயற்கைச் சீரழிவுகளுக்குக் காரணமான அரசு, அதிகார, அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்ட நீர்நிலைகளைக் காக்க, மேம்படுத்த ஒன்றிணைவோம். சீரழிவுகளைத் தடுப்போம்.
நுகர்வுக் கலாச்சாரம் நம் வாழ்க்கையை அழிப்பதை உணர்வோம். எளிய, இனிய வாழ்க்கைக்குத் திரும்புவோம்.
மண்ணையும், மக்களையும் மலடாக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளையும், வீரிய வகை விதைகளையும்,
புறக்கணிப்போம். மறைக்கப்பட்ட நம் விதைகளை மீட்டெடுப்போம்.
நம் நாட்டுக்குத் தேவையானவற்றையே விளைவிப்போம்.
நமது நீர், நிலம், காற்று ஆகியவற்றைக் காப்போம்.
பூச்சிக் கொல்லிகளைத் புறக்கணிப்போம், நம் நாட்டின் உயிர்ச் சூழலை மீட்டெடுப்போம்.
நுகர்வுக் கலாச்சாரம் நம் வாழ்க்கையை அழிப்பதை அறிந்து எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்புவோம்.
...........................................................................................................
காத்திடுவோம் காத்திடுவோம்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
நம் சந்ததி காத்த ஆறுகளை
ஆற்று நீர் பெறும் ஏரிகளை
ஏரிக்கு நீர் வரும் கால்வாயை
தடுத்திடுவோம் தடுத்திடுவோம்,
ஆற்று மணலை அள்ளுவதை,
ஏரிகள் மண்ணை அள்ளுவதை,
கால்வாய் தூர்த்து கட்டுவதை
கட்டச் செய்வோம் கட்டச் செய்வோம்
மணலைத் திருடிய ஆறுகளில்,
தடுப்பணைகளைக் கட்டச் செய்வோம்.
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
நிலத்தடி நீரை உயர்த்திடுவோம்
மீட்டிடுவோம் மீட்டிடுவோம்
நம் பாராம்பரிய அறிவியலை மீட்டிடுவோம்
மீட்டெடுப்போம், மீட்டெடுப்போம்
இயற்கை வளங்களை மீட்டெடுப்போம்
காத்திடுவோம், காத்திடுவோம்
மரபு விதைகளை காத்திடுவோம்
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
மரபணு மாற்றப்பட்ட விதைகளை விரட்டியடிப்போம்
தண்ணீர் என்பது பூமியின் ரத்தம்
நீர் நிலை காப்போம் நீர் நிலை காப்போம்
படைத்திடுவோம் படைத்திடுவோம்
நம்பூமி காக்க புதிய சட்டம் படைத்திடுவோம்.

-------- மக்கள் இணையம்.

Photos 23/12/2015

30/12/2015 நம்மாழ்வார் நினைவு நாளில்...

09/12/2015

இனி செய்யவேண்டியது என்ன?

எல்லாத் துயரங்களின் முடிவிலும் ஒரு வாய்ப்பு நம் அனைவருக்கும் ஏற்படுகிறது. இயற்கை தன் மீதான காயத்தை ஆற்றிக் கொள்வது அதன் சுயநலத்தால் அல்ல நம்மீது உள்ள கருணையால்.

இதோ இந்த கூவத்தைப் பாருங்கள். இதை ஒரு சாக்கடை என்றோம். ஆனால் அது ஒரு ஆறு. எத்தனை ஆயிரம் கோடி கொட்டினாலும் அதை தூர்வாரமுடியாது என்றுதானே நாம் அலுத்துக்கொண்டோம், இதோ பாருங்கள். பெருவெள்ளம் அதை அழகாக தூர்வாரி, சாக்கடையை நீக்கி, ஒரு ஜீவநதியைப்போல அதை ஆக்கியிருக்கிறது. இப்படித்தான் இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. ஓடுங்கள், ஓடுங்கள், அதனோடு உங்களை மீண்டும் இசைவித்துக்கொள்ளுங்கள். இயற்கை அன்னை மேலும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது அல்லவா?

இதோ இந்த முகநூலைப் பாருங்கள். நாம் கடந்த ஒருவாரமாக இதில் தான் வாழ்ந்தோம். இதனூடாகவே லட்சக்கணக்கான மக்களுக்கான நமது சிறுதுளி உதவிகளைச் செய்தோம். இணைந்தும், துக்கம் பகிர்ந்தோம், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அறிவியலும் நமக்கு வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறது?

ஆனால் அரசும் கார்ப்பரேட்டும் அவர்களின் கூட்டுக் குழந்தையான "வளர்ச்சியும்" பல் இளித்துவிட்டன. திராவிடக் கட்சிகளின் காலப் பொருத்தமின்மை மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுவிட்டது.

