மாதவரம் எஸ் சுதர்சனம், MLA
மாதவரம் தொகுதி MLA, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர்
25/05/2026
11/05/2026
நன்றி!
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான #மாதவரம் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் எனும் பொறுப்பு கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை.
திராவிட மாடல் அரசில் மாதவரத்துக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள கழகத் தலைவர்,
அண்ணன் திரு M. K. Stalin அவர்களின் வழியில் என்றும் மக்கள் பணியில் உறுதியாக செயல்படுவேன்.
மக்கள் சேவையே என் பயணம்!
02/05/2026
சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாதவரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலின் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து M.R. பேலஸ் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
02/05/2026
சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலின் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஸ்ரீ சாய் மஹால் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் L. சுந்தர்ராஜன்,
திருவொற்றியூர் தொகுதி தேர்தல் பணி குழுத் தலைவர் கே.பி. சங்கர், தொகுதி பார்வையாளர் டாக்டர் ஜெ. அருண், மாவட்ட செயலாளர் எம். ராமகிருஷ்ணன் (CPI-M), பணி குழு செயலாளர் பி.கே. சண்முகம் (CPI-M), மாநில குழு உறுப்பினர் எல். சுந்தர்ராஜ் (CPI-M), திருவொற்றியூர் திமுக கிழக்கு பகுதி செயலாளர் தி.மு. தனியரசு MC, மேற்கு பகுதி செயலாளர் வை.மா. அருள்தாசன், மத்திய பகுதி செயலாளர் ஏ.வி. ஆறுமுகம் MC உள்ளிட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி பாக முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
01/05/2026
நன்றி "முரசொலி" நாளிதழ்
01/05/2026
உழைப்பாளர் வர்க்கம் உயர அனுதினமும் உழைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீண்டும் அரியணை ஏறும்.
அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!
#மே1
#உழைப்பாளர்_நாள்
அனைத்து கருத்துக்கணிப்புகளும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம்... மீண்டும் திமுக ஆட்சி!
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Website
Address
No. 197/261, Bazzar Street, Madhavaram
Chennai
600060
