கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம், சென்னை மாவட்டம், சார்பாக அனைத்து குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்... இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.💔💔💔
இங்கனம்,
தலைவர் மற்றும் செயலாளர்,
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம் ,சென்னை மாவட்டம்.
TNJEA, Chennai District
Will be updated later
சென்னை மாவட்டத்தில்,
*சிரஸ்ததார்கள் -8, 15-முதல் நிலை எழுத்தர் நிலை-I, பதவி உயர்வு வழங்கிய, என்றும் ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்ட மதிப்பும் மற்றும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி அம்மா திருமதி. அல்லி அவர்களுக்கு எங்களது ஊழியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.* மேலும் மேன்மையான பதவி உயர்வு குழுவை சார்ந்த மாண்புமிகு நீதிபதிகளுக்கும் ,
இப்பதவி உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும் எங்களது மரியாதைக்குரிய முதன்மை நிர்வாக அலுவலர் திரு. சதிஷ்பாபு அவர்களுக்கும் ஊழியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.... மேலும் முதன்னை நிர்வாக அலுவலர் அவர்களுக்கு உதவியாக/பக்கபலமாக இருந்தது இப்பதவி உயர்வு குறித்த நேரத்தில் வெளிவர காரணமாக இருந்த மாவட்ட நீதிமன்றம் சிரஸ்தார் திருமதி.பத்மா அவர்களுக்கும் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.... 🙏🏼🌺💐
இவண்,
தலைவர் /செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகள்,
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம், சென்னை மாவட்டம்....
06/07/2023
*அன்பார்ந்த தோழர்களே வணக்கம்!*
*05.7.2023 புதன்கிழமை மாலை 6 மணிக்கு மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை சந்திக்க தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளாகிய எங்களுக்கு நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. அதன்படி மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களை 05.07.2023 மாலை மாநில நிர்வாகிகள் சந்தித்தோம். மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார். மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களுக்கு புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் திரு. ராமச்சந்திர குஹா அவர்கள் எழுதிய உலகப்புகழ் பெற்ற India after Gandhi (மூன்றாவது விரிவாக்கப்பட்ட பதிப்பு) என்ற புத்தகமும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்திதேவி அவர்கள் எழுத்தாக்கத்தில் உருவான இந்திய அரசின் ஒன்றிய செயலாளராக பணியாற்றி சமூகநீதியின் விடிவெள்ளியாக திகழும், ஓய்வு பெற்று மறைந்த திரு.எம்.எஸ்.கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். அவர்களின் உன்னத வாழ்க்கை வரலாற்று நூலான Crusader of Social Justice என்ற புத்தகமும் நமது சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டன. அவற்றை மகிழ்வோடு ஏற்ற மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் நமது மாநில நிர்வாகிகள் அனைவரையும் அமரவைத்து தேநீர் அளித்து பண்பு பாராட்டினார். பின்னர் நாம் நமது ஊழியர் நலன்சார்ந்து அளித்த (1) முதலாவது நீதித்துறை ஊதியக்குழு பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுதல், (2) மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சிரஸ்தார்கள் மாவட்ட மாறுதல்களை கைவிடுதல், (3) தற்காலிக பணியாளர்கள் பணிநிரந்தரம், (4) தகுதி வாய்ந்த நீதித்துறை ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதை உறுதி செய்த பின்பு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் (5) சென்னை உயர்நீதிமன்ற மற்றும் மதுரைக்கிளை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு என்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் சேமநல நிதியைப் போன்றே தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்களுக்கு என்று மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களின் சேமநல நிதி உருவாக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகள் அடங்கிய நமது மனுவை அளித்தோம். அந்த கோரிக்கைகளை பொறுமையாக படித்த மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் அவை தொடர்பான விளக்கங்களையும் நம்மிடம் கேட்டுக் கொண்டார். அவற்றை நிறைவேற்றும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நல்ல முடிவுகளை எடுத்து முயற்சிப்பதாக உறுதி அளித்தார். மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களுடனான நமது சந்திப்பு அவரது பண்பும், கனிவும் மிக்க அணுகு முறையால் நமது சங்க பணிகளில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்ததோடு புதிய நம்பிக்கையை அளிக்கும் நல்ல தொடக்கமாகவும் அமைந்தது.*
*மேலும் நமது மாநில செயற்குழு தீர்மானங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களிடம் அளித்து அவற்றை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தோம்.*
*தோழமையுடன்,*
*மாநில நிர்வாகிகள்,*
*தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம்.*
உறுப்பினர் :என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள் கடந்த பத்து வருடங்களில், என்று புள்ளி விவரத்தோடு சொல்லுங்கள் பாராட்டுகிறோம் என்று நீதித்துறை ஊழியர்கள் கேட்கிறார்கள்.
