SDPI சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி

SDPI சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி

Share

Social democratic party of India Sholinganallur

பசியிலிருந்து விடுதலை!! பயத்திலிருந்து விடுதலை!!!

02/06/2026

சிறுபான்மையினர் உரிமைகளை உரக்க பேசும் கட்சிகளில் GEN Y மற்றும் GEN Z மக்களை அதிகமாக கொண்ட கட்சி SDPI என்று மகிழ்ச்சியுடன் சொல்லலாம்..

ஏ.கே.கரீம்
மாநில பொதுச்செயலாளர்
SDPI கட்சி

01/06/2026

| "யார் அந்த மேலிடம்?" -தமிழ்நாடு அரசுக்கு SDPI மாநில தலைவர் முகம்மது முபாரக் கேள்வி

| |

Photos from SDPI சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி 's post 29/05/2026

பக்ரீத் என்பதே இறைவனுக்காக அறுத்து பலீயிடும் பண்டிகை தான்.

இதை எப்படி இஸ்லாமியர்களுக்கு அத்தியாவசியமில்லாது என்பதை போன்ற ஒரு வார்த்தையை நீதிமன்றம் சொல்கிறது என்று புரியவில்லை,

இறை வழிபாட்டிற்கு அறுப்பதும் இறைச்சிக்காக அறுப்பதும் ஒன்றாகுமா?

இஸ்லாமியர்களின் சட்டத்தை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம், இஸ்லாமிய மக்களிடம் கேட்டகவும் இல்லை, எதிர் பார்ட்டியாக சேர்க்கவும் இல்லை.

ஏ.கே.கரீம்
மாநில பொதுச்செயலாளர்
SDPI கட்சி

29/05/2026

| “ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று சொல்லும்போது நாமும் அடுத்த நிமிடமே சரி செய்யுங்கள் என்றுதான் கேட்கமுடியும்.”
-சட்டம் ஒழுங்கு பற்றி SDPI மாநிலத் தலைவர் முகமது முபாரக் விமர்சனம்

| | |

27/05/2026

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போது நடைபெறும் குர்பானி நிகழ்வு, காலம் காலமாகப் பிற மதத்தினரோடு இணைந்த ஒரு சிறந்த சமூக நல்லிணக்க விழாவாக, எவ்விதப் புகாரோ இடையூறோ இன்றி அமைதியான முறையில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

​தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, இந்த எளிய பாரம்பரிய நடைமுறையில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்ற கவலையையும் அதிர்ச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பானது நீதிமன்றம் சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் நுழைந்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.எனவே, தமிழக அரசு மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இதற்குரிய சட்டப்பூர்வ மேல்முறையீட்டு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

​மேலும், இந்தத் தீர்ப்பின் பின்னணியில் தேவையற்ற பதற்றமோ அச்சுறுத்தலோ ஏற்படாத வண்ணம், சிறுபான்மை மக்களின் குர்பானி போன்ற வழிபாட்டு உரிமைகளையும் பக்ரீத் கொண்டாட்டங்களையும் அரசு நிர்வாகமும் காவல்துறையும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். சட்டத்தின் கடமையும் சமூக நடைமுறையும் இணைந்து செல்வதே உண்மையான ஜனநாயகம் என்பதால், அரசு இதில் உரிய கவனம் செலுத்தி நல்லதொரு தீர்வைக் காண வேண்டும்.

​- முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

27/05/2026

#உறுதி |
“ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளேன். அதிமுகவுக்காக எப்போதும் உழைத்தவன் நான். ஆனால் இன்றைய சூழலில் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” – சி.வி. சண்முகம் பேச்சு

27/05/2026

அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் – அதிகாரிகள் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாக தகவல்.

27/05/2026

வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வருவாய் ஆவணங்களை வழங்க வேண்டும்! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

​வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசின் ‘உமீத்’ (UMEED) இணையதள ஆவணச் சரிபார்ப்பைக் காரணம் காட்டி, உத்தரப் பிரதேசத்தில் 31,000-க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்களின் பதிவுகள் மிக அவசரமாக ரத்து செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் மற்றும் அவர்களின் மத ரீதியான உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்தோடுதான் பாஜக அரசால் இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

​பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தின் வழிபாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்து வரும் மசூதிகள், தர்காக்கள், கல்வி நிலையங்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள் போன்ற பாரம்பரிய பயன்பாட்டு வழி வக்ஃப் சொத்துக்களுக்கு (Waqf by user), முறையான டிஜிட்டல் வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்திற்காக வக்ஃப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அரசு நிலங்களாக மாற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி வரும் இத்தகைய சிறுபான்மை விரோத, வக்ஃப் சொத்து பறிப்பு நடவடிக்கைகள் போன்றதொரு இக்கட்டான நிலை தமிழகத்தில் உள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு எக்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

