கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி

Share

Kavundampalayam Assembly constituency is situated in Coimbatore District, Tamilnadu state.

26/03/2021

கரோனா ஊரடங்கு காலத்தில்கூட சுங்கக் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடித்த ஒரே அரசாங்கம் உலகத்தில் நம்நாட்டை ஆளுகின்ற பாஜக அரசாங்கம்தான்.

10/11/2020

ஊடகங்களுக்கான செய்தி சென்னை, 10.11.2020

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க, ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - சுயஆட்சி இந்தியா, தமிழ்நாடு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் 7பேரின் விடுதலை பற்றி ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஏற்பட்டுள்ள கால தாமதத்தின் மீது, தற்போது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

•• இவர்கள் 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

•• இவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, 09.09.18 அன்று தமிழக அமைச்சரவையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

•• தமிழகத்திலுள்ள ஓரிரு கட்சிகள் தவிர அனைத்து கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்/அமைப்புகள் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.

என்றபோதும் இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் இதன்மீது எந்தவொரு முடிவும் எடுக்காமல், அமைச்சரவைத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார். இது ஒருபுறம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானத்தைப் புறம் தள்ளுவதாகவும், மறுபுறம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் புண்படுத்துவதாகவும் இருக்கிறது.

இனியும் காலந்தாழ்த்தாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் மதித்து, உடனடியாக ஒப்புதல் அளித்து, 7பேரின் விடுதலைக்கு வழிசெய்ய வேண்டும் என்று சுயஆட்சி இந்தியா, தமிழ்நாடு கோருகிறது.

ஊடகப் பிரிவு
சுயஆட்சி இந்தியா
தமிழ்நாடு.

117 - கவுண்டம்பாளையம் 21/04/2016

117 - கவுண்டம்பாளையம் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் என்ற நகரப் பகுதியை மையமாகக் கொண்டு, தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது

Photos 10/04/2016
09/04/2016

தி ஹிந்து வெளியிட்டிருந்த #கவுண்டம்பாளையம் தொகுதி சர்வே...

ரேசன் விநியோகம் 56%
அரசு மருத்துவ வசதிகள் 62%
மின் விநியோகம் 74%
போக்குவரத்து கட்டமைப்பு 68%
வேலை வாய்ப்பு 72%
சட்டம் ஒழுங்கு 72%
விளையாட்டு திடல்/நூலகம் 62%
பள்ளி கல்லூரிகள் 73%
அதிகாரிகள் செயல்பாடு 70%
குடிநீர் வசதி 71%
சாலை வசதிகள் 71%
பொது சுகாதாரம் 40%