மாநில மையம் பதில்:
பத்து வருடமாக நமது சங்கம் என்ன செய்தது என்பதை விட நமது சங்கத்திற்காக நாம் என்ன செய்தோம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாம் தற்போது பெற்றுவரும் பண பலன்கள் அனைத்தும் நமது தாய் சங்கமான அரசு ஊழியர் சங்கம் மற்றும் நமது சங்கத்தின் முன்னாள் இன்னாள் ஊழியர்கள் பலரின் போராட்டத்தின் பலனால் பெறப்பட்டதே என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பெறப்பட்ட பலன்கள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. அதற்கான போராட்ட பாதையை அரசு ஊழியர் சங்கம் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வந்துள்ளது. அதில் நமது சங்கமும் இணைந்து போராடிய போது எத்தனை பேர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம்.
நமக்கு பிரச்சினை வரக்கூடாது சந்தா கொடுக்க கூடாது போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது. ஆனால் பண பலன்கள் மட்டும் வந்து சேர வேண்டும் என்பது எப்படி சாத்தியப்படும்.
2022ம் வருடம் முடிவடையப் போகிறது. சந்தா நிலுவை டைரி நிலுவையை மாநில மையம் கேட்காமல் எத்தனை மாவட்டங்கள் செலுத்தியுள்ளது.
சந்தா என்பது நாம் கேட்காமலேயே கொடுக்க வேண்டியது. 100 ரூபாய் சந்தா கொடுப்பதற்கு எத்தனை கேள்வி கேட்டாலும் அதற்கு நிர்வாகிகள் பதிலளிக்க தயாராக உள்ளனர். ஆனால் 100 ரூபாய் கொடுப்பதற்கு 365 நாட்கள் வாய்தா வாங்கும் ஊழியர்கள் பலரை பார்க்கும் போது வேதனை மட்டுமே மிஞ்சும்.
எனவே முதலில் நமது அடிப்படை கடமையான சந்தாவை ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதமே கொடுத்து தன்னை சங்க உறுப்பினர் என்பதை அனைத்து ஊழியர்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் நமது சங்க உறுப்பினர் பட்டியல் மற்றும் நமது சங்க கணக்கு அறிக்கையை உயர்நீதிமன்றம் வாயிலாக அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எத்தனை மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரியும்.
Today's Constitution Day...
02/12/2016
✳✳✳✳🌹✳✳✳✳
*சென்னை மாவட்ட*
*நீதித்துறைஊழியர்கள்*
🌹கடந்த 14..11.2016 குழந்தகள் தினவிழா
நீதிமன்ற பணிசுமைகளால் கொண்டாட இயலாமல்
போனதால் அதனை
30.11.2016 அன்று பணி
நிறைவு பாராட்டு விழாவுடன் சேர்ந்து
கொண்டாட முடிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் 30.11.2016
அன்று ஒய்வு பெறும்
1) திரு . குமார் ஆர்.சி
2) திரு. பசுபதி ஆர்.சி
சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம்
3) திரு சோமசுந்தரம் ஆர்சி
குடும்பநல நீதிமன்றம்
ஆகியோர்களின் பணிநிறைவு
பாராட்டு விழா மற்றும் சென்னை மாவட்ட நீதித்துறை ஊழியர்களின்
குழந்தைகள் கலந்து கொண்ட
குழந்தைகள் தினவிழா ஆகிய இரண்டும் சேர்ந்த குடும்ப விழாவாக
வெகு விமர்சையாக 30.11.16 அன்று
மாலை 6மணிக்கு
தொடங்கியது.