​ஒன்றிய பாசிச பாஜக அரசின் வக்ஃப் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (JPC) பரிசீலனையில் இருந்தபோதே, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் அந்த மசோதாவிற்கு எதிராகத் தற்போதைய தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது மாநில மாநாட்டிலும், கொள்கை அறிவிப்புகளிலும் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, வக்ஃப் சட்ட திருத்தத்தைக் கொள்கை ரீதியாக எதிர்க்கும் தார்மீகக் கடமை ஆளும் கட்சிக்கு உண்டு.

​ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும், குறிப்பாக வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத பாரம்பரிய பயன்பாட்டு வழி அடக்கஸ்தலங்கள், தர்காக்கள் மற்றும் மசூதிகளைக் கண்டறிந்து, அவற்றிற்குரிய பட்டா, வரைபடம் மற்றும் வருவாய் ஆவணங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்க வருவாய்த்துறை மூலம் போர்க்கால அடிப்படையில் அரசு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

​மேலும், தமிழக வக்ஃப் வாரியத்தின் பதிவுகளையும், மாநில வருவாய்த்துறையின் நிலப் பதிவேடுகளையும் முன்கூட்டியே ஒப்பிட்டுப் பார்த்து, அதில் உள்ள தொழில்நுட்ப மற்றும் ஆவண முரண்பாடுகளை அரசு நிர்வாகமே முன்நின்று சரிசெய்ய வேண்டும்.

​எதிர்காலத்தில் ஒன்றிய அரசின் எவ்விதத் தவறான டிஜிட்டல் ஆவணக் கெடுபிடிகளும் தமிழக வக்ஃப் நிலங்களைப் பாதிக்காத வண்ணம், அவற்றுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். வக்ஃப் சொத்துக்கள் என்பவை ஏழை, எளிய மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக முன்னோர்களால் இறைவழியில் அர்ப்பணிக்கப்பட்ட அறக்கட்டளைச் சொத்துக்கள் ஆகும். அவற்றை பாசிச சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பது சமூக நல்லிணக்கத்தை விரும்பும் மக்கள் அரசின் கடமையாகும்.

​எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில், முந்தைய திமுக அரசு மேற்கொண்ட சட்ட ரீதியான வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போன்று, வக்ஃப் சொத்துக்களைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளைத் தவெக அரசும் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chief Minister of Tamil Nadu

27/05/2026

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் பினராயி விஜயன் அவர்களைக் குறிவைத்து, மத்திய அமலாக்கத்துறை (ED) நடத்தியுள்ள சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு, தங்களுக்கு அரசியல் ரீதியாகப் பணிய மறுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவதற்கும், மிரட்டுவதற்கும் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளைத் தொடர்ந்து ஒரு ஏவல்துறையாகப் பயன்படுத்தி வருகிறது. ஜனநாயகத்தின் மீதான இத்தகைய தரம் தாழ்ந்த தாக்குதல்கள் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

மத்திய விசாரணை முகமைகளைத் தன்வசப்படுத்தி, எதிர்க்கட்சிகளை நசுக்க நினைக்கும் பாஜகவின் இந்த சர்வாதிகாரப் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஜனநாயக சக்திகளின் குரலை இதுபோன்ற அச்சுறுத்தல்களால் ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது!

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

27/05/2026

அகில பாரத இந்து மஹா சபையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில், தன் குடும்பத்துடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் முக்தார் அவர்களை, சீருடை அணியாத காவல் அதிகாரிகள் நடுவழியில் வாகனத்தை மறித்து அழைத்துச் சென்று, "ஆளுங்கட்சியையோ, முதலமைச்சரையோ இனி விமர்சிக்கக் கூடாது" என அவருக்கு மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது போன்ற கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறைகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்புடையதல்ல. ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இத்தகைய அச்சுறுத்தல்களும், அதிகார நெருக்கடிகளும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

ஆளுங்கட்சி மற்றும் முதலமைச்சர் மீதான விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வதே ஒரு மக்கள் நல அரசின் சிறந்த செயல்பாடாக அமைய முடியும். அதைவிடுத்து, காவல்துறையை ஏவி விமர்சிப்போரை முடக்க நினைப்பது ஜனநாயகப் பண்பாகாது.

எனவே, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு, ஊடகவியலாளரை மிரட்டிய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தவறிழைத்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai