22/08/2025
அன்பு கொண்ட உறவுகளே
என் அன்பு தம்பிகளே
சிந்திப்பீர்...
உங்கள் தலைவரை திரையில் தேட வேண்டாம்!
உங்களோடு இணைந்தே
இருப்பதால் என்னவோ.. நமக்கான தலைவர்களை
நாமே மறந்துவிடுகிறோம்...
கதிரவன் உதிப்பதற்கு முன்பே
எங்கள் தலைவரின் அழைப்போடு தொடங்கியது இன்றைய விடியல்
தோழர் கோத்தகிரி நம்ம பையன் விஜய் மாநாட்டில் இறந்துவிட்டதாக செய்தி பார்த்தேன் யார் ?என்ன தகவல் என கேட்டு நம்மால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என பார்க்கவும் என
சொல்ல அடுத்த நிமிடமே நம் தோழர்களோடு தொடர்பு கொண்டு
பேசினேன்
கோத்தகிரி அண்ணன் ராஜீ அவர்களோடு தொடர்பு கொண்டு
தகவலை கேட்டு தம்பி ரித்திக் அவர்களின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து
ரித்திக் தந்தை குமார் அவர்களும் கோத்தகிரி அண்ணன் ஆறுமுகம் அவர்கள் உடன் இருக்கும் தகவல் தெரிந்து அண்ணன் ஆறுமுகம் அவர்களை தொடர்பு கொண்டு
பேசினேன் பிறகு
நமது மதுரை மாவட்ட செயலாளர் தோழர் சந்துரு மற்றும்
அண்ணன் விடுதலை வீரன்
அக்கா முத்துராக்கு அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து
சமய நல்லூர் காவல்நிலையம் சென்று அவர்களோடு இருந்து வேண்டிய பணிகளை செய்ய தகவல் கொடுத்தேன்
உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தோழர் சந்துரு அவர்கள்
பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் துணை நின்று தம்பி ரித்திக் உடல் உடற் கூர் ஆய்வு செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு
அன்னூர் மின்மயானம் நோக்கி நகர்ந்து செல்லும் வரை உடன் இருந்து நம் உறவுகளுக்கு துணை நின்றோம்
விஜய் மாநாட்டிற்கு தானே சென்றுள்ளார் நமக்கென்ன என இருக்காமல் தகவல் பார்த்ததும் கோவையில் இருந்து மதுரையிலும் நீலகிரியிலும் திருப்பூரிலும் உள்ள தோழர்களை இயங்க வைத்து
நம்மால் முடிந்த உதவியை
உடனே செய்ய வேண்டும் என்ற என்னம் தான் எங்களை இயக்கப்பணிகளில்
தொடர்ந்து இயங்க (ஒட) வைக்கிறது
எடுத்துக்கொண்ட பணியில் மனநிறைவு ஏற்படும் வரை எந்த வித சோர்வும் காட்டக்கூடாது என்று
எங்களை வழிநடத்துவது
எங்கள் தலைவர் அண்ணன் வெண்மணி அவர்களின் தலைமை
எங்கள் தலைவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை இப்போது எங்களை சிந்திக்க வைக்கிறது
தம்பி ரித்திக் விஜய் ரசிகராக தொண்டனாக இருப்பது அவர் தவறல்ல அவர் நம்மை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கான பணிகளை நாம் இன்னும் செய்ய தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை...
மக்களிடம் செல்வோம் மக்களோடு இருப்போம் மக்கள் பணி நேர்மையோடு செய்வோம்...
தோழமையுடன்
பழ பேரறிவாளன்
திராவிடத் தமிழர் கட்சி
தலைமை நிலைய செயலாளர்
08/07/2025
வீரவணக்கம்....
எங்கள் தோழர் அசோகன் அவர்களுக்கு.... வீரவணக்கம்..
தோழர் என்ற சொல்லிற்கு
விடை என்ன என்று கேட்டாள்
அதற்கு பெயர் அசோகன் என சொல்லும் அளவிற்கு
மாற்று இயக்கத்தவரும்
மாற்று கொள்கை கொண்டோரும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் தனது
செயல்பாடுகளால்
அனைவரின் அன்பிற்குமான சொந்தக்காரர் தலைவர் அண்ணன் வெண்மணி அவர்களின் மீது நம்பிக்கை வைத்து இறுதி வரை எந்த நிலையிலும் தடம் மாறாமல் இருந்தவர்
எங்கள் உயிரினும் மேலான எங்கள் தலைவரின் ஆழ் மனதில் நிலைத்து நிற்கும் அன்புத் தோழர்
அரசியல் என்ன என்று தெரியாமல்
இயக்கப்பணிகளுக்காக வந்தபோது
உடன் இருந்து ஊக்கம் தந்து
செயல்பட வைத்தவர்
திராவிடத் தமிழர் கட்சியின்
துணை பொதுச் செயலாளராக இருந்தவர்
எங்கள் #தோழர்
#அண்ணன் #அசோகன்
அவர்களின் நினைவுநாள் ஜுலை 8ல்
தோழரின் நினைவுகளோடு
அவர் விட்டுச் சென்ற பணிகளை
முன்னெடுப்போம்....
#அண்ணன்_வெண்மணி அவர்களின் தலைமையில் என உறுதியேற்போம்..
