Aathi Thamizhar Peravai

Aathi Thamizhar Peravai

Share

Aathi Thamizhar Peravai (ATP) works for the Liberation of Arunthathiyar (Dalit), Oppressed and Supressed people and fights for their justice.

Photos 05/07/2016

கோப்புப்படம் - புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, 22 டிசம்பர்2008 அன்று "மலக்குழியில் மனிதனை இறக்கதே" என்று வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதான போது.

BHELதிருச்சி(SC/ST)சங்கத்திற்குவாக்குகள்சேகரித்தார்Adhiyamaan,Founderof AathiThamizharPeravai24.6.16 30/06/2016

BHEL-இல் சங்கத் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பின் போது நிறுவனர் ஆற்றிய உரை - பத்து நிமிட காணொளி:

https://www.youtube.com/watch?v=o_nEJrsFT1k

ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் நாகராசன் அவர்களின் BHEL தேர்தல் முடிவுகள் பற்றிய பதிவு : http://atptamilnadu.blogspot.ca/2016/06/bhel_29.html

BHELதிருச்சி(SC/ST)சங்கத்திற்குவாக்குகள்சேகரித்தார்Adhiyamaan,Founderof AathiThamizharPeravai24.6.16 திருச்சி BHEL-ல் நடைபெறும் சங்க அங்கீகாரத் தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் சங்கத்தை முதன்மைச் சங்கமாக்கிட BHEL SC/ST EWC ன் கௌரவத் தலைவரும் ஆதித்தமிழர் பேரவை நி...

Photos from Aathi Thamizhar Peravai's post 27/06/2016

தோழர் அருந்ததிமைந்தன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் - நிறுவனர்:

சாதி ஒழிப்பையும் சமூக விடுதலையையும் நெஞ்சில் ஏந்தி, ஆதித்தமிழர் பேரவையுடன் தான் மட்டுமல்லாமல் தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பயணிக்கச் செய்த திருச்சி மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய தோழர் அருந்ததிமைந்தன் அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கத்தை செலுத்துகின்றேன். அவரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். தன் இறுதி மூச்சிருக்கும் வரை பேரவையின் ஒப்பற்ற தூணாக துடிப்புடன் செயல்பட்டு தன் குடும்பத்தாரையும் முழுமையாக சமூக விடுதலைப் பணியில் ஈடுபடுத்தி அனைவருக்கும் முன்மாதிரியாக விழங்கிய தோழர் அருந்ததிமைந்தன் அவர்களின் மரணம் ஆதித்தமிழர் பேரவைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அருந்ததியர் சமுதாயத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும். தோழர் அருந்ததிமைந்தன் அவர்கள் நெஞ்சிலேந்திய விடுதலை நெருப்பினை திக்கெட்டும் பரப்பிட உறுதியேற்போம் சொந்தங்களே!!

Photos from Aathi Thamizhar Peravai's post 25/06/2016

BHEL-ல் நடைபெறும் சங்க அங்கீகாரத் தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் சங்கத்தை முதன்மைச் சங்கமாக்கிட
24 ஆம் தேதியன்று மாலை 03.15 மணிக்கு BHEL EAST gate ல் நடைபெற்ற சிறப்பு வாயிற்கூட்டத்தில் எஸ்சி/எஸ்டி தொழிலாளர்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்தேன். கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். முன்னதாக BHEL சங்க நிர்வாகிகள் என்னை விடுதி அறையில் சந்தித்து கலந்துரையாடினர். நிகழ்வின் படத்தொகுப்பு.

Photos from Aathi Thamizhar Peravai's post 24/06/2016

அய்யா பழ.நெடுமாறன் இளந்தமிழன் நீலகனலன்

தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய வட்டம் 5 அம்சத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 21.06.16 அன்று தேனி ஸ்டேட் பேங்க் திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் சமூக நலப்போராளி அய்யா .பழ.நெடுமாறன் அவர்கள் பங்கு பெற்றார். தேனிமாவட்ட ஆதித்தமிழர்பேரவை சார்பாக மாவட்ட செயளாலர் தோழர் இரா. இளந்தமிழன் அவர்களும், தூய்மை தொழிலாளர் பேரவையின் சார்பில் மாநில துணை செயலாளர் நீலகனலன் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள்:

1. தமிழகத்தில் நூலகங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக வேண்டும், நூலகத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கவேண்டும்

2. தமிழின் தொன்மையையும், தனித்தன்மையும் உலகுக்கு உணரச்செய்யும் விதமாக மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாநில அரசு தீவரமாக தலையிடவேண்டும்

3. தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்ற புதிய விருதுகள், திட்டங்கள் அறிவித்திடவேண்டும்

4. கடந்த முறை அறிவிக்கப்பட்ட மினி திரையரங்கு திட்டத்தை கிராமந்தோரும் செயல்படுத்த வேண்டும்

5. அஞ்சல் வழித்தமிழ்க் கல்வியை குறைந்த கட்டணத்தில் நாடு, உலகம் முழுமைக்கும் செயல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மான முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விசிக மற்றும் தலித்மக்கள் சம்மேளனம், புதிய தமிழகம், தமிழர் தேசிய கட்சி, சிபிஎம்எல் ரெட்ஸ்டார் கட்சியின் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

அய்யா பழ.நெடுமாறன் வீரத் தமிழன் இளந்தமிழன்

Photos 24/06/2016

BHEL நிறுவன சங்க தேர்தலில் sc/st தொழிலாளர்களுக்கு, BP. Dr. AEU - BHELLF கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் நிகழ்வு - நாள்- 24 ஜூன் 2016.

change kongu community to forward community - Athiyamaan, ATP 15/06/2016

"கொங்கு வேளாளர் சமுதாயத்தை முற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்க வேண்டும் - ஏன்?" - தூய்மை தொழிலாளர் மறுவாழ்வு கருத்தரங்கத்தில் தீர்மானம், நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் விளக்கம்!! 5 நிமிட காணொளி.

https://www.youtube.com/watch?v=uVnjDY2BHGU

change kongu community to forward community - Athiyamaan, ATP change kongu community to forward community - Athiyamaan, ATP - Manual scavengers, corporation workers rehabilitation conference held at Thiruchengodu on 11 ...

Photos from Aathi Thamizhar Peravai's post 14/06/2016

திருச்செங்கோட்டில் நடைபெற்ற தூய்மை தொழிலாளர் கருத்தரங்கத்திற்கு வைக்கப்பட்ட பலகையை அகற்றிய போது மாநகராட்சி நிர்வாகத்திற்கும் பேரவை தோழர்களுக்கும் நிகழ்ந்த வாக்குவாதம் (அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த அழுத்தத்தால் ஏற்பட்ட சலசலப்பு) வீடியோ news7tamil @1.25 minutes: https://www.youtube.com/watch?v=Pkz46EfPZcM
தினமலர் செய்தி - http://www.dinamalar.com/news_detail.asp?id=1540988&Print=1
கருத்தரங்கத்தின் போது 10ஆம், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது, தூய்மை தொழிளார்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கியது மற்றும் கருத்தரங்கத்தில் ஊடக சந்திப்பு ஆகியவற்றின் புகைபடத் தொகுப்பு.

Photos from Aathi Thamizhar Peravai's post 12/06/2016

11.6.2016 அன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆயிரம் வைசியர் திருமண மண்டபத்தில் தூய்மை தொழிலாளர்களின் மறுவாழ்வு கருத்தரங்கம், தூய்மை தொழிலாளர்கள் பங்கேற்புடன், பேரவை நிர்வாகிகளின் பங்கேற்புடன், பேரவையின் நிறுவனர் ஐயா அதியமான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு மற்றும் கருத்தரங்கில் நிறுவனர் உரை:
https://www.youtube.com/watch?v=vnIjozScJ_0

Photos from Aathi Thamizhar Peravai's post 06/06/2016

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் வாழ்த்துச்செய்தி:
**************
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் அவர்களால் மராத்திய மாநிலத்தின் திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தோழர் கரூவூர் பழனிச்சாமி அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அயராது மக்கள் பணி செய்து வரும் தோழர் பழனிச்சாமி அவர்களின் மக்கள் பணி மேலும் சிறந்து விளங்க அவருக்கு சிறப்பு வாய்ந்த பொறுப்பை அளித்து கவுரவித்ததிற்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு,க.அன்பழகன் அவர்களுக்கும், மராத்திய மாநில திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
__
இரா.அதியமான்
நிறுவனர்
ஆதித்தமிழர் பேரவை
தமிழ்நாடு

Photos from Aathi Thamizhar Peravai's post 04/06/2016

திருச்செங்கோட்டில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை தொடக்க விழா
***********************************************
நாள் - 11.06.2016, இடம் - ஆயிர வைசியர் திருமண மண்டபம், திருச்செங்கோடு

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Mettupalayam Road
Coimbatore
641002