தமிழ்த்தேச மக்கள் முன்னணி ThamizhNational People's Front

தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front

Share

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

Photos from தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front's post 20/04/2026

ஏழாம் நாள் பரப்புரை:

மயிலாப்பூரில் பாசிச பாசகவை எதிர்த்தும்

திமுகவை ஆதரித்தும் பரப்புரை

ஏழாம் நாள் - 19-04-2026

பெரும் உற்சாகத்துடன் தொடர்ந்தது பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்கான மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு 2026-இன் ஏழாம் நாள் பரப்புரை. 19.04.2026 மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் சாலையில் பிரச்சாரம் தொடங்கியது. திவிக தோழர் சுகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கத் தோழர்களுடைய கலைக்குழுவின் பறையிசை சனாதானத்தை வேரறுப்போம் என பறைசாற்றியது. அதற்கு பின் சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த தோழர் ரமணி தொடர் முழக்கமிட, நாங்களும் எழுச்சியுடன் முழக்கமிட்டோம். அதைத் தொடர்ந்துர் தோழர் ஜாஹிர், தோழர் கதிர் இருவரும் அரங்கேற்றிய நையாண்டி நிஜ நாடகத்தால் நிகழ்வு களைகட்டியது. அதற்கடுத்ததாக தமிழ் மக்கள் உரிமை முன்னணியை சேர்ந்த தோழர் தியாகு சிறப்புரை ஆற்றினார். நாங்கள் மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடும் திமுக கட்சியைச் சேர்ந்தவர்களும் அல்ல, திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களும் அல்ல. நாங்கள் பதவியைத் தேடுகின்ற இயக்கங்கள் அல்ல. போராட்ட இயக்கங்கள். போராட்டங்கள் இல்லையெனில் திண்டாட்டங்கள் தீராது என்ற நிலைப்பாடு உடையவர்கள். போராட்டத்தை திமுக முன்னெடுத்துள்ளது. அநீதியான முறையில் பாஜக தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்ற முயன்ற போது, தேர்தல் அரசியல் முக்கியமல்ல, தமிழ்நாட்டின் தன்மானம் தான் முக்கியம், என வீதியில் இறங்கி போராடுகிற முதல்வரை ஆதரிக்கவேண்டியதை நம் கடமையாக கருதுகிறோம். இந்த தேர்தல் களத்தை போர்க்களத்துடன் ஒப்பிடலாம். இங்கு தேர்தல் பிரச்சாரம் அமைதியாக நடக்கிறது. ஆனால் உலக அளவில் அமைதி நிலவவில்லை. ஈரான் மீது அமெரிக்கா குண்டு போட்டதில் 170 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 50 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் போர் தீர்ந்த பாடில்லை. பாகிஸ்தான் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மோடியை உலகத்தலைவர்களுக்கு டீ போட்டுக் கொடுக்க சொல்லலாம். ஃபிப்ரவரி 28 அன்று மோடி இஸ்ரேல் தலைநகரில் நெதன்யாஹூவிடம் கொஞ்சிக் குலாவுகிறார். இஸ்ரேல் தான் தந்தையர் நாடு என்கிறார். மத்திய ஆசியாவில் பிழைக்கப்போன இந்தியர்களைப் பற்றி மோடிக்கு கவலையில்லை. என்ன விளைவுகளை மோடி ஆட்சி ஏற்படுட்டுள்ளது ரூபாய் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 95 ரூபாயாக வீழ்ந்துள்ளது. உலகமே பற்றி எரியும் போது மோடியும், அமித்ஷாவும் பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்களின் சேமிப்பை மோசடி செய்த தேவநாதன் போன்ற ஊழல்வாதிகளின் பொய்க்காவலாராக இருக்கும் பாஜகவை தோற்கடிக்கவேண்டும் என கருத்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியார் அம்பேத்கரிய இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தனசேகர் பேரறிஞர் சின்னம் தானுங்க என்ற பாடலை சிறப்பாகப் பாடினார். அதற்கடுத்ததாக இந்திய ஒற்றுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நாங்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. உங்களைப் போன்றவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் விவசாயிகள், கடை வியாபாரிகள் போன்ற எளிய மக்களின் பிரதிநிதிகள். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகளின் போராட்டத்தின் போது 71 விவசாயிகள் இறந்துபோனார்கள். இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்ற முயன்ற போது எடுபிடி எடப்பாடியும், அன்புமணியும் ஆதரவு தெரிவித்து வாக்களித்திருக்காவிட்டால் நாம் 71 விவசாயிகளைப் பலி கொடுத்திருக்கமாட்டோம். இந்த பாஜக அரசு மக்களுக்கு விரோதமாக, தொழிலாளர்களுக்கு விரோதமாக நடந்துகொள்கிறது. நாம் சகோதரர்களாக வாழ்ந்துவருகிறோம். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் கோவில்களும் உள்ளன, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அதிகமாக உள்ளனர். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக நல்லிணக்கத்தோடு இருந்துள்ளது. பாஜக நமது ஒற்றுமையை சீர்குலைக்கிறது. தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்ட சர்ச், பள்ளிவாசல் என 1000 இடங்களை குறிபார்த்து வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜகவுக்கு வாக்களிக்கவேக் கூடாது என எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் நன்றி உரை வழங்கினார்.

