03/06/2026
ஒரு கொடி ! ஒரு தலைவர் !! என்றும் #தமிழ்திரு வழியில்
this pages contains imk party news , information, and videos ,this pages maintained by IT WING team
03/06/2026
ஒரு கொடி ! ஒரு தலைவர் !! என்றும் #தமிழ்திரு வழியில்
01/06/2026
அனுஷம் குறள் வேந்தர் பேரவை சார்பாக இன்று திருவள்ளுவர் பிறந்தநாளை முன்னிட்டு வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில்
மீனாட்சிபுரம்
கதிர்வேல் பெருமாள் திருமண மண்டபம் நடைபெற்றது.
நிகழ்வில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழ்த் திரு. அர்ஜுன் சம்பத் அவர்கள்
சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சிக்கு அனுஷம் குறள் வேந்தர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. வை. சிவராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் திரு வி. எஸ். ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வைத்தார்.
அனுஷம் குரள் வேந்தர் பேரவை துணை ஒருங்கிணைப்பாளர்
திரு. சுபா. முத்து அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்தார்
ஆன்மீக சொற்பொழிவாளர்
திரு. நாஞ்சில் வீரா, புதிய உலகம் நிறுவனர் முனைவர்
திரு.சதீஷ் கிருஷ்ணா,
திரு. மா. வெங்கடாஜலபதி, ஆசிரியர் திருமதி.ஆண்டாள் ஆகியோர் உரையாற்றினர்.
31/05/2026
இன்று இந்து மக்கள் கட்சி தலைவர்
அர்ஜுன் சம்பத் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டமாக
இன்று காலை தமிழகத்திலும் பி எம் ஸ்ரீ கல்வித் திட்டத்தையும் நவோதா பள்ளிகளை தமிழகத்திலும் அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!!
Arjun Sampath
30/05/2026
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடம் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்த் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் கோரிக்கை மனு
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
கோரிக்கை! புகார் மனு!
பெறுநர்: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தமிழக அரசு தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை சென்னை
வழி: உயர்திரு திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், திருப்பூர்
பொருள்: தமிழகத்தில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களை தடை செய்ய கோருதல்
கோக்ரச் ஜனதா பாட்டி CJP எனும் பெயரில் ஆன்லைன் கட்சி ஒன்று துவங்கப்பட்டு நான்கு நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் இதில் இணைந்து உள்ளதாக இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் வழக்கு விசாரணை ஒன்றில் தெரிவித்த கருத்து *வேறு வேலையில்லாத இளைஞர்கள் சமூக ஆர்வலர் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் எனும் பெயரில் நீதித்துறையின் மீது விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.
இத்தகைய இளைஞர்கள் கரப்பான் பூச்சியை போல இந்த சமூகத்தை அழித்து வருகிறார்கள். நீதித் துறையின் மாண்பை குலைத்து வருகிறார்கள். நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்து வருகிறார்கள் என்கிற கருத்தை வெளியிட்டார்
இது இந்திய இளைஞர் சமூகத்திற்கு எதிரான கருத்து என்கிற ரீதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆன்லைன் மூலமாக துவங்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலமாக பிரபலமாகி வருகிறது.
தமிழகத்தில் அமைதியின்மை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய தேர்தல் களத்தில் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்,
மம்தா பானர்ஜி தலைமையிலான திருநமுள் காங்கிரஸ் மேலும் ராகுல் தலைமையிலான சோனியா காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இன்டி கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் இதை இளைஞர்களின் புரட்சி என்று கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை வரவேற்று கருத்து பரப்பி வருகிறார்கள்.
இந்தியாவைச் சார்ந்த இளைய தலைமுறையினர் அதாவது ஜென் ஜீ இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை மற்றும் ஏழ்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேபாளத்தை போல வங்கதேசத்தை போல இலங்கை போல மாணவர்கள் இயக்கம் மூலமாக இந்தியாவிலும் புரட்சி செய்ய தயாராக உள்ளனர்.
