02/05/2016
Central Chennai Congress Committee
Central Chennai Congress Committee, Tamil Nadu
02/05/2016
24/04/2016
மத்திய சென்னை மாவட்டம், 100வது வட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் திரு. எம்.கே.மோகன் அவர்களை ஆதரித்து காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. என்.ரங்கபாஷ்யம் கலந்துகொண்டு காங்கிரஸ் சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் சர்கிள் தலைவர்கள் எம்.ஆர்.ஏழுமலை, சி.ரவி மற்றும் 100வது வட்ட தலைவர் ஆர்.ஜானகிராமன் மற்றும் தி.மு.க. 100-அ வட்ட செயலாளர் திரு. எஸ்.சுகுமாறன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
18/04/2016
அண்ணாநகர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை - அரும்பாக்கம் கமலம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. என். ரங்கபாஷ்யம் தலைமை தாங்கினார். அண்ணாநகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் திரு. எம்.கே.மோகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். விழாவில் அண்ணாநகர் தொகுதியில் செய்ய வேண்டிய மக்கள் பணிகள் குறித்த கையேடு வெளிடப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
05/03/2016
சொல்லின் செல்வர் திரு, ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91வது பிறந்தநாள் விழா மத்திய சென்னை மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு.என்.ரங்கபாஷ்யம் அவர்கள் கலந்துகொண்டு ஏழைகளுக்கு புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்ள திரளாக கலந்து கொண்டனர்.
நன்றி: மாலைமலர், மாலை முரசு
05/03/2016
சொல்லின் செல்வர் திரு, ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91வது பிறந்தநாள் விழா மத்திய சென்னை மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு.என்.ரங்கபாஷ்யம் அவர்கள் கலந்துகொண்டு ஏழைகளுக்கு புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்ள திரளாக கலந்து கொண்டனர்.
29/12/2015
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு 29.12.2015, செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு, அண்ணாநகர் தொகுதி செனாய் நகர் தபால் நிலையம் அருகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு. என்.ரங்கபாஷ்யம் தலைமை தாங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட சுமார் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் திரளான பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
10/12/2015
அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் மருத்துவ முகாம் - மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
அன்னை சோனியாகாந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 9.12.2015 அன்று மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் திரு.ரங்கபாஷ்யம் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
01/11/2015
இன்று 1.11.2015 சென்னை அரும்பாக்கதில் அண்ணாநகர் தொகுதி வாக்குசாவடி முகவர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தன்மான தலைவர் பதவி ஏற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தன்மான தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மற்றும் சு.திருநாவுக்கரசர், ஆ.கோபண்ணா, நாசே ஜே.ராமசந்திரன், திருச்சி வேலுசாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
17/10/2015
காங்கிரஸ் உறவே வேண்டாம் என்று கூறியவர்கள் இப்போது கதவை தட்டுகிறார்கள்: இளங்கோவன் பேச்சு
தூத்துக்குடி, அக். 17–
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 2–வது மண்டல நிர்வாகிகள் மாநாடு தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு மஹாலில் இன்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாநாட்டு கொடியேற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ வேல்துரை வரவேற்றார்.
மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சியின் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று கூறியவர்கள் இன்று கதவை தட்டுகிறார்கள். ஏனென்றால் இன்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மக்களிடம் மிகுந்த நம்பிக்கை பெற்றுள்ளது. தமிழகத்தில் இழந்த பெருமையை வருகிற 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உறுதியாக காங்கிரஸ் கட்சி மீட்கும்.
தற்போது துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.200க்கு மேல் சென்று விட்டது. தமிழக மக்களின் கவலையை கண்டு கொள்ளாமல் முதல் –அமைச்சர் ஜெயலலிதா கொடநாடு சென்று விட்டார். அவருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சசி பெருமாள் உயிர் தியாகம் செய்தார். ஆனால் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் மவுனம் சாதித்து வருகிறது. ஏனென்றால் அவர்களுக்கு அதில் கோடிக்கணக்கான வருமானம் கிடைக்கிறது. மதுவால் ஏழை மக்கள் தாங்கள் சம்பாதித்ததை செலவழித்து வறுமையில் வாடி வருகிறார்கள்.
வருகிற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மக்களுக்கு நல்லாட்சி தருவோம். காங்கிரஸ் ஆட்சியின் நல்ல திட்டங்களை தற்போது மத்திய அரசு முடக்கி விட்டது. மோடி தலைமையிலான அரசு திட்டங்களை அழிக்கும் அரசாக உள்ளது.
வருகிற தேர்தலில் காமராஜர் கண்ட ஆட்சி அமைய அனைவரும் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சென்னா ரெட்டி, திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராமச்சந்திரன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரிஅனந்தன், சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் குஷ்பு. முன்னாள் எம்.பி மாணிக் தாக்கூர், எம்.எல்.ஏ.க்கள் கோபிநாத், விஜயதரணி, பிரின்ஸ் மற்றும் செல்வப் பெருந்தகை, ராஜசேகரன், வசந்தகுமார், ராஜேஷ், அஸ்லம் பாஷா, சபீன், பாபு, தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
No. 25/7, Subramani Street, Purasaiwakkam
Chennai
600084