அதற்கடுத்ததாக விசாலாட்சி தோட்டத்திலும் பிரச்சாரம் தொடர்ந்தது. பறையிசை, முழக்கம், நையாண்டி நிஜ நாடகத்தைத் தொடர்ந்து திவிக தோழர் சுகுமார் வரவேற்புரை வழங்கினார். அதன் பிறகு பாட்டாளி வர்க்க சமரன் அணியைச் சேர்ந்த தோழர் மனோகரன் சிறப்புரை ஆற்றினார். 23ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் ஆறு அணிகள் போட்டியிடுறாங்க. அதில் ரெண்டு அணி சொத்தை. ரெண்டு அணி ஓட்டைப் பிரிப்பவர்கள். ரெண்டு அணிகளுக்குள் தான் போர் நடக்குது. 13 ஆண்டுகளாக தொடரும் ஃபாசிஸ பாஜகவின் ஆட்சி இந்தியாவை இருண்ட காலத்துக்குள் தள்ளுகிற சர்க்காராக உள்ளது. அதிமுகவை லேபிளாக பயன்படுத்தி, அதிமுக முதுகில் ஏறி தமிழ்நாட்டை ஆள நினைக்கிறது பாஜக. அதை தவிடு பொடியாக்கவேண்டிய தேர்தல் இந்த தேர்தல். அமெரிக்கா போட்ட வரியை மோடி ஏற்றுக்கொண்டதால் திருப்பூர் அழிந்துள்ளது, பல தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நூறு நாள் வேலையை ஒழித்துக்கட்டிய பாஜக இன்னைக்கு வந்து ஓட்டு கேக்குதுன்னா அதை தோற்கடிக்கவேண்டாமா. ஊழலில் உறைந்த பாஜகவிற்கு திமுகவையோ, தமிழ்நாட்டின் அரசாங்கத்தையோ விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. மதவெறியை மாய்க்க, அமெரிக்க அடிமைத் தனத்தை ஒழிக்க சீர்திருத்தம் தொடர, ஜனநாயகம் தொடர 234 தொகுதிகளிலும் நாம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஜெயிக்கவைக்கவேண்டும் என கருத்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து திவிக ஊடகப் பிரிவைச் சேர்ந்த தோழர் விஜி சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால் பாஜக அரசு 26 பைசா தான் திருப்பிக் கொடுக்குது. அந்த 26 பைசாவை வைத்துத் தான் இந்த மாதிரி ரோடு போட்டுருக்காங்க, சிறப்பாக மருத்துவமனை கட்டியிருக்காங்க. சிறப்பான மருத்துவக் கல்லூரி கட்டி மிகச்சிறப்பான கட்டமைப்பை உருவாக்கியிருக்காங்க. அந்த கல்லூரியில் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களும் படிக்கனும்னு பாஜக சொல்லுது. மதுரையில எய்ம்ஸ் கட்டித்தர்றதா சொல்லி ஒரு செங்கலைத் தான் கொடுத்துருக்காங்க. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து மதுரைக்கும், கோவைக்கும் மெட்ரோ தேவை இல்லைனு மறுத்துட்டாங்க. தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு கொஞ்சம் கூட ஒரு குண்டு மணி அளவுக்குக் கூட செயல்படுத்தாம பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஏமாத்திட்டு இருக்கு. ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியா தமிழ்நாடு போராடுது. திமுக மக்களுக்கு சிறப்பான திட்டங்களை கொடுத்துருக்கு. பாஜகவை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம் எனக் கேட்டுக்கொண்டார். இறுதியாக திமுக இலக்கிய அணியின் அமைப்பாளர் விஜய் வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.

இவ்வாறு மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த செயல் துடிப்புள்ள தோழர்களின் பரப்புரை இன்றுடன் நம் மயிலாப்பூர் தொகுதி மக்களின் பேராதரவுடன் இனிதே நிறைவுற்றது.

