இந்திய அரசியலில் இரண்டு வகையான கட்சிகள்தான்.
Cadre Based Party - தத்துவம் சுமக்கும் தொண்டர்கள். தலைவர்கள் இரண்டாம்பட்சம்தான். அமைப்பாக கொள்கைகளை முன்நிறுத்தி அரசியல் செய்தாலும், தேர்தல் வெற்றிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எல்லாவகையான குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும். அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் வெற்றிக்காக சில சமரசங்கள் இருக்கும். மக்கள் நம்பிக்கையை பெற காலம் பிடிக்கும். ( அண்ணா, கலைஞர், ஸ்டாலின்)
Mass Based Party - தலைமையை சுமக்கும் தொண்டர்கள். கொள்கை இரண்டாம்பட்சம்தான். பெரிய அளவில் கொள்கைகளை முன் நிறுத்தாவிட்டாலும், அவர்களுக்கென கொள்கைகள் இருக்கும். தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதாக மாறும். தத்துவார்த்த உரையாடல்களில் பங்கேற்க தேவையில்லை. நாட்டின் சிக்கல்களை் எளிதாக கடந்து போக முடியும். வசீகரமான தலைவர்கள் மிக எளிதாக அதை சாத்தியப்படுத்துவார்கள். (எம்ஜிஆர், ஜெயலலிதா)
Cadre Party க்கு ஆளுமைமிக்க தலைவர்களும் காலமும் அமையும்போது அவை தன்னளவில் Mass Party ஆகவும் இயங்கும் தன்மை உருவாகும். காங்- நேரு, கம்யூனிஸ்ட்டு- ஜோதிபாசு, பாஜக- மோடி, திமுக- ஸ்டாலின்
தமிழ்நாட்டில்
Cadre Based Parties -
திமுக,
காங்கிரஸ்,
இடதுசாரிகள்,
விசிக
மதிமுக,
நாம் தமிழர்,
பாமக - ராமதாஸ்
பாஜக
Mass Based Parties -
அதிமுக
தவெக
அமமுக
தேமுதிக
பாமக - அன்புமணி
தமாகா
மநீம
அரசியல் சூழ்நிலைகளை முன்வைத்து இந்த இரண்டு பிரிவுகளும் கலவையான கூட்டணிகளாகவே தேர்தலை சந்திக்கும். அதுதான் கள யதார்த்தம். நடைமுறை சாத்தியமும் கூட.
தேர்தலை சந்திக்கிறபோது Cadre Based Party கூட்டணியை விட, Mass Based Party கூட்டணியில் Vote Transfer இயல்பாக நடந்து அவை அதிக வலிமை பெறுகின்றன. (அதிமுக+தேமுதிக) (அதிமுக+பாமக)
Mass Based Parties கூட்டணியாக இணைவது எளிதானது. Cadre Based Parties கூட்டணியாக இணைந்து செயலாற்றுவது சற்று கடினமானது.
புதிதாக ஒரு Mass Based Party உருவானால், அது பெறப்போகும் முதன்முறை வாக்குகளில் 75 சதவிகிதம் என்பது Mass Based Party பட்டியலில் இருந்தே நகரும்.
புதிதாக ஒரு Cadre Based Party உருவானால், அது பெறப்போகும் வாக்குகளில் 75 சதவிகிதம் என்பது Cadre Based Party பட்டியலில் இருந்தே நகரும்.
தவெக பெறப்போகும் வாக்குகளில் 60-70 சதவிகிதம் அதிமுகவிடமிருந்தே நகரப் போகின்றன.
Mass Party க்கான கவர்ச்சி, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக எடப்பாடி பழனிசாமியை விட விஜய் முன் நகர்கிறார். இரண்டு Mass Parties தங்களுக்குள் மோதும்போது தலைமைக்கான கவர்ச்சி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. 
2026 பேரவைத் தேர்தல் முதலமைச்சர் முக ஸ்டாலின் சொல்வதுபோல் திமுக- பாஜக போட்டி இல்லை. எடப்பாடி சொல்வதுபோல் திமுக- அதிமுக போட்டி இல்லை. விஜய் சொல்வதுபோல் திமுக- தவெக போட்டியும் இல்லை.
இது அதிமுக- தவெக தேர்தல்.
நம்ம SIHS Colony
ஒன்று சேர்வோம்.. வென்றெடுப்போம்...
Watch | "சிங்காநல்லூரின் முதல் பெண்
வேட்பாளர் ஆகியுள்ளேன்; அனைவரின் ஆதரவுடன் முதல் பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையைப் பெறுவேன்”
- சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி மோகன் பேட்டி
| | |
06/04/2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை #சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக அவர்கள் போட்டி....
#நம்மசிங்காநல்லூர்
04/04/2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை #சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
#நம்மசிங்காநல்லூர் #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
15/03/2026
தமிழ்நாட்டில் ஏப்.23ஆம் தேதி வாக்குப்பதிவு
| | | |
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Coimbatore
641014
