All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Share

Official page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 01/06/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.

மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 30/05/2026

சேலம் மாவட்டம் என்பது எப்போதுமே All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இன்றைக்கு நமக்கு எதிராக எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள், சவால்கள் முகாமிட்டிருந்தாலும், அத்தனையையும் தவிடுபொடியாக்கி சேலம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாம் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

இதேபோல, நடப்பு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் கழகத்தின் சார்பாக நான் போட்டியிட்டேன். என் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள், சுமார் 98,200 வாக்குகள் என்ற மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கு வித்தியாசத்தில் என்னை அமோகமாக வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நமக்கு வாக்களித்து, கழகத்தின் மீது பேராதரவை வெளிப்படுத்திய வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 29/05/2026

டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

27/05/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 26/05/2026

அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம்.

அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா?

எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்!

உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 26/05/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் ஆணைக்கிணங்க,

குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திரு. தளவாய் சுந்தரம், திரு. ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஐ. எஸ். இன்பதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 25/05/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களான, ஆற்காடு தொகுதி திரு. S.M. சுகுமார், காங்கயம் தொகுதி திரு. N.S.N. நடராஜ், அந்தியூர் தொகுதி திரு. P. ஹரிபாஸ்கர், பண்ருட்டி தொகுதி திரு. K. மோகன், சங்கரன்கோவில் தொகுதி டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர்

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 25/05/2026

கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

Photos from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s post 24/05/2026

அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுறும் தமிழக மக்கள்! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


#226, Avvai Shanmugam Salai, Royapettah
Chennai
600014