இன்றைய பரப்புரையில் பங்குபெற்ற அமைப்புகள் - தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் உரிமை முன்னணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி , தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கம் ஆகிய கூட்டமைப்பைச் சேர்ந்த அமைப்புகளும் அகில இந்திய மக்கள் இயக்கம், இந்திய ஒற்றுமை இயக்கம் ஆகிய அமைப்புகள் பங்குபெற்றன. ஏழாம் நாள் பரப்புரையில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு மேற்கொண்ட இந்த பிரச்சாரப் பயணம் மயிலாப்பூரை மணிப்பூராக விடாமல் தடுத்து, மதவெறியை மாய்த்து, தமிழ்நாட்டில் பாஜக இல்லாத சட்டமன்றம் அமைய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று சுடர்விட்டு ஒளிர்கிறது. தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்கான எங்களது பயணம் தொடரும்.



#வேலு4மயிலை

#வேலு4மயிலாப்பூர்



Photos from தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front's post 20/04/2026

#மதுரை_தெற்கு_19_04_2026_பாசகவை_தோற்கடிப்போம்_மதச்சார்பற்ற_முற்போக்கு_மக்கள்_கூட்டமைப்பு_திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் பூமிநாதன்_ஆதரவு பரப்புரை

Photos from தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front's post 20/04/2026

#மதுரை_தெற்கு_18_04_2026_பாசகவை_தோற்கடிப்போம்_பூமிநாதன்_அவர்களை_வெற்றி_பெறச்செய்வோம் பரப்புரை

Photos from தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front's post 19/04/2026

ஆறாம் நாள் பரப்புரை:

மயிலாப்பூரில் பாசிச பாசகவை எதிர்த்தும்

திமுகவை ஆதரித்தும் பரப்புரை

ஆறாம் நாள் - 18-04-2026

பெரும் உற்சாகத்துடன் தொடர்ந்தது பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்கான மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு 2026-இன் ஆறாம் நாள் பரப்புரை. 18.04.2026 மாலை 5 மணிக்கு காமாராசர் சாலையில் பிரச்சாரம் தொடங்கியது. பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கத் தோழர்களுடைய கலைக்குழுவின் பறையிசை சனாதானத்தை வேரறுப்போம் என பறைசாற்றியது. அதைத் தொடர்ந்து சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த தோழர் ரமணி தொடர் முழக்கமிட, நாங்களும் எழுச்சியுடன் முழக்கமிட்டோம். அதற்குப் பின்னர் தோழர் ஜாஹிர், தோழர் கதிர் இருவரும் அரங்கேற்றிய நையாண்டி நிஜ நாடகத்தால் நிகழ்வு களைகட்டியது. அதற்கடுத்ததாக பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் ஜெயகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். தேர்தலில் பங்கேற்காத பல வெகுஜன அமைப்புகள் இந்த தேர்தலுக்காக வேலை செய்றாங்க. ஏன்னா இதற்கு முன் நடந்த தேர்தல்களையும், இப்போது நடக்கவுள்ள தேர்தலையும் சமமாகக் கருதமுடியாது. இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது ஃபாசிஸ அரசு. மக்களுக்கு உழைப்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது என்ற கொள்கையுடைய பாசிஸ அரசு. கோயம்புத்தூரில் மதக்கலவரத்தைத் தூண்டி அங்கு இருந்த உள்ளூர்வாசிகளின் கடைகளை எல்லாம் அப்புறப்படுத்தினர், அதன் பின் மார்வாடிகளும், பனியாக்களும் அங்கு கடை அமைத்தனர். யூதர்களை எதிரியாக ஹிட்லர் காட்டியது போல ஃபாசிஸ பாஜக முஸ்லிம்களை எதிரியாகக் காட்டுகிறது. தீரமிகு போராட்டத்தால் ஸ்டாலின் வெற்றிபெற வைத்துள்ளார். ஆனால் நம் காதில் விழும் செய்திகள் பொய்யும், புரட்டுமாக உள்ளன. ஒரு பொய்யை பல முறை திரும்ப சொன்னா உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் கருத்தைக் கடைபிடிக்கிறாங்க. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முடக்கிட்டாங்கன்னு பெண்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ், பிஜேபி பிரச்சாரம் பண்றாங்க. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் 75% உயர்ந்திருக்கு. திருப்பூரில் வரிச்சுமையால் 50 சதவீதத்திற்கும் மேலான சிறுதொழில்கள் முடிங்கிருச்சு. இறக்குமதிக்கு வரியில்லை, ஏற்றுமதிக்கு வரி என்ற அமெரிக்காவுடனான தடையற்ற ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும். இவர்களிடம் கேள்விக்கு விடையில்லை எனில் ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதாக்கீஜே, பாகிஸ்தான் சதி என்று தான் பதிலளிப்பாங்க. திமுக பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துது. தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டமுடியும் என எடுத்துரைத்து உதயசூரியனுக்கு வாக்குகளைச் சேர்த்தார்.

