Dr.M.Wasim Raja

Directions

Dr.M.Wasim Raja Social Worker, Natural Lover, Farmers Supporter
(22)

22/09/2026
🌲 180 அடி உயரத்தில், 738 நாட்கள். ஒரு மரத்துக்காக ஒரு பெண் எடுத்த உறுதி.1997 டிசம்பர் 10 அன்று, Julia Butterfly Hill என்...
21/09/2026

🌲 180 அடி உயரத்தில், 738 நாட்கள். ஒரு மரத்துக்காக ஒரு பெண் எடுத்த உறுதி.

1997 டிசம்பர் 10 அன்று, Julia Butterfly Hill என்ற 23 வயது இளம்பெண் கலிபோர்னியாவில் இருந்த ஒரு பிரம்மாண்ட ரெட்வுட் மரத்தில் ஏறினார்.

அந்த மரத்தின் பெயர் லூனா. வயது சுமார் 1000 ஆண்டுகள். அதை வெட்ட முடிவு செய்திருந்தார்கள்.

முதலில் சில நாட்கள் இருந்துவிட்டு இறங்கலாம் என்று தான் நினைத்தார். ஆனால் நடந்தது வேறு.

சுமார் 180 அடி உயரத்தில் இருந்த ஒரு சிறிய மரப்பலகை தான் அவரது வீடானது. கடும் புயல், உறைய வைக்கும் மழை, பலத்த காற்று, தனிமை என அனைத்தையும் தாங்கினார். கீழே இருந்து ஆதரவாளர்கள் உணவு, தேவையான பொருட்களை கயிறு மூலம் அனுப்பினார்கள். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார்.

நாட்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாகின. இரண்டு வருடங்களை தாண்டியது.

கடைசியில் 1999 டிசம்பரில், லூனா மரத்தையும் அதை சுற்றியுள்ள காட்டுப் பகுதியையும் நிரந்தரமாக பாதுகாப்பதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் Julia கீழே இறங்கினார்.

மரத்தில் ஏறும்போது அவருக்கு வயது 23. இறங்கும்போது 738 நாட்கள் கடந்திருந்தன.

லூனா இன்றும் உயிருடன் நிற்கிறது. 💚

சில நேரங்களில் நாம் நம்பும் ஒன்றை காக்க வேண்டும் என்றால், அசையாமல் நிற்க வேண்டும். அது 180 அடி உயரமாக இருந்தாலும் சரி...

21/09/2026

கசப்பான உண்மை தற்போது விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது அதுவும் வயதானவர்கள் தான் விவசாயம் செய்கிறார்கள்...

கார்பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ளும் நடிகர் அஜித்குமார் திரைபிரபலம் என்பதால் கொண்டாடும் சமூகம் நரேன் கார்த்திகேயனை மற...
21/09/2026

கார்பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ளும் நடிகர் அஜித்குமார் திரைபிரபலம் என்பதால் கொண்டாடும் சமூகம் நரேன் கார்த்திகேயனை மறந்து போனது...

ஃபார்முலா1 கார் பந்தயங்களில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் நரேன் கார்த்திகேயன். இந்தியாவைப் பொறுத்தவரை சிறந்த கார்ப்பந்தய வீரர் என்றாலே நரேன் கார்த்திகேயன் தான்...

அதிகபட்சமாக, 2005 ஆண்டு ஃபார்முலா1-ல் அமெரிக்க கிராண்ட் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தவர். இந்த சாதனையை இந்தியர்கள் எவரும் இதுவரை நெருங்க கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுபோல வித்தியாசமான மலைகளை காணலாம்...வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ராணிப்பேட்டை பொன்னை வள்ள...
20/09/2026

ராணிப்பேட்டை மாவட்டத்தில்
இதுபோல வித்தியாசமான மலைகளை காணலாம்...

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில்
ராணிப்பேட்டை
பொன்னை
வள்ளிமலை பகுதிகளில் இதுபோல ஒரு வித்தியாசமான மலைகளை காணலாம்...

இதுபோல மலைகுன்றுகளை நீங்கள் பார்த்திருந்தால்
கமெண்ட் பண்ணுங்க...

ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?ஒவ்வொரு இஞ்சினிலும்"WDM2", "WAP4" போன்றுஒரு குறியீட்...
20/09/2026

ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு இஞ்சினிலும்
"WDM2", "WAP4" போன்று
ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A
#முதல்எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை
(Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை
(Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை
(Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை
(Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2
#இரண்டாம்எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம்
(DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.

YG
#மூன்றாம்_எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும்
மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும்.
அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து)

WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று இருந்தது அல்லவா?
அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது.

WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை
(A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள்.
இரண்டையும் சேர்த்தால் கிடைப்பதுதான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக,
WDM 3E
இஞ்சினின் சக்தி = 3×1000+ 5×100 = 3500 HP ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால்
அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும்.
பெரும்பாலும் சரக்கு ரயில்களில்தான் அவை இருக்கும்.

WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால்,
மேற்கண்ட குறியீடே வரும்.
அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்...

1533-ம் வருஷம், தென் ஆப்பிரிக்க கடற்கரை வழியா இந்தியாவுக்கு புறப்பட்ட போர்த்துகீசிய கப்பல் Bom Jesus, நடுக்கடல்ல திடீர்ன...
16/09/2026

1533-ம் வருஷம், தென் ஆப்பிரிக்க கடற்கரை வழியா இந்தியாவுக்கு புறப்பட்ட போர்த்துகீசிய கப்பல் Bom Jesus, நடுக்கடல்ல திடீர்னு காணாம போயிடுச்சு. அதுக்கப்புறம் பல நூறு வருஷமா அது எங்க போச்சுன்னு யாருக்குமே தெரியல.

2008-ல நமீபியாவுல, அட்லாண்டிக் கடற்கரை ஓரமா வைர சுரங்க வேலை நடந்துட்டு இருந்தப்போ, மணலுக்கு அடியில இருந்து ஒரு பழங்கால கப்பலோட சிதைவுகள் வெளியில வந்தது. பார்த்தா அது தான் காணாம போன Bom Jesus.

உள்ள இருந்த பொருட்களை பார்த்த தொல்லியல் ஆய்வாளர்களுக்கே ஆச்சரியம். 100-க்கும் மேற்பட்ட யானை தந்தங்கள், ஆயிரக்கணக்கான செம்பு கட்டிகள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்னு 16-ம் நூற்றாண்டு கடல் வர்த்தகத்தோட முழு அடையாளம் அங்க இருந்தது.

இதுல இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், அந்த தந்தங்கள் மேற்கு ஆப்பிரிக்க காட்டு யானைகளோடதுன்னு பின்னாடி ஆய்வுல தெரிய வந்தது. கப்பல் மூழ்கின இடத்துக்கும் தந்தம் வந்த இடத்துக்கும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளி.

சுமார் 475 வருஷமா நமீப் பாலைவன மணலுக்கு அடியில புதைஞ்சு கிடந்த இந்த கப்பல், இன்னைக்கு நமீபியாவோட முக்கியமான கடல்சார் கண்டுபிடிப்புகள்ல ஒண்ணா பார்க்கப்படுது.

வரலாறு சில நேரம் இப்படித்தான், நாம எதிர்பார்க்காத நேரத்துல மண்ணுக்குள்ள இருந்து வெளிய வரும்...

Address

Chettipalayam
Coimbatore
641201

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.M.Wasim Raja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category