தோழமையுடன்
பழ பேரறிவாளன்
28/06/2025
கோவையில் இன்று
தமிழ்நாடு அரசின்
பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மாண்புமிகு அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை
நமது தலைவர்
மக்கள் போராளி அவர்கள்
மரியாதை நிமித்தமாக சந்தித்தார் நிகழ்வில்
திமுக மாநில மாணவர் அணி செயலாளர் அண்ணன் இராசிவ்காந்தி அவர்கள் உடன் இருந்தார்
தி.த.க மாநில துணை பொதுச் செயலாளர்
தோழர் ஆதித்தமிழன்
தலைமை நிலைய செயலாளர் தோழர் பழ பேரறிவாளன்
கோவை மாநகர் மாவட்ட துணை தலைவர்
தோழர் காளீஸ்வரன்
வழக்கறிஞர்
தோழர் விஜயகுமார்
வழக்கறிஞர்
தோழர் அஜித்
தோழர்கள் உடன் இருந்தனர்
28/06/2025
கோவையில் இன்று
நமது தலைவர்
மக்கள் போராளி அண்ணன் வெண்மணி அவர்களும்
தமிழ்புலிகள் கட்சியின் தலைவர்
அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்களும்
மரியாதை நிமித்தமாக சந்தித்து
நடப்பு அரசியல் குறித்தும்
சமுக விடுதலைக்கு தோழர்களின் பணிகள் குறித்து ஆரோக்கியமான உரையாடலுடன்
கருத்துகளை முன் வைத்து உரையாடினர்
30/05/2024
தேர்தல் பிரச்சாரத்தின் போது
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் சாவி
தமிழ்நாட்டில் உள்ளது என்று
#தமிழர்களை_திருடர்கள் என்று கேவலப்படுத்தி
#ஒரு_நாட்டின்_பிரதமர்_போல் நடந்து கொள்ளாமல்.
#ஆர் #எஸ்_எஸ்ஸின்_ஏஜெண்ட் போன்று நடந்து கொண்டதை கண்டித்தும்
#ஒடிசாவை_ஒரு_தமிழன்_ஆள்வதா ! என்று. பிரிவினையை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அமித்ஷா கண்டித்து
தமிழ்நாட்டிற்கு வரும் பிரிவினைவாதிகள்
#மோடி
#அமித்ஷாவே
#திரும்பிப்_போ என்ற முழக்கத்தை முன் வைத்து
#மதுரை_பெரியார்_பேருந்து #நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை முன்பு
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கு ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
#கருப்பு_கொடி_போராட்டத்தில் #திராவிடத்_தமிழர்_கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்
#தோழர் #விடுதலை_வீரன் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டோம்
#மோடி_வருகையை_கண்டித்து #திராவிடத்_தமிழர்_கட்சியின் #பொதுச்_செயலாளர்
#தோழர் #நெல்லை_கதிரவன் அவர்கள் கண்டன உரையாற்றினார்
நிகழ்வில் திராவிடத் தமிழர் கட்சியின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்
02/10/2023
தமிழ்நாடு அரசே கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையே
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டி தனத்தை கைவிடு
பெண்கள் மீதும் பொதுமக்களையும் தாக்கிய காவல்துறையை கேள்வி கேட்ட திராவிடத் தமிழர் கட்சியின் தோழர்கள் மீது கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்திய காவல்துறையினரே வன்மையாக கண்டிக்கிறோம்
கன்னியாகுமாரி மாவட்டத்தில் பதற்றம் ..அருந்ததியர் மக்கள் 5 தலைமுறையாக குடியிருக்கும் வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்கிட கோரி...
காந்திபிறந்த நாளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம்..
திராவிடத்தமிழர் கட்சி தோழர்கள் மீது தடியடி கைது..
பெண்கள்,சிறு குழந்தைகள் மீது சரமாரி தாக்குதல்..திராவிடத்தமிழர் கட்சியின் ஏர்வாடி பொறுப்பாளர் கையையில் ரத்த காயம் நெல்லை மாவட்ட செயலாளர் முழங்கால் உடைப்பு காவல் சீருடை அல்லாத உளவுத்துறை காவலர்கள் அத்துமீறல் வன்மையாக கண்டிக்கிறோம்.
04/09/2023
சாதியத்தை உயர்த்தி
எங்களை வேசி மகன் என
இழிவுபடுத்தும்
#முடை_நாற்றம்_வீசும்
#சனாதனத்தை_ஒழிப்போம்
தமிழ்நாடு அரசின் அமைச்சர் #அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் அவர்களின் தலைக்கு விலை வைத்த
#காவி #கழிசடைகளே
#கோடிகள் #விலை வைத்தால் #தொட்டுவிட இது ாடு அல்லது
கோடிக்கணக்கான
#கருப்பு #சிவப்பு #நீலம் கலந்த
கருத்தியல் தலைவர்களின் தொண்டர்கள் துணை நிற்கும் தமிழ்நாடு
#சனாதனம் #ஒழியட்டும்
#அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் அவர்களுக்கு
கருப்பு சட்டை கருத்தியல் தலைவர் #அண்ணன் #வெண்மணி தோழர்கள் #துணை_நிற்போம்