அதற்கடுத்ததாக புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் தாமரை அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நான் பெண் என்பதால் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரிப்பேன் என நீங்கள் எதிர்பார்க்கலாம். மன்னிக்கவும், ஒருவர் பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவர் என்ன கருத்தியலைக் கொண்டிருக்கிறார், யாருக்காக எவர்பக்கம் நிற்கிறார் என்பதன் அடிப்படையிலேயே ஆதரவு தெரிவிக்கமுடியும். தேசிய விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் குமரி அனந்தன். ஆனால் அவரது மகளுக்கு தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் அடகுவைத்து விட்டு ஆளுநர் பதவி தேவையா? குமரி அனந்தன் தெருத் தெருவாக தித்திக்கும் தமிழில் பேசினார். தமிழிசை சமஸ்கிரதத்துக்காக குரல் கொடுக்கிறார். எந்த தைரியத்தில் அவர் தேர்தலில் போட்டி போடுகிறார். தமிழிசை நாடார் வாக்குகளைப் பெறலாம் என திருவெற்றியூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது மயிலாப்பூரிலும் படுதோல்வி அடையப்போகிறார். திமுக மக்களின் உரிமைக்காக போராடுகிறது பல நலத் திட்டங்களை செயல்படுத்துகிறது. தமிழிசைக்கு அடித்தட்டு மக்களின் பிரச்சினைகள் புரியாது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா என்ன பாஜகவின் பகடைக் காயா. பெண்களின் பாதுகாப்பிற்காக திராவிட மாடல் ஆட்சி தொடரவேண்டும் என கருத்துரை வழங்கினார்.

அதற்கடுத்ததாக தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் பாலன் சிறப்புரை ஆற்றினார். மயிலாப்பூர் தொகுதி மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள். அவர்கள் எதையும் ஆராயாமல் வாக்களித்துவிட மாட்டார்கள். நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள் அல்ல, திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களும் அல்ல. நாங்கள் வெகுமக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். பாஜக தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கும் எதிரான கட்சி. திமுகவுக்கு ஓட்டுப் போட்டால் தான் பாஜகவைத் தோற்கடிக்கமுடியும். ஆகவே வழக்கமான தேர்தல் பிரச்சாரமாக இதை கருதவேண்டாம். நாங்கள் யாரிடம் பணம் வாங்கவில்லை. மக்களின் நலன் கருதித் தான் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுகிறோம். பாஜக தமிழர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், தலித்துகளுக்கும், பெண்களுக்கும் விரோதமான கட்சி மட்டும் அல்ல. பாஜக பார்ப்பனர்களுக்கும் எதிரான கட்சி. மக்கள் பல ஆண்டுகளாக தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்-இல் சேமித்து வைத்திருந்த பணத்தை அந்த ஃபண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்ற பாஜகவைச் சேர்ந்த தேவநாதன் மோசடி செய்து பல நூறு கோடிகளை தனதாக்கிக் கொண்டார். ஆனால் பாஜக தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களையும், மக்களைக் கொள்ளையடித்தவர்களையும் கொண்ட கொள்ளைக்காரக் கட்சி தான் பாஜக. அமித்ஷா ஒரு கொலைகாரன். பணமதிப்பிழப்பின் போது அமித்ஷாவின் மகன் 8000 கோடி ரூபாயை பதுக்கி வைத்திருந்தான். குஜராத்தில் 3000 பேரைக் கொன்றவர்கள். அனைவரும் குற்றப் பிண்ணணியைக் கொண்டவர்கள். மயிலாப்பூர் மணிப்பூராகிவிடக் கூடாது. பெண்களின் பாதுகாப்பிற்காக பாஜகவை புறக்கணிக்கவேண்டும் என கருத்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து திமுக இலக்கிய அணியின் அமைப்பாளர் விஜய் வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.