🎽 ஒய்வு பெற்றவர்களை
கெளரவிக்கும் வண்ணம்
வேண்டுகோளின்படி
ஊழியர்கள் நீலநிற
ஆடை அணிந்து பணிக்கு
வந்தனர் . பின்னர் ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு நீதித்துறை சங்க சென்னை மாவட்ட நிருவாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு வேண்டி
நீலநிற பலூன்கள் மூலம்
விழா வளாகம்
அலங்காரம் செய்யப்பட்டது
🌹ஒய்வு பெறுபவர்களுடன்
சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற
பாசமிகு பதிவாளர், தலைமை நிருவாக அலுவலர் மற்றும் நீதிமன்ற
மேலாளர் ஆகியோர்கள் விழா அவை மேடையை அலங்கரிக்கத்தனர்.
சிரஸ்தார்கள்
தலைமை எழுத்தர்கள் ஆகியோர் தங்களதுபரிவாரங்களுடன் விழாவினை மிகச்சிறந்த
முறையில்
நடத்தி சென்றனர்.
🌺
சென்னை மாவட்ட
மகளிர் குழுவினரை சார்ந்த திருமதி பானு விழா தொடக்கவுரை
ஆற்ற
திருமதிகள் அனுசியா,
கீதாஞ்சலி, டெய்சி், காமாட்சி, ரதி
தமிழ்தாய் வாழ்த்து பாடினார்கள்.
🌹🌺 பின்னர் தமி்ழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சென்னை மாவட்ட
தலைவர் திரு. சுந்தரபாண்டியன் வரவேற்புரை ஆற்றி விழாவினை மிகச் சிறப்பாக வழிநடத்திச் சென்றார்.
முதலில் குழந்தைகள்தின
விழாவில் திருமதி ஜெயந்தி அவர்களின்
புதல்விகள் ஹரிணி-
பிரிதிக் ஆகியோர்
தங்களது நடன திறமையை வெளிக்
காட்டினார்கள்.திருமதி
கீதாஞ்சிலி மகள் சஞ்சிதா
மழலை மொழியில்
தனது மொழியாற்றலை
வெளிபடுத்த திருமதி பானு
அவர்களுடைய மகன்
சாய்சரண் , ஒய்வு பெறுபவர்கள் பற்றி தனது
தாயார் தயாரித்த குறும்படத்திற்கு தொகுப்பாளராக பணியாற்றி தனது திறமையை வெளிபடுத்தினார்.பின்னர்
மாண்புமிகு பதிவாளர்
அவர்கள் குழுந்தைகளுக்கு
பரிசுகள் வழங்கி அவர்களை பாராட்டினார்.
🌹 அடுத்தாக படைப்பாளி
பானு கடந்த 30.11.15, 1.12.15, 2.12.15 ஆகிய
தேதிகளில் தொடர் அடைமழையால்
சிங்கார சென்னை
சீரழிந்த சென்னையாக
மாறியிருந்த காட்சிகளை
நினைவுபடுத்தி அடுத்த
அடைமழைக்கு ஆயுத்தமாக அறைகூவல்
விடுத்தார்.
🌺🎇 இதன் தொடர்ச்சியாக ஒய்வு
பெற்ற மூன்று ஊழியர்கள்
பற்றிய சிறப்பு கண்ணோட்டத்தை
குறும்படமாக வழக்கம்
போல் பல புதுமைகளுடன்
திரையிட்டு ஒய்வு பெறுபவர்களை மட்டுமல்லாமல் அவர்களது
குடும்பத்தினரையும.
நெகழ்ச்சி
அடையச் செய்தார்.
🌹அவையை அலங்கரித்த
மூவரும் ஒய்வுபெற்றவர்களுக்கு
காசோலை மற்றும் பணி
ஓய்வு சான்றிதழ் வழங்கினார்கள்
திரு.சுந்தரபாண்டியன்,
திரு.கருத்தபாண்டியன்
திரு. பாஸ்கரன் மற்றும்
திருமதி மஞ்சுளா ஆகியோர் ஒய்வு பெற்றவர்களுக்கு சந்தன
மாலை மற்றும் சால்வை
அணிவித்து மரியாதை
செய்தனர்.பிறகு நணபர்கள,் உறவினர்கள்
உடன் பணிபுரிபவர்கள.
நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.
