May17 Movement

May17 Movement

Share

புதிய முகநூல் பக்கம்
New page
https://www.facebook.com/may17iyakkam

11/03/2023

திசை புத்தக நிலையத்தில் மார்க்ஸ் சிலை திறப்பு மற்றும் மார்க்சிய நூல்களுக்கான அரங்கு அறிமுக நிகழ்வு!

மாமேதை மார்க்ஸ் அவர்களின் நினைவு நாளான மார்ச் 14, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திசை புத்தக நிலையத்தில்,

மரியாதைக்குரிய ஐயா நல்லகண்ணு அவர்கள் மார்க்ஸ் சிலையை திறந்து வைக்கின்றார்.

சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் மரியாதைக்குரிய தோழர் முத்தரசன் அவர்கள் மார்க்சிய நூல்கள் குறித்த அறிமுகத்தையும் உரையாடலையும் நிகழ்த்துகிறார்.

அனைவரும் வருக!

திசை புத்தக நிலையம்
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
காமராஜர் அரங்கம் எதிரில், ஆவின் பாலகம் அருகில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086

WhatsApp: 098840 82823
Location: https://goo.gl/maps/bsT3WPwKKw6v9XsN9

03/03/2023

தமிழர்களாகிய அருந்ததியர்களை சாதி-இன ரீதியாக இழிவுபடுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் சார்பாக, சென்னை இராஜரத்தினம் விளையாட்டரங்கு அருகில் 01-03-2023 புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பங்கேற்று ஆற்றிய கண்டன உரை.

யூடியூப் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=Je3BiDXRPvg

மே பதினேழு இயக்கம்
9884864010

03/03/2023

கடலூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

மார்ச் 3 முதல் 12 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.

அரங்கு எண்: 34

அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.

தொடர்புக்கு: 8939782116

02/03/2023

அருந்ததியர்களை சாதி-இன ரீதியான இழிவுபடுத்தியது, யார் தமிழர்-தமிழரல்ல விவாதம், வடவர் குடியேற்றம் உள்ளிட்டவைகள் குறித்து மின்னம்பலம் ஊடகத்திற்கு தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர்காணல்.

யூடியூப் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=-oxcvGy_yQE

மே பதினேழு இயக்கம்
9884864010

Photos from May17 Movement's post 01/03/2023

தமிழர்களாகிய அருந்ததியர்களை சாதி-இன ரீதியாக இழிவுபடுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் சார்பாக, சென்னை இராஜரத்தினம் விளையாட்டரங்கு அருகில் 01-03-2023 புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

28/02/2023

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கம்
- மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், 40 வருடங்களாக 700-க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை இனவெறி அரசு சுட்டு கொலை செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார். இதை கண்டிக்க வக்கற்ற பாஜக அரசு ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாக கூறியும், 13-வது சட்ட திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதாக கூறியும் தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கவுடன் நாடகமாடுவதாக கூறினார். அண்ணாமலையும் எல். முருகனும் இலங்கை பயணம் செய்த மறுநாளே குஜராத் மார்வாடியும், மோடியின் உற்ற நண்பருமான அதானிக்கு 4000 கோடி அளவில் சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், அடுத்த சில தினங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

மேலும் வாசிக்க
https://may17kural.com/wp/may-17-movement-lay-siege-on-sri-lankan-embassy-over-fishermen-issue/

மே 17 இயக்கக் குரல்
9444327010

Photos from May17 Movement's post 28/02/2023

தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று (28-02-2023 செவ்வாய்) காலை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது!

தமிழ் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்ய வேண்டும், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசு கண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் காசி. புதியராஜா உள்பட, பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தோழர்கள் என பலர் பங்கேற்று கைதாகினர்.

மே பதினேழு இயக்கம்
9884864010

27/02/2023

தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து,

இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!

நாளை (28-03-2023 செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவோம்!

தமிழர்களே! நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்!

* தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்!

* நம் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசை கண்டிப்போம்!

* தமிழக அரசே பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கிடு!

மே பதினழு இயக்கம்
9884864010

25/02/2023

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.

அரங்கு எண்: 83

அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.

தொடர்புக்கு: 8939782116

Photos from May17 Movement's post 25/02/2023

மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு மு. கருணாநிதி அவர்களுக்கு வங்கக்கடலில் தமிழ்நாடு அரசு சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி 31 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அந்த கூட்டத்தின் குறிப்புகள் (Minutes of Meeting) என்று ஓர் ஆவணம் வெளியாகியது. அதில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு, பேனா சின்னம் அமைக்க ஆதரவளிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, பேனா சின்னத்தை கடலில் அமைக்க மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கவில்லை என்னும் நிலைப்பாட்டை விளக்கி, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமிகு அமிர்தஜோதி அவர்களை 24-02-2023 வெள்ளி அன்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து, கருத்துக்கேட்பு கூட்டத்தின் கருத்தை திருத்திக்கொள்ளுமாறு கடிதம் அளித்தார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Photos from May17 Movement's post 21/02/2023

"தேசியத் தலைவரும் தமிழீழமும்: அரசியலும் தீர்வும்" என்னும் கருத்தரங்கம் கடந்த 19-02-2023 ஞாயிறு மாலை சைதாப்பேட்டை அண்ணாமலை மகாலில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள், மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்கள் கருத்துரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்
9884864010

18/02/2023

தேசியத் தலைவரும் தமிழீழமும்: ஈழம் அரசியலும் தீர்வும் - கருத்தரங்கம்

நாளை (19-02-2023 ஞாயிறு) மாலை 6 மணிக்கு, சைதாப்பேட்டை அண்ணாமலையார் மண்டபம்.

அனைவரும் வருக.

மே பதினேழு இயக்கம்
9884864010

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chennai