117 – கவுண்டம்பாளையம் 09/04/2016

கோவை மாவட்டத்தின் பெரிய தொகுதி கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் என்ற நகரப் பகுதியை மையமாகக் கொண்டு, தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ல் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், தூடியலூர், காளப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களையும், புறநகர்ப் பகுதியில் முக்கியமான பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தையும் உள்ளடக்கியது. மேலும் சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளிலிருந்து சில சில பகுதிகளைக் கொண்டு கவுண்டம்பாளையம் தொகுதி உருவானது. இங்கு விவசாயமே மிக முக்கிய வாழ்வதரமாகவும், அடுத்ததாக செங்கல் உற்பத்தி, குறுந்தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்துவருகின்றன. சர்வதேச விமான நிலையம், மருதமலை முருகன் கோயில், அனுவாவி சுப்பிரமணியர் கோயில் ஆகியை கவுண்டம்பாளையம் தொகுதியின் குறிப்பிடத்தகுந்த இடங்கள். இத்தொகுதியில் வேளாளக் கவுண்டர்கள், ஒக்கலிக கவுடர்கள் அதிகளவிலும், அதற்கு அடுத்தபடியாக அருந்ததிய, பழங்குடியின மக்களும் வாக்கு வங்கியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இந்த தொகுதிகுட்பட்ட தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகளால் ஏற்பட்டு வரும் சூழல் மாசுபாடு, மணல் கொள்ளை, வன விலங்குகள் ஊடுருவல் ஆகியவையும், பெரிய தொழிற்சாலைகள் இல்லாதது, மாநகராட்சியில் இணைந்த புதிய பகுதி என்பதால் வளர்ச்சிப் பணிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. மேலும் நொய்யல் நதிக்கும், பவானியாற்றுக்கும் இடையே உருவாகி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலில் கலக்கும் கெளசிகா நதி இந்த தொகுதியில் தான் உள்ளது. இயற்கை நீராதாரமான இந்த நதி பல்வேறு காரணங்களால் முற்றிலுமாக அழிவைச் சந்தித்துள்ளது. இந்நதியை மீட்டெடுத்து, அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டுமென்பது இப்பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கை. இதுதவிர இத்தொகுதியின் அங்கமான சர்வதேச விமானநிலைய விரிவாக்கம் கோவை மாவட்ட தொழில்முனைவோரின் நீண்டகாலக் கனவாக இருந்து வருகிறது. மோட்டார், பம்புசெட், கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் குறுந்தொழில் மையங்கள் இத்தொகுதியில் அதிகம் இருப்பதால். குறுந்தொழில் முனைவோர்களை பாதுகாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. கோவை வடமேற்குப் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடி மக்கள் இத்தொகுதியின் நிரந்தர வாக்காளர்கள். எனவே அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கடமையும் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருக்கு இருக்கிறது. 2011ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றவர் அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி. தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் : கோயம்புத்தூர் வடக்கு தாலுகா (பகுதி) வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், நாய்க்கன்பாளையம், தடாகம் (ஆர்.எப்), ஆனைக்கட்டி (வடக்கு), ஆனைக்கட்டி (தெற்கு), வீரபண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரநத்தம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி கிராமங்கள், பெரியநாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), நரசிம்ம நாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), இடிகரை (பேரூராட்சி), விளாங்குறிச்சி (சென்சஸ் டவுன்), சரவணம்பட்டி (பேரூராட்சி), சின்னவேடம்பட்டி (பேரூராட்சி), வெள்ளைக்கிணறு (பேரூராட்சி), அசோகபுரம் (சென்சஸ் டவுன்), குருடம்பாளையம் (சென்சஸ் டவுன்), துடியலூர் (பேரூராட்சி) மற்றும் கவுண்டம்பாளையம் (பேரூராட்சி). 2011 - தேர்தல் ஒரு பார்வை வரிசை எண் வேட்பாளர்கள் கட்சி பதிவான வாக்குகள் 1 அருகுட்டி.V.C அதிமுக 137058 2 சுப்பிரமணியன்.T.P திமுக 67798 3 நந்தகுமார்.R பாஜக 6175 4 கணேசன்.D சுயேச்சை 1749 5 வசந்தகுமார்.D சுயேச்சை 1436 6 விஸ்வநாதன்.V லோக் சட்ட கட்சி 1331 7 பார்த்திபன்.P ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 654 8 குமணன்.R சுயேச்சை 584 216785 Source link

http://www.tamil.newsindia247.com/117-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

117 – கவுண்டம்பாளையம் கோவை மாவட்டத்தின் பெரிய தொகுதி கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி. கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் என்ற நகரப் பகுதியை மையமாகக் கொண்டு, தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக…

06/04/2016

117 Kavundampalayam Coimbatore North Taluk (Part)
Vellamadai, Kondayampalayam, Agraharasamakulam,
Naickenpalayam, Thadagam R.F., Anaikatti (North), Anaikatti
(South), Veerapandi, Chinnathadagam, Nanjundapuram,
Somayampalayam, Pannimadai, Keeranatham, Kallipalayam
and Vellanaipatti villages.
Periyanaicken-palayam (TP), Narasimhanaicken-palayam
(TP), Idigarai (TP), Sarcarsamakulam (TP), Kalapatti (TP),
Vilankurichi (CT), Saravanampatti (TP), Chinnavedampatti
(TP), Vellaikinar (TP), Ashokapuram (CT), Kurudampalayam
(CT), Thudiyalur (TP) and Kavundampalayam (TP).

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


கவுண்டம்பாளையம்
Coimbatore