16/04/2026
தேசிய ஜனநாயக கூட்டணி கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.P.R.G அருண்குமார் அவர்களை ஆதரித்து துடியலூர் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரிக்க நாளை வருகை தருகிறார் நமது முன்னாள் மாநில தலைவர் திரு. K.Annamalai அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.
J Rameshkumar BJP
மாவட்ட தலைவர்
Nainar Nagenthran
BJP Tamilnadu
03/04/2026
மனிதகுல நலனுக்காக, தன்னையே சிலுவையில் அர்ப்பணித்த, இயேசு பெருமான் தியாகத்தை நினைவுகூரும் புனித வெள்ளி திருநாள் இன்று.
அன்பு, தியாகம், கருணை, மன்னிப்பு போன்ற உயர்ந்த பண்புகளை, நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம். அனைவரின் வாழ்விலும், அமைதியும், நலனும், சமாதானமும் நிலவட்டும்.
02/04/2026
இந்த ஒரு மனிதனுக்காக மட்டுமே ஒரு கூட்டம் அமைதியாக இருக்கிறது, அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்....
வெற்றி யார் பக்கம் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் தலைவன் என்பவன் தனித்துவமாக இருக்க வேண்டும் அந்த தனித்துவமான தலைவன் தான் திரு அண்ணாமலை ஜி அவர்கள்
தொண்டர்கள் நெஞ்சில் இதயக் குரல்..!!!
உடலில் உயிர் ரத்தம் இருக்கும் வரை
#பாஜக மட்டுமே 🌷
வேறு ஏதும் கிடையாது....
K.Annamalai
31/03/2026
அண்ணாமலை கிட்ட இவனுங்க எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..!
அண்ணாமலை ஜாதிய சொல்லி திட்ட முடியாது.. ஏன்னா அவர் பிராமணர் இல்லை
தமிழன் இல்லணும் சொல்ல முடியாது..
படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது..
Data தெரியாதுனும் சொல்ல முடியாது..
நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது..
வயசாயிருச்சினு சொல்ல முடியாது..
விவசாயத்தை பத்தியும் பேச முடியாது..
பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது..
ஏதாவது சொல்லியும் பயமுறுத்தவும் முடியல..
கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா.. ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க..
என்ன பண்ணுவது என தெரியாம, மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க..!
திமுக _ அண்ணாமலை
அதிமுக _ அண்ணாமலை
காங்கிரஸ் _ அண்ணாமலை
கம்யூனிஸ்ட் _ அண்ணாமலை
மதிமுக _ அண்ணாமலை
சிறுத்தைகள் _ அண்ணாமலை
நாம் தமிழர் _ அண்ணாமலை
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு _ அண்ணாமலை.. கிறிஸ்தவ மதவாத அடிப்படை அமைப்பு _ அண்ணாமலை
இடதுசாரி மீடியா பத்திரிகை ஊடகவியலாளர் _ அண்ணாமலை..
இப்படி.. ஒரு மனிதனை எதிர்க்க எத்தனை நபர்கள். சும்மா சொல்ல கூடாது. இந்த மூன்று ஆண்டுகளில் இவ்வளவு நபர்களை இரவு பகல் பாராது கதற விட்டு கொண்டு உள்ளார் அண்ணாமலை.
உண்மையில் இந்திய அளவில் மோடி அய்யா அவர்களுக்கு கூட இத்தனை எதிரிகள் கிடையாது. தமிழக அரசியலில் இவ்வளவு எதிரிகள் ஒரு நபருக்கு எதிராக உள்ளது, அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன்.
அண்ணாமலை வந்த பின்பு திமுக படும்பாடு !
#தனியாருக்கு தாரை வார்க்கும் 5000 கோடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் ரத்து.
#விவசாயத்தை சிதைக்கும் அன்னூர் சிப்காட் தொழிற்சாலை நிறுத்தம்.
#பத்து ரூபாய் பாலாஜியின் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு, இன்று அவர் புழல் சிறையில்.
#நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு நிதியமைச்சர் பதவியே காலி.
#வடக்கன் வடக்கு என்று பிரிவினை பேசி
வயிறு வளர்த்து திரிந்த வாய்கள்; இன்று அடங்கி ஒடுங்கி கிடக்கிறது.
#இந்தி மொழி மீது வெறுப்புணர்வை பதிவு செய்து அரசியல் செய்த அட்டூழியங்கள் அடங்கி பொந்துக்குள் புகுந்து கொண்டது.
#இந்தியாவின் மீது வன்மம் கொண்டு, தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று பிரிவினை பேசிய கும்பல், தன்னுடைய நாக்கில் தானாகவே சூடு வைத்து கொண்டு ஒடுங்கி கொண்டது.
#இந்து தர்மத்தின் மீது தினம் தினம் சேற்றை வாரி இறைத்து கொண்டிருந்த கும்பல், இன்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு சென்று விட்டது.
#அனைத்து கடைகளையும், டாஸ்மாக்கையும் திறந்து விட்டு, கோவிலை மட்டும் பூட்டி வைத்த கும்பலை, ஒரே அறிவிப்பில் திறக்க வைத்தார்.