அதற்கடுத்ததாக அன்னை சத்யா நகரிலும் பிரச்சாரம் தொடர்ந்தது. பறையிசை, முழக்கம், நையாண்டி நிஜ நாடகத்தைத் தொடர்ந்து திவிக தோழர் சுகுமார் வரவேற்புரை வழங்கினார். அதன் பிறகு திவிக தோழர் இமானுவேல் சிறப்புரை ஆற்றினார். நாம உழைச்சா தான் சாப்பாடு, அரசியல் நமக்கு எதுக்குன்னு மக்கள் நினைக்கிறாங்க. நம்மைக் காப்பாத்தும் 48 திட்டத்தின் மூலமா 4 லட்சம் உயிர்கள் காப்பாத்தப்பட்டு இருக்காங்க. அரசாங்கம் திட்டங்களின் வாயிலாக இப்படித்தான் உதவும். பெண்களின் மேம்பாட்டுக்காக மகளிர் உரிமைத் தொகை, பெண்களின் கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாகவும் உதவி பண்ணும். ஸீரோ தமிழ்நாடு என்பது தான் பாஜகவின் அஜெண்டா. தமிழ்நாட்டிற்கு எதற்குமே உரிய நிதியை பாஜக கொடுக்கவில்லை. அதுனால நாமும் பிஜேபிக்கு ஸீரோ தான் கொடுக்கனும். அதான் ஸீரோ பிஜேபிக்கான அர்த்தம். இந்த மண்ணின் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் திமுக ஆட்சி தொடரவேண்டும் என எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து பேராசிரியர் குழந்தை சிறப்புரை ஆற்றினார். பாஜக ஆட்சி செய்வதற்கு தகுதியற்ற கட்சி. அந்த கட்சியில் எப்போதும் மோடி, அமித்ஷா இந்த 2 பேர் தான் பேசுறாங்க, முடிவெடுக்குறாங்க. கலவரத்தைத் தூண்டுகிறவன் எவனாக இருந்தாலும் ஆட்சிக்கு தகுதியற்றவன். தமிழ்நாட்டு முதலமைச்சர் திருப்பரங்குன்றம் கலவரத்தை நிதானத்துடன் அணுகி அமைதியை நிலைநாட்டினார். பாஜகவினரிடம் உரையாடல் இருக்காது. கலவரம், போர், பகைமை, கொலை தான் அவர்களுக்குத் தெரியும். மக்களாட்சி உரையாடலைக் கொண்டு வரும். பாஜக ஆட்சி செய்த எந்த மாநிலமும் முன்னேறவில்லை. அமைதியும், நல்லிணக்கமும் தான் வளர்ச்சியைத் தரும். அதனால் தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடியினர், தமிழர்களுக்கு எதிரான பாஜகவை தோற்கடித்து திமுகவின் த.வேலு அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கடுத்ததாக தமிழ் மக்கள் உரிமை முன்னணியை சேர்ந்த தோழர் தியாகு அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் குழந்தையும், நானும் ஏதிலியர் தொகுப்பு நூலைக் கொண்டுவந்தோம். பேராசிரியர் குழந்தை சிறைபட்டவர்களுக்காக சிறை நல அமைச்சகத்தை உருவாக்கியவர். இங்கே நமது அருகே சாந்தோம் உள்ளது. சாந்தோம் என்பது செயிண்ட் தாமஸைக் குறிக்கிறது. இந்திய நாட்டில் கல்வியில் புரட்சியைக் கொண்டுவந்தவர் செயிண்ட் தாமஸ். அவர் ஏசுவின் தலைமைச் சீடர். கிறித்தவம் ஐரோப்பாவுக்கு செல்வதற்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது. சாந்தோம் என்பதற்கான சரியான பெயர் காரணம் தெரியவில்லை எனில் அதை சாந்தி ஓம் என மாற்றிவிடுவார்கள். சான் என்றால் செயிண்ட், தோம் என்பது தாமஸைக் குறிப்பிடும். சாதி வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்குமான கல்வி இயக்கத்தை செயிண்ட் தாமஸ் உருவாக்கியதால் அவர் செயிண்ட் தாமஸ் மௌண்ட்டில் (பரங்கிமலை) கொலை செய்யப்பட்டார். மயிலாப்பூரில் தான் சாந்தோம் கல்லறை கட்டப்பட்டது. அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சி தான் குழந்தை. கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் வேறு எங்கும் சீட்டு கிடைக்காத பார்ப்பனப் பெண்கள் மட்டும் தான் படிப்பார்கள். ஆனால் கிறித்துவக் கல்வி நிலையங்கள் அனைவருக்குமானவை. மைக்கேல்பட்டியில் இந்து சிறுமி தற்கொலை செய்துகொண்டபோது, அந்த குழந்தை மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்துகொண்டதாக அண்ணாமலை பொய்யைப் பரப்பினார். இதன் அடிப்படையில் கருப்பு முருகானந்தத்தால் தூண்டப்பட்ட கலவரம் நம் தோழர் விக்டர் தலைமையில் முறியடிக்கப்பட்டது. கால்டுவெல் தமிழ்நாட்டில் பல தொடக்கப் பள்ளிகளை ஆரம்பித்தார். இன்றைக்கும் அவை செயல்பாட்டில் உள்ளன. அவர் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். எல்லாவற்றையும் தனதாக காட்டும் சனாதானத்துக்கு எதிராக திராவிடவியல், தமிழ் மொழியியலுக்கு பாடாற்றினார். அதிமுக பாஜகவோடு இணக்கமான இரட்டை சர்க்காரை கொண்டு வந்தால் தான் வளர்ச்சி பெறமுடியும் என்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ள முதல் 5 மாநிலங்களாக இருப்பவை பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான். ரெட்டை எஞ்சின் என்றால் ரெட்டைக் கொடுமை என்று பொருள். என்றும் போல் இன்றும் தமிழ்நாடு ஃபாசிஸ எதிர்ப்பில் முன்னணி வகிப்பதை வாக்களிப்பதன் மூலம் நிரூபிப்போம் என கருத்துரை வழங்கினார். இறுதியாக திமுக இலக்கிய அணியின் அமைப்பாளர் விஜய் வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.