தன்னுடைய
உதவியாளராக
பணியாற்றி ஒய்வு பெறும்
திரு குமாரை , தலைமை நிருவாக அலுவலர் அவர்கள் வாழ்த்தி
பேசும் பொழுது
உணர்ச்சிவயப்பட்டு
அடுத்து பேச இயலாமல்
தவித்த தருணம்
அவரின் உடன் பணிபுரிபவர் மேல் கொண்டிருந்த அன்பு வெளிபடுத்தியது.
🌺 மாண்புமிகு பதிவாளர்
தனது வாழ்த்துரையில்
சாதாரண முறையில்.
நடைபெறுகின்ற பணி
நிறைவு பாராட்டு விழாவினை , இந்த அளவிற்கு மிகச்சிறப்பாக
நடைபெறுவது சென்னையில் மட்டும்தான்
என்றும் அதற்காக மிகவும்
திட்டம் தீட்டி முயற்சிகள் பயிற்சிகள்
மேற்கொண்டு ஒரு குழுவாக செயல்படும்
அனைவரையும் ்பாராட்டி
பேசினார் .ஒய்வு பெறுபவர்கள் மன நிறைவுடன் 16 செல்வங்களுடன் வாழ
வாழ்த்தினார்.மேலும் அவர்
தனதுரையில் விழாவின்
சிறப்புக்கு காரணமான
திருமதி பிருந்தா, திரு
சுந்தரபாண்டியன், கருத்த
பாண்டியன், பிரபாகரன்
இஞைர்கள படை
கிரி, விஜய், கண்ணன்
பானு மற்றும் மகளிர் அணியினரை பாராட்டி
நன்றி தெரிவித்தார்.
🌹இறுதியாக தமிழ்நாடு
நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சென்னை மாவட்ட
துணைத்தலைவர்
திரு லட்சுமி நாராயணன்
அவர்கள் நன்றி நவில
நீதித்துறை ஊழியர்களின்
குடும்ப விழா இனிமையாக
முடிவுற்றது.
🙏🌹கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக
கடுமையான பணிசுழலில்
அலுவலக உதவியாளராக
பணிபுரிந்து ஒய்வு தினத்தன்று
ஒய்வு பெறுபவர்கள் அவர்களது குடும்பத்துடன்
என்றென்றும் நினைவில்
கொள்ளுமாறு கெளரவப்படுதப்பட்டு
நெகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்
அன்புடன்
சி மூர்த்தி
01/10/2016
*இரட்டை விழா*
சென்னை முதன்மை அமர்வு நீதிபதி மாண்புமிகு
டாக்டர் ஜி. ஜெயச்சந்திரன்
அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக
வருகின்ற 5.10.16 அன்று
பதவி ஏற்க உள்ளார். எனவே நீதிபதி அவர்களுக்கு பாராட்டு விழா வெகுவிமர்சையாக
பணி ஓய்வு விழாவுடன்
நடைபெற்றது.
# முதலில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க
தலைவர் திரு சுந்தரபாண்டியன் அவர்கள்
வரவேற்பு உரையாற்ற
முதன்மை நிருவாக அலுவலர் மாண்புமிகு
நீதிபதி அவர்களுக்கு
சால்வை அளித்து மரியாதை செய்தார்.
பின்னர் மாண்புமிகு நீதிபதி ஏற்புரை செய்து
ஊழியர்களுக்கு நன்றி
தெரிவித்தும் நீதித்துறை
மாண்பு பற்றி பேசி
விடைபெற்றார்.
# அடுத்து சென்னையில்
மாநகர உரிமையியல்
நீதிமன்றத்தில் 32 ஆண்டுகள் பணியாற்றிய
அஞ்சா நெஞ்சன் என்று சக ஊழியர்களால் போற்றப்படும் திரு ஸ்ரீதரன்
அவர்கள் பணி நிறைவு அடைந்து
30.9.16 அன்று பணிஒய்வு பெற்றார். இதற்கான விழாவினை மிகவும்
வித்தியாசமாக தமிழ்நாட்டின் பரம்பரிய
இசையான வில்லுப்பாட்டு
மூலம் திரு ஸ்ரீதரை வாழ்த்தி பாராட்டினர் சென்னை மாநகர மகளிர்
அணியினரான திருமதிகள் ஸ்ரீவித்யா, கீதாஞ்சலி, அனுசியா குழுவினர்.
