28/03/2026
Portal for grievance registration (குறைகளை பதிவு செய்வதற்கான இணையதளம்) - http://icts.smartccmc.com
28/03/2026
16/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 தொடர்பாக, 120-கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பந்தைய சாலை பகுதியில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் நிர்மலா மகளிர் கலைக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், உதவி ஆணையர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் 16.03.2026.