இவ்வாறு மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த செயல் முனைப்புள்ள தோழர்களின் ஆறாம் நாள் பரப்புரை நம் மயிலாப்பூர் தொகுதி மக்களின் பேராதரவுடன் இனிதே நிறைவுற்றது.

இன்றைய பரப்புரையில் பங்குபெற்ற அமைப்புகள் - தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் உரிமை முன்னணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி , தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கம் ஆகிய கூட்டமைப்பைச் சேர்ந்த அமைப்புகளும் அகில இந்திய மக்கள் இயக்கம், இந்திய ஒற்றுமை இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்குபெற்றன. சுமார் 51 பேர் பரப்புரையில் கலந்து கொண்டனர்



#வேலு4மயிலை

#வேலு4மயிலாப்பூர்



19/04/2026

மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கடைசி நாள் பரப்புரை..

வாய்ப்புள்ளோர் அனைவரும் கலந்துகொள்க!!



#வேலு4மயிலை

#வேலு4மயிலாப்பூர்



Photos from தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front's post 18/04/2026

ஐந்தாம் நாள் பரப்புரை:

மயிலாப்பூரில் பாசிச பாசகவை எதிர்த்தும்

திமுகவை ஆதரித்தும் பரப்புரை

ஐந்தாம் நாள் - 17-04-2026

பெரும் உற்சாகத்துடன் தொடர்ந்தது பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்கான மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு 2026-இன் ஐந்தாம் நாள் பரப்புரை. 17.04.2026 மாலை 5 மணிக்கு தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரம் தொடங்கியது. சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த தோழர் ரமணி “மழைக்கும் புயலுக்கும் நிதி கேட்டா கொடுக்கல! பள்ளிக்கும் கல்விக்கும் நிதி கேட்டா கொடுக்கல! மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ கேட்டா கொடுக்கல! என தொடர் முழக்கமிட, நாங்களும் எழுச்சியுடன் முழக்கமிட்டோம். அதற்குப் பின்னர் தோழர் ஜாஹிர், தோழர் கதிர் இருவரும் அரங்கேற்றிய நையாண்டி நிஜ நாடகத்தால் நிகழ்வு கலைகட்டியது. அதற்கடுத்ததாக பாட்டாளிவர்க்க சமரன் அணியைச் சேர்ந்த தோழர் மனோகரன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி நடைபெறுவதாகக் கூறப்படுது. ஆனால் இந்த தேர்தலில் இருமுனைப் போட்டி தான் நடக்கிறது. இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான போராட்டம். அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் அபாயகரமான கூட்டணி. எடுபுடி எடப்பாடியின் மூலமாக அதிமுகவையும் விழுங்கி, தமிழ் நாட்டையும் விழுங்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த அபாயகரமான கூட்டணிக்கு தமிழ்நாடு தகுந்த பதிலடி தரவேண்டும். டீ வித்தவரை பிரதமர் ஆக்கினால் அவர் இந்தியாவை அமெரிக்காவிடம் விற்றுள்ளார். இந்தியா எங்கு எண்ணெய் வாங்கவேண்டுமென அமெரிக்கா தான் முடிவெடுக்கிறது. அமெரிக்க நிறுவனங்களான வாங்கார்டு, பிளாக்ராக்குடன், அம்பானி கூட்டுவைத்து போரை வளர்த்துவிடுகிறார். இந்தியாவில் கூட்டாட்சி இல்லை. கூட்டாட்சியைக் குலைக்கும் விதமாக ஒரு மசோதா கொண்டுவந்துள்ளனர். தேசிய இனங்களின் மொழி உரிமையை ஒடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உரிமை இல்லை, தொழிலாளர்களுக்கும் உரிமை இல்லை. இது கொலைகார கொள்ளைக்கார கூட்டணி. மதச் சார்பற்ற திமுக கூட்டணியில் தான் மத நல்லிணக்கத்துடன் அமைதி நிலவும். இந்த மோசமான சூழ்நிலையிலும் திமுக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிறது என கருத்துரை வழங்கி த.வேலு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

