#மொடக்குறிச்சி_தொகுதி #வாக்காளர்
#மக்களுக்கு
#வணக்கம்.
Bjp Annamalai army
Tamil Nadu political
இன்றைய தினம் கோயம்புத்தூரில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான, அண்ணன் திரு எடப்பாடி K பழனிசாமி அவர்கள் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர், அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும், தமிழக முன்னாள் அமைச்சர், அண்ணன் திரு SP வேலுமணி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஐந்து ஆண்டுகளாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்கள், குழந்தைகள் யாருக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி முடிவுக்கு வரவிருக்கிறது. வாரிசுகளுக்காகவே நடந்து கொண்டிருக்கும் இந்த கோபாலபுரக் குடும்ப ஆட்சி, அகற்றப்படவிருக்கிறது. ஊழல் மலிந்த மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி அகன்று, தமிழகத்தில் நல்லாட்சி மலரவிருக்கிறது.
பொதுமக்களின் பெரும் எழுச்சி மிகுந்த உற்சாக வரவேற்பு, தமிழகத்தில் வரவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கான சாட்சி.
PM Modi in Nagercoil, Tamil Nadu
திட்டக்குடி அடுத்து #இளமங்கலம் #கிராமத்தில் காவல்துறை துணையோடு #ஓட்டுக்கு_பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.
14/04/2026
இந்த முறை தமிழகத்தில் நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து மக்களுக்கான நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்ற உறுதியோடு களத்தில் பயணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது திமுகவிற்கு படுதோல்வி உறுதியாகியிருக்கிறது. காரணம், தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டுகால திமுகவின் காட்டாட்சியை பார்த்து சலிப்படைந்து விட்டனர். திமுகவை தூக்கியெறிய முடிவெடுத்துவிட்டனர். கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் 39,999 போக்ஸோ வழக்குகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்திருக்கும் கொடுமை நடக்கிறது, கையாலாகாத துருப்பிடித்த கரங்களை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத முதல்வராக ஆட்சி நடத்தி முடித்திருக்கிறார் திரு. முக ஸ்டாலின் அவர்கள்.
பிரதமருக்கு கடைசி எச்சரிக்கை விடுவதாக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அவருக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். உங்களின் சகோதரி திருமதி.கனிமொழி அவர்கள், திரு.ஆ.ராசா, திரு.செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் உங்கள் மீதும் கூட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எந்த வழக்கில் இருந்தும் நீங்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை. ஜாமினில் தான் வெளியே இருக்கிறீர்கள். எனவே, உங்கள் எச்சரிக்கை எல்லாம் கோபாலபுரத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள் என எச்சரிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். முதல்வர் அதிகாரத்தை மக்கள் நலனிற்காகவும், தமிழக வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த முடியாத உங்களுக்கு தமிழக மக்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.
அதற்கு, உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களை அப்பகுதி மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்வார்கள் என்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! தமிழகம் நலம் பெறட்டும்!
13/04/2026
தமிழகம் இதுவரை கண்டிராத, மோசமான ஆட்சியை நடத்தி முடித்திருக்கும், தீயசக்தி திமுகவை புறக்கணிக்க வேண்டும் என முடிவெடுத்து, வாக்களிக்க காத்திருக்கும் தமிழக மக்களின் நம்பிக்கையை ஒருமனதாக பெற்றுள்ள, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் திருமதி. கிருத்திகா சிவகுமார் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
சில மாதங்களுக்கு முன்பு, வெள்ளகோவில் - சங்ககிரி வரை தேசிய நெடுஞ்சாலை 381A திட்டத்தால் 3,000 குடும்பங்களுக்கு பிரச்சனை என்பதை அறிந்து, நமது சட்டமன்ற உறுப்பினர் Dr CK சரஸ்வதி அவர்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்களை சந்தித்து முறையிட்டோம். நமது கோரிக்கையை ஏற்று திட்டத்தை நிறுத்தி வைப்பதாக நமது மத்திய அமைச்சர் அறிவித்தார்கள். இது தான் பாஜகவின் மக்கள் நல ஆட்சியின் அடையாளம்.
ஆனால், திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. மொடக்குறிச்சி பகுதியில் விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லை, மக்களுக்கு நிம்மதியில்லை, மொத்தத்தில் தமிழகத்திற்கு வளர்ச்சி கிடைக்கவில்லை.
வளர்ச்சியடைந்த தமிழகம் உருவாகவும், மக்களுக்கான நல்லாட்சி அமைந்திடவும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி. கிருத்திகா சிவகுமார் அவர்களை மொடக்குறிச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! தமிழகம் செழிக்கட்டும்!
12/04/2026
🚩அனைவருக்கும் வணக்கம்
நமது முன்னாள் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் நாளை மாலை 5:30 மணி அளவில் நமது வெற்றி வேட்பாளர் திருமதி கிருத்திகா சிவகுமார் அவர்களை ஆதரித்து மொடக்குறிச்சி நாள் ரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் எனவே நமது சொந்தங்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளவும்.
📍 மொடக்குறிச்சி நாள் ரோடு
🕜 மாலை 5.30pm
📅 13/04/2026..
15 வாக்குறுதிகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு
#திருடர்கள்_முன்னேற்ற_கழகம்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க அமைச்சரே !
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Avarampalayam
Coimbatore
641006