#தேர்தல் வாக்குறுதிபடி ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி வந்த கும்பலை, அதிரடி அறிவிப்பின் மூலம் வேறு வழியில்லாமல் கொடுக்க வைத்தார்.
#ஆவின் ஊழல் பற்றி நாட்டிற்கு அண்ணாமலை தெரியப்படுத்த அமைச்சர் நாசர் வீட்டுக்கு போனார்.
#கோயம்புத்தூர் தற்கொலை படை சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக, ஊரை ஏமாற்றி வந்த திமுகவின் முகத்தில் ஆணித்தரமான ஆதாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் கரியை பூசினார்.
#சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதியை, இனி ஒருபோதும் சனாதனம் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓட வைத்தார்.
#மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு இறந்த லாவண்யாவின் விவகாரத்தை, இந்திய அளவில் கொண்டு சென்று, பொய் கூறிய கும்பலை திணற வைத்தார்.
#திமுக கும்பலின் சொத்து பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே அதிர வைத்து, மக்களுக்கு எதிராக சுரண்டும் கும்பலை அம்பல படுத்தினார்.
#நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு, ஆற்காடு வீராசாமி தொடங்கி ஜெகத்ரட்சகன் வரை செய்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி, திமுகவை திணற வைத்து கொண்டிருக்கிறார்.
#கால்டுவெல் பாதிரி, ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி என அனைவரும் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழர்களின் தர்மமான இந்து தர்ம நம்பிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு எதிராக செய்த வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வருவதால் தற்போது திக்கி திணறுகிறது போலி திராவிடம்.
#வடமாநிலத்தவர்களை ஆரியன் என்று திமுகவினர் வாய் கிழிய பிரிவினை பேசினால், ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் ஆரியர்கள் தானே, அவர்களோடு எதற்கு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று மண்டை அடியாக போடுகிறார்.
#மணல் மாஃபியாக்கள் செய்த பெருத்த ஊழல்களை அம்பலப்படுத்தி, இன்று அமலாக்கத்துறை முழுமையாக ஆராய்ந்து வருகிறது.
#மின் கட்டண உயர்வை பற்றி தெளிவாக விளக்கி கூறி, மக்களின் ஆதரவை பெற்று, திமுகவை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருக்கிறார்
30/03/2026
சிற்பிக்கு தெரியாதா சிற்பத்தின் மகிமை.
சாணக்கியனுக்கு தெரியாதா...
யாரை எப்போது களமிறக்க வேண்டும் என...
எல்லாம் நன்மைக்கே
நாம் நமது வேலையை மட்டும் செய்வோம்...
இருந்தாலும் மனசு இதை ஏற்க்க மறுக்கிறது.
K.Annamalai
25/03/2026
#தன்மானம் என்ற சொல்லிற்கு மறு பெயர் K.Annamalai
#பிழைப்புக்காக #அரசியல் #செய்ய அவர் #அண்டா இல்லடா #அண்ணாமலை
Narendra Modi
Nitin Nabin
17/03/2026
பாலியல் வன்கொடுமைகள் ,சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து NDA கூட்டணி சார்பில் முன்னாள் மாநில தலைவர் திரு. K.Annamalai அவர்கள் தலைமையில்
சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. S.P Velumani அவர்கள் முன்னிலையில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது மாவட்ட தலைவர் திரு. J Rameshkumar BJP அவர்களும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி. Vanathi Srinivasan MLA அவர்களும் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் திரு. கனகசபாபதி அவர்களும் மற்றும் NDA கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Nainar Nagenthran
BJP Tamilnadu
17/03/2026
திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் அதிகரித்து விட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய கையாலாகாத திமுக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்கவும், நாளைய தினம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை இருக்கிறது. போதைப் பொருள்கள், நமது இளைஞர்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது.
இந்த நிலையை மாற்ற தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகளின் பாதுகாப்பிற்காகவும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பாதுகாப்பான தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடைபெறவுள்ள இந்த ஜனநாயகப் போராட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
12/02/2026
பா.ஜ.க. இளைஞர் அணி – தமிழ்நாடு
“இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை – 2026”
🗓️ *நாள்:* 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕢 *நேரம்:* காலை 7.30 மணி முதல்
🔗 *நிகழ்ச்சி பதிவு (கட்டாயம்):*
(https://forms.gle/TYYWZMFQjA51QHxg8)
📌 *முக்கிய அறிவிப்பு:*
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயம்.
முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கே
✔️ பயிற்சி நிறைவு சான்றிதழ்
✔️ நினைவுப் பரிசு
✔️ வரவேற்பு கிட் வழங்கப்படும்.
📝 குறிப்புகள்:
1️⃣ நிகழ்ச்சி நடைபெறும் நாளில்
காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
2️⃣ தங்குமிடம் மற்றும் பயண ஏற்பாடுகளை
பங்கேற்பாளர்கள் தாங்களே திட்டமிட்டு ஏற்பாடு செய்து கொள்ளவும்.
**இளைஞர் சக்தி – தேசத்தின் சக்தி! 🇮🇳**