நரேந்திர மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியை,வன்முறையை தூண்டக்கூடிய வகையில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இணையதளங்களில் செயல்படுகிறது.
கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை அதன் சமூக ஊடகப் பக்கங்களை முடக்கி இந்திய அரசு அரசு தடை செய்துள்ளது. தொடர்ந்து வேறு பெயரில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இணையதளங்களில் செயல்படுகிறது.
இந்திய இளைஞர்கள் அனைவரும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியில் சேர்ந்து விட்டது போல காங்கிரஸ் ஜோதி மணியும்,திமுக கனிமொழியும் கம்யூனிஸ்டுகளும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உண்மையில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சமூக ஊடகங்களை பின்பற்றுவோர் வங்காளதேசம் பாகிஸ்தான் அமெரிக்கா உள்ளிட்ட பகுதியில் உள்ளவர்கள் 90% இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் 9% மட்டுமே மட்டும் இந்தியாவை சார்ந்தவர்கள்.
ஆனால் இந்தியாவிற்கு எதிராக இந்திய இளைஞர்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் ஜார்ஜ் சோர்ஸ் உள்ளிட்டோரும்
இந்திய எதிரி நாடுகளான பாகிஸ்தானம் பங்களாதேஷ் உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளும் இந்த கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை துவங்கி இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியில் பணியாற்றிய
அபிஜித் என்ற நபர்தான் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை துவக்கி உள்ளார். இதன் சமூக ஊடக பக்கங்களை நிர்வகித்து வருகிறார்.
இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய மக்களை தவறாக வழி நடத்துவதற்காக கரப்பான் பூச்சி மக்கள் கட்சி துவக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் இதுகுறித்து விழிப்புடன் இருக்கிறார்கள்.
திமுகவும் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ் கட்சியும் இதன் சார்பு ஊடகங்களும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி செயல்படுவதை ஆதரித்தும் பரப்பியும் உதவி செய்தும் வருகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் டி ஒய் எப் ஐ அமைப்பு மதுரையிலும் கோவையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கரப்பான்பூச்சி கட்சிக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
உச்சநீதி மன்ற *தலைமை நீதிபதி சூர்யகாந்த்
அவர்களை அவமதிக்கும் அவதுறு பரப்பும்
விளம்பரங்கள், *இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை எதிர்த்தும், வெறுப்பு பிரச்சாரம்
செய்யும் தேச விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்
கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை அதன் ஆதரவாளர்களை சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும்.
*இதற்குப் பின்னணியில் உள்ளவர்களை தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கப்படுகிறது
30/05/2026
திருப்பூரில் ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப் பள்ளி திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது
திருப்பூரில் நேற்று ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப் பள்ளியின் திறப்பு விழா வெகு விமர்சையாகவும், ஆன்மிக மற்றும் கலாச்சார சிறப்புகளுடன் கூடியதாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்த் திரு Arjun Sampath அவர்கள்,
பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான திரு காடேஸ்வரா தங்கராஜ்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர் கோட்டத் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி,
விவேகானந்தா சேவா டிரஸ்ட் செயலாளர் திரு எக்சலான் ராமசாமி,
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பேத்தி திருமதி மரகதம், மற்றும்
தேசிய சிந்தனை பேரவை மாநில அமைப்பாளர் திரு முரளி முத்துவேலு ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தலைவர் திரு கொங்கு ராமகிருஷ்ணன் ,
Step In Digital Marketing நிர்வாக இயக்குநர் திரு Hariharan Premkumar ,
ஆல் வின்னர் ஏஞ்சல் இன்ஸ்டிடியூஷன் நிர்வாகி திரு DrThangaraj Palanisamy , மற்றும்
இயற்கை ஆர்வலர் திரு கோபால்சாமி ஆகியோர் வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றனர்.