அதற்கடுத்ததாக இந்திய ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்த மேரி லில்லி பாய் அவர்கள் சிறப்புரை வழங்கினார். டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, பிரதமரின் வீடு அங்கிருந்து பக்கம் இருந்தும் ஒரு முறை கூட அவர் விவசாயிகளை சந்திக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தன்னை விவசாயி மகன் என கூறிக் கொள்ளலாம். ஆனால் டெல்லியில் அவர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். சமீபத்தில் அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர். அமெரிக்காவிலிருந்து விவசாயப் பொருட்களை தடையின்றி இறக்குமதி செய்வதால் உள்ளூர் விவசாயிகளின் விளைபொருட்களை விற்கமுடியாமல் போய்விடும். அமைப்புசாரா தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் விதமாக தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டுவந்துள்ளனர். பெண்களுக்கு பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக போட்டியிடும் இடங்களும் பாஜகவின் இடங்கள் தான். ஆகவே அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது. விஜயின் தவெக இப்போ தான் வந்துருக்கு. 5 வருசமோ, பத்து வருசமோ அவங்க முதல்ல அரசியலைக் கத்துக்கட்டும், புயலோ, வெள்ளமோ வந்தால் அவங்க உண்மையிலேயே மக்களுக்காக களத்துல நிப்பாங்களான்னு பாப்போம், புடம்போட்டு வர்றவங்களால தான் தலைவரா வர முடியும். திமுக பெண்கள், குழந்தைகள், மாணவர்களுக்கு சிறந்த நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. அவை தொடரவும், மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதற்கு திமுகவுக்கு வாக்களியுங்கள் என எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து திமுக இலக்கிய அணியின் அமைப்பாளர் விஜய் வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.

அதற்கடுத்ததாக வோல்டாஸ் பகுதியிலும் பிரச்சாரம் தொடர்ந்தது. முழக்கம், நையாண்டி நிஜ நாடகத்தைத் தொடர்ந்து திவிக தோழர் சுகுமார் வரவேற்புரை வழங்கினார். அதன் பிறகு திவிக தோழர் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். இங்கு உங்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை, இனிமேலும் போட்டியிடப்போவதில்லை. அப்படிப்பட்டவர்கள் எதற்காக பிரச்சாரம் செய்கிறோம். மக்களின் நலன் மீது கொண்ட அக்கறையால் தான். பணமதிப்பிழப்பின் போது கடுகு டப்பாவில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டும் செல்லாக்காசானது. வங்கியில் கியூவில் நின்று மயங்கி விழுந்து நூற்றுக்கணக்கானோர் இறந்து போனார்கள். ஜிஎஸ்டியால் பலவிதமான சிறுதொழில்கள் நலிவுற்று, மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். நிக்சான் புயலுக்கு நிதி கேட்டால் கொடுக்கல, ஆனால் நிர்மலா சீதாராமன் அர்ச்சனை பணத்தை அரசு, அற நிலையத்துக்கு போகும் விதமாக உண்டியலில் போடாமல் அர்ச்சனைத் தட்டில் போடச்சொன்னார். வெங்காயம் விலையுயர்ந்த போது, நாங்க வெங்காயம், பூண்டு சாப்பிடமாட்டோம் என ஆணவத்துடன் பதிலளித்தார். புதிய கல்விக் கொள்கை மாணவரின் கற்றல் திறனைக் குறைத்து, அவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதாக உள்ளது. பல மாநிலங்களில் ஹிந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஜக ஹிந்தியின் பெயரில் சமஸ்கிரு தத்தைத் திணிக்கிறது. விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியின் மறுவடிவமாக உள்ளது. தென்னிந்தியாவில் பாஜகவால் காலூன்ற முடியாததால் தான் பாஜக தொகுதி மறுவரையறை திருத்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. பாஜக சீரழிவுத் திட்டங்களை செயல்படுத்தும் வேளையில் திமுக சீர்திருத்தச் சட்டங்களை செயல்படுத்துகிறது என கருத்துரை வழங்கினார்.

அடுத்ததாக திவிகவின் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாட்டில் பாஜகவின் வால் ஒட்ட நறுக்கப்படவேண்டும். பாஜகவின் தொங்குசதையான அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கிறார். ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஊழல் குற்றச்சாட்டால் சிறைசென்றவர்கள். இவர்களுக்கு ஊழல் பற்றிபேச என்ன தகுதி இருக்கு. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவதற்கு முன்பே 1000 கோடி ரூபாய் ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டினர். அரவிந்த் கெஜ்ரவாலை பொய்யான மதுபான ஊழல் புகாரால் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். ஊழல் வாதிகளின் புகலிடமாக பாஜக உள்ளது. பிஜேபி வாஷிங்க் மெசினுக்குள் போட்டால் எல்லாரும் மிஸ்டர் கிளீன் ஆக வெளிவரமுடிகிறது. பெண்கள் சுதந்திரமாக வாழமுடியும் இடமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2025ல் பீஹார், டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள போது தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் விகிதம் உயர்ந்து இடை நிற்றல் குறைந்துள்ளது. ஆனால் பாஜகவின் அடிவருடிகளை வைத்து திமுக ஆட்சியில் பாலியல் கொடுமைகளும், போதைப் பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. நல்ல ஆட்சி தொடர்ந்திட திமுகவுக்கு வாக்களியுங்கள் என எடுத்துரைத்தார்.