உள்ளூர் நிர்வாகமோ, உலகளாவிய பருவநிலை மாற்றமோ இதையெல்லாம் அறிந்துகொள்ளவோ அதன்படி ஆளவோ இவர்களுக்கு எந்த தகுதியும் இனிமேல் கிடையாது. இவர்களால் அது முடியவே முடியாது. திராவிடக் கட்சிகளால் கொள்ளைக்கும் வாரிசு/குடும்ப அரசியலுக்கும் அப்பால் ஒன்றையும் சிந்திக்கமுடியாது. அவர்களின் மனங்களில் கேடு தவிர வேறு ஏதுமில்லை. அவர்களால் அதிகபட்சம் நமக்கு பிச்சை போடமுடியும். அதைவிட வேறு எதையும் இனி அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இனப்படுகொலையோ இயற்கைச் சீற்றமோ அது குறித்து அவர்களிடம் எந்த தீர்வுகளும் இல்லை. அவர்கள் காலாவதியாகி நெடுங்காலம் ஆகிறது. நமது புறநிலை ஒவ்வொரு காரணிகளாக நம் முன் எடுத்துவைத்து, இதோ இந்த ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் தூக்கியெறியுங்களேன் என்று கெஞ்சுகிறது. இழிமிகு தமிழினமோ எங்களுக்கு அவர்களை விட்டால் நாதியில்லை என்கிறது.

இயற்கையோடும் நவீனத்தோடும் இணைந்த, உண்மையான வளர்ச்சியையும் பொருளாதார மேம்பாட்டையும் மையப்படுத்திய, பொறுப்பான ஆட்சியை அளி்க்கிற எந்த ஒரு செயல்பாட்டையும் இனிமேல் இந்தக் கழகங்களால் அளிக்க முடியாது. அல்லது அவர்களின் கார்பன் காப்பிகளான மதிமுக, தேமுதிக, பாமக போன்றோராலும் அளிக்கமுடியாது. அவர்களிடம் அதற்கான கோட்பாடோ அரசியல் தெளிவோ அரசியல் நெஞ்சுரமோ கிடையாது. அவர்களில் சிலர் நமக்கு நல்ல பிச்சையைப் போட முன்வரலாம். ஆனால் அவர்களைத் தூக்கியெறியுங்கள்.
நமது பிரச்சினைகளை இனி வெறுமனே இது தேசிய இன பிரச்சினை, இது தொழிலாளர் வர்க்கப் பிரச்சினை, இது தலித் பிரச்சினை, இது சுற்றுச்சூழல் பிரச்சினை என்றெல்லாம் பிரித்துப் பிரித்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறன தனித்த அடையாளங்களை, தீர்வுகளை நாம் மதிக்கும், ஏற்கும் அதேவேளை நாம் இவற்றை தனித்தனியாக தீர்க்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நமக்கு ஒரு பொதுக் கட்சி தேவை.
ஒரு பசுமை-மைய சமூக ஜனநாயக அரசியலை, சமூக நீதி உள்ளடக்கத்தோடு, தமிழ்ச்தேசிய வடிவத்தில் நாம் முன்னெடுக்கவேண்டும்.

இதுதான் கடந்த ஒரு பதிற்றாண்டுகளாக நாம் எதிர்கொண்டுவரும் எல்லாப் பிரச்சினைகளிலும் நாம் பார்ப்பது, அல்லது பார்க்கத் தவறுவது.

இயற்கையாதாரங்களைக் காப்பதையும் வாழ்வாதாரங்களை உருவாக்குவதையும் கெளரவான உரிமை மிக்க வாழ்க்கையைப் படைப்பதையும் நாம் முன்னுரிமையாகக் கொள்ளவேண்டும்.

கனவில் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு நிஜத்தில் ஒரு குடிசையாவது போடுவதற்கான அரசியல் வியூகம் வேண்டும்.

ஈழ விவகாரம் தமிழ்நாட்டில் ஒரு தரப்பு அரசியலைக் காலாவதியாக்கியது என்றால், இந்த மாமழை புதிதாக உருவாகிவந்த அரசியல் சக்திகளின் எல்லைகளையும் வெளிப்படுத்திவிட்டது. எல்லோருடைய அரசியல் மமதைகளையும் இந்த வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.
அதிகாரம்
அதிகாரம்
அதிகாரம்
- இதுதான் கேள்வி. இதில் எதிரிகளை அழகாக உட்கார வைத்துவிட்டு மனுபோட்டுக்கொண்டிருக்கவோ அல்லது வெறுமனே அவர்களை மிரட்டி மீன்பிடிக்கவோ முடியாது. அல்லது, இன்று நாம் செய்வது போல, அரசின் கடமைகளை நாமே நம்மீது போட்டுக்கொண்டு செயல்படவும் முடியாது. இப்போது மக்களின் எதிர்வினை அற்புதமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் எப்போதும் இது சாத்தியமாகாது. குப்பனுக்கு பயிர் செய்ய நேரம் வேண்டும். சுப்பனுக்கு 9 மணி பஸ்ஸை பிடிக்கவேண்டும். தினசரி வாழ்க்கை நம் அனைவருக்கும் நடந்தேற வேண்டும். இன்றிரவு சரவணன் மீனாட்சியைப் பார்க்கவேண்டும்.