விழாவின் நிறைவில், ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப் பள்ளியின் நிறுவனர்களான திரு கார்த்திகை பிள்ளை மற்றும் திருமதி பாலாமணி கார்த்திகை பிள்ளை ஆகியோருக்கு அனைவரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, இசை மற்றும் நாட்டியக் கலையின் வளர்ச்சிக்கு இப்பள்ளி சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என வாழ்த்தினர்.
"இசையும் நாட்டியமும் தமிழரின் பாரம்பரியச் செல்வங்கள்; அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உயரிய பணியை ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப் பள்ளி சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்கள்." 🎉🙏🏻🌹
28/05/2026
நாளை #திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கிறார் #இந்து_மக்கள்_கட்சி தலைவர் தமிழ்த் திரு #அர்ஜுன்சம்பத் அவர்கள் 🚩
27/05/2026
இந்து மக்கள் கட்சியின் கிரீடத்தில் பொருத்தப்பட்ட மற்றொரு ரத்தினம்....
திருப்பரங்குன்ற தீர்ப்பையடுத்து பெறப்பட்ட இன்னொரு மாபெரும் வெற்றி
இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் Surya Imk சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவின் தீர்ப்பு பின்வருமாறு...
Madras High Court, Bakrid பண்டிகையின் போது பொதுமக்கள் இடங்களில் அல்லது அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படாத பகுதிகளில் மாடு அறுக்கப்படக்கூடாது என்று Government of Tamil Nadu அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் GR சுவாமிநாதன் மற்றும் V லக்ஷ்மிநாராயணன் அமர்வு, விலங்குகளை யார் வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அறுக்க முடியாது என்று கூறியது. அறுப்பு நடைபெற வேண்டுமெனில் அது அரசு அங்கீகரித்த slaughterhouse அல்லது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கின் போது நீதிமன்றம்:
> “எந்த இடத்திலும் விருப்பப்படி அறுப்பு செய்ய முடியாது” என்று கூறியது.
சட்டத்தை சரியாக அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு அரசியல் செயற்பாட்டாளர் தாக்கல் செய்தார். அவர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இடங்களில் மாடுகள் மற்றும் கன்றுகள் அறுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், கோயம்புத்தூர் D2 செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த பதிலில் “தற்காலிக இடங்கள்” அறுப்புக்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்ததை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. தற்காலிக கூடாரங்களை எப்படி சட்டபூர்வ slaughter area ஆக கருதலாம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதேபோல், எந்த இடம் அறுப்பிடமாக இருக்க வேண்டும் என்பதை காவல்துறை தீர்மானிக்க முடியாது என்றும், அதற்கு உரிய உள்ளூராட்சி அல்லது சட்டப்படி அதிகாரம் பெற்ற அமைப்புகளே தீர்மானிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
முன்னதாக மனுதாரர், பக்ரீத் காலத்தில் சட்டவிரோத மாடு அறுப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தார். நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் உயர்நீதிமன்றத்தை அணைந்தார்.
நீதிமன்றம் 30 ஜூலை 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முந்தைய உயர்நீதிமன்ற உத்தரவு, 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசாணை மற்றும் Tamil Nadu Urban Local Bodies Rules, 2023 ஆகியவற்றையும் குறிப்பிட்டது.
தமிழ்நாட்டில் மாடு அறுப்புக்கு முழுமையான தடை இல்லை. ஆனால் சட்டத்தில் கூறப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாலே அது அனுமதிக்கப்படும் என்றும், அது குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இறுதியாக, இந்த வழக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்ததாக இருந்தாலும், இந்த சட்ட விதிகள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என கூறி, தலைமைச் செயலாளர் மற்றும் DGP ஆகியோருக்கு தேவையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
25/05/2026
#அர்ஜுன்சம்பத்_கைது
இந்து மக்கள் கட்சி கண்டனம்
25/05/2026
#அர்ஜுன்சம்பத்_கைது
இந்து மக்கள் கட்சி கண்டனம்
24/05/2026