# வில்லுபாட்டு மூலம் ஒய்வு பெறுபவர்களை
பாராட்டு நடத்துவது தமிழ்நாட்டில் முதல்முறை
என்றே கருதுகிறேன். இதற்காக மேற்கண்ட முயற்சி மற்றும் பயிற்சி செய்த மகளிர் குழுவினருக்கு பெரும்
பாராட்டுக்கைளை தெரிவித்துக் கொள்கிறது
தமிழ்நாடு நீதித்துறைஊழியர்கள் சங்கம்.
# அடுத்து ஒய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் பற்றிய சிறப்பு கண்ணோட்டம் ,சக
ஊழியர்கள் அவருக்கு அளித்த புகழுரை மற்றும்
மரியாதை ஆகியவற்றை
திறம்பட குறும்படம் மூலம்
வர்ணித்து இயக்கி திரையிட்டார் திருமதி பானு. இவரின் திறமை
நீதிபதிகள் பணிஒய்வுக்கும் பயன்படுத்தப்படுகிறது
என்பது சென்னை நீதித்துறை ஊழியர்களுக்கு
மேலும் பெருமை சேர்க்கிறது.
# அடுத்து ஒய்வு பெற்ற
திரு ஸ்ரீதரன் அவர்களுக்கு
செக்சன் வாரியாக மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் பணிநிறைவு
சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது
# பணிஒய்வு பெற்றவரின்
ஏற்புரைக்கு பின்னர்
இரட்டை விழா இனிதாக
நடைபெற்றது.
# குறிப்பிடத்தக்க விசயம்
என்னவென்றால் பணிஒய்வு விழா ஒரு
சம்பிரதாய சடங்காக இல்லாமல் உணர்ச்சிபூர்வமாணதாகவும் ஊழியர்கள் பங்களிப்பு
மற்றும் பங்கேற்பு குறிப்பாக மகளிர் மற்றும்
இளைஞர்களின் அர்பணிப்பு ஆகும். இதற்காக பெரும் ஏற்பாடு
செய்த பணிஒய்வு விழாகுழு மற்றும் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம் தங்களது பாராட்டு மற்றும்
நன்றியையும் தெரிவித்து
கொள்கிறது. சொல்ல மறந்ததை புகைப்படங்கள்
சரித்திர சான்றுகளாக எடுத்துரைக்கும்
என்றும் அன்புடன்
*சீ. மூர்த்தி*
சென்னை மாவட்டத்தில்
நீதித்துறையில 24 ஆண்டுகள் பணியாற்றி
இளநிலை உதவியாளராக
சிபிஐ கோர்ட்டில் 31.8.16
அன்று ஒய்வு பெற்ற
திருமதி பி.சின்னம்மாள்
அவர்களுக்கு பணிநிறைவு
பிரிவு உபச்சார விழா சிபிஐ கோர்ட்டில் மாலை
5.45 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு நீதித்துறை
ஊழியர்கள் சங்கம்
சென்னை மாவட்ட தலைவர் திரு சுந்தரபாண்டியன் விழாவினை தொடக்கி வைத்து அனைவரையம்
வரவேற்று பேசினார்.
ஒய்வு பெற்றவரை வாழ்த்தி மகளிர் குழுவினர்
திருமதிகள் ஸ்ரீவித்யா, டெய்சிராணி, கீதாஞ்சலி மற்றும் ரதி பாடினார்கள்.
அடுத்து சிறப்பு அம்சமாக
ஒய்வு பெற்ற திருமதி
சின்னம்மாள் பற்றிய
சிறப்பு கண்ணோட்டத்தை
ஒலி ஓளி படமாக கண்ணன் மற்றும் பானு
தயாரித்து ஓளிபரப்பி
பாராட்டை தட்டிச் சென்றனர்.
ஓய்வு பெற்ற பெற்ற திருமதி சின்னம்மாள் தனது
கணவருடன் வெகுவிமர்சையாக
செக்சன்வாரியாக
கெளரவிக்கப்பட்டார்.
திருமதி ராதாலட்சுமி அவர்கள் ஒய்வு பெற்ற கண்ணம்பாள் அவர்களுக்கு பரிசுகள்
வழங்கினார்.