இன்று நாம் கண்ட அறச் சீற்றத்தை அரசியல் வியூகமாக மாற்றவேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கு இருக்கிறது. அது அதிகாரத்தை நோக்கியப் பயணமாக இருக்கவேண்டும்.

என்னது? இந்த அமைப்புக்குள்ளாகவே தீர்வை நான் முன்மொழிகிறேனா? நான் சொல்வது இறுதித் தீர்வு இல்லையா?
தெரியாது தோழர்களே, எனக்கு வேறு எதுவும் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் தெரிந்ததைச் செய்யுங்கள். எங்களை ஏமாற்றியது திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல, 'இறுதித்தீர்வுவாதிகளும்"தான்.

இந்தியாவில் சட்டரீதியில் அதிகாரம் உறையும் இடம் நாடாளுமன்றம்/சட்டமன்றம்தான். உண்மையான அதிகாரங்களைக் கொண்டவர்கள் இந்த இடத்தைத் தம் கைவசம் வைத்துக் கொண்டிருப்பதால் தான் தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இனி அந்த இடத்தை அவர்களிடமே விட்டுவைக்கமுடியாது. கூடாது.
சரியானத் திசைவழியில், மீளத்திரும்ப முடியாத நிலைமாற்றங்களைச் செய்வதே இன்றைய காலத்தின் புரட்சிகர அரசியல், விடுதலை அரசியல். Making irreversible transformations in the progressive direction is a process of revolution. இதுதான் எனக்குத் தெரிந்த சித்தாந்தம். நமக்கு முன்னாள் வேறு எந்த சாத்தியமான வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இது நடக்க தேர்தலில் பங்கேற்பதும் வெல்வதும் ஆட்சி அமைப்பதும் போதாது. ஆனால் அங்கிருந்துதான் எல்லாம் தொடங்குகிறது.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா ஒரு அரசியல் சாசன ஜனநாயக நாடு (constitutional democracy). இந்த அமைப்பு இங்கே மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதை உடைத்தெறிவோம் என்று வீரவசனம் பேசுவோர் பேசட்டும். இதைப் பயன்படுத்தி முக்கியமான மாற்றங்களைச் சாதித்துக் காட்டுவோம் என நம்புவோரை நாங்கள் அழைக்கிறோம்.

வாருங்கள். இயற்கை அன்னைச் சொல்வதைக் கேளுங்கள். நமது உள்ளமும் நம் அறிவும் நமக்கு துணையாக இருக்கிறது.
விடுதலைக்கான பாதை விடுதலைப் புலிகளாக மாறுவதில் மட்டுமில்லை, விடுதலை எலிகளாக மாறுவதிலும் இருக்கிறது. எலி=mouse=computer=smartphone. (அந்த சூனாசானாவுக்கு நன்றி). நமது அறிவையும் தொழில்நுட்பத்தையும் ஜனநாயக உரிமைகளையும் நேரத்தையும் அறம் என்கிற களத்தில் தூண்களாக எழுப்புவோம். அதன் மீது நமது கோட்டையைக் கட்டுவோம்.
வாருங்கள் இணைவோம்.

நம்பிக்கை கொண்டவர்களே, உங்கள் நம்பிக்கையை அரசியல் சக்தியாக மாற்றுங்கள்.

அவநம்பிக்கையாளர்களே, கால வெள்ளம் உங்களை அடித்துச் செல்வதற்கு முன்பு நம்பிக்கையோடு கரையேறுங்கள்.
(உரையாடுவோம்)

பி.கு: இந்த வெள்ளம் இன்னொன்றையும் செய்திருக்கிறது. இடையில் தொய்வு கொண்டிருந்த மக்கள் இணையத் தோழர்களை (நான் உள்பட) இது உசுப்பி இருக்கிறது. சீற்றத்திலிருந்து மாற்றத்தை நோக்கிய மக்கள் இணையத்தின் திசைவழி மீது எங்களுக்கே மேலும் ஒருமுறை நம்பிக்கை வந்திருக்கிறது).

07/12/2015

காஞ்சிபுரத்திலிருந்து நாளை 08.12.15 கடலூர் மக்களுக்கு போர்வை மற்றும் உணவு மற்றும் சில அடிப்படைத் தேவை உதவிகள் கொண்டு செல்ல உள்ளார்கள் நம் தோழர்கள்...

தொடர்புக்கு மேகநாதன் 9444474848

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chennai