05/06/2026
காயிதே மில்லத்தின் 131 ஆவது பிறந்த நாளன இன்று 05.06.2026 சென்னை திருவல்லிகேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் பொன்னாடை போர்த்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
#காயிதேமில்லத்
#காயிதேமில்லத்பிறந்தநாள்
#காயிதேமில்லத்131வதுபிறந்தநாள்
#கண்ணியத்திற்குரியகாயிதேமில்லத்
03/06/2026
மதுரை, வாடிப்பட்டியில் இன்று 03.06.2026 நடைபெற்ற த.மா.கா வட்டாரத் தலைவர் திரு.S. சரவணக்குமார் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
03/06/2026
டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் இரங்கல்
டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
பலர் இந்த விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது.
டெல்லி அரசு சிகிச்சை பெறுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகின.
உணவக தீ விபத்து டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது போன்ற விபத்து இனிமேல் நடைபெறாமல் இருக்க அரசு கோட்பாடுகளை விதித்து அது கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு போதிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு த.மா.கா(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
#டெல்லிதீவிபத்து #தீவிபத்து
01/06/2026
சென்னையில் மது விற்கும் தனியார் பாரில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நமது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் முறையற்ற மதுபானக் கூடங்களால் வயது வரம்பின்றி பாதிக்கப்படுவோர் ஏராளம்.
தமிழக அரசு – நேரம் காலம் இன்றி விதிகளுக்கு மீறீ இயக்கப்படும் மதுபானக்கூடங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
தீரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை
தமிழக அரசு கலாச்சார சீரழவிற்கு மதுபானக்கூடங்கள் (பார்கள்) வழிவகுப்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் பார்களில் விற்கப்படும் மதுபானங்கள், போதைப்பொருட்கள் ஆகியவற்றால் இளம் வயதினர் முதல் முதியோர் வரை ஈர்க்கப்படுகின்றனர்.
பார்கள் இளம் தலைமுறையினரை மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. இது அவர்களது எதிர்காலத்தையும், ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
பார்கள், மனமகிழ் மன்றங்கள், டாஸ்மாக் ஆகியவை அரசின் அனுமதி பெற்றிருந்தாலும், உரிமை பெற்றிருந்தாலும் அவைகளில் பெரும்பாலானவை விதிகளுக்கு அப்பாற்பட்டு நேரம் காலம் இன்றி இயக்கப்படுவது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மதுவின் பிடியால் குடும்பங்களில் சண்டைகள், வன்முறைகள் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி மற்றும் மன அமைதியைக் குலைக்கிறது நமது பாரம்பரிய நற்பண்புகளை சிதைத்து, சமூக மற்றும் குடும்ப அமைப்பைக் குலைக்கின்றன.
மேலும் பார்கள் மற்றும் கிளப்களில் விற்கப்படும் மதுவும், போதைப்பொருட்களும் சட்டவிரோதமாக சிறுவர்களுக்கும் விற்கப்படுகின்றன.
இதனால் சட்டவிரோதமான செயல்கள், குற்றங்கள், தவறான செயல்கள் அதிகரிக்கின்றன.
இதன் அடிப்படையிலேயே சென்னை கோயம்பேடு பகுதியில் பாரில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது, அதிர்ச்சியளிக்கிறது.
இது போன்ற அசம்பாவிதங்கள் இனியும் தொடராமல் இருக்க குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
சென்னையில் முறையற்று, விதிமீறலால், சட்டத்திற்குப் புறம்பாக நேரம் காலமின்றி இயக்கப்படும் பார்கள் உள்ளிட்ட மதுபானக்கூடங்களை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
31/05/2026
சென்னை, அயனாவரத்தில் இன்று 31.05.2026 நடைபெற்ற வடசென்னை, கிழக்கு மாவட்ட - SC / ST பிரிவின் த.மா.கா தலைவர் திரு.கோ.சிகாமணி அவர்களின் 25 ஆம் ஆண்டு திருமண நாள் விழாவில்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் கலந்து கொண்டு அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தினார்கள்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
31/05/2026
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
மத்திய மாநில அரசுகள் மற்றும் பொது மக்கள் புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி உடலுக்கு தீங்கிழைக்கும் புகையிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை
உலக புகையிலை எதிர்ப்பு தினம் (World No To***co Day) ஆண்டுதோறும் மே 31 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதன் நோக்கம் புகையிலையினால் அதன் நச்சுக்களால் ஏற்படும் தீமைகள், நோய்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே.
புகையிலை பயன்பாட்டால் உலகளவில் ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்பது மிகவும் வேதனையான செய்தி.