அதற்கடுத்ததாக தமிழ் மக்கள் உரிமை முன்னணியை சேர்ந்த தோழர் தியாகு சிறப்புரை ஆற்றினார். ஏப்ரல் 23 தேர்தலை அடுத்து மே3ல் வெற்றிச்செய்தி வர இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே இன்றைக்கே வெற்றிச் செய்தி கிடைத்துள்ளது. தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றமுடியாமல் தோல்வியடைந்துள்ளது. அதை பெற்றுத் தந்ததில் தமிழ்நாடு முன்னிலை வகித்தது. மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இருந்தால் தான் மசோதாவை நிறைவேற்றமுடியும். அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் செய்வதற்கு மக்களவையில் பெரும்பான்மையும், மாநிலங்களின் ஒப்புதலும் பெறவேண்டும். பாஜகவை தோற்கடிப்பதில் முன்னணியில் இருப்பது தமிழ்நாடு தான். பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் விருப்பம் போல் மாற்றங்களைக் கொண்டு வந்து இந்தியாவை ஹிந்துராஷ்டிரமாக மாற்ற விரும்புகிறது. மாநிலங்கள் அளவில் குஜராத், பீஹாரில் ஏற்கனவே அதை செய்துவிட்டார்கள். மக்களை மத அடிப்படையில் இரு துருவங்களாக பிரித்துள்ளனர். ஒரு புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் போது அது மந்திர கோஷங்களால் மதவாத சடங்காகவே நடத்தப்பட்டது. இந்தியா குடியரசான பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிமறுவரையறை செய்யவேண்டும். இந்திராகாந்தியால் அவசர நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் கூட அவர் தொகுதிமறுவரையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். வாஜ்பாய் 50 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். இப்போது பாஜக மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு முன்னதாகவே அவசரமாக மிருகப் பெரும்பான்மையுடன் தொகுதிமறுவரையறை செய்ய முயற்சிக்கிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு இல்லாதபோது அதை ஏன் தொகுதிமறுவரையறையுடன் முடிச்சுப் போட்டுள்ளது பாஜக. சதியை மதவுரிமை என சொல்லும் ஹிந்து சனாதானிகள் பெண்களுக்குப் பின் ஒளிந்துகொண்டு தொகுதிமறுவரையை செய்துவிட முயற்சிக்கிறார்கள்.

தற்போது கிடைத்துள்ள வெற்றிச் செய்தி நிரந்தரமான வெற்றிச் செய்தியாக மாறவேண்டுமானால் தமிழ் நாட்டிலும், கேரளா, தெலங்கானா போன்ற மற்ற மாநிலங்களிலும் ஸீரோ பிஜேபி நிலையை உருவாக்கவேண்டும். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற மட்டுமல்ல, விரலூன்றக் கூட வாய்ப்பளிக்கக்கூடாது என்று கருத்துரை வழங்கினார். இறுதியாக திமுக இலக்கிய அணியின் அமைப்பாளர் விஜய் வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.

இவ்வாறு மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த செயல் முனைப்புள்ள தோழர்களின் ஐந்தாம் நாள் பரப்புரை நம் மயிலாப்பூர் தொகுதி மக்களின் பேராதரவுடன் இனிதே நிறைவுற்றது.

இன்றைய பரப்புரையில் பங்குபெற்ற அமைப்புகள் - தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் உரிமை முன்னணி, மக்கள் அதிகாரம், பாட்டாளி வர்க்க சமரன் அணி , தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் ஆகிய கூட்டமைப்பைச் சேர்ந்த அமைப்புகளும் அகில இந்திய மக்கள் இயக்கம், இந்திய ஒற்றுமை இயக்கம் ஆகிய அமைப்புகள் பங்குபெற்றன. சுமார் 28 பேர் பரப்புரையில் கலந்து கொண்டனர்



#வேலு4மயிலை

#வேலு4மயிலாப்பூர்



Photos from தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front's post 18/04/2026

பாசிச பாஜக கூட்டணியை தோற்கடிக்க மயிலாப்பூரில் ஐந்தாம் நாளாக நடைபெற்ற பரப்புரை...

Photos from தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front's post 18/04/2026

ஐந்தாம் நாளாக நேற்று மயிலாப்பூர் ஆலயம்மன் கோயில் பகுதியில் பாசிச பாஜக கூட்டணியை தோற்கடிக்கக் கோரி பரப்புரை எழுச்சிகரமாக நடைபெற்றது...

18/04/2026



#வேலு4மயிலை

#வேலு4மயிலாப்பூர்



Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


எண் 6, 70 அடிச் சாலை, சுப்புத் தோட்டம், கண்ணம்மா பேட்டை
Chennai