நாசர் திரு கண்ணன் மற்றும் துணைநாசர் திரு
காளிமுத்து
ஆகியோர் ஆடைகள் வழங்கி மரியாதை
செய்தனர்.
நமது முதன்மை நிருவாக
அலுவலர் அவர்களும் கோர்ட் மானேஜர் அவர்களும் ஓய்வு
பெற்றவரை வாழ்த்தி
பேசி பணிநிறைவு
சான்றிதழும் காசோலையும் வழங்கினார்கள்.
நமது பதிவாளர் தவிர்க்க
முடியாத காரணத்தால்
விழாவுக்கு வர இயலவில்லை என்றாலும்
அவரது வாழ்த்துரை பதிவு
செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.
அடுத்து திருமதி சின்னம்மாள் தனது
ஏற்புரையில் தற்போதைய
உச்ச மன்ற நீதிபதி மாண்புமிகு திருமதி பானுமதி உட்பட 32 நீதிபதிகளிடம் அலுவலக
உதவியாளராக வீடுகளில்
சிறப்பாக பணிபுரிந்ததாகவும் விழாவினை சிறப்பாக
நடத்தியமைக்கு நன்றி
தெரிவித்தார்.
முடிவில் இளஞைர் பிரிவு
திரு கண்ணன் தனது நன்றியுரையில் விழாவுக்கு
சிறப்பாக ஏற்பாடுகள் செய்த சிரஸதார்ர்
திரு. ராஐமாணிக்கம்,
திரு. கருத்த பாண்டியன்
திரு பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி கூறி
விழாவினை சிறப்பாக
முடித்து வைத்தார்.
31/07/2016
Lordship Hon'ble Thiru. Justice Huluvadi G. Ramesh, Judge, High Court, Madras/Executive Chairman, TNSLSA flagged of the propaganda van before inaugurating the training programme for Mediators conducted by Tamil Nadu Mediation and Conciliation Center. Lordship Hon'ble Thiru. Justice B. Rajendran, Judge, High Court, Madras, Hon'ble Thiru. Justice D. Krishnakumar, Judge, High Court, Madras, Thiru. RMT. Teekaa Raman, Member Secretary, TNSLSA, DR. G. Jayachandran, Principal Judge, CCC, Thiru. P. Rajamanickam, Chief Judge, SCC.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
தூய்மையான சென்னை
மாநகர உரிமையியல் நீதி
மன்ற வளாகம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கடந்த வாரம் மத்தியில்
காலை 9.15 மணியளவில்
சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற
வளாகத்திற்கு வந்த பொழுது வாளாகம் பசுமை+ தூய்மையடன் மிகவும் பிரம்மிப்பாக காட்சியளித்தது மனதிற்கு சந்தோசமாக இருந்தபடியால்
அதை இன்று பதிவு செய்கிறேன்.
# பசுமைக்கு இயற்கை மழை காரணம் என்றால் தூய்மைக்கு ?
யோசித்து கொண்டிருந்த
பொழுது தூரத்தில்
வெள்ளை நிற ஆடையடன்
நமது மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய பதிவாளர் துப்பரவு பணியாளர்களுடன் வாளகத்தில் துப்பரவு பணியை மேற்பார்வை
செய்து கொண்டு
இருந்தார்.
# கடுமையான நிருவாக பணியிலும் தினமும் காலையில் சீக்கரமே வந்து
மாநகர உரிமையியல், சிறுவழக்குகள், குடும்பநலம் ஆகிய நீதிமன்ற வாளாகங்களை
தூய்மையாக இருந்திட
பதிவாளரின் சீரிய முயற்சி
போற்றதக்கது. அவரின்
முயற்சிக்கு என் பங்காக
எனது நீதிமன்றம் மற்றும்
அலுவலகத்தை தூய்மையாக வைத்திடுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று முடிவு
செய்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்
சி. மூர்த்தி
31.7.2016
26/06/2016
Training to all the Courts staff in the post of Typist, Junior Assistant, Examiner cm Reader, and Record Clerk, The 315 staff almost participated in the programme.. The training program all expenses are barred by Tamil Nadu State Judicial Academy, Chennai. Thanks to the TNSJA, Chennai for planning get together of all the staff in one place through this event training program. Thanks for the Judges for spending the valuable time and sharing their experiences to them...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Address
Esplanade Road
Chennai
600104