ஒரு ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்தியாவில் ஆண்டிற்கு சுமார் 13 லட்சம் பேருக்கு புகையிலையினால் நோய் ஏற்பட்டு உடல் நலன் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.
நேரடிப் புகைப்பிடிப்பால் மட்டுமல்லாமல், அருகில் இருப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிப்பதாலும் (Passive Smoking) உலகளவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
இது ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையாகும்.
அதாவது உலக அளவில் புகையிலையைப் பயனபடுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பல்வேறு நோய்கள் உருவாகின்றன.
பொது இடங்களில் புகைப்பிடித்தல், கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தீய பழக்கத்தை தூண்டுகிறது.
இப்படி புகையிலையைப் பயன்படுத்துவதால் சிறியவர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
பொது மக்கள் புகையிலைப் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவருக்குமான உடல்நலனில் அக்கறை கொண்டவர்களாக செயல்பட வேண்டும்.
மேலும் மத்திய மாநில அரசுகள் புகையிலை எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கும் வேளையில் புகையிலைக்கு முற்றுப்பிள்ளி வைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய முயற்சிகளை மேற்கொண்டு மக்களின் சுகாதாரமான வாழ்விற்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
#உலகபுகையிலைஎதிர்ப்புதினம்
#புகையிலைஒழிப்புதினம்
#புகையிலைஎதிர்ப்பு
***coDay
***co
***coFree
30/05/2026
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், த.மா.கா மாநில செயலாளர் கங்கை திரு. செல்வதுரை அவர்கள் காலமானதை ஒட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் இன்று 30.05.2026 அவரது இல்லம் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
30/05/2026
திருவாரூர் மாவட்டத்தில் மகள் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
குற்றவாளிகளை உடனே கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை
தமிழக த.வெ.க அரசு பொது மக்களுக்கான பதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
காரணம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் அவ்வப்போது ஆங்காங்கே கொலைகள் நடைபெறுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கூட திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில், மது போதையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டிற்குள் புகுந்து ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது கொடுமை.
கொலையாளிகள் மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, தந்தையின் கொடூர கொலையை நேரில் பார்க்க வைத்தனர்.
மேலும் அவரது மனைவி மற்றும் மகனும் இத்தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கெல்லம் காரணம் போதைப்பொருட்கள் என்றாலும் காவல்துறையினரின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும், தண்டனை மீதும் பயம் இல்லாத நிலையை வெளிப்படுத்துகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக புதிதாக ஆட்சி செய்யும் தமிழக அரசின் மீது குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு புயம் இல்லாததும் கூட.
எனவே தமிழக அரசு கொலை செய்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து, கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி அதிக பட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு, கொலைகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், மக்களுக்கான பாதுகாப்பில் உறுதியைக் கொடுக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
29/05/2026
மத்திய மாநில அரசுகள் – உரங்களின் விலைகளை கட்டுக்குள் வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட கூட்டம் நடத்தி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை
மத்திய மாநில அரசுகள் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு வகையிலான உரங்களின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியா முக்கிய உரங்களான யூரியா, ஏடிபி உள்ளிட்ட பல்வேறு உரங்களை சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது.
தற்போது ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான மோதலால், மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் உரங்களின் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த உரங்களின் கடுமையான விலை உயர்வால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் உரங்களை அதிக விலை கொடுத்து விவசாயம் செய்ய முடியாத சிரமத்தில் உள்ளனர். விவசாயத் தொழில் பாதிக்கப்படும்.
உதாரணத்திற்கு ஒரு மூட்டை ஆயிரத்து 975 ரூபாய்க்கு விற்பனையான மூரியேட் ஆஃப் பொட்டாஷ், தற்போது 2 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் யூரியா, சல்பேட் உள்ளிட்ட அடிப்படை உரங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இப்படி பல்வேறு உரங்களின் விலை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மீது பொருளாதார சுமை அதிக அளவில் கூடியுள்ளது.
இருப்பினும் தற்போதைய சம்பா சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள விவசாயிகள் உரங்களின் விலை உயர்வால் சோர்வடைந்து, கவலையான நிலையில் விவசாயப் பணிகளை தொடர்கின்றனர்.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, விவசாயத் தொழில் தொய்வடைந்து, நஷ்டம் ஏற்படும்.
இச்சூழலில் மத்திய மாநில அரசுகள் உயர் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை நடத்தி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வைக் குறைக்க, கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
#உரம்
#விவசாயம்
#வேளாண்மை
#விவசாயிநலன்
28/05/2026
சென்னையில் இன்று 28.05.2026 நடைபெற்ற மறைந்த ஆசிரியர் ராஜ்மோகன் அவர்களின் இல்லத் திருமண விழாவில்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்